சில மாதங்களுக்கு முன் என் தோழி ஒருவரின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அவர்களுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆனாலும் ஒரு நல்லசெய்தி சொல்ல முடியாமல் வேதனைபட்டு கொண்டு இருந்தனர்.
நான் சென்றிருந்த சமயம் அவர்கள் வீட்டில் ஒரு இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு நடிகை ஒரு மருத்துவரிடம் கேள்வி கேட்டு கொண்டிருந்தார். அந்த மருத்துவர் பெண்களுக்கான Ob-Gyn/Infertility டாக்டர் என்று நினைக்கிறேன். அதில் நடிகை ஒவ்வொரு கேள்வி கேட்டு முடித்த பின் அந்த டாக்டரின் speciality என்று சுமார் பத்து நிமிடம் அறிவித்தார் ஒரு பெண். அதில் எங்களிடம் சிகிச்சை எடுத்து கொண்டால் எல்லா கருப்பை பிரச்சனையும் விலகி குழந்தை உண்டாகும் என்றார். எல்லா speciality யும் சொன்ன பின் அந்த அறிவிப்பாளர் "எங்கள் டாக்டர் மிகுந்த பக்தியும் கைராசியும் உள்ளவர் ...." என்று நிறைய சொன்னார்.
அது ஒரு 30 நிமிட நிகழ்ச்சி என்று நினைக்கிறேன், அதில் நடிகை ஒரு ஐந்தாறு கேள்வி தான் கேட்டு இருப்பார். மற்றபடி அந்த டாக்டர் பற்றின விளம்பரமும் அவரின் கைராசி பற்றியும் தான் நிறைய கேட்க முடிந்தது.
இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது என் தோழியுடன் பேசி கொண்டிருந்தேன். அவர் இந்தியா செல்ல இருப்பதாக சொன்னார். அங்கு சென்று குழந்தையின்மைகாக சிகிச்சை எடுத்து கொள்ள இருப்பதாக சொன்னார். இங்கு நல்ல advanced treatments இருக்கும் போது எதற்கு அங்கு செல்கிறாய் என்று கேட்டேன். அதற்கு அவர் தனக்கு கருக் குழாய் அடைப்பு (Fallopian tube blockage) இருப்பதாக டாக்டர்ஸ் சொன்னதாகவும் அதற்கு சோதனை குழாய் குழந்தை (IVF treatment) தான் ஒரே தீர்வு என்று இங்கு இருக்கும் டாக்டர்ஸ் சொன்னதாகவும் சொன்னார். அதற்காக ஆகும் செலவு இங்கு அதிகம் என்றும், அவர்களின் இன்சூரன்ஸ் இதனை கவர் செய்யாது என்றும் சொன்னார். அதனால் இந்தியா சென்று இதற்கான மருத்துவம் பார்க்க போவதாகவும் சொன்னார்.
இதை எல்லாம் பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் வேறொரு இந்தியன் சேனலில் மற்றொரு டாக்டர் வந்து பேசி கொண்டு இருந்தார். அவரும் தான் ஒரு கைராசி குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் என்றும், தன்னிடம் சிகிச்சை பெற்று பலர் குழந்தைபேறு அடைந்ததாகவும் சொன்னார். இது ஒரு coincidence ஆ! இல்லை உண்மையிலேயே இந்தியன் சேனல்களில் இது போன்று விளம்பரம் அடிக்கடி வருகிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் இப்போதெல்லாம் மருத்துவம் குறித்த நிகழ்ச்சிகள் எல்லாம் மருந்துகள் பற்றி கூறுவதை விட அந்த மருத்துவர் பற்றிய விளம்பரமாக மாறியதாக எனக்கு தோன்றியது. சமீப காலங்களில் இந்திய பத்திரிக்கைகள் வாரஇதழ்கள் எல்லாவற்றிலும் இது போன்ற விளம்பரங்கள் அடிக்கடி காண நேரிடுகின்றது.
இவை எல்லாம் நடந்தது சில மாதங்களுக்கு முன், நேற்று என் தோழியை சந்திக்க நேர்ந்தது, அவர் தான் உண்டாகி இருப்பதாக நல்ல செய்தி சொன்னாள். எல்லாம் இயற்கையாக நடந்ததாகவும் எந்த treatment க்கும் செல்லவில்லை என்றும் சொன்னாள். எனக்கு ஒரே சந்தோசம், கடவுள் அவர்களுக்கு நல்ல வழி காட்டினாரே! என்று.
ஆனாலும் எனக்கு வந்த சந்தேகம் இது தான், கருக்குழாய் அடைப்பு என்றும் (Fallopian tube blockage) இயற்கையாக குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றும் இங்குள்ள டாக்டர்ஸ் எப்படி சொன்னார்கள்?. மருத்துவம் மிகவும் முன்னேற்றம் அடைந்ததாக கூறப்படும் இந்த நாட்டிலும் ஏன் இப்படி நடக்கிறது? என்று நினைத்தேன். அப்போது Robin Cook அவர்களின் Vital Signs என்னும் புத்தகத்தில் இது போன்ற குழந்தையின்மை சிகிச்சை (Infertility கிளினிக்) நிலையங்களில் நடக்கும் கூத்துகள் நினைவுக்கு வந்தன. அது ஒரு கற்பனை கதை என்றாலும், இங்கு நடக்கும் கூத்துகளை எல்லாம் பார்க்கும் போது, குழந்தையின்மை சிகிச்சை வியாபாரமாக்கப்படுகின்றதோ என்று நினைக்க தோன்றுகிறது.
11 comments:
ஓ இதுமட்டுமாங்க நடக்குது? எல்லாவிதமருத்துவத்துக்க்கு தனியாக சேனல்கள் தனி நேரம் ஒதுக்கி விளம்பர நிகழ்ச்சிகள் நடத்த்றாங்க.. அனுமார் தாயத்து, சக்கரம் அதுக்கு சீக்கிரம் வாங்கினால் தள்ளுபடி என்பது வருடக்கணக்கா வருது சீக்கிரம்ன்னா என்ன்னு தெரியல , ராசிகல் மோதிரம், பெயர் மாற்று உதவி ந்னு அடுக்கிக்கிட்டே போகலாம்..டீவிக்காரர்கள் பாக்கேட்டுக்களும் நிரம்புது .. டூபாக்கூர்களின் பாக்கெட்டும் நிரம்புது..மக்கள் தான் காலியாகறாங்க.. :(
வாங்க முத்துலெட்சுமி.
//டீவிக்காரர்கள் பாக்கேட்டுக்களும் நிரம்புது .. டூபாக்கூர்களின் பாக்கெட்டும் நிரம்புது..மக்கள் தான் காலியாகறாங்க//
இதுக்கு ஒரு முடிவில்லையா? :(((
என்னமோ போங்க.
so long all these hits and misses and the combination of physiological anomalies believed to be in god's hand, we will have tens and thousand of media doctors will say whatever they want to tell and sell themselves good... sad too, but do we have any choice?
http://sirumuyarchi.blogspot.com/2010/03/blog-post.html உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். :)
//we will have tens and thousand of media doctors will say whatever they want to tell and sell themselves good//
Well said Theka. மருத்துவம் வியாபாரமாக்கப்பட்டது வேதனையளிக்கிறது. :((
//but do we have any choice?/
Unfortunately we dont.
உங்கள் தோழி சொன்னது ஒரு வகையில் சரிதான்.
இந்தியாவின் மருத்துவர்களை விட வெளிநாட்டு மருத்துவர்கள் சிறந்தவர்கள் இல்லை,நிச்சயமாக.
மருத்துவமனைகளும் கருவிகளும் முறைகளும் வெளிநாட்டில் அபாரமாக இருக்கிறது;ஆனால் ரிசல்ட் நல்ல விதத்தில் கிடைப்பதென்னவோ இந்தியாவில்தான்..
தொடர் பதிவுக்கு நன்றி முத்துலெட்சுமி. சீக்கிரம் எழுதுகிறேன்.
//இந்தியாவின் மருத்துவர்களை விட வெளிநாட்டு மருத்துவர்கள் சிறந்தவர்கள் இல்லை,நிச்சயமாக.//
அவள் அனுபவத்திலிருந்து எனக்கும் கொஞ்சம் அப்படிதான் தோணுது
முகுந்தம்மா,
அருமையான பதிவு.
நீங்க சொல்றது ரொம்ப சரி.
இப்போகூட சமீபமா ஒரு வைத்தியன் இதே மாதிரி தான் கைராசி, கடவுள் பக்தின்னு எல்லாம் சொல்லிண்டு, திருவிதாங்கூர் ராஜவைத்தியசாலைன்னு ஏகப்பட்ட விளம்பரம் குடுக்கற நிகழ்ச்சி பண்ணிண்டு, மனவளம் குன்றிய குழந்தைகளை குணப்படுத்தறேன் பேர்வழின்னு திரின்சுண்டு இருந்தான் . கடைசியில் அவனுடைய ஆவணங்கள் எல்லாமே போலியாம். அந்தாளு படிக்கவே இல்லையாம். இதான் இன்னிக்கி விளம்பரம் பண்ணும் வைத்தியர்களின் உண்மையான நிலைமை!
முதல் வருகைக்கு நன்றி அநன்யா மஹாதேவன்.
//ஒரு வைத்தியன் இதே மாதிரி தான் கைராசி, கடவுள் பக்தின்னு எல்லாம் சொல்லிண்டு
மனவளம் குன்றிய குழந்தைகளை குணப்படுத்தறேன் பேர்வழின்னு //
ஏங்க, இவங்களுக்கு ஏமாத்த வேற ஆளுங்களா இல்ல? பாவம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைங்க கிட்ட வேலைய காட்டனும்.
//இதான் இன்னிக்கி விளம்பரம் பண்ணும் வைத்தியர்களின் உண்மையான நிலைமை!//
மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க :((
//டீவிக்காரர்கள் பாக்கேட்டுக்களும் நிரம்புது .. டூபாக்கூர்களின் பாக்கெட்டும் நிரம்புது..மக்கள் தான் காலியாகறாங்க//
from chennai
kavalai padathirgal saguthirigala kaduval nam vasm eruper ..
Post a Comment