Wednesday, March 4, 2015

மேலை நாடுகளில் வாழும் இந்திய பெண்கள் சந்திக்கும் கலாச்சார மாற்றங்கள்

நீங்கள் மேலை நாடுகளில் வசிக்கிறீர்கள் அதுவும் மேலை நாடுகளில் மேல்படிப்பு படித்தவர் என்றால் கட்டாயம் இதனை அனுபவித்து இருப்பவர்கள்.

இது பலருக்கும் நடந்திருக்கும், நமக்குதெரிந்தவர் உதாரணமாக உங்கள் பாஸ் என்று வைத்து கொள்ளுங்கள் அவரை சந்திக்கும் போது  கட்டி பிடித்தல் சகஜம் அது இவர்களின் கலாச்சாரம். அதே சமயம் தெரியாதவர் என்றால் சந்திக்கும் போது கை கொடுத்தல் மிக சகஜம். உங்களுக்கு  எதாவது நல்லது அல்லது கெட்டது என்று எது நடந்தாலும் இப்படி வந்து கட்டி பிடித்து ஆறுதல் சொல்வார்கள் அல்லது வாழ்த்துவார்கள். இன்னும் சில நாடுகளில் அதுவும் ஐரோப்பிய நாடுகளில் கன்னத்தில் முத்தம் கொடுப்பார்கள். இதெல்லாம் எப்படி செய்யலாம், மாட்டேன் என்று சொல்ல முடியாது. உடனே "unfriendly" என்று முத்திரை குத்தி விடுவார்கள்.

இதனையும் அனுபவித்து இருக்கலாம், யாரையும் பார்க்கும் போது ஒரு சிரிப்பு சிரிப்பார்கள். தெரிந்தவர் தெரியாதவர் என்று எந்த வித்தியாசமும் இருக்காது. நீங்களும் பதிலுக்கு சிரிக்க வேண்டி வரும். நீங்கள் ஜாகிங் செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், அப்போது எதிரில் உங்களை போல ஜாகிங் செய்து கொண்டு வருபவர் உங்களை பார்த்து ஹாய் அல்லது குட் மார்னிங் சொன்னால் நீங்களும் சொல்ல வேண்டி வரும், அவர் யாரெண்று கூட உங்களுக்கு தெரியா விட்டாலும், இல்லாவிட்டால் நீங்கள் rude என்று சொல்லி விடுவார்கள்.

அதே போல நீங்கள் கீழே விழுந்து விடீர்கள் என்றாலும் உடனே வந்து உங்களை தொட்டு தூக்குவார்கள், உடனே "யார் நீ, என்னை தூக்க " என்று சண்டை போட முடியாது .  எப்போது டின்னெர் அல்லது பார்ட்டி என்றாலும் ஆண்களும் பெண்களும் பீர் அல்லது வைன் குடிப்பார்கள், நீங்களும் குடிக்கிறீர்களா? என்று கேட்பார்கள், இதென்ன பொம்பளை கிட்ட இப்படி கேட்குறீங்களே? என்று நீங்கள் கேட்க முடியாது . ஒரு success பார்டி அல்லது கல்யாணம் என்று சென்றாலும்  உடனே ஷாம்பெயின் ஓபன் செய்வார்கள், நமக்கும் குடுப்பார்கள், நீங்கள் குடிக்கவிட்டலும், கிளாஸ் ஐ வாங்கி டோஸ்ட் செய்ய வேண்டும், இல்லையேல் மரியாதை குறைவாக நினைப்பார்கள்.

வெளி நாடுகளில் வந்து படிக்கும் சிலர் அனுபவிப்பது இது. நீங்கள் இங்கு இருக்கும் பலரையும் உங்களுக்கு வெளிநாட்டு மக்களுடன் பழக வேண்டும் என்றால் அவர்களுடைய சினிமா, விளையாட்டு, மியூசிக், அரசியல், சமையல் என்று ஒவ்வொன்றாக கற்று கொள்ள வேண்டும், அப்பொழுது தான் அவர்களுடன் பேச பழக இயலும் .

என்னை போன்று ஒரு கட்டுபெட்டியான குடும்பத்தில் பிறந்து வெளிநாட்டுக்கு வந்தவர்கள் அதுவும் மேல்படிப்புக்கு என்று வந்தவர்கள் இதனை  போன்ற ஒரு விசயத்தை பெரிய ஷாக் ஆக்கி பார்பவர்கள். ஆனால்நாட்கள் செல்ல செல்ல  நீங்களும் இந்த பழக்க வழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக உங்களை அறியாமல் பழகி இருப்பீர்கள்.

உதாரணமாக, பெண்கள் அதுவும் வேலைக்கு செல்லும் பெண்கள் பல  பொட்டு வைப்பது, விபூதி இடுவது, கல்யாணம் ஆனவர் என்றால் மெட்டி அணிவது, தாலி அணிவது என்பதெல்லாம் இருபதில்லை.எனக்கு தெரிந்தே வேலைக்கு செல்லாத  நிறைய பெண்களும் இப்போது தாலி அணிவதில்லை. திருட்டு பயம் என்று காரணம் சொல்கிறார்கள் என்றாலும் இது சாதரணமாகி விட்டது.தாலிக்கு  பதில் மோதிரம் அணிந்து கொள்கிறார்கள், இங்குள்ளவர்கள் போல.
நிறைய இந்திய பெண்கள் பார்ட்டி என்றால் வைன் அருந்துகிறார்கள். சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து கொள்கிறார்கள், ஆண் பெண் வித்தியாசம் இன்றி.

இந்திய உடைகளை உடுத்துவது என்பது மிக குறைந்து விட்டது . இப்போதெல்லாம் சுடிதார் கூட உடுத்துவது இல்லை, எப்பொழுதும் மேலை நாட்டு உடை தான். புடவை உடுத்துவது என்பது பார்ட்டிக்கு செல்லும் போது அல்லது கோவிலுக்கு போகும் பொது என்றாகிவிட்டது. இதெல்லாம் நம்மையும் அறியாமல் நடக்கும் மாற்றங்கள். எது நமக்கு சவுகரியமோ அதனை உடுத்தி கொள்கிறோம்.
ஏனெனில் ஐரோப்பிய நகரங்களில் இந்திய உடையுடன் சுற்றினால் எப்படி நம்மை வேடிக்கை பார்பார்கள் என்பதை நான் அனுபவித்து இருக்கிறேன். அமெரிக்காவில் இந்தியர்கள் நிறைய இருப்பதால் இந்திய உடை அணிதாலும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். ஆனால் ஐரோப்பாவில் கட்டாயம் வேடிக்கை பார்ப்பார்கள்(என்னுடைய 10 வருடங்களுக்கு முந்தைய அனுபவம் இது, இப்போது மாறி இருக்க வாய்ப்பு இருக்கிறது). ஆனாலும் இன்றும் அமெரிக்காவில் இந்திய உடையுடன் ஆபிசுக்கு வந்தால் எல்லாரும் கட்டாயம் உங்களை வேடிக்கை பார்பார்கள்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அறியாமல் மாறிய நாம், இந்தியாவிற்கு செல்லும் போது நம்மை மறுபடியும் re tune செய்து கொள்ள வேண்டி வரும். உதாரணமாக, படித்து கொண்டிருந்த போது,  நான்   விடுமுறைக்கு என்று சென்ற போது மதுரை ஏர்போர்ட்டில் என்னைபார்த்த என் அப்பா, "இது மதுரை மா, பான்ட் ஷர்ட் எல்லாம் போடாத, எல்லாரும் ஒரு மாதிரி பார்பாங்க" என்று சொன்னது இன்னும் நினைப்பு இருக்கிறது. இதற்காக பிரான்க்பார்தில் இருந்து விமானம் ஏறும் முன் நான் உடை மாற்றி கொண்டு வர இயலாது. எல்லாரையும் பார்த்து சிரித்து பழகி இருந்த நான், அங்கு ஒரு ஆட்டோ டிரைவரை பார்த்து சிரிக்க அந்த ஆள் என்னை ஒரு மாதிரி நினைத்து விட்டார். பின்னர் நான்  தவறை உணர்ந்து முகத்தை கடுப்பாக்கியது வேறு கதை. அதே போல தெரிந்தவர்களை பார்க்கும் போது  இங்கேபழகியது  போல கட்டி பிடிக்க முடியாது. அங்கே கட்டி பிடிப்பது என்றாலே பாலியல் சார்ந்த ஒரு வார்த்தை.  அதே போல யாராவது விழுந்தால் ஓடிபோய் தூக்குவது, அனைத்திற்கும் நன்றி சொல்லுவது, சாரி சொல்லுவது, என்று செய்து கொண்டிருப்போம்.

இப்படி எல்லாம் நம்மையும் அறியாமல் நாம் கற்ற பழக்கவழக்கங்கலால்  நாம் கலாச்சாரத்தை மறந்தவர்கள் ஆகிவிடுவோமா? என்னை பொறுத்த வரை, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் செய்யும் எந்த விசயங்களும் நல்லதே. மாற்றங்கள் என்பது மாறாதது, இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் சில  ஆண்டுகளில் இந்தியாவில் கூட இவை பெரிய விசயமாக இருக்காது.  நாம் தான் அந்த மாற்றங்களை பழகி கொள்ள வேண்டும்.

நன்றி

26 comments:

துளசி கோபால் said...

சின்ன உதவி செஞ்சாலும் தேங்க் யூ சொல்லும் வழக்கம் உண்டே! இந்தியாவில் இப்படிச் சொல்லப்போய் ஏதோ விநோதமானவள்ன்னு பார்த்த பார்வைகள் இருக்கே..... யப்பா...

Avargal Unmaigal said...

மேலை நாட்டுக்கு வரும் இந்தியப் பெண்கள்படு கஷ்டத்தை அழகாக பகிர்ந்து இருக்கிறீர்கள் இது போல ஆண்களும் சில கஷ்டங்களை படுகிறார்கள் உதாரணமாக அமெரிக்காவில் ஆபிஸில் மீட்டிங்கில் ஆண்களாகட்டும் பெண்களாக ஆகட்டும் அவர்களை பார்க்கும் போது கை குலுக்கி அணைத்து கொள்வோம் அப்படி நாம் செய்யும் போது அதில் இந்தியப் பெண்கள் இருந்துவிட்டால் இந்திய ஆண்களால் அவர்களை கைகுலுக்கி அணைக்க முடியாமல் ஒரு தயக்கம் வந்து விடுகிறது அதிலும் அந்த பெண்கள் தென் இந்தியர்களாக இருந்துவிட்டால் மிகவும் சங்கடமாகவே இருக்கிறது

ப.கந்தசாமி said...

கலாச்சார மாற்றங்கள் அதிர்ச்சியூட்டுபவை. ஸ்வீடனில் ரோட்டில் ஒரு ஆண் ஒரு பெண்ணை முதுகில் தூக்கிக்கொண்டு போனான். நான் அதிர்ந்து போனேன்.

காரிகன் said...

சில அதிர்ச்சிகள் சில சமயங்களில் அவசியம்தான். ஆனால் இங்கே கொஞ்சம் எல்லாம் பின்னோக்கி போவதுபோல இருக்கிறது. மாட்டுக்கறி சாப்பிட்டால் ஜெயில் என்ற நிலை கூட இந்தியாவில் இனி வரலாம். கலாச்சார மாற்றம்!

கீதமஞ்சரி said...

ஆரம்பத்தில் நானும் இதுபோன்ற பல சம்பவங்களாலும் கலாச்சார அதிர்ச்சியாலும் பாதிக்கப்பட்டிருந்தேன். இப்போது பழகிவிட்டது. பல பெண்களுடைய மனத்தைப் படம்பிடித்துக் காட்டியிருக்கீங்க. பாராட்டுகள் முகுந்த் அம்மா.

மலரன்பன் said...

athan peyar muththam alla. peck.

குலவுசனப்பிரியன் said...

இருபாலரும் சந்திக்கும் மற்றொரு மாற்றம், வரிசையில் நிற்பது.

மலரன்பன் said...

காரிகன், வந்தே விட்டது. இன்றைய செய்தித்தாள்களைப்படிக்கவில்லையா?

முகுந்த்!

சிரிக்கக்கூட வேண்டாம். ஒரு தடவை நேராகப்பார்த்துவிட்டாலே போதும். உங்களைத் தவறாககணித்து விடுவார்கள். ஆண்கள் அப்படிப்பெண்ணைப்பார்த்து விட்டால், பெண் உடனே அவளிடம் இருக்கும் அண்ணனிடமோ, அப்பாவிடமோ சொல்லிவிடுவாள். பார்ப்பவன் கதை அதோகதி. இது மதுரையில் அடிக்கடி நடக்கும். பெண்கள் எப்படி நடக்கவேண்டுமென்பது ஆண்கள் வகுத்திவிதியாக இருப்பதால், ஆண்களின் விருப்பு வெறுப்புக்களை தன்னுடையதாகவே நினைக்கும் மதிமயக்கம் ஆதிகாலந்தொட்டு நம் நாட்டில் வருகிறது.

தமிழ்ப்பார்ப்பனர்களைப்போல நடந்துகொளவது நலம். பிராமணப்பாஷையை (ஆத்துக்கு, அவாள், இவாள், ஜலம், அத்திம்பேர்) என்று பக்கத்தில் நிற்கும் தங்கள் சக ஜாதிக்காரரிடம் பேசி திரும்பி அதே சொற்களை பக்கத்தில் நிற்கும் பிறஜாதிக்காரரிடம் இலகுவாகப் பேசுவர். அது அவர்களுக்குப் பழக்கமாக இலாகவமாக வருகிறது. இவர்களைப்போன்றோ சவுராட்டியரும், தம் பாஷையையும் பிறர் பாஷையும் மாறிமாறி இலகுவாகப்பேசுவர்.

அதைப்போல கலாச்சாரம் மாற்றும்.

எக்கலாச்சாரம் உயர்ந்தது; எது குறைந்தது என்பது தீராத வாதம். எங்கிருக்கின்றோமோ அதை ஏற்றுக்கொள்வது நலம்.

பழநி கந்தசாமி அவர்களே!

நன்றி சொல்வது மட்டுமன்று, பிறரை மிஸ்டர் மிஸஸ், மிஸ் என்று சேர்த்தழைப்பது, அவர் எவராகினும், குற்றவாளிக்கூண்டில் நிற்பவராயினும் - அவர்கள் பழக்கம். நம் செய்யமுடியாது. நீங்கள் தூக்கிக்கொண்டு போனான என்றுதானே எழுதுகிறீர்கள். நம் பழக்கம். வெள்ளைக்காரன் அப்படி எழுதவும் மாட்டான்; பேசவும் மாட்டான். அந்நியரை வெறுப்பது நம் அடிப்படைக்குணம்; நம்மைப்பொறுத்தவரை அவர்கள் மனிதர்களல்ல. இதுவே ஜாதிமுறைகள் வரவும் காரணமாகும். பிரித்தும் பிரிந்தும் வாழ்ந்தால் நம் வாழ்க்கை சேமம் எனபது நம் எண்ணம்.

ஆண்-பெண் உறவு நிலைபாடுகளே பாலியல் விவகாரங்களின் அடிப்படையில் இருக்கும் கலாச்சாரக்குற்றம். அதாவது, அந்நிய பெண்கள் வெறும் சதை.நம் அக்காள், தங்கை, அம்மாள், சித்தி, பெரியம்மா எல்லாரும் நமக்கு தெய்வங்கள். ஆண்-பெண் உறவில் நடக்கும் குற்றங்கள் பல கலாச்சாரத்தின் ஓட்டைகளை வைத்தே கட்டப்படுகின்றன. ஒரு பெண் தன்னைப்பார்த்தாலே காதல் என்னும் நினைப்பும் அப்படித்தான். அப்படியே அவள் காதலித்தாலும் பின்னர் ஏதோவொரு காரணத்தால் கட்டாயம் பிரிய அவளோ அவள் பெற்றோரை நினைத்துச் செயல்பட்டால், ஆசிட் வீச்சு; துடிக்க துடிக்க நடுரோட்டில் துண்டம்துண்டமாக வெட்டிக்கொலை. ஏன்? ஏன்? பெண் ஒரு உடமைப்பொருள். அது பொருள். உயிரன்று. இது கலாச்சாரத்தால் வந்த வினை.

ஆணையும் பெண்ணையும் பிரித்தே வளர்க்க சமூகம் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறது. ஆணுக்குப்பெண் அடிமையே என்பது பெண்ணால் உள்வாங்கப்பட்ட கலாச்சாரம்.

எவரேனும் கேள்விகேட்டுவிட்டால், அவன் வெள்ளைக்காரனின் கைக்கூலி என்பது இன்றைய ஃபேசனபில் ஆர்குமென்ட்.

Thiyagarajan said...

எனது இரண்டாவது குழந்தை உண்டாயிருக்கும் போது அமெரிக்க மருத்துவமனையில் எனக்கு சில அதிர்ச்சிகள் காத்திருந்ததன. மருத்துவமனை அனுமதி படிவத்தில் அவ்வளவு அபத்தமான கேள்விகள்... நம்மூரில் யாராவது அப்படி கேட்டிருந்தால் அருவா தான் பேசியிருக்கும்...

வருண் said...

I never feel comfortable hugging colleagues or friends. For me hugging a "guy"is worse than hugging a woman. I think it is not necessary to get "that" close to anybody. I usually avoid that when such situation arises. I just shake my hand or just hesitate when someone tries to hug me. They will realize my hesitation and stop it in "half way". But even in India some people have this "hugging culture". That's their culture, not mine!

Yeah people might label me as "uncultured" or"unfriendly"or "uncivilized". I care less about such labels.

ஹுஸைனம்மா said...

பொதுவாகவே ஆசியர்கள், எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டுக் கலாச்சாரத்தோடு ஒன்றிவிடுவார்கள்; அல்லது அதிகபட்சம் odd-ஆக தெரியாமலாவது நடந்து கொள்வார்கள்.

ஆனால், அதுவே ஆங்கிலேயர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் தங்கள் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்வதில்லை. மாறாக, செல்லும் நாட்டினரையும் தங்களது கலாச்சாரத்திற்குக் கொண்டு வந்து விடுகீறார்கள். (இந்தியா - ஆங்கிலேயர் ஆட்சி போல) அதுவும் ஒரு தனித் திறமைதான்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இங்கு கைகொடுத்தல், மிகத் தெரிந்தவர்களுக்கு கன்னத்துடன் கன்னத்தை 3 தரம் ஒட்டுதல், மிக மிக நன்கு பழகித் தெரிந்தவர்களாயின், அவர்கள் எந்த இனமானாலும் மகிழ்விலோ, துன்பத்திலோ அணைத்து முதுகில் மெல்ல தட்டி, வருடும் பழக்கம் இருக்கிறது.என் குடும்பமே செய்கிறோம்.
என் அயல் கமறூன் நாட்டைச் சேர்ந்தவர் இறந்து விட்டார். அவர் மனைவி தோளில் சாய்ந்து அழுதார், 18 வருடம் அயலவராக தினமும் கண்டு பழகியவர்கள்.
சென்ற மாதம் இன்னுமொரு அயலவர்கள் மொரக்கோவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள். 27 வயது மகன் திடீர் மரணம்.எங்களைக் கண்டதும் வேதனையில் தோளில் கையைப் போட்டு, கண்ணீர் விட்டார். அவர் கணவர், அத்தனை உறவுகளும் இருந்தார்கள். தன் உறவுபோல் தான் அவர் நடவடிக்கை எங்களுடன் இருந்தது. 18 வருடப் பழக்கமல்லவா? அவர்கள் உறவுகளுடன் கூட நாளும் பேசுவதில்லை. ஆனால் எங்களுடன் எந் நாளும் பேசியுள்ளனரே!
நாம் விரும்பாவிடிலும் சில சமயம், தட்ட முடியாது.
ஆனால் இங்கு வாழும் இலங்கையர்கள், இந்தியர்களுடன் - நாம் நம் நாடுபோல்தான் வாழ்கிறோம்.

முகுந்த்; Amma said...

In my office during our team lunch, we had discussed about this...and some of my colleagues who are from Europe were surprised to hear about the cultural differences. For example one guy from France said, "when you are meeting someone and you know them, they will surely give a peck in your cheek, and is you are not giving a peck back in their cheek, means you are not respecting the person". Similarly "When you hug someone that represents the person is known and respected."

When we were chatting in an italian restaurant and some waitress came and she started calling everyone as "Darling" and "Sweetie".

It seems calling someone unknown as sweetie or Darling is southern US tradition. There was one guy from northeast part of US and he said, it was strange for him when some stranger called him as a darling.

So to make the long story short, seems like...Even within US, one could find cultural differences.

முகுந்த்; Amma said...

துளசி கோபால் said...

"சின்ன உதவி செஞ்சாலும் தேங்க் யூ சொல்லும் வழக்கம் உண்டே! இந்தியாவில் இப்படிச் சொல்லப்போய் ஏதோ விநோதமானவள்ன்னு பார்த்த பார்வைகள் இருக்கே..... யப்பா..."

thanks Tulasi ma.

முகுந்த்; Amma said...

Avargal Unmaigal said...

"மேலை நாட்டுக்கு வரும் இந்தியப் பெண்கள்படு கஷ்டத்தை அழகாக பகிர்ந்து இருக்கிறீர்கள் இது போல ஆண்களும் சில கஷ்டங்களை படுகிறார்கள் உதாரணமாக அமெரிக்காவில் ஆபிஸில் மீட்டிங்கில் ஆண்களாகட்டும் பெண்களாக ஆகட்டும் அவர்களை பார்க்கும் போது கை குலுக்கி அணைத்து கொள்வோம் அப்படி நாம் செய்யும் போது அதில் இந்தியப் பெண்கள் இருந்துவிட்டால் இந்திய ஆண்களால் அவர்களை கைகுலுக்கி அணைக்க முடியாமல் ஒரு தயக்கம் வந்து விடுகிறது அதிலும் அந்த பெண்கள் தென் இந்தியர்களாக இருந்துவிட்டால் மிகவும் சங்கடமாகவே இருக்கிறது"

Actually, you are true, Even in office, I have never seen Indian person giving hug to another indian woman.

Thanks for the comments

முகுந்த்; Amma said...

பழனி. கந்தசாமி said...
"கலாச்சார மாற்றங்கள் அதிர்ச்சியூட்டுபவை. ஸ்வீடனில் ரோட்டில் ஒரு ஆண் ஒரு பெண்ணை முதுகில் தூக்கிக்கொண்டு போனான். நான் அதிர்ந்து போனேன்"

Actually, kissing and hugging someone in public place is very normal in Europe, but not in US.

thanks for the comment ayya.

முகுந்த்; Amma said...

காரிகன் said...
"சில அதிர்ச்சிகள் சில சமயங்களில் அவசியம்தான். ஆனால் இங்கே கொஞ்சம் எல்லாம் பின்னோக்கி போவதுபோல இருக்கிறது. மாட்டுக்கறி சாப்பிட்டால் ஜெயில் என்ற நிலை கூட இந்தியாவில் இனி வரலாம். கலாச்சார மாற்றம்!"

Thanks for the comments, I am not going to go into the politics created by these types of laws and rules, As you said, In india we are going backwards.

thanks for the comments.

மலரன்பன் said...
athan peyar muththam alla. peck.

Thanks for the correction, I have corrected it.

முகுந்த்; Amma said...

கீத மஞ்சரி said...
"ஆரம்பத்தில் நானும் இதுபோன்ற பல சம்பவங்களாலும் கலாச்சார அதிர்ச்சியாலும் பாதிக்கப்பட்டிருந்தேன். இப்போது பழகிவிட்டது. பல பெண்களுடைய மனத்தைப் படம்பிடித்துக் காட்டியிருக்கீங்க. பாராட்டுகள் முகுந்த் அம்மா."

Thanks Geetha Manjari.

முகுந்த்; Amma said...

குலவுசனப்பிரியன் said...
இருபாலரும் சந்திக்கும் மற்றொரு மாற்றம், வரிசையில் நிற்பது.

True, thanks for the comment

முகுந்த்; Amma said...

"மலரன்பன் said...
காரிகன், வந்தே விட்டது. இன்றைய செய்தித்தாள்களைப்படிக்கவில்லையா?

முகுந்த்!

சிரிக்கக்கூட வேண்டாம். ஒரு தடவை நேராகப்பார்த்துவிட்டாலே போதும். உங்களைத் தவறாககணித்து விடுவார்கள். ஆண்கள் அப்படிப்பெண்ணைப்பார்த்து விட்டால், பெண் உடனே அவளிடம் இருக்கும் அண்ணனிடமோ, அப்பாவிடமோ சொல்லிவிடுவாள். பார்ப்பவன் கதை அதோகதி. இது மதுரையில் அடிக்கடி நடக்கும். பெண்கள் எப்படி நடக்கவேண்டுமென்பது ஆண்கள் வகுத்திவிதியாக இருப்பதால், ஆண்களின் விருப்பு வெறுப்புக்களை தன்னுடையதாகவே நினைக்கும் மதிமயக்கம் ஆதிகாலந்தொட்டு நம் நாட்டில் வருகிறது.

தமிழ்ப்பார்ப்பனர்களைப்போல நடந்துகொளவது நலம். பிராமணப்பாஷையை (ஆத்துக்கு, அவாள், இவாள், ஜலம், அத்திம்பேர்) என்று பக்கத்தில் நிற்கும் தங்கள் சக ஜாதிக்காரரிடம் பேசி திரும்பி அதே சொற்களை பக்கத்தில் நிற்கும் பிறஜாதிக்காரரிடம் இலகுவாகப் பேசுவர். அது அவர்களுக்குப் பழக்கமாக இலாகவமாக வருகிறது. இவர்களைப்போன்றோ சவுராட்டியரும், தம் பாஷையையும் பிறர் பாஷையும் மாறிமாறி இலகுவாகப்பேசுவர்.

அதைப்போல கலாச்சாரம் மாற்றும்.

எக்கலாச்சாரம் உயர்ந்தது; எது குறைந்தது என்பது தீராத வாதம். எங்கிருக்கின்றோமோ அதை ஏற்றுக்கொள்வது நலம்.

பழநி கந்தசாமி அவர்களே!

நன்றி சொல்வது மட்டுமன்று, பிறரை மிஸ்டர் மிஸஸ், மிஸ் என்று சேர்த்தழைப்பது, அவர் எவராகினும், குற்றவாளிக்கூண்டில் நிற்பவராயினும் - அவர்கள் பழக்கம். நம் செய்யமுடியாது. நீங்கள் தூக்கிக்கொண்டு போனான என்றுதானே எழுதுகிறீர்கள். நம் பழக்கம். வெள்ளைக்காரன் அப்படி எழுதவும் மாட்டான்; பேசவும் மாட்டான். அந்நியரை வெறுப்பது நம் அடிப்படைக்குணம்; நம்மைப்பொறுத்தவரை அவர்கள் மனிதர்களல்ல. இதுவே ஜாதிமுறைகள் வரவும் காரணமாகும். பிரித்தும் பிரிந்தும் வாழ்ந்தால் நம் வாழ்க்கை சேமம் எனபது நம் எண்ணம்.

ஆண்-பெண் உறவு நிலைபாடுகளே பாலியல் விவகாரங்களின் அடிப்படையில் இருக்கும் கலாச்சாரக்குற்றம். அதாவது, அந்நிய பெண்கள் வெறும் சதை.நம் அக்காள், தங்கை, அம்மாள், சித்தி, பெரியம்மா எல்லாரும் நமக்கு தெய்வங்கள். ஆண்-பெண் உறவில் நடக்கும் குற்றங்கள் பல கலாச்சாரத்தின் ஓட்டைகளை வைத்தே கட்டப்படுகின்றன. ஒரு பெண் தன்னைப்பார்த்தாலே காதல் என்னும் நினைப்பும் அப்படித்தான். அப்படியே அவள் காதலித்தாலும் பின்னர் ஏதோவொரு காரணத்தால் கட்டாயம் பிரிய அவளோ அவள் பெற்றோரை நினைத்துச் செயல்பட்டால், ஆசிட் வீச்சு; துடிக்க துடிக்க நடுரோட்டில் துண்டம்துண்டமாக வெட்டிக்கொலை. ஏன்? ஏன்? பெண் ஒரு உடமைப்பொருள். அது பொருள். உயிரன்று. இது கலாச்சாரத்தால் வந்த வினை.

ஆணையும் பெண்ணையும் பிரித்தே வளர்க்க சமூகம் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறது. ஆணுக்குப்பெண் அடிமையே என்பது பெண்ணால் உள்வாங்கப்பட்ட கலாச்சாரம்.

எவரேனும் கேள்விகேட்டுவிட்டால், அவன் வெள்ளைக்காரனின் கைக்கூலி என்பது இன்றைய ஃபேசனபில் ஆர்குமென்ட்."

A lot of things you have touched upon in this comment, I have to agree with all the stuff you mentioned. Thanks for taking the time to summarize it. I appreciate your comments.

முகுந்த்; Amma said...

" Thiyagarajan said...
எனது இரண்டாவது குழந்தை உண்டாயிருக்கும் போது அமெரிக்க மருத்துவமனையில் எனக்கு சில அதிர்ச்சிகள் காத்திருந்ததன. மருத்துவமனை அனுமதி படிவத்தில் அவ்வளவு அபத்தமான கேள்விகள்... நம்மூரில் யாராவது அப்படி கேட்டிருந்தால் அருவா தான் பேசியிருக்கும்..."

Ha, it is true, Actually during the child birth, they normally ask lady whether she is safe with her husband/partner. And they give mom's last name as the kids last name, and it will be funny most of time.

But if you think in another angle, its because they want the child to be in a happy safe environment. And you wont see any teenager/single women throwing her kid in a dustbin. If she does, she will be in jail.

முகுந்த்; Amma said...

வருண் said...
"I never feel comfortable hugging colleagues or friends. For me hugging a "guy"is worse than hugging a woman. I think it is not necessary to get "that" close to anybody. I usually avoid that when such situation arises. I just shake my hand or just hesitate when someone tries to hug me. They will realize my hesitation and stop it in "half way". But even in India some people have this "hugging culture". That's their culture, not mine!

Yeah people might label me as "uncultured" or"unfriendly"or "uncivilized". I care less about such labels."

Everyone's point of view is different Mr.Varun, and its their preference, one should respect it and move on.

thanks for the comment.

முகுந்த்; Amma said...

"ஹுஸைனம்மா said...
பொதுவாகவே ஆசியர்கள், எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டுக் கலாச்சாரத்தோடு ஒன்றிவிடுவார்கள்; அல்லது அதிகபட்சம் odd-ஆக தெரியாமலாவது நடந்து கொள்வார்கள்.

ஆனால், அதுவே ஆங்கிலேயர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் தங்கள் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்வதில்லை. மாறாக, செல்லும் நாட்டினரையும் தங்களது கலாச்சாரத்திற்குக் கொண்டு வந்து விடுகீறார்கள். (இந்தியா - ஆங்கிலேயர் ஆட்சி போல) அதுவும் ஒரு தனித் திறமைதான்.
"

Actually, this is european culture, if you accidentally said "Are you English?" to a french person, he will be offended. They are proud of their country, language and identities.

thanks for the comment

முகுந்த்; Amma said...

"யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இங்கு கைகொடுத்தல், மிகத் தெரிந்தவர்களுக்கு கன்னத்துடன் கன்னத்தை 3 தரம் ஒட்டுதல், மிக மிக நன்கு பழகித் தெரிந்தவர்களாயின், அவர்கள் எந்த இனமானாலும் மகிழ்விலோ, துன்பத்திலோ அணைத்து முதுகில் மெல்ல தட்டி, வருடும் பழக்கம் இருக்கிறது.என் குடும்பமே செய்கிறோம்.
என் அயல் கமறூன் நாட்டைச் சேர்ந்தவர் இறந்து விட்டார். அவர் மனைவி தோளில் சாய்ந்து அழுதார், 18 வருடம் அயலவராக தினமும் கண்டு பழகியவர்கள்.
சென்ற மாதம் இன்னுமொரு அயலவர்கள் மொரக்கோவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள். 27 வயது மகன் திடீர் மரணம்.எங்களைக் கண்டதும் வேதனையில் தோளில் கையைப் போட்டு, கண்ணீர் விட்டார். அவர் கணவர், அத்தனை உறவுகளும் இருந்தார்கள். தன் உறவுபோல் தான் அவர் நடவடிக்கை எங்களுடன் இருந்தது. 18 வருடப் பழக்கமல்லவா? அவர்கள் உறவுகளுடன் கூட நாளும் பேசுவதில்லை. ஆனால் எங்களுடன் எந் நாளும் பேசியுள்ளனரே!
நாம் விரும்பாவிடிலும் சில சமயம், தட்ட முடியாது.
ஆனால் இங்கு வாழும் இலங்கையர்கள், இந்தியர்களுடன் - நாம் நம் நாடுபோல்தான் வாழ்கிறோம்."

Well said, here goes the true experience of a person who lives in France.

I have visited france but never stayed there. One thing I find very strange is "They dont speak English even though the know the language". In paris, in local train station I was asking several times in English about the train schedule, and the person in the ticket counter was replying to me in french, with a kind of a smile in his face. I really felt very irritated.