Friday, March 20, 2015

பெண்களும், வேலையும், குடும்பமும் !




எனக்கு தெரிந்தே இது இரண்டாவது விவாகரத்து இந்த வருடத்தில். வருடம் ஆரம்பித்து மூன்று மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில் இரண்டு விவாகரத்து கேள்வி படுகிறேன்.

இந்த இரண்டு விவகாரத்து செய்து கொண்ட  கணவன் மனைவி இருவரும் வேலை பார்க்கும், அதுவும் ஹை பிரஷர் வேலை பார்க்கும் நபர்கள் . ஒன்று அமெரிக்க தம்பதிகள், மற்றொன்று இந்திய-அமெரிக்க கலப்பு  தம்பதிகள். நன்கு படித்தவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள். 40 வயது தாண்டியவர்கள் இவர்கள். காதலித்து திருமணம் செய்தவர்கள். பத்து -பதினைந்து வருட திருமணதிற்கு பிறகு இப்போது விவாகரத்து. எங்கே தப்பானது என்று தெரியவில்லை.  ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. படிக்கும் பொது காதலிக்க ஆரம்பித்து, திருமணம் செய்து கொண்டவர்கள் இவர்கள். ஆரம்பிக்கும் பொது சம நிலையில் இருந்த இவர்களின் பொருளாதாரம் படிப்படியாக மாறி இருக்கிறது. மனைவி மேல் படிப்பு படித்திருக்கிறார் அல்லது நிறைய சம்பாதிக்க ஆரம்பித்து இருக்கிறார் அல்லது மிக அதிக பிரஷர் உள்ள வேலை அல்லது தொழில் தொடங்கி இருக்கிறார்.

கணவனும் மனைவியும் வீட்டு நிர்வாகத்தில் பொருளாதாரத்தில் சமமாகவோ அல்லது அதிகமாக பங்கெடுக்கும் போதோ அல்லது, கணவனை விட மனைவி அதிகம் சம்பாதிக்க ஆரம்பிக்கும் போதோ அல்லது கணவனை விட மனைவி அதிகம் படித்திருக்கும் போதோ ஈகோ பிரச்சனைகள் தலையெடுக்க ஆரம்பிக்கின்றன.

எனக்கு தெரிந்து அமெரிக்க பல அமெரிக்க வீடுகளில் கூட ஆண்கள் வேலைக்கு செல்வதும் பெண்கள் வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்து கொள்வதும் தான் இருக்கும்.  உலகத்தில் பரவலாக இருப்பது போல பெண்கள் வீட்டு வேலை செய்ய வேண்டும், சமைக்க வேண்டும் ,ஆண்கள் இதெல்லாம் செய்ய மாட்டார்கள் என்பன போன்ற எதுவும் இருப்பதில்லை. எனக்கு தெரிந்தே என் கூட வேலை பார்க்கும் பல ஆண்கள்  வீட்டில் தினமும் சமைப்பது உண்டு. சொல்ல போனால் என்னுடன் வேலை பார்த்த ஒருவரின் மனைவிக்கு சுத்தமாக சமைக்கவே தெரியாது. எல்லாம் இவர் தான் செய்வார்.

இப்படி வீட்டு வேலை செய்வதில் பாகுபாடெல்லாம் பார்க்காத இந்த ஊர் ஆண்கள் கூட பொருளாதார விசயத்தில் தன மனைவியை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள், வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு சில வீடுகளில் பெண்கள் வீட்டுக்கு பிரட் விண்னர் ஆகா இருப்பதும் அமெரிக்க ஆண்கள் வொர்க் ப்ரொம் ஹோம் அல்லது வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்து கொள்வதும் உண்டு..ஆனாலும் இப்படி வீட்டில் இருக்கும் ஆண்கள் சதவீதம் மிக மிக குறைவு.

எதிர்மறையாக இந்திய அல்லது ஆசிய ஆண்கள் அனைவரும் வீட்டு வேலை செய்வது பெண்கள் வேலை என்று வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள். பொருளாதாரத்தை பொறுத்த வரை  நான் தான் குடும்பத்தை நடத்த வேண்டும், வேலைக்கு செல்லும் மனைவி சம்பளம் முழுதும் மனைவி தன்னிடம் கொடுத்து விட வேண்டும், என்று நினைக்காத ஆண்கள் மிக மிக குறைவு.

வீட்டு வேலையில் பெண்களுக்கு உதவும் தெற்காசிய ஆண்கள் மிக மிக குறைவு. இதனால் வேலைக்கு செல்லும் இந்திய அல்லது தெற்காசிய பெண்களுக்கு பெரும்பாலும் இரண்டு வேலையாக தான் இருக்கும். பெண்கள் வேலைக்கு செல்லலாம் என்றாலும் வீட்டு வேலை செய்து வைத்து விட்டு வேலைக்கு செல்லவேண்டும்.  சிறு குழந்தைகள் வைத்திருக்கும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எப்பொழுதும் ஒரு கில்ட் பீலிங் இருக்கும். "ஐயோ குழந்தைகளுடன் இருக்க முடியவில்லையே" என்று. எவ்வளவு பெரிய வேளையில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும் இது போன்ற ஒரு "Working mom guilt" உண்டு.

இந்த காரனங்களுகாகவே ஆராய்ச்சி செய்யும் பல பெண்கள் திருமணம் செய்து கொள்வதில்லை, அல்லது தன் துறையை சேர்ந்த சக ஆராய்ச்சி மாணவரை திருமணம் செய்து கொள்வது அதிகம்.என் ஆராய்ச்சி கைடுகள் அனைவரும் திருமணம் ஆகாத அல்லது திருமணமாகி விவாகரத்தான பெண்கள்.
இத்தனைக்கும்  இவர்கள் அனைவரும் தெற்காசியாவை சேர்ந்தவர்கள் அல்லர். இருப்பினும் ஆராய்ச்சி என்று நேரம் ஒன்று இருப்பதில்லை. லேபில் தூங்குபவர்களும் உண்டு. நானே தீசிஸ் எழுதிய பல நேரங்களில் லேபில் தூங்கி இருக்கிறேன். வேலைக்கு அல்லது ஆராய்ச்சிக்கு என்று சென்று விட்டால் குடும்பம் குழந்தை என்று பார்க்க நேரம் கூட இருபதில்லை. நல்ல கணவர் வீட்டை நான் பார்த்து கொள்கிறேன் நீ படி அல்லது வேலை பார் என்று சொல்வது மிக மிக குறைவு. அதனாலேயே நிறைய பெண்கள் முனைவர் பட்டம் பெற்ற பின்பு கூட "குடும்பமா? ஆராய்ச்சியா?" என்று வரும் பொது குடும்பத்தை தேர்ந்தெடுத்து ஆராய்ச்சியை கைவிடுவதை பார்த்து இருக்கிறேன்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்க வேண்டும் என்று நிறைய பார்த்து இருக்கிறோம் , அதே போல  ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு உதவும் துவளும் போது தோள் கொடுக்கும் நல்ல கணவனும் வாய்த்து விட்டால் அவள் போல அதிஷ்டம் செய்தவள் எவளும் இருக்க மாட்டாள். ஆனால் பெரும்பாலும் குடும்பத்திற்காக தனது வேலையை, எதிர்காலத்தை விட்டுகொடுக்கும் பெண்கள் போல, தன் மனைவியும் தானும் வேறல்ல, அவள் முன்னேற்றம் தன் முன்னேற்றம் போன்றது என்று நினைத்து  முன்னேற சிறிது உதவி செய்து விட்டு கொடுத்தால் இதனை போன்ற விவாகரத்துகள் குறையலாம் என்பது என் எண்ணம்.


நன்றி .



9 comments:

ப.கந்தசாமி said...

பொருளாதார வசதிகள் மேம்படும்போது சகிப்புத் தன்மை குறைகிறது என்று நினைக்கிறேன்.

கோமதி அரசு said...

ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு உதவும் துவளும் போது தோள் கொடுக்கும் நல்ல கணவனும் வாய்த்து விட்டால் அவள் போல அதிஷ்டம் செய்தவள் எவளும் இருக்க மாட்டாள்.//

உண்மை. சரியாக சொன்னீர்கள் முகுந்த் அம்மா.

Jayakumar Chandrasekaran said...

ஆனால் சமுதாயத்தின் பார்வை வேறு மாதிரி இருக்கிறதே. ஒரு பெண் வேலைக்குப் போனால் குறை சொல்லாத சமுதாயம் ஆண் வேலைக்கு போகாமல் சம்பாதிக்காமல் இருந்தால் பெண்டாட்டி சம்பாத்தியத்தில் சாப்பிடுகிறான் என்று கேலி
செய்கிறதே.
வேலைக்கு போகும் பெண்கள் வேலைக்குப் போகாத ஆண்களிடம் இருந்து விவாக ரத்து கோருவதும் அதிகம் ஆகிவிட்டது.
--
Jayakumar

Deiva said...

I agree with Jayakumar. If a woman expects a husband to share household duties, she should share financial responsibilities too. In US, some indian housewives expect men to share household chores in addition to their work load at office, but they dont go to work. This is a total imbalance.

முகுந்த்; Amma said...

@ பழனி. கந்தசாமி Ayya,
"பொருளாதார வசதிகள் மேம்படும்போது சகிப்புத் தன்மை குறைகிறது என்று நினைக்கிறேன்."
Could be true. Thanks for the comment.

முகுந்த்; Amma said...

@கோமதி அரசு

Thanks Gomathima

முகுந்த்; Amma said...

@ jk22384

Actually you are true. Being a social animal we are often bound to live our life according to the expectation of our society and while doing so we often sacrifice our inner peace and happiness.

Thanks for the comment

முகுந்த்; Amma said...

@Deiva .

You have mentioned another issue that is so prevalent among indian households. Even if a woman is not doing an office work doesn't mean that she is not working. Actually I have seen many indian woman who work overtime by running the family and taking care of kids. If you calculate the amount of time and effort she spends in doing this, that will be more than what anyone does at office.

Helping a housewife is doing a household things is not a sin.

thanks for your comment.

வருண் said...

இதேபோல் ஆண்களும், வேலையும் குடும்பமும் பிரச்சினைகளும்ணு நெறையச் சொல்லலாம். கல்யாணம் ஆனதும் பெற்றவர்கள் குடும்பத்தை தன் ஆம்படையான் தூக்கி எறிந்துவிட்டு தன்னையும் கொழுந்தியா குடும்பம் மாமியார் குடும்பம்னு அவளின் குடும்பத்தோட ஐக்கியமாகணும்னு நினைக்கும் பெண்கள் ஏகப்பட்டபேர் இருக்காங்க. பட்ஜெட் போட்டு கணக்குப் பார்த்து செலழிக்கும் பெண்கள் ரொம்ப கம்மி. ஆனால் ஆம்பளைகளை வில்லனாக்கியே பெண்களிடம் உள்ள குறைபாடுகள், திருத்த வேண்டிய குணங்கள் பல மறைக்கப் படுகின்றன என்பதே உண்மை. அதனால் நீங்க கொண்டு வர்ர பிரச்சினைகளை எல்லாம் பாதிக்கப்பட்ட ஆணகள் சீரியஸா எடுத்துக்கொள்வதில்லை. அதன் விளைவே, தெய்வா, ஜே கே இவர்கள் பின்னூட்டங்கள்!