Monday, September 5, 2011

Outbreak ஹாலிவூட் படமும் நிஜமும்!

சுமார் ஒரு வருடத்திற்கு முதல் பார்த்த படம் அவுட்ப்ரேக். இரண்டு நாட்களுக்கு முன்பு கலைஞர் டீவியில் அதே படத்தை தமிழில் பார்க்க நேர்ந்தது. ஆப்ரிக்க கண்டத்தில் ஒரு ஊரில் பரவும் வைரஸ் கிருமி எவ்வளவு வேகமாக அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவி மக்களை கொல்கிறது என்பதை நிறைய உண்மை + ட்ராமா கலந்த திரைப்படமாக எடுத்து இருப்பார்கள்.

உண்மையில் படத்தில் காட்டுவது போல நடக்குமா? என்று யோசிப்பவர்களுக்கு... 2009 இல் உலகமெங்கும் பரவிய H1N1 பன்றிக்காய்ச்சல் நல்ல உதாரணம்.

2009 இல் என்ன நடந்தது..

  • March 2009 இல் Mexico நாட்டில் உள்ள La Gloria, Veracruz என்ற ஊரில் உள்ள 60% மக்கள் காய்ச்சல் வந்து நோய் வாய்ப்படுகின்றனர்.
  • March 7இல் Mexico நாட்டில் இருந்து வந்த ஒருவர் மூலம் அமெரிக்காவுக்கு அந்த நோய் 14 மாவட்டங்களில் பரவுகிறது.
  • அமெரிக்காவில் உள்ள 18 மாவட்டங்கள் நோய் பரவியதாக அறிவிக்கப்படுகின்றன..
  • ஏப்ரெல் 27இல் ஸ்பெயின் நாட்டில் இந்த வைரஸ் இல் பரவியதாக அறிவிக்கிறார்கள்.
  • ஸ்பெயினை தொடர்ந்து U.K யிலும் இந்த வைரஸ் பரவியதாக அறிவிக்கப்படுகிறது.
  • ஏப்ரெல் 28ல் கனடா, இஸ்ரேல், நியூஸிலாந்து நாடுகள் வைரஸ் பரவியதாக அறிவிக்கின்றன..
  • ஏப்ரெல் 29, 30இல் ல் மற்ற யுரோப்பியன் யூனியன் நாடுகளான ஆஸ்திரியா, ஜெர்மனி, நெதெர்லாண்ட்ஸ் மற்றும் சுவிஸ்சர்லாந்த்து நாடுகள் வைரஸ் பரவியதாக அறிவிக்கின்றன.
  • மே 1இல், சைனாவில் உள்ள ஹாங்ஹாங்கில் கிட்டதட்ட 300 பேர் நோய் பாதிக்கபட்டதாக அறிந்து தனியறையில் அடைக்கப்படுகின்றனர்.
  • நோய் பரவுவதை தடுக்க 5 நாள் முழு அடைப்பை மெக்ஸிகோ மேற்கொள்கிறது.
  • ஆசிய நாடுகளான, சைனா, கொரியாவிற்க்கு நோய் பரவுகிறது.
  • மே 3, அரபு நாடுகளும், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவும் நோய் பரவியதாக அறிவிக்கின்றன.
  • மே 6,7,8 மற்ற தென் அமெரிக்க நாடுகளுக்கும் நோய் பரவுகிறது.
  • மே 16 இந்தியாவில் நோய் தாக்கிய முதல் கேஸ் அறிவிக்கப்படுகிறது.
  • ஆகஸ்ட் 13 க்குள் 1800 பேர் நோய் தாக்கி இறந்ததாக WHO அறிவிக்கிறது.
  • எந்த எந்த நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியது என்பதை WHO அறிவிக்கிறது.



சரி இப்போது நீங்களே சொல்லுங்கள்..அந்த படத்தில் காட்டுவதை விட பயங்கரமாக வேகமாக H1N1 பன்றிக்காய்ச்சல் பரவி இருக்கிறது என்று கூறலாம்.

இரண்டு மாததிற்குள் பாதி உலகை H1N1 வைரஸ் ஆட்கொண்டுவிட்டது..அதற்கு காரணம் உலகம் சுருங்கி விட்டதாகும்..யாரும் எங்கேயும் செல்லலாம், அங்கு சென்று நோய் பரப்பலாம் என்று ஆனதே.

இப்போது யோசித்து பாருங்கள். H1N1 வைரஸ் உடனடியாக மரணத்தை விளைவிப்பதில்லை..காய்ச்சலை மட்டுமே தந்தது. கவனிக்கபடாமல் இருந்தால் தான் அது மரணத்தை தந்தது..ஆனால் நோய் ஏற்பட்ட சில மணி நேரத்தில் மரணத்தை கொடுக்கும் ஏதேனும் பயங்கரமான வைரஸ் இந்தியா போன்றதோரு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பரவினால் என்னவாகும்....நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது..

இந்த கருவை மையமாக கொண்டு ”Contagion" என்ற ஒரு படம் வர இருக்கிறது...முடிந்தால் பாருங்கள். கீழே உள்ள படத்தின் டிரைலரை பாருங்கள்.







3 comments:

ராமலக்ஷ்மி said...

//உண்மையில் படத்தில் காட்டுவது போல நடக்குமா? என்று யோசிப்பவர்களுக்கு... 2009 இல் உலகமெங்கும் பரவிய H1N1 பன்றிக்காய்ச்சல் நல்ல உதாரணம்.//

உண்மைதான். இப்படியெல்லாம் நடக்குமென்பது நிரூபணமாகி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

நல்ல பகிர்வு முகுந்த் அம்மா.

ஹுஸைனம்மா said...

95ம் வருடம், குஜராத்தில் ப்ளேக் நோய் தாக்கியது. என்றாலும், சூரத் நகர் தவிர குறிப்பிடும்படி அதிகம் பரவவில்லை என்று நினைவு. தொடர்ந்து சிங்கப்பூரிலிருந்து ‘சார்ஸ்’ இறக்குமதியானது. பின்னர், H5N1, H1N1, சிக்குன்குனியா, லெப்டோஸ்பைரோஸிஸ் (எலிக்காய்ச்சல்), டெங்கு என்று பல்முனைத் தாக்குதல்கள் தொடர்ந்து இருந்தாலும், வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இழப்பு விகிதம் அதிகமில்லை என்று தோன்றுகிறது. அல்லது, மக்கள் தொகை பெருக்கத்தால் இந்த இழப்புகள் சிறிதாகத் தோன்றுகின்றதோ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

திகிலக்கிளப்பறீங்க ...