Friday, March 27, 2015

நாம் குடிக்கும் பாலும், சாப்பிடும் இறைச்சியும் பாதுகாப்பானதா?


சமீபத்தில் நியூ சயின்டிஸ்ட் இதழில் ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது? அது சொல்வது இதுதான், நம்முடைய இறைச்சி வேட்கையால் சூப்பர் பக் எனப்படும் அண்டிபயாடிக் பாக்டீரியாக்களை வளர்கிறோம் என்பது.


Chinese chickens: hotbeds for antibiotic resistance (Image: Imaginechina/REX)நான் ஒரு ஸ்டெப் பின்னோக்கி சென்று இதனை பற்றி யும் இதனுடன் தொடர்புடைய சில பற்றியும் விரிவாக விவரிக்க எண்ணுகிறேன். முதலில் சில அனுமானிப்புகள். இப்போதெல்லாம் 9-10 வயதில் சிறு பெண்கள் வயதுக்கு வந்து விடுகின்றனர், ஏன்?. அதே போல சிறு வயதில் அதிக எடையுடன் இருக்கும் குழந்தைகள் காணலாம். இந்தியாவில் தற்போது பாதி மக்களுக்கு சக்கரை வியாதி இருக்கிறது. புது புது காய்ச்சல்கள் வருகின்றன, வித வித பாக்டீரியாக்கள் கேள்விபடுகிறோம், அதே போல அன்டிபையடிக்ஸ் கொடுத்தும் சரியாகாத காய்ச்சல்கள் அல்லது கொல்லபடாத பாக்டீரியாக்கள் அதிகரிகின்றன.

அதே போல சமீபத்தில் இந்தியா சென்றிந்த போது கண்டது. எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் குடும்பம் பால் பண்ணை வைத்திருக்கிறார்கள் . பால் சுரப்பு கூட்ட அல்லது பால் வற்றிபோகாமல் இருக்க என்று இப்போது ஊசி போடுகிறார்கள். என்ன ஊசி என்று பார்த்ததில் rbGH எனப்படும் மரபணு மாற்று பொவைன் க்ரௌத் ஹார்மோன், அதாவது கர்ப காலத்தில் அல்லது பாலூட்டும் காலத்தில் இயற்கையாக பசுக்களுக்கு அல்லது மாடுகளுக்கு சுரக்கும் ஒரு ஹார்மோன் இது ஆனால் இவர்கள் போடும் ஊசி மரபணு மாற்று செய்யப்பட்ட ஹார்மோன். அதனால் பால் சுரப்பு என்பது பாலூட்டும் காலத்தை போல அதிகரிக்கும்.  ஊசி போட்ட 15 நிமிடத்தில் பால் கொட்டுகிறது. அது நல்லது தானே என்று பலரும் நினைக்கலாம். ஆனால் அது என்ன உடல் மாற்றத்தை பசுக்களுக்கு ஏற்படுத்திகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். பசுக்கள் எப்படி ஆனால் நமக்கென்ன என்று நினைப்பவர்களுக்கு, அப்படி ஊசி போட்டு கிடைக்கும் பாலில் rbGH அளவு அதிகம் இருக்கும். அதனால் என்ன என்று கேட்பவர்களுக்கு இது. பசுக்களின் rbGH மனிதனுக்கு இருக்கும் hGH க்கும் அதிக வித்தியாசம் இல்லை. ஹுமன் க்ரோத் ஹார்மோன் என்பது மனித இனப்பெருக்க உறுப்புகளை வளர வைப்பது. இப்படி அதிக ஹார்மோன் ஊசி போட்டு சுரப்படும் பாலை குடிக்கும் சிறு குழந்தைகள் சீக்கிரம் வயதுக்கு வரலாம்.  


இது ஒரு புறம் இருக்க, இப்போதெல்லாம், எங்கே பார்த்தாலும் சிக்கன் சிக்கன் என்று சகலமும் மாறி கொண்டு இருக்கிறது. சிக்கன் சாப்பிடாத மக்களை மனிதர்களாக கூட பார்ப்பதில்லை என்று நினைக்கிறன். ஆனால் அந்த சிக்கன் எப்படி தயாரிக்கபடுகிறது எப்படி பராமரிக்க படுகிறது என்று எத்தனை பேருக்கு தெரியும். தயவு செய்து Food Inc. டாகுமெண்டரி பார்க்கும் படி கேட்டு கொள்கிறேன்.சிக்கன் நன்றாக கொழு கொழு என்று நோய் இல்லாமல் வளர வேண்டும் நிறைய அண்டிபையடிக்ஸ் சேர்கிறார்கள். ஆனால் என்ன பின்விளைவுகள் வருகின்றன என்பதை தான் நியூ சயின்டிஸ்ட் கட்டுரை சொல்கிறது. பாக்டீரியாக்கள் மருந்து எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அதிகரிக்க, அவற்ற்றை குணப்படுத்த முடியாத அளவு சூப்பர் பக் ஆக மாறி விடும் அபாயம் இருக்ககிறது. இதுவரை, MRSA, VRE, காச நோய் மருந்து எதிர்ப்பு பாக்டீரியாக்கள் அறியப்பட்டு இருக்கின்றன. மருத்துவ மனைகளுக்கு பெரிய தலைவலி ஏற்படுத்தி இருக்கின்றன.


இதற்க்கு தீர்வு என்ன, முடிந்த அளவு, rbGH உபயோகிக்காத பால் மற்றும் இயற்கையாக வளர்க்கப்பட்ட கோழிகளை சாப்பிடுவது மட்டுமே, இல்லையேல் நம்முடைய எதிர்கால சந்ததிகளுக்கு கெட்டுபோன உடல்நலத்தையும் , நோய்களையுமே விட்டு செல்வோம் நாம்.

நன்றி.

7 comments:

பழனி. கந்தசாமி said...

மக்களின் பேராசையால் விளையும் செயல்களே இவை. இன்றைய போட்டி உலகில் எதுவும் அநியாயமில்லை என்பது இயல்பாகிப்போனது வருத்தத்திற்குரியது.

வேகநரி said...

இறைச்சியால் வரும் தீமை பற்றி தமிழில் எழுத துணிச்சல் வேண்டும்.எழுதியிருக்கிறீர்கள்.

பனிமலர் said...

இது பால் இறைச்சி என்று மட்டும் நிற்கவில்லை, அமெரிக்காவில் கிடைக்கும் காய்கறிகளும் அப்படித்தான். இன்னமும் ஒரு படி மேலே சென்று எவ்வளவு உண்டாலும் பசி அடங்காகத அல்லது நீண்ட நேரம் தாக்குபிடிக்காமல் அடிக்கடி ஏதாவது கொரித்துக்கொண்டே இருக்கம் படியான உணவுகள் தான் அதிகம் வெளியில் கிடைக்கும் உணவுகள். நமது அரிசி சாதமும் மற்றவைகளும் அப்படி இல்லை. ஆனால் நமது உணவு சாப்பிடுவது தான் நமக்கு பிடிக்காதே, ஒரு பிளேட்டிலே கொஞ்சம் சாடம் போட்டு கொஞ்சமா சாம்பாபார் சாதடம் மட்டும் போதுன்னு இல்ல பிள்ளைகள் எல்லாம் சொல்லுதுக.

வேற என்ன வேண்டும் கேளுங்க என்ன என்ன உண்டா பாழாவோம்னு சொல்வோமோ அவைகளை அனைத்தையும் பட்டியல் இட்டு இல்ல சொல்லும் குழந்தைகள் அமெரிக்காவில்.......இந்தியாவில் இதைவிட மோசம்.....என்ன எங்கள் குழந்தைகளுக்கு இட்லி சாம்பார் எல்லாம் பிடிக்காது, பிசா, பர்கர்ன்னா உசுரு என்று சொல்வதில் பெற்றோர்களுக்கு பெருமை, குழந்தை ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக சொல்வது போல்........

Packirisamy N said...

இங்கே பாருங்கள்!

http://www.newsweek.com/patrick-moore-scientist-who-offered-and-then-refused-drink-glyphosate-weed-317289

Packirisamy N said...

இங்கே பாருங்கள்!

http://www.newsweek.com/patrick-moore-scientist-who-offered-and-then-refused-drink-glyphosate-weed-317289

S.P. Senthil Kumar said...

எல்லாமே பணம்தான் வர்த்தகம்தான் என்ற நிலை வந்ததும் மக்கள் ஆரோக்கியத்தை பற்றி யார் கவலை படபோகிறர்கள்.
நல்ல விழிப்புணர்வு பதிவு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எந்த உணவுப் பொருளை உற்பத்தி செய்வோரும் இன்று அதை உண்போரின் நலம் பற்றி சிந்திப்பதில்லை.
உண்ட உடன் இறந்துவிடக் கூடாதென மாத்திரமே சிந்திக்கிறார்கள். இது வெளிநாடுகளில்.
நம் நாடுகளில் அந்தச் சிந்தனையும் இருப்பதாகத் தெரியவில்லை.