கையாஸ் தியரி என்று உண்டு, அதன்படி "உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அடுத்த நிகழ்வுடன் தொடர்புடையது" என்று அது கூறும். மற்ற விசயங்களில் அது உண்மையோ இல்லையோ ஆனால் மனித உடலை பொறுத்தவரை அது மிக மிக சரி என்றே தோன்றும். உதாரணமாக குழந்தையின்மைக்கான மிக முக்கிய காரணம் கருமுட்டை சரிவர வளர்ச்சியடையாமல் பாதியிலேயே நின்று போகும் கருப்பை நீர்க்கட்டி பாலி சிஸ்டிக் ஓவரீஸ் PCOS எனப்படும் ஒரு நிகழ்வுக்கும் அதிக எடை மற்றும் இன்சுலின்க்கும் இருக்கும் தொடர்பை கூறலாம்.
சரி PCOS என்றால் என்ன என்று பார்போம்.
நாம் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல கருமுட்டை முழு வளர்ச்சியடைவதே குழந்தைபேற்றுக்கான முதற்படி, அது சரியாக நடக்கவில்லை என்றாலே முதல் தடை ஆரம்பம்.
ஓவ்வொரு மாதமும் மாதவிலக்கு முடிந்தவுடன் பெண்களுக்கான ஹார்மோன்களான எஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ட்ரோன் போன்றவற்றை சுரந்து அடுத்த ஆவுலேஷேன் நடக்க சிக்னல் அனுப்புகிறது. இந்த ஹார்மோன்கள் தவிர ஆண்களிடம் இருக்கும் ஹார்மோன்களான ஆன்றோஜென்களும் பெண்களிடம் சிறிதளவு சுரக்கின்றன.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்று படித்திருப்போம், அது தான் PCOS விசயத்தில் நடக்கிறது, எப்போது பெண்களுக்கான ஹார்மோன்களை சுரக்க உத்தரவிடும் பிட்யுட்டரி சுரப்பி மிக மிக சிறிய அளவில் தேவைப்படும் ஆண்களுக்கான ஹார்மோன்களை அதிகம் சுரக்க உத்தரவிட்டால் அங்கு ஹார்மோன் சீரின்மை நடக்கிறது. இந்த ஆன்றோஜென் கருமுட்டை முழு வளர்ச்சியடைவதை தடுக்கிறது. அடுத்து பிட்யுட்டரி சுரப்பி FSH எனப்படும் பாலிகுல் ஸ்டிமுலேடிங் ஹார்மோனை அதிகம் சுரந்து, ஒரே ஒரு கருமுட்டை வளர்ச்சியடைவதை ஊக்குவிக்காமல் பல பாலி சிஸ்ட் அதாவது நீர்கட்டிகளை உருவாக்குகிறது. விளைவு, கருமுட்டை வளர்ச்சியடையாமை, குழந்தையின்மை.
மேலே காட்டப்பட்டுள்ளது ஒரு PCOS உள்ள பெண்ணின் கருப்பை ultrasound படம். கருப்பு நிறத்தில் இருக்கும் ஓவ்வொரு வட்டமும் கருமுட்டைகளை குறிக்கிறது. ஒரே ஒரு கருப்பு நிற வட்டம் இருப்பின் அது சாதாரண ஆரோக்கியமான கருமுட்டை வளர்ச்சி. ஆனால் அந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது போல பல முழு வளர்ச்சியடையாத கருமுட்டைகள் இருப்பின் அதுவே PCOS எனப்படும் கருப்பை நீர்க்கட்டிகள்.
சரி இதற்கும் உடல் எடைக்கும் அல்லது இன்சுலினுக்கும் என்ன சம்பந்தம்.
தற்போதைய ஆராய்ச்சியின் படி அதிக உடல் எடை, அன்றோஜென்கள் எனப்படும் ஆண் ஹார்மோன்களை சுரக்கிறது, அதனாலேயே ஆண்கள் போன்று மீசை, தாடி வளர்வது அல்லது ஸ்கின் டாக்ஸ் எனப்படும் மருக்கள் உண்டாவது அல்லது குரல் மாறுவது, மாத விலக்கு வராமல் இருப்பது போன்ற மாற்றங்கள் உண்டாக ஆரம்பிக்கும். உடல் எடையை பத்து சதவீதம் குறைத்தாலே அன்றோஜென் சுரப்பு கம்மியாகும் என்றும், மாதவிலக்கு திரும்பும் என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
சரி இங்கே இன்சுலின் எங்கிருந்து வந்தது?
மற்றொரு ஆராய்ச்சியின் படி இந்த PCOS ம் இன்சுலினின் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்று அறிய முடிகிறது, அதிக உடல் எடை உள்ளவர்களின் உடலில் அதிகம் சக்கரை இருப்பதாக பிட்யுட்டரி சுரப்பி நினைத்து கொண்டு அதிக இன்சுலினை சுரக்க உத்தரவிடுகிறது அந்த இன்சுலின் தொடர்விளைவாக ஆன்றோஜென்களை அதிகம் சுரக்க வழிவகை செய்து PCOS ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
சரி இந்த PCOSஐ குணப்படுத்த என்ன செய்கிறார்கள், அதீத உடல் எடையும் , அதிக இன்சுலினும் PCOS க்கு காரணமாக அமைகின்றன என்று அறியப்படுவதால் பல நேரங்களில் சக்கரை குறைவான ஆரோக்கியமான உணவும், அதிக பழங்கள் கொண்ட உணவு முறையும் பரிந்துரைக்கப்படுகிறது. சில நேரங்களில் மேட்போர்மின் எனப்படும் சக்கரையை கட்டுபடுத்த உதவும் மாத்திரையையும் டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனாலும் அதிக junk உணவுகளையும், empty கலோரிகளை தரும் உணவுகளையும் தவிர்த்து நிறைய காய் பழங்கள் கொண்ட உணவுகளை உண்பதும் தவறாமல் உடற்பயிற்சி செய்வதுவுமே இதற்க்கு ஒரே வழி.
--தொடரும்
Reference
http://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0001408/