Thursday, February 18, 2010

குழந்தைகள் பாடமும் நானும்

சில மாதங்களாக குழந்தைகள் புத்தகங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பார்த்து வருகிறேன். அப்படி நான் வாசித்த புத்தகங்கள், பார்த்த நிகழ்ச்சிகள் எனக்கு வியப்பை தருகின்றன. நான் படித்த காலத்தில் இவை எல்லாம் இல்லையே என்று ஏங்க வைக்கின்றன.அப்படி நான் வியந்த ஒரு சில விஷயங்கள் இங்கே.

சில நாட்களுக்கு முன் ஒரு TV நிகழ்ச்சியில் ஆங்கில எழுத்து q வை பற்றி காண்பித்தார்கள். அதில் ஆங்கில எழுத்து q வை மட்டும் வைத்து எந்த ஒரு ஆங்கில வார்த்தையும் தொடங்காது என்றனர். எப்போதும் q வுடன் u வும் சேர்ந்துதான் வரும் என்றனர். உதாரணமாக, queen. quest, quail, question, qualify, etc.,

அதே போல q ஒரு வார்த்தைக்கு நடுவில் வந்தாலும் கூட அது u வுடன் சேர்ந்தே வரும் என்றனர். உதாரணமாக require, inquire, acquisition, etc.,

அதை சுலபமாக விளக்க, q ஒரு ஆண் போலவும் u ஒரு பெண் போலவும் சித்தரித்து அவர்கள் எப்போதும் இணைந்து இருப்பார்கள் என்பது போலவும் ஒரு பாடல் பாடினார்கள்.

அட! இது புதுசா இருக்கே, என்று என்னுடைய Oxford dictionary இல் தேடி பார்தேன். q வில் ஒரு வார்த்தை கூட u உடன் இல்லாமல் இல்லை.

மற்றொரு நிகழ்ச்சியில் c பற்றி காண்பித்தார்கள். c உடன் i யோ e யோ வந்தால் அது ச போல சப்தம் உண்டாக்கும் என்றும் மற்ற எழுத்துக்களுடன் அது க சப்தம் உண்டாக்கும் என்றும் சொன்னார்கள்.

உதாரணமாக city, delicious, cedar, century, etc., மற்றும் camera, coffee, etc.,

இதை எல்லாம் பார்த்த போது நான் எப்படி mug up செய்து படித்து வந்துள்ளேன் என்று என்னை வருந்த வைத்தது.

சமீபத்தில் நான் என் பையனுக்காக வாசித்த ஒரு புத்தகம் "Joseph had a little overcoat". அதில் Joseph என்பவர் தன்னுடைய overcoat பழையதானவுடன் jacket ஆக மாற்றி விடுகிறார். அது பழையதானவுடன் வேறு ஒன்றாக மாற்றி விடுகிறார். இப்படி மாற்றி மாற்றி அது ஒரு பட்டன் ஆகி விடுகிறது. அதுவும் தொலைந்து விடுகிறது பிறகு அதை பற்றி ஒரு கதை எழுதி விடுகிறார்.

தற்போது எங்கும் எதிலும் குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேடு விளைவிக்கும் இந்த நேரத்தில் இது போன்ற சுழற்சி முறை (recycling) குழந்தைகளுக்கு நல்லெண்ணத்தை விளைவிக்கும் என்பது மகிழ்ச்சி தருகிறது.

இதை போன்ற குழந்தைகள் புத்தகங்களும் பாடங்களும் எனக்கு "கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு" என்ற பொன் மொழியை நினைவு படுத்தியது.

6 comments:

Thekkikattan|தெகா said...
This comment has been removed by the author.
Thekkikattan|தெகா said...

//இதை எல்லாம் பார்த்த போது நான் எப்படி mug up செய்து படித்து வந்துள்ளேன் என்று என்னை வருந்த வைத்தது. //

எல்லார் கதையும் அதேதான். இன்னமும் தொடர்கிறதுதான் அது நம்மூர் பள்ளிகளில்.

இந்த ஊர்ல நாமும் குழந்தைகளோட அமர்ந்து அவங்க பார்க்கிற நிகழ்ச்சிகளை பார்ப்பதின் மூலம் இன்னும் தெரிஞ்சிக்க எவ்வளவு இருக்கின்னு நம்ம க்ரவுண்ட் பண்ணிக்க ஒரு வாய்ப்பு. நீங்க சொன்ன விசயங்கள் எனக்கும் புதுசுதான்.

பதிவிற்கு தொடர்பில்லாதது - இன்னொரு விசயம் நீங்க சொல்றதை வைச்சுப் பார்த்தா, ஒரு தொடரழைப்பில உங்கள இழுத்து விடப் போறேன். தவறாம கலந்துக்கோங்க. நான் அந்தப் பதிவை போட்டதிற்குப் பிறகு அதன் சுட்டியைத் தருகிறேன். சாம்பிலுக்கு இரண்டு சுட்டிகள் எப்படியெல்லாம் அந்த அழைப்பை பயன்படுத்திக்கலாம்னு... check it out :

http://rudhrantamil.blogspot.com/2010/02/blog-post_14.html

http://sandanamullai.blogspot.com/2010/02/page-from-my-teenage-diary.html

முகுந்த் அம்மா said...

தெகா, தொடா் பதிவுக்கு என்னையும் அழைக்க நினைத்ததற்கு என்னுடைய நன்றி. பதிவு எழுத ஆரம்பித்து ஒரு மாதத்திற்குள் இப்படி ஒரு வாய்ப்பை நான் எதிர் பார்க்கவில்லை. தொடர்ந்து என்னை ஊக்குவிக்கும் தங்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பதிவு முகுந்த் அம்மா..

க்யூ பத்தி தெரியாது ஆனா சி பத்தி எங்கப்பா சொல்லிக்கொடுத்திருக்காங்க.. என்ன சொல்லிக்கொடுத்தாலும் நான் ஆங்கிலத்தை கடுப்பாவே பாத்துட்டிருந்தேன்.. (இப்பவும்)

முகுந்த் அம்மா said...

நன்றி முத்துலெட்சுமி அவர்களே. தாங்கள் சொல்வது உண்மை. ஆங்கிலம் என்றால் கொஞ்சம் கடுப்புதான்.

Thekkikattan|தெகா said...

சொன்னது மாதிரியே நான் என்னோட தொடரழைப்பு பதிவு போட்டுட்டேன், இதோ இதான் லிங்க் பதின்மகால மன டைரிப் பதிவுகள்... now this is your turn :). Enjoy!