எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு அமெரிக்கா குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுடன் முகுந்த் விளையாட சென்றிருந்தான். அப்போது அந்த அம்மா
"How come Indian students excel in Science and Math but not in Arts?, why do asians push their kids so much in to academics?" என்று.
நான் இதை பற்றி இதுநாள் வரை யோசித்ததில்லை என்பதால் அவர்கள் கேட்ட பின் அந்த கேள்வி சரி என்றே தோன்றியது.
இங்குள்ள பள்ளிகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் அறிவியலிலும், கணக்கிலும் நன்றாக score செய்கிறார்கள். Reading, Art இவைகள் பக்கம் அவர்கள் அதிகம் செல்வதில்லை. ஆனால் அமெரிக்க மாணவர்களோ நெறைய Reading, Art போன்றவற்றை பாடமாக எடுக்கிறார்கள்.
இங்கு இருக்கும் பள்ளிகள் அனைத்தும் public schools, அதாவது நம்மூர் அரசு பள்ளிகள் போன்றவை. இங்கு பள்ளி படிப்பு இலவசம் என்பதால் பெரும்பாலோனோர் தங்கள் பிள்ளைகளை இதில் தான் சேர்க்கிறார்கள். இங்கு இருக்கும் private schools எல்லாம் அதிக கட்டணம் வசூலிப்பவை என்பதால் அங்கு பிள்ளைகளை அனுப்புவது குறைவு.
மேலும் இங்குள்ள பள்ளிகளில் நல்ல ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளுக்கு எல்லாம் demand அதிகம் இருக்கும். பள்ளி Admission அவரவர் இருக்கும் இடத்தை பொறுத்தது. ஒருவர் நல்ல பள்ளி இருக்கும் area வில் உள்ளார் என்றால் அவர்களுக்கு அந்த பள்ளியில் admission உண்டு. அதனால் நல்ல பள்ளி உள்ள area களில் எல்லாம் வீடு வாங்குவது, அல்லது வீடு வாடகைக்கு எடுப்பதற்கு அதிகம் செலவாகும்.

இங்குள்ள இந்தியர்களில் பெரும்பாலோனோர் நல்ல பள்ளிகள் இருக்கும் பகுதியில் வாழ்வதால், இந்திய சூழ்நிலை போல அக்கம் பக்கம் வீடுகளில் உள்ள பிள்ளைகளுக்குள் போட்டி மனப்பான்மை உருவாக்கபடுகிறது .
இந்தியாவில் நெறைய வீடுகளில் அடுத்த வீட்டு பிள்ளைகளை காட்டி ஒரு comparison நடக்கும். அதே போல இங்கும் நெறைய வீடுகளில் நடக்கிறது.
"அடுத்த வீட்டு பிள்ளை மியூசிக் கிளாஸ் போகுது, நீயும் போ"
"அந்த பிள்ளை western டான்ஸ் கிளாஸ் போகுது, உன்னையும் அதில சேர்த்து விடுறேன்"
peer pressure அதிகரிக்க அதிகரிக்க தங்கள் குழந்தைகளை அதிக வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர் நினைத்தாலும் அவர்களின் பள்ளி விடுவதில்லை. தங்களின் grade ஐ உயர்த்த வேண்டும் என்று பள்ளிகளும் குழந்தைகளுக்கு நிறைய homework கொடுக்கிறார்கள்.
உதாரணமாக எங்கள் பகுதியில் இருக்கும் எல்லா பள்ளிகளும் UKG இல் இருந்ததே பிள்ளைகளுக்கு ஆங்கில வீட்டுபாடம் Razkids என்னும் தளத்தில் போட்டு விடுகிறார்கள். அதே போல கணக்கு வீட்டுப்பாடம் IXL என்னும் தளத்தில். UKG படிக்கும் முகுந்துக்கு ஆங்கில வீட்டுபாடம் இது. ஒரு கதை புக்கை முழுவதும் படித்து வாசிக்க வேண்டும். பின்னர் அதன் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார், ஏன் அப்படி சொல்கிறார். அதில் வரும் கதை மாந்தர்கள் என் அப்படி செய்கிறார்கள், எப்படி மாற்றி செய்யலாம். ஆசிரியர் நோக்கம் என்ன? என்பன போன்ற பல விசயங்களை கிரகிக்க வேண்டும். ஒவ்வொரு கதை முடிவிலும் சில quiz வினாக்கள் உண்டு. அவைகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதன் பின் மதிப்பெண்கள் அவன் ஆசிரியருக்கு அனுப்பபடுகிறது.
இதனை தவிர இப்போது பல பள்ளிகளில் STEM எனப்படும் Science, Technology , Engineering மற்றும் Math சார்ந்த பல விசயங்களை project ஆகா கொடுகிறார்கள். அதற்கென்று பல விசயங்களை நாம் நெட்டில் தேட வேண்டி வருகிறது. எல்லாம் creative hands on ஆகா இருப்பதால் மனபாடம் என்பது கிடையாது. ஆனால் இதனை குழந்தைகளுக்கு நாம் சொல்லி தருவதற்கு முன்பு பல நேரங்களில் நாமே நிறைய cross -reference செய்ய வேண்டி இருக்கிறது.
பள்ளியில் இருக்கும் homework போதாது என்று பல இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளை நெறைய extra classes க்கு அனுப்புகிறார்கள். எப்போதும் எதாவது ஒரு class இக்கு செல்கிறார்கள். இதில் parents க்கும் வேலை அதிகம். ஒவ்வொரு class க்கும் அவர்கள் குழந்தைகளை கொண்டு விடவேண்டும்.
மியூசிக், டான்ஸ், பியோனோ, ஸ்விம்மிங், கராத்தே, கிடார் என்று நெறைய classes உண்டு, ஆனாலும் அதனையே ஒரு career ஆக குழந்தைகளை எடுக்க நெறைய பெற்றோர் விடுவதில்லை. பெரும்பாலான இந்திய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவ (அல்லது மருத்துவம் சார்ந்த) அல்லது இன்ஜினியரிங் படிப்புக்கு போவதையே விரும்புகிறார்கள்.
இதற்கெல்லாம் பெற்றோர்கள் தாங்கள் வளர்ந்த சூழ்நிலை போல தம் தம் பிள்ளைகளையும் வளர்க்க நினைப்பது தான் காரணம் என்று நினைக்கிறன். இது ஒரு வகையில் நல்லது தான் என்று நினைத்தாலும், ஒரு ஊரில் அனைவருமே மருத்துவராகவும், பொறியாளராகவும் ஆக நினைத்தால் என்ன ஆகும்? பல குழந்தைகளுக்கு playtime கிடைப்பதில்லை. பல நேரங்களில் ஒரு homework க்கு பிறகு அடுத்த homework என்று இருக்கும், இப்படி எப்போதும் எதாவது ஒரு கிளாஸ்க்கு செல்லும் குழந்ததைகள் அதனை வெறுக்க ஆரம்பிப்பார்கள். விளையாட்டு என்பதையே மறந்து விடுகிறார்கள். என்னவாகுமோ? நினைத்தாலே பயமாய் இருக்கிறது.
நன்றி
1 comment:
//அதற்கென்று பல விசயங்களை நாம் நெட்டில் தேட வேண்டி வருகிறது. எல்லாம் creative hands on ஆகா இருப்பதால் மனபாடம் என்பது கிடையாது//
மனப்பாட்ம கிடையாது என்றாலு, எல்லா குழந்தைகளுக்கும் கிரியேட்டிவிடியும் ஒரே மாதிரி இருக்காது என்பதால், இதுவும் சமயத்தில் இடிக்கத்தான் செய்யுது.
//ஆனால் இதனை குழந்தைகளுக்கு நாம் சொல்லி தருவதற்கு முன்பு பல நேரங்களில் நாமே நிறைய cross -reference செய்ய வேண்டி இருக்கிறது//
அவ்வ்வ்... அதச் சொல்லுங்க... நான் உக்காந்து முதல்ல வாசிச்சுப் புரிஞ்சுகிட்டு, நெட்டில் தேடி படிச்சுகிட்டு அப்புறம் அவங்களுக்கு சொல்லித் தரவேண்டியிருக்கு.
மாணவர்களால் சொந்தமாகப் புரிந்து செய்ய முடியாமல், பெற்றோர்கள் உதவினால் மட்டுமே செய்ய முடிபவையான ப்ராஜக்டுகள் கொடுப்பதால், மாணவர்கள் திறன் எப்படி வளரும்னு புரிய மாட்டேங்குது. :-(
Post a Comment