ஊரிலேயே முகுந்துக்கு முதல் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடியாயிற்று. இருப்பினும் இங்கு வந்தவுடன் "என்ன பையன் பர்த்டே கொண்டாடலையா ?" அல்லது "என்ன உங்க பையன் பர்த்டே க்கு ஏன் எங்கள கூப்பிடல?" என்று பார்க்கும் அனைவரும் கேட்கிற கேள்விக்கு பயந்து சரி ஒரு பார்ட்டி வச்சிருவோம் என்று நானும் ரங்கமணியம் முடிவு செய்தோம்.
சரி எத்தனை பேரை கூப்பிடனும், யாரையும் விட முடியாது. அவரோட, என்னோட ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்க, பார்த்தவங்க, அப்புறம் தமிழ் நண்பர்கள், பிறகு வேறு மாநில இந்தியன் நண்பர்கள், அப்புறம் அமெரிக்கன் அல்லது வேறு நாட்டு நண்பர்கள், அப்புறம் பக்கத்து வீடு, எதிர் வீடு என்று குடியிருப்பில் உள்ள குடும்பங்கள் என்று சுமார் லிஸ்ட் அம்பது குடும்பத்தை தொட்டது.
சரி பார்ட்டின்னா முதல்ல ஒரு பார்ட்டி ஹால் பார்க்கணுமே, இப்போ எல்லாம் பார்ட்டி ஹால் எல்லாம் ரெண்டு மணிநேர வாடகை குறைஞ்சது அம்பது முதல் நூறு டாலர். அதுவும் அம்பது குடும்பம் வரணும்னா அதுக்கு தகுந்த மாதிரி பெரிய ஹால் ஆகா இருக்கணும். அதுக்கு வாடகை இன்னும் ஜாஸ்தி ஆகும். பேசாமா ஒரு பார்க் ல இருக்கிற recreation area வில வச்சிரலாம்னு நான் ஐடியா சொல்ல ஒரு மாதிரி என்னை பார்த்தார் ரங்கமணி. "போயும் போயும் ஒரே பையன் பர்த்டே ய எவனாவது பார்க் ல கொண்டாடுவானா, என்னை பத்தி என்ன நினைப்பாங்க" என்று அவர் சொல்லவும் சரி என்று விட்டு விட்டேன்.
அடுத்தது சாப்பாடு. அம்பது குடும்பம்ன்னா கணவன், மனைவி குழந்தைகளோட சேர்த்து எப்படியும் 150 பேர் ஆனது. "அவ்வளவு பேருக்கும் வீட்டில குழந்தைய வச்சுக்கிட்டு உன்னால தனியா சமைக்க முடியாது, அதனால வெளியில ஆர்டர் பண்ணிடலாம்" என்று ரங்கமணி சொல்ல சரி என்று சொல்லி விட்டேன். சமையல் ஆர்டர் விலை சுமார் ஐநூறு டாலரை தாண்டியது.
நாங்கள் யோசித்த இந்த முன் ஏற்பாடுகள் எல்லாம் ஒன்றும் இல்லை என்று ஆனது நாங்கள் கேள்விப்பட்ட அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டம் கொண்டாடும் விதம். பொதுவாக கீழ்க்கண்ட அனைத்தும் ஒரு பிறந்த நாளில் இருக்கின்றன.
- முதலில் பிறந்த நாள் என்றால் ஒரு தீம் எடுத்து கொள்கிறார்கள். உதாரணமாக ஆண் குழந்தை என்றால் தாமஸ் ட்ரைன், பாப் தி பில்டர்போன்றவை. பெண்குழந்தை என்றால் டோரா, டின்கர் பெல் போன்ற சில.
- ஒரு தீம் எடுத்து கொண்ட பிறகு, அதனை சார்ந்தே அனைத்து அலங்காரங்களும், பிறந்த நாள் கேக்கும் ஆர்டர் செய்ய படுகிறது. உதாரணமாக பிறந்தநாள் தோரணைகள் முதல் குடிக்க கொடுக்கும் டம்ளர், பேப்பர் டவல் வரை அந்த தீம் உள்ள படங்கள் இருக்குமாறு பார்த்து கொள்கிறார்கள். அந்த தீம் உள்ள கேக் ஆர்டர் செய்ய படுகிறது.
- பார்டிக்கு வரும் குழந்தைகளை மகிழ்விக்க என்று பல விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்கிறார்கள் அல்லது ஒரு ஜோக்கேரை ஏற்பாடு செய்கிறார்கள். இந்த ஜோக்கர் குறிப்பிட்ட தீம் உள்ள உடை அணிந்து வந்து குழந்தைகளுக்குவிளையாட்டு காட்டுகிறார்.
- பிறகு பார்ட்டிக்கு வரும் ஒவ்வொரு குழந்தைக்கும் return gift அல்லது திரும்ப பரிசு கொடுக்க வேண்டும். கொடுக்கா விட்டால் அந்த குழந்தைகள் "where's our gift" என்று உங்களிடம் வந்து கேட்டே விடுகின்றன.
- பிறகு return கிபிட் ஐ அழகாக pack செய்து உடன் ஒவ்வொரு குழந்தையின் பெயருடன் அச்சடித்த thank you கார்டு பிரிண்ட் செய்து gift bag இல் வைத்து ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுக்கிறார்கள்.
எப்படியும் முகுந்துக்கு இப்போது விவரம் தெரிய போவதில்லை. ”ஏன் எனக்கு இன்னொரு பிறந்த நாள் கொண்டாடவில்லை” என்றும் அவன் கேட்கப்போவதில்லை. அதனால் அடுத்தவர்களுக்காக இப்படி ஒன்று அவசியமா என முடிவு செய்தோம். பேசாமல் ஒரு நூறு டாலரை cancer ஆல் அவதிப்படும் குழந்தைகளுக்கு மிக குறைந்த செலவில் மருத்துவம் அளிக்கும் St jude children's hospital க்கு அனுப்பி விட்டு, அடுத்த வருடம் பார்க்கலாம் என நினைத்து நிம்மதியாக இருந்துவிட்டோம்.
9 comments:
அது! முகுந்தம்மா அது! பையனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும் உங்கள் இருவருக்கும் இந்த ஆற்றில் அடிச்சிட்டுப் போகாம சமயோசிதமா productiveஅ செஞ்ச ஒரு காரியத்திற்கும் பாராட்டும், தெகா... :) சூப்பர்ப்!
ஒரு நூறு டாலரை cancer ஆல் அவதிப்படும் குழந்தைகளுக்கு மிக குறைந்த செலவில் மருத்துவம் அளிக்கும் St jude children's hospital க்கு அனுப்பி விட்டு, அடுத்த வருடம் பார்க்கலாம் என நினைத்து நிம்மதியாக இருந்துவிட்டோம். //
நல்ல காரியம் செய்தீங்க.முகுந்த் அம்மா
முகுந்த அம்மா, உங்கள் செயல் பாராட்டப் படவேண்டியது.வாழ்த்துக்கள்!
குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
குழந்தைக்கு விபரம் தெரிந்து எனக்கு பிறந்த நாள் எப்ப கொண்டாடுவீர்கள் என்று கேட்கும் போது கொண்டாடிக் கொள்ளலாம். நல்ல யோசனை தான்.
எப்படியும் முகுந்துக்கு இப்போது விவரம் தெரிய போவதில்லை. ”ஏன் எனக்கு இன்னொரு பிறந்த நாள் கொண்டாடவில்லை” என்றும் அவன் கேட்கப்போவதில்லை.//
முகுந்த்க்கு வாழ்த்துக்களும் உங்கள் இருவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்களும் 'அமைதி விரும்பி' க்கு சிறு வயதில் பிறந்தநாள் கொண்டாடவில்லை. நாங்கள் சொன்ன காரணமும் இதுவேதான்.
என்ன நாங்க எந்த டிரஸ்ட்-க்கும் பணம் கொடுக்கவில்லை.
தங்களின் நல்ல மனதை மீண்டும் ஒரு முறை பாராட்டுகிறேன்.
வாழ்த்த்துகள் - உங்களுக்கும், முகுந்திற்கும்!!
Great!!!!! my best wishes....
Srini
நன்றி தெகா,உங்கள் ஆசிர்வாததிற்கு.
நன்றி தமிழ் உதயம்.
நன்றி கோமதிம்மா, உங்கள போல பெரியவங்க ஆசிர்வாதம் முகுந்த்க்கு கிடச்சதுக்கு ரொம்ப நன்றி.
நன்றி அமைதி அப்பா. நீங்களும் முன்னமே எங்களை போல யோசித்து செயல் பட்டு இருக்கீங்க. கிரேட்.
நன்றி ஹுஸைனம்மா உங்கள் வாழ்த்துக்கள் நிச்சயம் அவனை போய் சேரும்.
நன்றி Srini அவர்களே.
டாக்டரம்மா, உங்களுக்கு ஊசிப்போட தெரியாட்டி அது உங்க சொந்த பிரச்சனை, ஆனா முகுந்துக்கு அமெரிக்கவில் பிறந்த நாள் கொண்டாடலைன்னா அது ஊர் பிரச்சனை. ஆதாரத்திற்க்கு இந்த பதிவு இருக்கு. முதுந்த வளர்ந்த பிறகு ஏன் இப்படி பண்ணிட்டீங்கன்னா நாங்க என்ன சொல்லமுடியும், உடனே "முகுந்த த பில்டர்" கான்செப்டல விழா ஏற்பாடு பண்ணுங்க, லேட்டா வாழ்த்துனாலும் லேட்டஸ்டா வந்து வாழ்த்துரோம்.
இதப் படிச்சவுடனேயே வாழ்த்தனும் என்று தோன்றியது. Charlotte வாழ் இந்திய மக்களே ஒரு முன்னுதாரணமா யோசிக்கிறீங்க. வாழ்த்துக்கள். சமீபத்தில் (4 மாதம் முன்பு) நடந்த ஒரு பர்த்டே பார்ட்டி யில் கூட, பரிசுகளுக்கு பதில் ஒரு கான்செர் charity -கே கொடுக்கச் சொல்லிட்டாங்க. நல்வாழ்த்துக்கள்.
Post a Comment