Thursday, February 12, 2015

50 shades பைத்தியம் பிடித்தலையும் அமெரிக்க பெண்கள்!


ஒரு புது பைத்தியம் இப்போது இங்கிருக்கும் மக்களுக்கு அதுவும் மிடில் ஏஜ் பெண்களுக்கு  பிடித்திருக்கிறது. பெண்கள் அதிகம் இதனை பற்றி பேசினாலும் ஆண்களும் இதனை பற்றி பேசுகிறார்கள். அது "50 shades of Grey" என்னும் புத்தகம் பற்றியது. 

ஆபிஸ் லஞ்ச் டைம் என்று போய் உக்கார்ந்தால் எப்போ பார்த்தாலும் அந்த புத்தகத்தில் வரும் காரெக்டர் கள்  பற்றிய பேச்சு "Grey" "Ana"....etc etc . இதனை பலரும் எனக்கு படிக்க பரிந்துரை செய்தார்கள். அதுவும் என் அருகில் அமர்ந்து வேலை பார்க்கும் ஒரு பெண் நண்பரும்  இதனை சிலாகித்து படி படி என்று வற்புறுத்தியதால் கூகுளில் தேடி ஒரு pdf version தரவிறக்கி படிக்க ஆரம்பித்தேன். 20 பக்கங்கள் தான் இருக்கும், முடியல ஆள விடுங்கடா சாமி என்று மூடி விட்டேன். 

இது erotic நாவல் வகையை சேர்ந்தது என்று சொல்லி கொள்ளுகிறார்கள் ஆனால் என்னை கேட்டால் கீழ்தர நீல படங்களுக்கு ஒப்பானது. நிறைய பேர் சொல்வது/ என்னிடம் சொன்னது போல ரொமாண்டிக் நாவல் அல்ல. நானும் இவர்கள் கொடுத்த பில்டப்புகளை பார்த்து Vladimir Nabokov  அவர்களின் Lolita" போன்று இருக்கும் என்று நினைத்திருந்தேன் அல்லது குறைந்த பட்சம் மில்ஸ் & பூன்ஸ் வகையை சேர்ந்தது என்றாவது நினைத்திருந்தேன். என் நினைப்பில் மண் விழுந்து விட்டது. 
இந்த புத்தகத்தையும் அதன் 2 sequel களையும் வைத்தே E.L.James என்ற பெண்மணி பணக்காரியாகி  விட்டது.

அனைவரும் இப்போது வரவிருக்கும் "50 shades of grey" படத்தை பற்றி பேசி கொண்டிருக்கிறார்கள். 2015 காதலர் தினம் அன்று இந்த புத்தகம் படமாக எடுக்கப்பட்டு வெளிவிட படுகிறது. இன்னும் எத்தனை நாளைக்கு இவர்களின் தொல்லை தாங்க வேண்டுமோ. எப்படிப்பட்ட பாலியல் வறட்சி இருப்பின் இதனையே பேசி பேசிகொல்வார்கள்  என்று நினைக்க தோன்றுகிறது. எங்கே செல்கிறது இந்த சமூகம்.



7 comments:

ப.கந்தசாமி said...

வாழ்க்கையை அமைதியாக அனுபவிக்கத் தெரியாதவர்கள் இப்டித்தான் கானல் நீரின் பின்னால் ஓடுவார்கள்.

Anonymous said...

மந்தை ஆடுகளை பலி கொடுக்க, விகார காமுறுத்தலை விநோதமாய் விளம்பரஞ் செய்தால் போதும், வாண்டட்டாய் வலையில் வீழ்ந்திடுவர்...

Geetha said...

Manathin vakirangalin velipadu

Geetha said...

Mana vakirangalin velipadu

துபாய் ராஜா said...

கட்டுப்பாடற்ற சமுதாயமே கண்ணிய மீறல்களுக்கும், கலாச்சார சீர்கேடுகளுக்கும் காரணம்.

முகுந்த்; Amma said...

நன்றி. கந்தசாமி அய்யா, மாநகரன், கீதா, துபாய் ராஜா.

வெங்கட் நாகராஜ் said...

என்னமோ போங்க.... எங்கே போகிறோம் என்று புரியவில்லை!