Saturday, April 10, 2010

சாதிகள் இல்லையடி பாப்பா

இப்படி ஒரு பதிவை எழுத நேர்ந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். இது எனக்கு இன்று நேர்ந்த ஒரு மோசமான நிகழ்வின் பிரதிபலிப்பு.

இன்று ஒரு பிறந்தநாள் விழாவிற்கு செல்ல நேர்ந்தது. அதில் புதிய சிலர் அறிமுகம் ஆயினர். வழக்கமாக இங்கு நடக்கும் விழாக்களில் எல்லாம் பெண்கள் ஒரு பக்கமும் ஆண்கள் ஒரு பக்கமும் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருப்பர். நான் பெண்களுடன் அமர்ந்து புதிதாக அறிமுகமான அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

எப்படி எங்கள் திருமணம் நேர்ந்தது?, காதல் திருமணம் எப்படி சாத்தியமானது? எங்கே படித்தீர்கள்?, எப்படி படித்தீர்கள்?, எங்கே வேலை பார்கிறீர்கள்/பார்த்தீர்கள்? இவை எல்லாம் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் . எதோ quiz போல என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். நானும் பதில் சொல்லி கொண்டு வந்தேன்.

எல்லா கேள்விகளும் ஓகே என்றாலும் முடிவில் அவர்கள் கேட்டது இது தான்
"நீங்கள் என்ன சாதி"

எனக்கு தூக்கி வாரி போட்டது.
"நான் பெண் சாதி"

என்று நானும் நறுக் என்று பதில் சொன்னேன். அதற்கு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை ஒரு சாதி பெயரை சொல்லி நீங்கள் அந்த சாதியினரா என்று கேட்டனர்.
அதற்கு நான் இல்லை என்று சொன்னது தான் தாமதம். நீங்கள் படித்த படிப்பை கேட்டதும் நீங்கள் அந்த சாதியினர் என்று நினைத்தோம், அதனால் தான் கேட்டோம், No offense என்று கூல் ஆக பதில் வந்தது.

எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் இப்படி ஒரு கேள்வி என்னிடம் கேட்டனர். இப்படி ஒரு கேள்வி கேட்ட அனைவரும் நன்கு படித்த பெண்கள். மனது வலிக்கிறது, உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் சாதிகள் ஒழியாதா?

47 comments:

சந்தனமுல்லை said...

:-(( கேடுகெட்ட ஆட்டிட்யூட்!

Anonymous said...

எவ்வளவு படிச்சாலும் அதை விடமாட்டாங்க ஒரு சிலர் :(

SurveySan said...

கேட்டவங்களின் நோக்கம் தெரியாம என்ன சொல்றதுன்னு தெரியலை.

நான் இந்த மாதிரி கெட்-டுகெதர்களில் கவனிச்ச விஷயம், எந்த மாநிலம் எந்த மொழி தெரிந்தவர்னு மற்றவர்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள். 'அவங்க ஆளா'ன்னு தெரிஞ்சுக்க. இது தப்பில்லை.

ஆனா, அதையும் தாண்டி சாதி கேட்டுட்டு 'கூட்டு சேர்வது' தப்பு. பல வருஷம் ஆகும், இதெல்லாம் மறைய.

dondu(#11168674346665545885) said...

சாதி பார்க்கலாகாது, இன்னொருவர் சாதியை கேட்கக் கூடாது என்றெல்லாம் சமீபத்தில்தான் வந்தது. அதற்கு முந்தைய நிலையோ பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. இன்னும் பலரிடம் இருக்கிறது.

அவர்களுக்கு உங்கள் ரியேக்‌ஷன் புரிவது கடினம். பெரியாரே யாரை முதலில் பார்த்தலும் அவர்களது சாதி என்னவென்றுதான் கேட்பார் என படித்திருக்கிறேன்.

இவர் நம்மவரா, வேற்றவரா என்பதை அறிய மனிதன் எப்போதுமே அறிய விரும்பியிருக்கிறான். பல நேரங்களில் அது அவனது பாதுகாப்புக்கு தேவைப்படும்.

அரசே சாதி என்ன என்றுதானே கேட்கிறது. நீங்கள் வேட்பாளராக தேர்தலில் நிற்க விரும்பி ஒரு கட்சியை டிக்கெட்டுக்காக அணுகினால் அங்கு உங்களை கேட்கும் முதல் கேள்விகளில் சாதியும் அடங்குமே.

ஆகவே இம்மாதிரி கேள்விகளை லேசாக எடுத்துக் கொள்வதே நலம். பதிலுக்கு அவர்கள் சாதி என்னவென்பதை கேட்டு நிலைமையை லேசானதாக மாற்றியிருக்கலாமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Chitra said...

பள்ளியில் - அரசாங்க பதிவேடுகளில் - வேலை தளங்களில் - quota - திருமணம் - என்று சாதிகள் எங்கும் வெளிச்சத்தில் இருக்கும் போது, நட்புக்கு மட்டும் தேவை இல்லையா என்று அவர்கள் நினைத்து இருக்க கூடும்.

எம்.எம்.அப்துல்லா said...

த்தூ.

எம்.எம்.அப்துல்லா said...

//சாதி பார்க்கலாகாது, இன்னொருவர் சாதியை கேட்கக் கூடாது என்றெல்லாம் சமீபத்தில்தான் வந்தது. அதற்கு முந்தைய நிலையோ பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. இன்னும் பலரிடம் இருக்கிறது.

//


சார் நீங்க இப்ப செய்ற மொழிபெயர்ப்புகளின் மூலம் பொருள் ஈட்டும் முறையெல்லாம் சமீபத்தில்தான் வந்தது. அதற்கு முன் சாணி அள்ளுவது,மாடு குளுப்பாட்டி விடுவது போன்ற விவசாயம் சார்ந்த வேலைகள்தான். நீங்க இப்ப அதையா செய்றீங்க???

Mr.John said...

உலகம் தெரியாதவங்களா இருக்கீங்க..

முதல்ல இந்த கட்டுரையப் படிங்க.
http://www.thadagam.com/loadUno.aspx?loadXML=articles/bala/onCaste.xml

கெக்கே பிக்குணி said...

"வாவ், இன்னும் இங்கியும் சாதி பத்தி எல்லாம் பேசற பேக்வர்ட் மென்டாலிடி இருக்கா என்ன? தட்ஸ் வியர்ட், நௌ ஐ'வ் ஸீன் எவரிதிங்"ன்னு முகத்தில் அடிச்சாப்போல சொல்லிடுங்க. இல்ல, இந்த ஆட்களின் தயவு இப்போதைக்கு தேவை என்றால், எப்படி உங்கள் (கற்பனையான) வெள்ளைக்கார தோழி/தோழர் இந்தியர்களின் சாதிகளைச் சாடிப் பேசினார் என்று கதை விடுங்கள். இந்த ஆட்கள் "வாலைக் குழைத்துக் கொண்டு" வருவார்கள்.

இந்திய அரசாங்கத்தில் பல பேர் லஞ்சமும் கேட்கிறாங்க. அதுக்காக லஞ்சம் கொடுத்திட்டே இருக்குறது சரியா? நாய் குரைக்குதுன்னா நாமும் குரைக்க தேவையில்லை.

Thekkikattan|தெகா said...

//நீங்கள் படித்த படிப்பை கேட்டதும் நீங்கள் அந்த சாதியினர் என்று நினைத்தோம்//

கேடு கெட்ட பயலுகங்க, எங்கே போனாலும் என்னமோ ஒரு செலவாடை சொல்லுவாங்கலே 'நாயி நடுக்கடலுக்குப் போனாலும் நக்கித்தான் குடிக்கணும்னு' அதே கதைதான்... ஒரு பதிவு வந்திட்டே இருக்குதுங்க, இப்பதான் ரெண்டு நாளைக்கும் முன்னாடி எழுதினது. போடுறேன் சீக்கிரமே... இதுக்குத்தான் ஆழம் தெரியாம கண்டவிங்க க்கெட் டுகெதருக்கெல்லாம் தலை காட்டுறதில்ல நான் :((

Thekkikattan|தெகா said...

நீங்கள் படித்த படிப்பை கேட்டதும் நீங்கள் அந்த சாதியினர் என்று நினைத்தோம்//

ஓ! படித்த படிப்பிற்கும் சாதிக்கும் கூட தொடர்பு இருக்கிறதா? அட அட... இவிங்களா என்னங்க பண்ணுறது ... கொஞ்சம் harshவே பதில் சொல்ல வேண்டியதாப் போச்சு கண்டுக்காம விட்டுடுங்க, பத்திக்கிட்டு வருது எனக்கு...

சேட்டைக்காரன் said...

இது போன்ற அனுபவங்கள் உங்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன. இன்றும் பல இடங்களில் நாம் மறக்க விரும்புவதை நினைவூட்டத்தான் செய்கின்றனர்.

padma said...

very sad mukund amma .its really very sad

அமைதி அப்பா said...

'சாதிகள் இல்லையடி பாப்பா'
நல்ல பதிவு.
அங்கும் ஜாதி பார்க்கபடுவது வருத்தமாக உள்ளது.

சென்னையில் ஜாதிப் பார்த்து வீடு வாடகைக்கு விடுவது குறித்து, நான் ஒரு பதிவை எழுதிவுள்ளேன். நேரம் கிடைத்தால் படிக்கவும். http://amaithiappa.blogspot.com/2010/01/blog-post.html

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

அப்படி என்னதான் படித்திருககிறீர்கள்? சுவாராசிய்மானதாக இருக்கும் போலிருக்கிறதே!

என் பொண்ணையும் அதே படிக்கவச்சு உயர்ந்த ஜாதியாக்கலாமென் ஒரு ஐடியா.

ப்ளீச் ஹெல்ப்

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

பாரதி ரொம்ப கில்லாடி. யோசித்துத்தான்

;சாதிகள் இல்லையடி பாப்பா


என்று பாப்பாக்களுக்குச் சொன்னார்.

நீங்க என்ன பாப்பாவா?

பெரியங்களானப்புறம் மாறிக்கோங்க் என்கிறார்.

இராகவன் நைஜிரியா said...

எவ்வளவுதான் வளர்ந்தாலும், இது மட்டும் மாறவேயில்லை...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////அதற்கு நான் இல்லை என்று சொன்னது தான் தாமதம். நீங்கள் படித்த படிப்பை கேட்டதும் நீங்கள் அந்த சாதியினர் என்று நினைத்தோம், அதனால் தான் கேட்டோம், No offense என்று கூல் ஆக பதில் வந்தது.//////சாதியை வைத்து ஒருவரின் கல்வித் தகுதியை அறிந்துகொள்ளும் அளவில் இன்னும் கண்மூடித்தனமான எண்ணங்களுடன் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள் !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் . மீண்டும் வருவேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நேரடியாக் கேக்கறது சங்கடப்படுத்துவது உண்மைதான்..இன்னும் சில காலம் பொறுத்து மாறலாம்..

படிப்புக்கும் ஜாதிக்கும் எப்படி தொடர்பில்லையோ அப்படியே படிப்புக்கும் உலக ஞானத்துக்கும் கூட தொடர்பு இல்லைங்களே. :)))

dondu(#11168674346665545885) said...

//சார் நீங்க இப்ப செய்ற மொழிபெயர்ப்புகளின் மூலம் பொருள் ஈட்டும் முறையெல்லாம் சமீபத்தில்தான் வந்தது.//
தகவல் பிழை. உலகில் மொழிகள் என உண்டானதும் தோன்றிய முதல் சேவை மொழிபெயர்ப்புதான். இதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொன்மை உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முகுந்த் அம்மா said...

">டிஸ்கி:

இது எனக்கு நேர்ந்த ஒரு நிகழ்ச்சியின் பிரதிபலிப்பே. இந்தியாவை விட்டு நான் வெளியே வந்த இந்த ஒன்பது ஆண்டுகளில், முதல் சந்திப்பிலேயே அதுவும் ஒருசில மணிநேர விசாரிப்புகளுக்கு பின் இப்படி யாரும் என்னை கேள்வி கேட்டதில்லை. அதனாலேயே இதனை எழுத நேர்ந்தது.

இதில் எந்த சாதிய/ ஆரிய/ திராவிட/அரசியல் சார்பும் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

பழமைபேசி said...

அமைதி...அமைதி....

முதல்ல நமக்குள் சாதி வேறுபாடுகள் இருக்கு என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்...

அதை ஒத்துக் கொள்ளும்பட்சத்தில்தான், எப்படி அதைக் கடந்து வர முடியும் என யோசிக்க முடியும் என்பது என் தாழ்மையான எண்ணம்.

நிச்சயமாக, அந்த படிப்பு என்றவுடன் அவர்களுக்கு குறிப்பிட்ட அந்த சாதி மனதில் தோன்றி இருக்கக் கூடும்... அதற்கு அவர்கள் மேல் பழி சுமத்துவதில் பயனில்லை.....

என் உருவத்தைப் பார்த்தும் நிறையப் பேர் என்னை மலையாளி என நினைத்து ஏசியது உண்டு....

என் உருவத்தைப் பார்த்து, நான் ஒரு பிராமணன் என நினைத்து ஒதுக்கியோர் பலர்....

என எழுத்து மற்றும் பேசும் பாங்கைப் பார்த்து, சாதியை எண்ணிக் கேலி பேசியோர் பலர்...

அவர்களை எல்லாம் நான் ஒதுக்கி இருந்தால், கண்டு வந்த 14 நாடுகளிலும் நான் தனி மனிதாகத்தான் இருந்திருப்பேன்....

கட்டம் கட்டி வெறுத்து ஒதுக்குவதென்பது வேறு; இயல்பாய், அனிச்சையாய் உணர்வை வெளிப்படுத்துவது என்பது வேறு;

இங்கே வெளிப்பட்டது இரண்டாம் வகையே என்பதை உணரமுடிகிறது...

எனவே, just accept as it is...try to overcome by showing ease on it... எக்காரணம் கொண்டும் வெறுத்தல் ஏற்க முடியாதுதான்... அதே வேளையில் வேற்றுமையை உணர்ந்து செயல்படுவதனாலேயே இதை வேரறுக்க முடியும்.... அதை விடுத்து, மலம் என்று கத்திக் கூப்பாடு போடுவதால் இடம் தூய்மையாகிவிட முடியாது....

பழமைபேசி said...

//இப்படி ஒரு பதிவை எழுத //

இப்படி ஒரு இடுகையை எழுத....

blog - பதிவு
post - இடுகை

பழமைபேசி said...

//">டிஸ்கி://

Disclaimer --> Discky-->பொறுப்பு அறிவித்தல் --> பொறுப்பி

துபாய் ராஜா said...

எந்த சாதிக்கு பிறந்தோம் என்பதை விட என்ன சாதிக்கப் பிறந்தோம் என்ற எண்ணம் எல்லோரிடமும் வரவேண்டும்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

பகிர்வுக்கு நன்றி

வாழ்த்துக்கள்!

ரேஷன் ஆபீசர் said...

ஆஹா !
அருமையான பதிவு !!

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

டோண்டு ராகவன்!

அவர் ஒரு எடுத்துக்காட்டாகத்தான் சொன்னார். அதை அப்படியெ எடுத்து தகவல் பிழை என்று சொல்வது குழந்தைத்தனமாக்ல்லவா இருக்கிற்து?

நான் அவர் கேட்டதையே கேட்கிறேன்.

அக்காலத்தில் எல்லாரும் மாட்டுவண்டியில்தான் ஊர்களுக்குப்போனார்கள். இன்று அப்படியா? காரில்தான் போகிறார்கள்.

என்று நான் எழுதினால்,

உடனே,

தகவல் பிழை. இன்று காரில் மட்டுமல்ல. இரயிலிலும் விமானத்திலும் போகலாம் என்று எழுதுவீர்களா?

அப்துல்லாவின் அடிப்படைக்கருத்து (நான் ஒத்துக்கல) என்ன்வென்றால்,

இன்றை காலகட்டத்தில் சாதிகள் கேட்பது பொருந்தாது என்பதே.

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

அய்யா பழைமை பேசி!

ஆன்ரு சைமண்டை ஹரிபஜன் சிங் கொரில்லான்னு திட்டினார். அது பெரிய சண்டையாச்சு.

ஒரு நீக்ரோவை அப்படி திட்டினால் ரேசிசம்.

அப்படி உங்களைத்திட்டினால் அது வெறும் குற்றம்.

இதைப்போல ஜீவைத்திட்ட முடியாது. பெண்களிடம் பேசும்போது சில வார்த்தைகளைப்பிரஹோக்கமுடியாது. அது செக்சுவல் ஹாரஸ்மெண்டு.

அனிச்சையாக வந்தது எனச்சொல்லி டபாய்க்க முடியாது. முட்டிக்குமுட்டி தட்டிவிடுவார்கள்.

இது புது உலகம். பழைய உலகம் அப்படி. என்று சொல்லி இன்று பழைமை பேசமுடியாது.

சாதி கேட்பதும் ஒருவகை ரேசிசம் அண்ணாச்சி. நீங்க லைட்டா எடுத்துக்கோங்க. அது உங்க் கேரக்டர்.

மத்தவாளும் அப்படி இருக்கனுமா?

யாகவராயினும் நாகாக்க, இல்லென்ன வாங்கிகட்ட வேண்டியதிருக்கும்.

பழமைபேசி said...

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
அய்யா பழைமை பேசி!


சாதி கேட்பதும் ஒருவகை ரேசிசம் அண்ணாச்சி. நீங்க லைட்டா எடுத்துக்கோங்க. அது உங்க் கேரக்டர்.

மத்தவாளும் அப்படி இருக்கனுமா?

யாகவராயினும் நாகாக்க, இல்லென்ன வாங்கிகட்ட வேண்டியதிருக்கும்.//

அஃகஃகா... சும்மா பகடி செய்யாதீங்க... அரசு விண்ணப்பத்திலயே என்ன சாதின்னு கேள்வி இருக்கு... நீங்க வேற?

சாதிச் சங்கங்கள் இருக்கு....

சாதிவாரியா மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கேக்குறாய்ங்க சிலர்....

சாதிவாரியா இட ஒதுக்கீடு....

எப்படிங்க இதெல்லாம்....

முகுந்த் அம்மா said...

@சந்தனமுல்லை
//கேடுகெட்ட ஆட்டிட்யூட்//

உண்மை. இப்படி கேட்டு தங்களை தாங்களே தாழ்த்தி கொள்கிறார்கள்.

@ சின்ன அம்மிணி

//எவ்வளவு படிச்சாலும் அதை விடமாட்டாங்க ஒரு சிலர் //

அதனை கேட்டபின்னர் friends ஆக நினைச்சங்கன்னு நினைக்கிறன்.

முகுந்த் அம்மா said...

@SurveySan

//கேட்டவங்களின் நோக்கம் தெரியாம என்ன சொல்றதுன்னு தெரியலை...அதையும் தாண்டி சாதி கேட்டுட்டு 'கூட்டு சேர்வது' தப்பு. பல வருஷம் ஆகும், இதெல்லாம் மறைய.//

இந்த கேள்வியின் கேட்டதன் அர்த்தமே என் சாதி தெரிந்த பின்னர் என்னிடம் நட்பாக இருக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கவே, என்பது திண்ணம்.

@டோண்டு ராகவன்

//சாதி பார்க்கலாகாது, இன்னொருவர் சாதியை கேட்கக் கூடாது என்றெல்லாம் சமீபத்தில்தான் வந்தது. அதற்கு முந்தைய நிலையோ பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. இன்னும் பலரிடம் இருக்கிறது.//

அய்யா இப்படி எழுதுவதற்கு மன்னிக்கவும், என்னிடம் கேட்டவர்களின் கணவர்களும் சரி, அவர்களும் சரி, வேலை பார்ப்பது அமெரிக்க கம்பனிகளில், இப்படி முதல் சந்திப்பிலே தங்களுடன் வேலை பார்ப்பவர்களிடம், அல்லது மேனேஜர் இடமோ இப்படி அவர்களால் கேட்க இயலுமா?

//பெரியாரே யாரை முதலில் பார்த்தலும் அவர்களது சாதி என்னவென்றுதான் கேட்பார் என படித்திருக்கிறேன். இவர் நம்மவரா, வேற்றவரா என்பதை அறிய மனிதன் எப்போதுமே அறிய விரும்பியிருக்கிறான். பல நேரங்களில் அது அவனது பாதுகாப்புக்கு தேவைப்படும்.//

தயவு செய்து இந்த இடுகையை அரசியல் ஆக்க வேண்டாமென்று கேட்டு கொள்கிறேன்.

நன்றி

முகுந்த் அம்மா said...

//பள்ளியில் - அரசாங்க பதிவேடுகளில் - வேலை தளங்களில் - quota - திருமணம் - என்று சாதிகள் எங்கும் வெளிச்சத்தில் இருக்கும் போது, நட்புக்கு மட்டும் தேவை இல்லையா என்று அவர்கள் நினைத்து இருக்க கூடும்//

அப்படி தான் நினைக்க தோணுதுங்க . சாதி பார்த்து நட்பா, அவங்க சங்காத்தமே எனக்கு வேணாங்க.

@Mr .John

இந்த மாதிரி நிகழ்வுகள் அன்றாட நிகழ்வுகள் ஆகி விட்டிருப்பது வருத்ததிற்குரியது.

முகுந்த் அம்மா said...

@ எம்.எம்.அப்துல்லா

கருத்துக்கு ரொம்ப நன்றிங்க

@கெக்கே பிக்குணி
//இந்த ஆட்களின் தயவு இப்போதைக்கு தேவை என்றால், எப்படி உங்கள் (கற்பனையான) வெள்ளைக்கார தோழி/தோழர் இந்தியர்களின் சாதிகளைச் சாடிப் பேசினார் என்று கதை விடுங்கள். இந்த ஆட்கள் "வாலைக் குழைத்துக் கொண்டு" வருவார்கள். //

ரொம்ப நல்ல ஐடியா கொடுத்து இருக்கீங்க நன்றிங்க. கண்டிப்பாக அடுத்ததடவை அமுல்படு த்திடுறேன்.

முகுந்த் அம்மா said...

@தெகா
//'நாயி நடுக்கடலுக்குப் போனாலும் நக்கித்தான் குடிக்கணும்னு' அதே கதைதான்//

அவர்கள் வளர்ப்பு சூழ்நிலையில் உள்ள குறை என்றே நினைக்கிறன்.

//ஓ! படித்த படிப்பிற்கும் சாதிக்கும் கூட தொடர்பு இருக்கிறதா? அட அட... இவிங்களா என்னங்க பண்ணுறது ... கொஞ்சம் harshவே பதில் சொல்ல வேண்டியதாப் போச்சு கண்டுக்காம விட்டுடுங்க, பத்திக்கிட்டு வருது எனக்கு//

அது தாங்க எனக்கும் தாங்க முடியல, நேத்து புல்லா என்வீட்டுக்காரர் கிட்ட புலம்பி தீர்த்துட்டேன்.

@சேட்டைக்காரன்
//இது போன்ற அனுபவங்கள் உங்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன.//

மிகவும் வருத்தத்திற்கு உரிய உண்மை. எப்போது இந்த நிலை மாறுமோ ஏக்கமாக இருக்கிறது.

முகுந்த் அம்மா said...

@பத்மா

//Very sad mukund amma .its really very sad //

உண்மைங்க பத்மா.

@அமைதி அப்பா
//அங்கும் ஜாதி பார்க்கபடுவது வருத்தமாக உள்ளது. //

உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் இந்த மக்கள் மாற மாட்டார்கள் போலிருக்கிறது.

முகுந்த் அம்மா said...

@ ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ
//அப்படி என்னதான் படித்திருககிறீர்கள்? சுவாராசிய்மானதாக இருக்கும் போலிருக்கிறதே!//

நான் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன் அய்யா!

//நீங்க என்ன பாப்பாவா? பெரியங்களானப்புறம் மாறிக்கோங்க்//

பாப்பாவாகவே இருந்திருக்கலாம் போலிருக்கிறது.

@ இராகவன் நைஜிரியா
//எவ்வளவுதான் வளர்ந்தாலும், இது மட்டும் மாறவேயில்லை...//

உண்மைங்க

முகுந்த் அம்மா said...

@ பனித்துளி சங்கர்

//சாதியை வைத்து ஒருவரின் கல்வித் தகுதியை அறிந்துகொள்ளும் அளவில் இன்னும் கண்மூடித்தனமான எண்ணங்களுடன் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள் !//

அதுதான் எனக்கும் வருத்தம் அய்யா.
கருத்துக்கு நன்றி.

@முத்துலெட்சுமி

//நேரடியாக் கேக்கறது சங்கடப்படுத்துவது உண்மைதான்..இன்னும் சில காலம் பொறுத்து மாறலாம்.. //

அதுவும் முதன் முதலாக சந்தித்த ஒரு சில மணி நேரங்களில் அனைவர் முன்னும் இது போல கேட்பது வருத்தமளிகிறது.

//படிப்புக்கும் ஜாதிக்கும் எப்படி தொடர்பில்லையோ அப்படியே படிப்புக்கும் உலக ஞானத்துக்கும் கூட தொடர்பு இல்லைங்களே//

உண்மைதானுங்க.

முகுந்த் அம்மா said...

@பழமைபேசி

அய்யா, சாதிகள் உண்டு என்பதை நானும் ஒத்து கொள்கிறேன். என் கேள்வி எல்லாம் புதிதாக ஒருவரை சந்திக்கும் போது இப்படி பேசலாமா என்ற basic etiquette கூட இவர்களுக்கு இல்லையே என்பதே.

//just accept as it is...try to overcome by showing ease on it //

அப்படி தான் செய்ய போகிறேன். நன்றி

@துபாய் ராஜா
//எந்த சாதிக்கு பிறந்தோம் என்பதை விட என்ன சாதிக்கப் பிறந்தோம் என்ற எண்ணம் எல்லோரிடமும் வரவேண்டும்.//

Well said , கருத்துக்கு நன்றி.

@உலவு.காம்

நன்றிங்க

@ ரேஷன் ஆபீசர்

நன்றிங்க

முகுந்த் அம்மா said...

என்னுடன் சேர்ந்து எண்ணங்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றி.
சொல்லப்போனால், எனக்கு அனைத்து சாதிகளிலும் நண்பர்கள் உண்டு.
அதனால் இந்த இடுகையில் எந்த சாதிய/ஆரிய/திராவிட/அரசியல் நோக்கமும் இல்லை என்பதை தாழ்மையுடன் மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.

கபீஷ் said...

//சொல்லப்போனால், எனக்கு அனைத்து சாதிகளிலும் நண்பர்கள் உண்டு.//

:-)

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

முனைவர் பட்டமா?

மேல்சாதியாவுருதுக்கு அம்புட்டு படிக்கனுமா?

நம்மால முடியாதுங்க.

கீழ்சாதியாவே இருந்துகிரேங்க.

எங்களை விட்டுடங்க.

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

அய்யா பழமை பேசி!

கவ்ர்மெண்டு கேட்கிறது அனிச்சை செயலா (refelex action ஆ?

அதொரு conscious act. அவங்க ஒரு பாலிசி போட்டு அதை execute பண்ராங்க. தப்போ ரைட்டோ அது நமக்கு வேணாம்.

நீக்ரோவை கொரில்லா எனச்சொல்றதப்பத்தி நம்ம இங்கே பேசவேண்டாம்.


”பறஜாதியின்னா இப்படித்தான் சுத்தமே கிடையாது. அப்படியே ஒக்காந்து அப்படியே எந்துச்சி போவிடிவா’

சொல்லிட்டு, அட இது ரொம்ப reflex action என்று சொல்லுங்க.

ஏத்துப்பாளா?

“பறச்சிதானே கூப்பிடு வருவா”

I have seen caste riots over these remark.

இப்படி ரொம்ப நடந்திருக்கு.

‘தமிழச்சி...அவளுகல்லாம் எருமைகள்’...என்றார் ஜெயராம் மலையாள நடிகர்.

என்னவாச்சு?

அவரும் நான் தெரியாம் சொல்லிட்டென் மன்னிச்சுக்கோங்க. reflex act ன்னு உட்டான்ஸ் வுட்டுப்பாத்தாரு இல்லையா?

இப்போ இங்க வருவம்.

People should know social graces and etiquette; and practise these virtues in public places. Violation cant be justified. Only children can be overlooked for offending social manners.

In the scenario described by this blogger, all characters are not only adults, but educated, not only that, they are all, what is called, from culured society.

Less said about their conduct, the better.

All condemnations written by the commentators, except you and Dondu, are just and fair.

யாகவராயினும் நாகாக்க காவாக்கால்
caste riots.

மங்குனி அமைச்சர் said...

//எல்லா கேள்விகளும் ஓகே என்றாலும் முடிவில் அவர்கள் கேட்டது இது தான்
"நீங்கள் என்ன சாதி" ///


இத கேட்கலைனா தான் ஆச்சரிய படனும்

Udukkai said...

இந்த கேள்விய கேட்கறவங்கள விட கேட்கபடுறவங்க நிலைமை வருத்தத்துக்கு உரியதுதான்.ஆனா தவிர்க்க முடியாதது.இங்க(US) நான் வந்ததும் எனக்கும் இந்த கேள்வி ஒருத்தர்கிட்டே இருந்து வந்தது....இந்த காலத்தில இத எல்லாம் நினைத்து வருத்த பட்டா நமக்கு தாங்க அந்த நிமிட சந்தோஷம் இழப்பு."சூரியன பார்த்து நாய் குறைத்தால்...."என்று எடுத்துகொண்டு செல்லுங்கள்....

பழமைபேசி said...

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
அய்யா பழமை பேசி!

கவ்ர்மெண்டு கேட்கிறது அனிச்சை செயலா (refelex action ஆ?

அதொரு conscious act. அவங்க ஒரு பாலிசி போட்டு அதை execute பண்ராங்க. தப்போ ரைட்டோ அது நமக்கு வேணாம். //

இது இருக்கிற வரையிலும்,
சாதிக்கு சங்கங்கள் இருக்கிற வரையிலும்,
சாதி அடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கேட்பார் இருக்கிற வரையிலும்,
அடுத்தவன் சாதியை கேட்கும் பழக்கம் நாட்டுல எதோ ஒரு மூலையில் இருந்துட்டுதான் இருக்கும்... இதை நான் கண்டிச்ச மாத்திரத்தில் அழிக்க முடியாது.மேலும் அப்படிக் கேட்பதை உதாசீனப்படுத்துவதால் அதனை வலுவிழக்கச் செய்ய முடியும் என்பதும்தான் என் கருத்து.

அதை விடுத்து திரிபுகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை... இனி இந்த இடுகைக்கு நான் வரப் போவதும் இல்லை!!

அரசூரான் said...

டாக்டராக இருந்தும் ஊசி போடத்தெரியாது,
பெண்ணாக இருதும் பேசத் தெரியாது,
பதிவராக இருந்தும்... என்ன டாக்டர் நீங்க...(?!)

போங்க டாக்டர் இப்பவாவது போயி உங்ககிட்ட சாதிய கேட்டவங்களுக்கு நைசா (வாழை பழத்துல-ன்னு சொல்லுவாங்களே) ஒரு ஊசிய போட்டுட்டு வாங்க