பிப் 24 ஆம் தேதி Wallstreet Journal இல் வந்த செய்தியை நேற்று படிக்க நேர்ந்தது. அது இது தான்
"Green Revolution in India Wilts as Subsidies Backfire "
இதனை படித்தவுடன் என்னை கிலி பிடித்து கொண்டது. இந்த செய்தியின் சாரம் இது தான்.
1970 களில் இந்தியாவில் நடந்த பசுமை புரட்சியால் அதிகமாக Urea உரம் போட்டதால் இந்தியா மண் தன்னுடைய விளைவிக்கும் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதாகவும் நமது அண்டை நாடுகளை விட நம் நாட்டில் மகசூல் மிக குறைவாக இருப்பதாகவும் கூறி இருந்தனர்.
யோசித்து பாருங்கள் உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட, அரிசியை முதன்மை உணவாக கொண்ட நம் நாட்டில் அரிசி மகசூல் குறைந்தால் அதனால் எப்படி உணவு தட்டுபாடு ஏற்படும் என்று. மனிதனை மனிதன் அடித்து சாப்பிடும் அளவு பற்றாகுறை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. இதை தவிர்க்க நம்மால் ஆனா சில விசயங்களை செய்யலாம் என்று நினைத்தேன். மக்களுக்கு சுற்றுசூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அதில் முக்கியமான ஒன்று என்று கருதுகிறேன்.
என் அறிவுக்கு எட்டிய ஒரு சில கருத்துகள் இங்கே.
மஞ்சள் பை கலாச்சாரத்தை திரும்ப கொண்டு வருதல். அமெரிக்காவில் இப்போது எங்கு பார்த்தாலும் "Green bag, Green towel" என்கிறார்கள். அது என்னவென்று பார்த்தால் நம்ம ஊர் மஞ்சள் பை. நம் ஊரில் எங்கும் எதிலும் பிளாஸ்டிக் மயமான போக்கை மாற்ற மஞ்சள் பையை மறுபடியும் கொண்டு வர செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பைகளும், டம்ளர் களும் இப்போது நிறைய குப்பைகளாக சேர்கின்றன. அவை நீர்நிலைகளில் வீதிகளில் வீச படுகின்றன. எனக்கு தெரிந்தே மதுரையில் கிருதுமால் நதி என்ற ஒரு சாக்கடை உண்டு, அது ஒரு காலத்தில் நதியாக இருந்தது என்று என் பாட்டி சொல்லி கேள்விபட்டு இருக்கிறேன்.
இது எல்லாம் ஏதோ எனக்கு தோன்றிய ஒரு சில எண்ணங்கள். இதை ஒரு தொடர் பதிவாக ஆரம்பித்தால் இது போல நிறைய எண்ணங்களும், விடைகளும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். ராமருக்கு அணில் போல நம்மால் ஆன ஒரு சிறு உதவி நம் பூமிக்கும், இந்தியாவிற்கும் செய்வதாக இருக்கட்டுமே.
இதனை தொடர நான் அழைப்பது
தெகா
முத்துலெட்சுமி
தொடர விருப்பம் இருந்தால் தயவு செய்து தொடருங்கள்.
4 comments:
ஹ்ம்ம்... பேசப்பட வேண்டிய விசயம்தான் முகுந்தம்மா... இது மாதிரி எத்தனை விதமான பசுமை புரட்சியக் காலத்து விசயங்கள் தவறாகச் சென்று இன்றைய நாட்களில் வெளி வரக் காத்துக் கொண்டிருக்கிறதோ! ஓ! எழுதலாமே... அவசியம் கலந்துக்கிறேன். முத்துலெட்சுமி, அந்த மஞ்சப் பை தொடர்பா முன்னமே ஒரு பதிவு போட்டுருக்காங்க போல... பதிவிற்கும் - அழைப்பிற்கும் நன்றி. விரைவில் பதிவினை போடுகிறேன்.
//ஓ! எழுதலாமே... அவசியம் கலந்துக்கிறேன்//
கலந்து கொள்வதாக சொன்னதற்கு நன்றி தெகா.
//முத்துலெட்சுமி, அந்த மஞ்சப் பை தொடர்பா முன்னமே ஒரு பதிவு போட்டுருக்காங்க போல//
ஓ! அப்படியா மன்னிக்கவும், நான் தெரியாமல் அவர்களை அழைத்து விட்டேன்.
நன்றி முகுந்த் அம்மா.. இதை எத்தனை முறை எழுதினாலும் நன்மையே..
http://sirumuyarchi.blogspot.com/2009/02/blog-post_19.html இது தான் பழய பதிவு.. புதுப்பதிவும் விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.
தங்களின் பழைய பதிவை இப்போது தான் படித்தேன்.
முன்னரே இதை பற்றி அருமையாக எழுதி இருக்கீங்க. இருந்தாலும் தொடருவதாக சொன்னதற்கு நன்றி.
Post a Comment