Monday, February 15, 2010

வனஜா - ஒரு சிறுமியின் கதறல்.

நேற்று காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் இருந்து தப்பிக்க TV channel ஐ மாற்றிய போது வனஜா என்ற ஒரு தெலுங்கு படம் பார்க்க நேர்ந்தது. அது ஒரு 15 வயது சிறுமியை பற்றிய கதை. வழக்கமாக எனக்கு தெலுங்கு சினிமா பார்க்க பிடிக்கும். ஏன் என்றால் அதில் வரும் ஒவ்வொரு செண்டிமெண்ட் காட்சிகளும் சிரிப்பை வரவைக்கும் என்பதால். வனஜா வும் ஒரு செண்டிமெண்ட் படம், ஆனால் இது realistic செண்டிமெண்ட்.

அதிகம் படிப்பறிவில்லாத ஒரு கடலோர ஆந்திர கிராமம். அதில் உள்ள ஒரு தாழ்ந்த சாதி ஏழை மீனவரின் மகள் வனஜா. ஒரு நாள் கூத்தில் குச்சிபுடி நடனம் பார்க்கிறாள். அதில் ஈர்க்கப்பட்டு நடனமாடும் பெண்ணின் சலங்கையில் இருந்து விழும் மணியை சேகரிக்கிறாள். பிறகு தானும் அவள் போல ஒரு dancer ஆக வரவேண்டும் என்று ஆசை படுகிறாள். வறுமையின் காரணமாக அவள் அப்பா அவளை வீட்டு வேலைக்கு செல் என்கிறார். அவளோ ஜமிந்தாரிணி வீட்டில் பாட்டும், நடனமும் நடப்பதால், அங்கு வேலைக்கு அனுப்புவதானால் செல்கிறேன் என்று அங்கு வேலைக்கு செல்கிறாள்.

அங்கு ஜமிந்தாரிணி உதவ வனஜா நடனம் கற்க ஆரம்பிக்கிறாள். எல்லாம் அவள் நினைத்தது போல் நன்றாக நடக்கிறது. ஜமிந்தாரினியின் மகன் அமெரிக்க வில் இருந்து வருகிறான். இருவருக்கும் பரஸ்பரம் ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. ஒரு முறை அனைவர் முன்னிலையில் ஜமிந்தாரிணி மகன் இவளால் அவமான பட நேருகிறது. அதன் பின் அவன் பாலியல் ரீதியான தொல்லைகள் தர ஆரம்பிக்கிறான். வனஜா கர்ப்பமாகிறாள்.

இதை அறிந்து கொள்ளும் ஜமிந்தாரிணி கர்ப்பத்தை கலைக்க சொல்லுகிறாள். அதற்கு பயந்தும் அவர்களை பழிவாங்கவும் முடிவு செய்து வனஜா தப்பித்து ஓடுகிறாள். அவள் தந்தை நியாயம் கேட்க வருகிறார் அவரை அடித்து உதைக்க அவர் இறந்து விடுகிறார். தனியாக்க பட்ட வனஜா வேறு வழியில்லாமல் மறுபடியும் ஜமிந்தாரிணி வீட்டுக்கு வருகிறாள். குழந்தையை தாங்கள் (உயர் சாதி குழந்தையாக) வளர்பதாகவும் அவளுக்கு எந்த உரிமையும் இனிமேல் குழந்தை மேல் இல்லை என்றும் சொல்லி அனுப்பி (துரத்தி) விடுகிறார்கள்.

தனது குழந்தையையும், குழந்தை பருவத்தையும், தந்தையையும், நடனத்தையும்,அனைத்தையும் இழந்த வனஜா, தன் மகன் வளர்ந்ததும் தான் சேகரித்த மணிகளை அவனுக்கு தன் நினைவாக தர சொல்லிவிட்டு வந்ததாக தன் தோழியிடம் சொல்கிறாள். படம் முடிகிறது.

படம் முடிந்தவுடன் அதன் இயக்குனர் ராஜ்னேஷ் டொம்லாப்பள்ளி பேட்டி ஒளிபரப்பானது. அதில் அவர் இந்த படம் 100 film festival லில் பங்கு பெற்று 24 international awards ம் 2 nominations ம் பெற்றது என்றாலும் இந்தியாவில் இதனை வெளியிட முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

5 comments:

Thekkikattan|தெகா said...

//ஏன் என்றால் அதில் வரும் ஒவ்வொரு செண்டிமெண்ட் காட்சிகளும் சிரிப்பை வரவைக்கும் என்பதால். //

இந்த வரிகள் படக்கின்னு பயங்கரமா சிரிக்க வைச்சிடுச்சு.

பதிவைப் பற்றி - இதே டாகுமெண்டரி படத்தை நானும் LINK TV எனும் சானலில் பார்த்திருக்கிறேன். தொடர்ந்து அங்கே போட்டுக் கொண்டே இருப்பார்கள். மெல்லமா நகரும். நல்லாருந்துச்சு. பரவாயில்ல பார்த்திட்டு அதனை பகிர்ந்துகிட்டீங்க. நமக்குத் தோணல பாருங்க. :-)

முகுந்த் அம்மா said...

Nanum link TV la than parthein Theka.

Give me some tips on how to write in tamil in Comments. My tamil writer is not working in comment section

Thekkikattan|தெகா said...

அப்படியா விசயம் இந்தாங்க பிடிங்க இந்த சுட்டியை இங்கே போயி http://www.tavultesoft.com/tamil/?search=tamil THAMIZHA (ANJAL)அப்படிங்கிற டவுன்லோட் பட்டனை அழுத்தி கீழிறக்கி, கணினியில் நிறுவிகிட்டு பின்னே, make sure the software is running in the background, now switch the keyboard by pressing alt(key) plus 2 for typing in தமிழ், for english alt(key) 1. That simple, enjoy! அதான் நான் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன் on google chrome browser.

Thekkikattan|தெகா said...

oops sorry, an extra comment to make it clear... the link is just this :

http://www.tavultesoft.com/tamil/?search=tamil

முகுந்த் அம்மா said...

நன்றி தெகா.