Sunday, May 6, 2018

புகழ், திமிர், கோபம்


எதற்க்காக திடீரென்ற, "புகழ், திமிர், கோவம்" பற்றிய  ஆராய்ச்சி. ஒரு புது டிபார்ட்மெண்ட் செல்ல நேர்ந்தது. அங்கு செல்லும் முன்பு சிலர், அந்த டிபார்ட்மெண்டில் எல்லோருமே "திமிர்" பிடித்தவர்கள். யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். உங்களை அவமான படுத்துவார்கள் என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். 


திமிர் என்றால் என்ன? அரகன்ஸ் என்றால் என்ன?

திமிரை காட்டுபவர்கள் மறைமுகமாக சொல்ல விரும்புவது, " நான் தான் அறிவாளி. எனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும், நீங்கள் எல்லாருமே முட்டாள்கள். ஒன்றுக்கும் உதவாதவர்கள். நான்  எதுக்கு உங்களுக்கு உதவி என்னுடைய நேரத்தை செலவளிக்க வேண்டும்." என்னுடைய அறிவை மதித்து எனக்கு மதிப்பளித்தால் நான் உங்களுடன் பேசுகிறேன்". "எனக்கு மதிப்பளிக்கவில்லை என்றால் எனக்கு கோவம் வரும்". "நான் தான் பெஸ்ட்"

எல்லோரும் பிறக்கும் போதே திமிருடன் இருக்கிறார்களா? இது எப்படி ஆரம்பிக்கிறது?




ஜிகர்தண்டா படத்தில் ஒரு டயலாக் வரும். "நம்மள பாத்து அடுத்தவங்க பயந்து ஒதுங்கும் போது ஒரு கிக்கு வரும்!!, அத மட்டும் அனுபவிச்சுடம்னா, அவ்வளவு தான்!!, சூர போதை!!". "அடுத்தவங்க மத்தியில நாம தனித்து தெரியுறோம். நம்மள எல்லாரும் மதிக்கிறாங்க". அவங்க மதிக்கிறாங்களா அல்லது பயந்து விலகி போறாங்களோ தெரியாது, ஆனா, நாம்ம  மத்தவங்கள விட பெரியாள்!!".

இந்த போதை/புகழ் கொடுக்கும் ஒரு திமிர்.  அந்த புகழ்/போதை கிடைக்காத போது அல்லது புறங்கணிக்க படும் போது வரும் ஒரு கோவம்.


"Stardom /ஸ்டர்டாம்" அடைந்த பலர் கடக்கும் பொதுவான பாதைகள்..


  • எதோ ஒரு திறமை இருக்கும்
  • அந்த திறமையை வெளியே கொண்டுவர வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் 
  • அந்த திறமையை உலகுக்கு காட்ட, எல்லா வகையிலும் பொறுமையாக தொடர்ந்து முயல்வார்கள்
  • ஒரு சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கும்.
  • அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி வெற்றியை எட்டி பிடிப்பார்கள்.
  • உலகம் அவர்களை கொண்டாடும்
  • வெற்றியை சுவைக்கும் போது கிடைக்கும் சூர போதை. 
  • தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற "திமிர்" வருவது  
  • அந்தபுகழ் போதையை தக்கவைத்து கொள்ள எல்லாம் செய்வது 
  • புகழ் காணாமல் போவது, மக்கள் நம்மை மதிப்பதில்லை என்று அறிவது 
  • அப்போது வரும் கோவம், இயலாமை, அதற்காக மற்ற போதை வஸ்துக்களை தேடி சென்று தன் அழிவை தானே தேடி கொள்வது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என்று எந்த ஆர்ட்டிஸ்ட் எடுத்து கொள்ளுங்கள், பலரின் கேரியர் க்ராப் இப்படி தான் இருக்கும். இதுல பெண்கள் என்றால், வேறு மாதிரியான நிலைக்கு தள்ள படுவதும் உண்டு. 


இது நடிகை நடிகர்கள், ஆர்ட்டிஸ்ட் அல்லது showbiz இல் இருப்பவர்களுக்கு மட்டும் தான் பொருந்துமா?

இல்லை, இது எந்த துறைக்கும் பொருந்தும். எவ்வளவோ வாழ்ந்து கெட்ட குடும்பங்கள். அவர்களின் வாழ்க்கை பயணம் கிட்டத்தட்ட நான் மேலே குறிப்பது போலவே இருக்கும். அந்த திறமை என்பது தொழில் திறமை ஆக இருக்கலாம். குடும்ப பெருமையாக இருக்கலாம்.  ஆனால், அந்த பெருமை எல்லாம் தன்னால் உண்டாக்கப்பட்டது என்ற ஒரு "போதை" மண்டையில் ஏறி ஒரு "திமிர்" மனிதன் மனதில் வந்துவிட்டது என்றால் அதுவே அவன் முடிவுக்கு முதல் படி.

பெரிய குடும்பங்கள், வாழ்ந்து கெட்ட குடும்பங்கள்  இதெல்லாம் விட்டு விடுங்கள், சாதாரண நிலையில் இருக்கும் மிடில் கிளாஸ் குடும்பங்கள் எடுத்து கொள்ளுங்கள்,அதில் இருக்கும் ஒவ்வொருவருக்கும், மனதில்  எதோ ஒரு மூலையில், "புகழ்" அடைய வேண்டும் என்ற நோக்கம் இருக்கும். அது உலக புகழ், நாட்டு புகழ், ஊர் புகழ்,...என்றெல்லாம் கூட இல்லை, நண்பர்கள் வட்டத்திற்குள், தன் குடும்ப வட்டத்திற்குள், தன்னை புகழ வேண்டும், என்ற இச்சைக்காக காசை இறைக்கும், பலரும் இருக்கிறார்கள். இவர்கள் விரும்புவது எல்லாம்.. "நீ தான் பெஸ்ட்","உன்னை போல யாரும் இல்லை", என்ற வார்த்தைகள். அதற்காக என்னவேண்டும் என்றாலும் செய்வார்கள்.

"சபையிலே, எனக்கு உரிய மரியாதை கொடுக்கல, மதிக்கல", என்ற ஒரு சப்பை காரணத்துக்காக, சண்டை போட்டு பிரிந்த குடும்பங்கள் எத்தனை எத்தனையோ? தனக்கு என்று இருக்கும் புகழை, எல்லாரும் மதிக்க வேண்டும் என்ற "திமிர்", இப்படிபட்ட மக்கள் மனதில் ஆழ பதிந்து, அதனை அடுத்தவர் தராத பட்சத்தில் "கோவம்" தலைக்கேறி சண்டை போடுவது,இல்லை வன்முறையில் இறங்குவது.


நிற்க, தற்போது தொடங்கிய பிரச்சனையான," எப்படி திமிர் பிடித்தவர்களுடன் வேலை பார்ப்பது" என்ற கேள்விக்கு வருவோம்.

 "இந்த திமிர் என்பது ஒரு வித பாதுகாப்பின்மையின் வெளிப்பாடு". இவர்களிடம் "நீங்க தான் பெஸ்ட்" , என்று சொல்லி பாருங்கள். உடனே உங்களுக்கு சொல்லி கொடுப்பார்கள். நீங்கள் "நான் முட்டாள்" என்ற தொப்பியை அணிந்து கொண்டு அவர்களிடம் வேலை செய்ய வேண்டும்.  அடுத்தவர்கள் முன் இவர்கள் தான் பெஸ்ட் என்று காட்டி கொள்ளஎன்ன வேண்டும்  என்றாலும் செய்வார்கள். அதனால், இவர்களை, "நீ தான் பெஸ்ட்" என்ற "புகழ்" பிஸ்கெட் போட்டு அவர்களின்  "திமிரை" வழிக்கு கொண்டு வந்து வேலை செய்ய வேண்டும். 

இந்த டெக்கனிக் எல்லா இடத்திலும் உதவும், குடும்பத்தில், பிரெண்ட்ஸ் மத்தியில் என்று எல்லா இடத்திலும் உதவும். அதுவும் மாமியார் மருமகள் விஷயத்தில் ரொம்பவே உதவும். 

கடைசியாக நான் வாசித்த ஒரு quote இங்கே 




photos from Google images



நன்றி 





1 comment:

வேகநரி said...

அருமையான கட்டுரை தமிழில் தந்தீர்கள்.
//நண்பர்கள் வட்டத்திற்குள் தன் குடும்ப வட்டத்திற்குள் தன்னை புகழ வேண்டும் என்ற இச்சைக்காக காசை இறைக்கும் பலரும் இருக்கிறார்கள். இவர்கள் விரும்புவது எல்லாம்.. "நீ தான் பெஸ்ட் உன்னை போல யாரும் இல்லை என்ற வார்த்தைகள். அதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள்.//
நேரில் அந்த உண்மையை பார்க்கிறேன். தெரிந்த இரு தமிழர்கள் திருமணம் செய்ய போகிறார்கள். எங்களது திருமண விழாவில் கலந்து கொள்ளும் போது நீங்க உங்களை மோக்கப் அழகு செய்ய விரும்பினா தெரிவியுங்க நாங்களே எங்க செலவில் உங்களுக்கு அதற்காகன ஏற்பாடுகளை செய்கிறோம் என்று மெயில் அனுப்புகிறார்கள் தமிழர்கள்.