Friday, October 2, 2015

ஆஸ்துமாவும்-சிசேரியனும்

ஒரு அறிவியல் செய்தி படிக்க கேட்க நேர்ந்தது. ஒன்று எப்படி சிசேரியனில் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்னை அதிகம் வரும் என்பது குறித்தது.  

Bacteria under Microscope: Thanks to google images


ஆஸ்துமாவும்-சிசேரியனும் 


இந்தியாவில் தற்போது நடக்கும் பல பிரசவங்கள் சிசேரியன் ஆக மட்டுமே இருக்கிறது. முதலில் டாக்டர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு சிசேரியன் பண்ணுறாங்க என்று சொல்லுவார்கள். ஆனால், தற்போது மக்களே "நாங்க ஒரு நல்ல நாளா பார்த்து சொல்லுறோம் நீங்க சிசேரியன் செய்துடுங்க" என்று சொல்லுகிறார்கள். அதாவது, குழந்தை பிறக்கும் நாள் நட்சத்திரம் எல்லாம் இவர்களே தீர்மானித்து விடுகிறார்கள். அப்படியே ஜாதகமும் தீர்மானித்து குழந்தையின் எதிர் காலத்தையும் தீர்மானித்து விடுகிறார்கள். 

இது ஒரு புறம் மும்முரமாக சென்று கொண்டு இருக்க, உண்மையில் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகள் என்னவெல்லாம் இழக்கின்றன, சந்திகின்றன என்று பார்போம்  .


முதலில் சுகபிரசவம் மூலம் பிறக்கும் குழந்தைகள் வெளியே வருவதற்குள் பெண்ணின் பிறப்பு உறுப்பில் சந்திக்கும் பாக்டீரியாக்கள் அவர்களின் உடல் எதிர்ப்பு சக்தி மற்றும் அலேர்ஜி குறித்து தீர்மானிக்கிறது. 
சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகள் முதலில் இழப்பது   Lactobacillus என்னும் பாக்டீரியல் காலனி. இது குழந்தையின் GI tract எனப்படும் செரிமான பாதையை வழி நடத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் ஒன்று. சிசேரியன் மூலம் பிறப்பதால் மனித தோலில் மற்றும் மருத்துவ மனையில் இருக்கும் Staphylococcus and Acinetobacter போன்ற கெடுதி விளைவிக்கும் பாக்டீரியாக்களை  முதலில் சந்திக்கிறார்கள். 

மேலும் தாய்பால் கொடுக்காமல் பார்முலா கொடுப்பது,சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு எல்லாம் அண்டிபயாடிக் எடுத்து கொள்ளுவது போன்றவையும்  இதனை மோசமாக்குகின்றன  என்றுதெரிவிகிறார்கள் .

முக்கியமாக 4 பாக்டீரியாக்கள் இதனை தீர்மானிக்கின்றன என்று மிக மதிப்புள்ள அறிவியல் பத்திரிக்கையான "Science" வெளியிடப்பட்ட ஆராய்ச்சி தெரிவிக்கிறது.  3 வயதுக்குள் இந்த பாக்டீரியாக்கள் உணவிலோ அல்லது வேறு வகையிலோ உடலில்  சேர்த்து கொள்ளபடின், குழந்தைகள் ஆஸ்துமா போன்றவற்றை தவிர்க்க முடியும் என்று அது தெரிவிக்கிறது. 

அமெரிக்காவில் முக்கால் வாசி நேரம் சுக பிரசவத்திற்கு முயற்சி செய்ய சொல்லுவார்கள். ஆனாலும்,
மருத்துவ காரனங்களுக்காக ஒரு சிலருக்கு சிசேரியன் தவிர்க்க முடியாதது. உதாரணமாக, ப்ரீச் பேபி எனப்படும் தலை கீழாக குழந்தை இருக்கும் போது அல்லது பனிக்குடம் உடைந்த பிறகும் குழந்தை பிறக்க முடியாத நிலையில் இருக்கும் போது போன்ற ஒரு சில நேரங்களில். அப்படி ஏற்படும் சமயங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதற்கான bacteriyal probiotic supplement கொடுப்பதன் மூலம் சிறு குழந்தை ஆஸ்துமா தவிர்க்கலாம்.  


photo courtesy : http://www.asthmaed.com/journal/2014/1/2/do-cesarean-sections-increase-atopy-and-asthma

ஆனால் மருத்துவ காரணம் இல்லாமல் ஜாதகத்துக்காக, நல்ல நேரத்திற்காக, அல்லது பணத்துக்காக என்று சிசேரியன் செய்வது மூலம் உங்கள் குழந்தைகளை நீங்களே உடல் நலம் இல்லாதவர்கள் ஆக்குகிறீர்கள் என்பதை சிந்தியுங்கள், உணருங்கள்.  

நன்றி.


References

Asthma: Undoing millions of years of coevolution in early life?SCIENCE TRANSLATIONAL MEDICINE : 307FS39

Early infancy microbial and metabolic alterations affect risk of childhood asthma SCIENCE TRANSLATIONAL MEDICINE : 307RA152


Neu J, Rushing J. Cesarean versus Vaginal Delivery: Long term infant outcomes and the Hygiene Hypothesis. Clinics in perinatology. 2011;38(2):321-331. doi:10.1016/j.clp.2011.03.008.

http://www.npr.org/sections/health-shots/2015/09/30/444746094/missing-microbes-provide-clues-about-asthma-risk


2 comments:

ஆரூர் பாஸ்கர் said...

என் நண்பர் ஒருவர் ஆரம்ப பள்ளி சேர்க்கைக்கு என முன்கூட்டியே அறுவை சிகிச்சை செய்துவிட்டார். அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

முகுந்த் அம்மா said...

I have been getting some merchandise and online advertisements as comments. Whoever sending those, please be notified that those will not be published. so please dont try to post any merchandise and online advertisement comments.

This blog has comment moderation. I will be reviewing all the comments before publishing any. And only those comments that were appropriate to the post or to the blog will be published. Others will be sent to spam.

thanks for understanding.