Friday, August 21, 2015

சில மூளை சலவை விளம்பரங்களும் வரலாறும்!

"நீரின்றி அமையாது உலகு" என்பது பழைய மொழி. "விளம்பரங்கள் இன்றி அமையாது உலகு" என்பது புது மொழி. சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து உபயோக்கிக்கும் டாய்லெட் பேப்பர் வரை. தலைக்கு உபயோக்கிக்கும் சீப்பில் இருந்து காலுக்கு அணியும் செருப்பு வரை எல்லாமே விளம்பரம். 

இது இந்தியாவில் உலகமயமாக்கலுக்கு பின்பு தான் வந்த நுகர்வோர் கலாச்சாரம், அதற்க்கு முன்பு இல்லை இல்லை என்று சொல்லவே முடியாது. என் சிறு வயதில் பார்த்த தூர்தர்ஷன்  ஒளியும் ஒலியும் இல், பாடல்கள் வருவதற்கு முன்பு கிட்டத்தட்ட 10-15 நிமிடங்கள் விளம்பரம் தொடர்ச்சியாக பார்த்து இருக்கிறேன். அதே போல, ஞாயிற்று கிழமை படத்திற்கு முன்பும், இடைவெளியின் போதும் நிறைய பார்த்து இருக்கிறேன். 

சொல்ல போனால் விளம்பரங்கள் பழைய காலத்தில் இருந்தே பத்திரிக்கைகளில் வந்து இருக்கின்றன. சாவித்திரி, ஹேமா மாலினி காலத்து லக்ஸ் விளம்பரங்கள் அந்த கால பத்திரிக்கைகளில் தவறாமல் இடம் பிடித்து இருக்கின்றன. என் சிறு வயதில் எந்த திரைப்படம் சென்றாலும் அங்கு லிரில் சோப்பு மற்றும் சிந்தால் சோப்பு விளம்பரம் பார்த்து இருக்கிறேன்.

 

அதனால் விளம்பரங்கள் இந்திய உலக மயமாக்கலுக்கு பின்பு  வந்தவை அல்ல.


 ஆனால், மேற்கத்திய நாடுகளில் ஒரு சில விசயங்களை விளம்பர படுத்த என்று மக்களின் குணாதிசயங்கலுடன் தொடர்பு படுத்த பட்டு  மக்கள் மனதில் பதிய வேண்டும் என்று விளம்பர படுத்த பட்டு இருக்கின்றன. மக்கள் இதனை உபயோகிப்பது ஸ்டேடஸ் சிம்பல் என்று  மறைமுகமாக மூளை சலவை செய்ய பட்டு இருக்கிறார்கள்.

இதற்க்கு சிறந்த இரண்டு உதாரணங்கள் இங்கே காணலாம்.

புகையிலை, சிகரெட் புகைத்தல் 

முதலாம் உலகப்போர் முடிந்த தருவாயில் அமெரிக்கா எங்கும் ஒரு விளம்பரங்கள் வந்தன. அவை சிகரெட் புகைப்பதை பற்றியது. சிகரெட் புகைப்பது ஆண்மையின் அடையாளமாக சித்தரிக்க பட்டது. அனைவர் கையிலும் சிகரெட்டுகள், சினிமா நடிகர்கள் முதல், குடியரசு தலைவர், போர் முனையில் இருக்கும் வீரர்கள் என்று அனைவர் கையிலும் சிகரெட்டுகள். அது புகைக்காதவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று மெதுவாக மூளை சலவை செய்யபட்டார்கள்.


 அதே போல 70 களில் பெண்கள் இயக்கம் சம உரிமை பிரச்னை எழுந்தபோது பெண்கள் தங்களை ஆண்களுடன் சமமாக காட்டி கொள்ள என்று புகை பிடித்தலை கை கொண்டனர்.


புகை பிடித்தால் அவர்கள் தைரியசாலிகள் என்று மூளை சலவை நடந்தது. அதன் பின்னர் சிகரெட்டு விற்பனை விண்ணை தொட்டது.

இதே போன்ற ஒரு விளம்பரங்கள் மறை முகமாக இந்திய மண்ணிலும் விதைக்க பட்டன. அதுவும் சினிமா நடிகர்கள் மூலம். 70-80 களில் வந்த படங்களில் எல்லாம் சிகரெட்டு கையில் வைத்திருக்காத நடிகர்களை காண இயலாது. அதற்க்கு முன்பு வந்த படங்களிலாவது கதாநாயகன் புகை பிடிப்பவனாக அதிகம் இருக்க மாட்டார். ஆனால் இந்த காலத்தில் புகை பிடித்தல் ஆண்மை அடையாளம் என்று மாற்ற பட்டது.இதே நிலை பின்னர் வந்த நடிகர்களிடமும் தொடந்தது,. இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது

எப்படி விளம்பரங்கள் மக்களை மூளை சலவைசெய்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம் மட்டுமே.


வைரங்கள்

இரண்டாவது உதாரணம், வைரங்கள்.

உலகம் எங்கும் பின்பற்ற படும் ஒரு கலாச்சாரம் இது. ஒரு பையன் ஒரு பெண்ணிடம் தன்  காதலை சொல்லி என்னை கல்யாணம் செய்து கொள்ளுகிறாயா என்று கேட்பதற்கு முன்பு அந்த பெண் முன்பு முட்டியிட்டு கையில் ஒரு வைர மோதிரத்துடன் "Will you marry me?" என்று வேண்ட வேண்டும்.

தற்போது இந்தியாவிலும் இது சினிமாக்கள் மூலம் பிரபல படுத்த படுகிறது. முக்கியமாக வைர மோதிரம் இல்லாமல் என்கேஜெமென்ட் இல்லை. இது எப்படி அறிமுகபடுத்த பட்டது. ஒரு ஸ்டாண்டர்ட் ஆனது.

1914 இல் "A diamond is forever" என்ற பிரசாரங்கள் N.W.Ayer & son என்னும் விளம்பர கம்பெனியால் ஆரம்பிக்க பட்டன.

மர்லின் மன்றோ வை வைத்து, "Diamonds are girls best friends" என்னும் பிரச்சாரம் ஆரம்பிக்க பட்டது.


இவர்களின் ஒவ்வொரு வாசகமும், வைரங்கள் மட்டுமே காதலின் உண்மையான பரிசு, எந்த ஒரு காதலும் வைரங்கள் இல்லாமல் முழுமை அடையாது. என்று பிரபல படுத்த பட்டது. இப்படி மூளை சலவை செய்யப்பட்ட பின்னர், தற்போது propose செய்ய விரும்பும் அனைவரும், தங்களால் முடிகிறதோ இல்லையோ, ஒரு வைரத்தை வாங்கி பெண்ணின் முன் மண்டியிட்டு என்னை கல்யாணம் செய்து கொள் என்று கேட்டு கொண்டு இருகிறார்கள். அது பெரிய விசயமாகவும் பேச படுகிறது.

இந்தியாவில் வைரங்களுக்கு இன்னும் அவ்வளவு மவுசு கூட வில்லை என்றாலும், நகை கடை விளம்பரம் இல்லாத பத்திரிக்கை, டிவி, இன்டர்நெட் விளம்பரங்கள் பார்க்கவே முடியாது.

இன்னும்  சில மூளை சலவை விளம்பரங்கள் இருப்பினும் உதாரணமாக "fair and lovely" போன்றவை இருப்பினும். பதிவின் நீளம் கருதி இதோடு முடித்து கொள்ளுகிறேன்.

நன்றி.


2 comments:

வேகநரி said...

விளம்பரங்கள் இந்திய உலக மயமாக்கலுக்கு பின்பு வந்தவை அல்ல.
உண்மை

ஆரூர் பாஸ்கர் said...

Very good one.

yes, India is a market for 1.2 Billion people. So, all the international companies can not simple ignore it. they are trying to get a share of it.

That's a reason we are seeing the commercial for simple things like Toilet cleaner to luxury items like Diamond or BMW.

As a consumer, we cannot close our eyes or ears. Perhaps, we can learn how to navigate this tide.

Regards,
ஆரூர் பாஸ்கர்