ஃப்ளு போன்ற ஒரு சுவாசப்பகுதியை தாக்கும் வைரசை ஒரு பெரிய உயிர் கொல்லியாக்கி அதற்கான தடுப்பூசி அவசியம் என்றதொரு மாயபிம்பம் அமெரிக்காவில் உருவாகாப்பட்டு இது வரை சிறப்பாக செயல்படுத்தபட்டும் இருக்கிறது.
இன்னொரு பக்கம் இதுபோன்றதொரு தடுப்பூசிகள் குழந்தைகளிடம் ஆட்டிசம் போன்ற குறைபாடுகளைஅதிகரிக்கின்றன என்ற சில எதிர்ப்புகளும் கிளம்பியவண்ணம் இருக்கின்றன. ஃப்ளு தடுப்பூசியில் பதபடுத்த உபயோகபடுத்தபட்ட Thimerosal போன்றவை ஆட்டிசம் போன்றவற்றை தூண்டுகின்றன என்று சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததால் 2000ஆம் ஆண்டில் இருந்து Thimerosal உபயோகிப்பதில்லை.
இது எல்லாம் ஒரு புறம் இருக்க, இந்த ஃப்ளு வைரசை வைத்து சினிமா உலகம் அதுவும் தமிழ் சினிமா உலகம் சரியான காமெடி செய்து கொண்டு இருக்கிறது.
சமீபத்தில் வந்த "ஐ" படம் அதற்க்கு சாட்சி. அதில் ஹீரோவுக்கு மனிதனால் ஆராய்ச்சி கூடத்தில் உருவாக்கப்படும் H4N2 என்ற I வைரசை செலுத்துகிறார்கள், உடனே, அவர் உடலில் கட்டிகளும் அவலட்சணமும் தோன்றி, கூனனாகி விடுகிறாராம். என்ன கதையையா இதெல்லாம்.
மூன்று வருடமாக ஃப்ளு வைரஸில் ஆராய்ச்சி செய்திருக்கிறேன், இதுவரை இப்படி பட்ட ஒரு விஷயத்தை கேள்விப்பட்டதில்லை.
முதலில் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், H4N2, ஒரு avian virus , அதாவது பறவைகளை தாக்கும் ஃப்ளு. அது இயற்கையாக இருக்கும் வைரஸ். மனிதனால் லேபில் உருவாகாபடுவதில்லை. கிட்டதட்ட 100 வருடங்களாக 1918 இல் இருந்து ஃப்ளு வைரஸ் பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் H4N2 மனிதனை தாக்கியதில்லை.
இது லேபில் மரபணு மாற்றம் செய்யப்பட்டது என்றே வைத்துகொள்வோம் அதனால் மனிதனை தாக்கும் படி மாறிவிட்டது என்று வைத்து கொண்டாலும் அப்படியே செய்யப்பட்டு இருப்பினும், அதன் mode of infection , அதாவது,எப்படி எந்த வழியில் மனிதனை தாக்கும் என்பது நன்கு அறியப்பட்டு இருக்கிறது. அதாவது, upper respiratory அல்லது மூச்சு குழாய் பகுதியை தாக்கலாம். அல்லது, avian பறவை ஃப்ளு போல மனிதனின் GI tract (gastrointestinal tract) அதாவது குடல் மற்றும் செரிமான பகுதியை மட்டுமே தாக்கும் என்று இதுவரை கண்டறிய பட்டு இருக்கிறது. இந்த படத்தில் காட்டுவது போல, pituitary gland அல்லது pituitary சுரப்பியை மற்றம் செய்து, உடல் முழுதும் அவலட்சணம் ஆகும் என்றோ அல்லது, கூன் விழும் என்றோ எனக்கு தெரிந்த எந்த ஆராய்ச்சியும் சொல்லவில்லை.
என் இப்படி உண்மைக்கு புறம்பான விசயங்களை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. அதுவும் சங்கர் போன்றவர்களிடம் இருந்து இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை.
References
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2504709/
http://www.cdc.gov/vaccinesafety/concerns/autism/

14 comments:
ஷங்கரிடம் நீங்க இதைத்தான் எதிர்பார்க்கணும்.
அவருக்கு எப்படிங்க இதெல்லாம் தெரியும்??
பாராசூட்ல இருந்து குதிக்கிறதுல இருக்கிற அபத்தம்தான் நம்ம விமர்சக "ஜீனியஸ்களுக்கும்" "மேதைகளுக்கும்" புரியும்.
இது மாதிரி அறிவியல் அபத்தம் எல்லாம் நம்ம ஜீனியஸ்களுக்கு புரியாது. ஏன் என்றால் அவர்கள் "படிப்பறிவு" அவ்வளவுதான்.
நீங்கள் விவரித்துள்ள அளவுக்கான நுணுக்கமான அறிவியல் துல்லியத்தை நமது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பதில்லை. அதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை. ஊசிப் போன வடையை சாப்பிட்டதும் ஹீரோ அவலட்சனமானான் என்று காட்டினால் கூட மறுக்காமல் ஏற்றுக்கொள்வார்கள் நம் மக்கள்.
சங்கர் படத்தையா நிந்தனை செய்கிறீர்கள்; இருங்க! சங்கர் வாரார்! உங்களுக்கு கருட புராணத்தில் படி தண்டனை கொடுக்கப்போகிறார்!
நல்ல காலம்..சுஜாதா கதை எழுதி இப்படி நீங்க சொல்லியிருந்தீர்கள் அவருடைய தொண்டரடிப்பொடிகள் உங்கள் அறம் பாடியே கொன்று இருப்பார்கள்.
Karigan well said
Karigan said true
அறிவியல்ரீதியான விமரிசனம்!!
ஜுராசிக் பார்க் எனும் படத்தில் ஒரு தவளையின் (ஜீன்?) மூலம் டைனோசரை உருவாக்கும் போது, அந்தத் தவளை இனம் ஆணாகவும் பெண்ணாகவும் தாமே மாறிக்கொள்ளும் வகையென்றும், அதன் காரணமாக ஆராய்ச்சிக் கூடத்தில் உருவாகும் டைனோசர், தானே இனவிருத்தி செய்து பல டைனோசர்களை உருவாக்கும். அதுதான் சரியான லாஜிக். தசாவதாரத்திலும் அந்த அறிவியல் லாஜிக் இருந்தது. அறிவியல் கதை எடுத்தால் லாஜிக் இடிக்கக் கூடாது. வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அல்லது விக்கியில் தேடினாலும் கிடைத்திருக்கும். 'சங்கரில்' பிரமாண்டம் அற்புதமாய் இருக்கும், ஆனால் அறிவியல்லாஜிக் எப்போதும் இருந்ததில்லை.
ஜுராசிக் பார்க் எனும் படத்தில் ஒரு தவளையின் (ஜீன்?) மூலம் டைனோசரை உருவாக்கும் போது, அந்தத் தவளை இனம் ஆணாகவும் பெண்ணாகவும் தாமே மாறிக்கொள்ளும் வகையென்றும், அதன் காரணமாக ஆராய்ச்சிக் கூடத்தில் உருவாகும் டைனோசர், தானே இனவிருத்தி செய்து பல டைனோசர்களை உருவாக்கும். அதுதான் சரியான லாஜிக். தசாவதாரத்திலும் அந்த அறிவியல் லாஜிக் இருந்தது. அறிவியல் கதை எடுத்தால் லாஜிக் இடிக்கக் கூடாது. வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அல்லது விக்கியில் தேடினாலும் கிடைத்திருக்கும். 'சங்கரில்' பிரமாண்டம் அற்புதமாய் இருக்கும், ஆனால் லாஜிக் எப்போதும் இருந்ததில்லை.

//'சங்கரில்' பிரமாண்டம் அற்புதமாய் இருக்கும், ஆனால் லாஜிக் எப்போதும் இருந்ததில்லை// - நீங்கள் 'அந்நியன்' பார்த்ததில்லையா? :-P
பார்த்திருக்கிறேன். கடைசிக் காட்சியில் அவ்வளவு பெரிய அரங்கத்தில் 'அந்நியன்' தோன்றுவார் என்று அறிவிப்பு வரும். ஆனால் அரசாங்கத்திற்கும், காவல் துறைக்கும் அது யார் என்று தெரியாது. அவ்வளவு பெரிய அரங்கத்தை நீங்களோ நானோ புக் செய்ய முடியுமா? அந்த அரங்கத்தை யார் புக் செய்தார்கள், அதன் பின்புலத்தை ஆராய்ந்தாலே கண்டு பிடிக்க முடியாதா? ஆனால் சுவரசியம் போய்விடும் என்பதற்காக, லாஜிக் உடைக்கப்பட்டிருக்கும். பிரமாண்டத்தில் லாஜிக் மறைந்து போயிருக்கும்.
உண்மைதான் மதிவாணன் அவர்களே! பல முறை அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இஃது எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இப்படியெல்லாம் தோன்றாத அளவுக்கு நம் கண்களை மறைத்தது படத்தின் பிரம்மாண்டமோ, திரைக்கதை அமைப்போ மட்டுமல்ல, அந்தக் கதையில் இருந்த நல்ல கருத்து. 'மிகச் சிறிய அசட்டைகளோ, தவறுகளோ கூட மாபெரும் இழப்புக்குக் காரணமாகி விடக்கூடும்; எனவே, எப்பொழுதும் எதிலும் பொறுப்பாக இருங்கள்' என்ற அந்த கோட்பாடு அசத்தலான முறையில் மனதில் பதியும்படி கூறப்பட்டதால், அந்தப் புதுமை மற்றவற்றை நம் கண்களிலிருந்து மறைத்து விடுகிறது என்பதே என் நம்பிக்கை. இப்பொழுதும் அந்தப் படத்தைத் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தால் ஓரிரு நாட்களுக்கு உடம்பில் ஒரு பொறுப்புணர்வு தொற்றிக் கொள்கிறது. அதற்காக, சங்கரைப் பாராட்டலாம். என்னைப் பொறுத்த வரை, 'அந்நிய'னில் ஏரண (logic) மீறல் என்றால், கராத்தே வீரர்களுடனான சண்டையின் முடிவில் ஏவுகணை போல் பறந்து வந்து தாக்குவதுதான். இன்னும் கூட ஓரிரண்டு உண்டு. இப்பொழுது சட்டென நினைவுக்கு வரவில்லை. ஆனால், அந்தப் படத்தில் இருந்ததைப் போல் எந்த ஒரு சமூக அக்கறையோ, புதுமையான திரைக்கதை அமைப்போ இல்லாததே 'ஐ'யின் குறைபாடுகள் நம் கண்களில் பளிச்செனத் தெரியக் காரணம்.
லாஜிக் எல்லாம் சங்கருக்கு எட்டாப்பொருத்தம்!
Thanks the comments all.
Post a Comment