Friday, May 7, 2010

மதுரைகாரங்க...

"சாமி...எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி"

மதுரைகாரங்கன்னா ரவுடிகளா?.

ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு நண்பர் குடும்பத்தை சந்திக்க நேர்ந்தது. பரஸ்பரம் பேசிகொண்டிருந்த போது அந்த நண்பரின் மனைவி

"நீங்க இந்தியாவில எந்த ஊரு" என்று கேட்டார்.

நான் அதற்கு "நான் மதுரைங்க" அப்படின்னு சொன்னவுடனே

"அய்யயோ உங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும், எங்கயாவது அருவா கிருவா வச்சிருப்பீங்க இல்ல நீங்க எல்லாம்" அப்படின்னு கிண்டல் செய்தார்.

உடனே என் வீட்டுகாரர் "இவங்களுக்கு ----கிரி எல்லாம் தெரியுங்க" அப்படின்னு கொளுத்தி போட, அவங்களும் "உண்மையாவாங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும் உங்ககிட்ட அப்படின்னு ஒரே சிரிப்பு"

எல்லாம் இந்த சினிமா காரவங்க பண்ணுற வேலை. எப்போ பாரு மதுரைனாலே அருவா, வெட்டு, குத்து, ரத்தம், ரவுடி.. ஏங்க, நான் ஒன்னு கேட்குறேன், இதை தவிர மதுரைல ஒண்ணுமே இல்லையா.

சினிமா தான் அப்படின்னா, நேத்து பார்க்குறேன் ஒரு மெகா சீரியல் பேரு மதுரை யாம், அது ஆரம்பிகிறது நான் படிச்ச மீனாட்சி கல்லூரியில. அதுவாவது வேற கதையோட இருக்கா, அதுவும் இல்ல அதே வெட்டு குத்து, ரவுடி...

எங்க அம்மா போனவாரம் பேசும்போது ஒன்னு சொன்னங்க "ஜெய்ஹிந்துபுரம்" அப்படின்னு ஒரு படம் எடுக்குறாங்களாம். அதுவும் நான் சின்ன வயசில இருக்கும் போது போன ஒரு கோயில்ல எடுத்தாங்களாம், அதில வில்லனா நடிக்கிறவர் எங்களுக்கு தெரிஞ்சவர்.

ஐயோ சாமி தாங்கல!

சுப்ரமணியபுரம், கோரிப்பாளையம்,ஜெய்ஹிந்துபுரம்....இன்னும் மதுரையில இருக்கிற அனுப்பானடி, ஆரப்பாளையம், திருப்பரங்குன்றம், குண்டு, குழி, மேடு, பள்ளம் இதெல்லாம் படம் பேரா வரப்போவுது பாருங்க.

தமிழ் சினிமாகாரங்களே மதுரை பாவம் விட்டுருங்க. வேற ஏதாவது ஊருக்கு உங்க ஜாகையை மாத்திருங்க ப்ளீஸ்.

25 comments:

Radhakrishnan said...

:) ஒரு பெருமை தானே!

முனைவர் இரா.குணசீலன் said...

எல்லாம் இந்த சினிமா காரவங்க பண்ணுற வேலை..


உண்மைதான்..

சந்தனமுல்லை said...

;-)))

settaikkaran said...

மதுரையை கேவலப்படுத்துற சினிமாக்காரனுங்களுக்கு புத்தி வர்றா மாதிரி எல்லா மதுரைக்காரப் பதிவர்களும் சேர்ந்து ஒரு தொடர்பதிவு போட்டாலென்ன? ஊதுகிற சங்கை ஊதுவோம்; அது செவிடன் காதாயிருந்தா இருந்திட்டுப்போகட்டுமே?

பத்மா said...

எனக்கு புகுந்த வீடு மதுரை .மதுரகாரங்க ரௌடியான்னு கேட்டா சந்தோஷமா ஆமாம் ஆமாம்ன்னு சொல்வேங்க .எனக்கு அதுல ரொம்ப பெருமை

அமைதி அப்பா said...

சினிமாகாரர்கள், எந்த ஊரை பெருமைப் படுத்தி இருக்காங்க?
எல்லா ஊர்லயும் வம்பு சண்டையின்னுதான் காட்டுவாங்க.
அவங்களுக்கு நல்ல விஷயமே கண்ணுலப் படாது.
நல்ல பகிர்வு.

கோமதி அரசு said...

மதுரை என்றால் அரிவாள் கத்தியா?

அட,கடவுளே!

மதுரைக்கு’ உறங்கா நகரம்’
என்ற பெயரும் உண்டு.மதுரைக்கு எந்த நேரத்தில் வந்தாலும் உணவு கிடைக்குமே! அதை எல்லாம் சொல்லாமல் கத்தி,அரிவாள் என்று சொல்லிக் கொண்டு,மதுரைக்கு போகாதேடி என்று பாட்டு வேறு போட்டு கொண்டு.
சினிமாவில் எல்லாம் மிகைப் படுத்த படுகிறது.


நல்லதை சொல்ல பழகி கொள்ள வேண்டும் மக்கள்.

பனித்துளி சங்கர் said...

அதுதான் இன்னும் ஆயிரம் வருடத்திற்கு அழியாத அளவிற்கு சினிமாக் காரர்கள் பண்ணிட்டாங்களே
இனி பொலம்பி நாம என்ன பண்றது விடுங்க அதுவும் ஒரு பட்டம் போல கூடவே இருந்துவிட்டு போகட்டும் .

தேவன் மாயம் said...

மதுரைக்காரவுக இதை சும்மா விடக்கூடாது!!!

முகுந்த்; Amma said...

@தேவன் மாயம், @ சேட்டைக்காரன்

ஆமாங்க, பேசாம சேட்டைக்கார அண்ணாச்சி சொல்லுற மாதிரி மதுரை பதிவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு தொடர் பதிவு போட்டுடலாமா, சொல்லுங்க

Chitra said...

மதுரை - மதுரையை விட்டா நெல்லை சீமை..... ஏங்க ஊரிலேயும் நாட்டாமை ஆட்சிதான் என்று இன்னும் எத்தனை நாளைக்கு சொல்லிக்கிட்டு திரிய போறோங்களோ?
same feelings... same blood.... :-(

அம்பிகா said...

எல்லாம் இந்த சினிமாகாரங்க பண்ற வேலை.
:-)))

பாச மலர் / Paasa Malar said...

மதுரைக்காரங்கன்னாலே அருவா மஞ்சப்பைன்னு சினிமா வந்தாலும் வந்தது...எல்லோரும் என்னிடம் உங்க ஊர் இவ்ள மோசமா என்பார்கள்....நன்றி முகுந்த் அம்மா..மதுரை பற்றிய
பகிர்வுக்காக

எம்.எம்.அப்துல்லா said...

:)

சாமக்கோடங்கி said...

ச்சே.. நானும் இவ்வளவு நாளு தப்பா நெனச்சிட்டு இருந்தேன்..

நன்றி..

முகுந்த்; Amma said...

@V.ராதாகிருஷ்ணன்

//:) ஒரு பெருமை தானே!//

உண்மை. மதுரைக் காரின்னு சொல்லிகிறது ஒரு பெருமை தாங்க எனக்கு.

@முனைவர்.இரா.குணசீலன் said...
நன்றி முனைவர் குணசீலன் அவர்களே.

முகுந்த்; Amma said...

@சந்தனமுல்லை said...
//;-)))//

நன்றி சந்தனமுல்லை.

@சேட்டைக்காரன் said...

//மதுரையை கேவலப்படுத்துற சினிமாக்காரனுங்களுக்கு புத்தி வர்றா மாதிரி எல்லா மதுரைக்காரப் பதிவர்களும் சேர்ந்து ஒரு தொடர்பதிவு போட்டாலென்ன? ஊதுகிற சங்கை ஊதுவோம்; அது செவிடன் காதாயிருந்தா இருந்திட்டுப்போகட்டுமே?//

நல்ல ஐடியா அண்ணாச்சி. கட்டாயம் செய்யலாம். அப்படியாவது இவங்க திருந்துறாங்கலான்னு பார்க்கலாம்.

முகுந்த்; Amma said...

@பத்மா

//எனக்கு புகுந்த வீடு மதுரை .மதுரகாரங்க ரௌடியான்னு கேட்டா சந்தோஷமா ஆமாம் ஆமாம்ன்னு சொல்வேங்க .எனக்கு அதுல ரொம்ப பெருமை//

என்னது, பெருமையா ரௌடிங்கன்னு சொல்லுவீங்களா, என்ன பத்மா இது:((

@ அமைதி அப்பா said...

//சினிமாகாரர்கள், எந்த ஊரை பெருமைப் படுத்தி இருக்காங்க?
எல்லா ஊர்லயும் வம்பு சண்டையின்னுதான் காட்டுவாங்க.
அவங்களுக்கு நல்ல விஷயமே கண்ணுலப் படாது.//

அதானே, எவ்வளவு நல்ல விசயங்களெல்லாம் இருக்கு. நல்லதே இவங்க கண்ணுக்கு தெரியாது.

முகுந்த்; Amma said...

@கோமதி அரசு said...

//மதுரை என்றால் அரிவாள் கத்தியா?

அட,கடவுளே!//

அப்படி தாம்மா ஆக்கிடாங்க. இப்போ பாருங்க கோரிப்பாளயம்னு ஒரு பட Trailer பார்த்தேன் அதுவும் ஒரே அருவா கத்தியா தான் இருக்கு.

//மதுரைக்கு’ உறங்கா நகரம்’
என்ற பெயரும் உண்டு.மதுரைக்கு எந்த நேரத்தில் வந்தாலும் உணவு கிடைக்குமே! அதை எல்லாம் சொல்லாமல் கத்தி,அரிவாள் என்று சொல்லிக் கொண்டு,மதுரைக்கு போகாதேடி என்று பாட்டு வேறு போட்டு கொண்டு. சினிமாவில் எல்லாம் மிகைப் படுத்த படுகிறது.நல்லதை சொல்ல பழகி கொள்ள வேண்டும் மக்கள்.

//

சரியா சொன்னீங்கம்மா.

நன்றி.

@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫said...
//அதுதான் இன்னும் ஆயிரம் வருடத்திற்கு அழியாத அளவிற்கு சினிமாக் காரர்கள் பண்ணிட்டாங்களே//

உண்மைங்க, ஆயிரம் வருஷம் ஆனாலும் இது அழியாது.

// இனி பொலம்பி நாம என்ன பண்றது விடுங்க அதுவும் ஒரு பட்டம் போல கூடவே இருந்துவிட்டு போகட்டும் .//

மனசு கேட்க்கமட்டேங்குதே, என்ன பண்ண புலம்பி தான் ஆகணும்.

முகுந்த்; Amma said...

@ Chitra said...
//மதுரை - மதுரையை விட்டா நெல்லை சீமை..... ஏங்க ஊரிலேயும் நாட்டாமை ஆட்சிதான் என்று இன்னும் எத்தனை நாளைக்கு சொல்லிக்கிட்டு திரிய போறோங்களோ?
same feelings... same blood.... :-(//

கரெக்ட் சித்ரா. தென் தமிழகத்தை விட்டா இவங்களுக்கு வேற கதையே கிடைக்காது போல. என்னத்த சொல்ல.

@அம்பிகா said...
//எல்லாம் இந்த சினிமாகாரங்க பண்ற வேலை.
:-)))//

அமாங்க. நன்றி அம்பிகா அவர்களே.

முகுந்த்; Amma said...

@ பாச மலர் / Paasa Malar said...
//மதுரைக்காரங்கன்னாலே அருவா மஞ்சப்பைன்னு சினிமா வந்தாலும் வந்தது...எல்லோரும் என்னிடம் உங்க ஊர் இவ்ள மோசமா என்பார்கள்....நன்றி முகுந்த் அம்மா..மதுரை பற்றிய
பகிர்வுக்காக//

என்ன மாதிரியே உங்களையும் கலாச்சிருகான்களா, அடக்கடவுளே.

நன்றிங்க பாசமலர்.

@ எம்.எம்.அப்துல்லா said...
//:)//

நன்றிங்க

@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கிsaid...
//ச்சே.. நானும் இவ்வளவு நாளு தப்பா நெனச்சிட்டு இருந்தேன்..//

உங்களை மாதிரி தாங்க நெறைய பேரு நினைச்சிட்டு இருக்காங்க. நாங்கல்லாம் ரொம்ப நல்லவுங்க தெரியுமா :))

நன்றிங்க

ஹுஸைனம்மா said...

//இவங்களுக்கு ----கிரி எல்லாம் தெரியுங்க"//

வாசிக்கும்போது கொஞ்சம் பயமாத்தான் இருக்குது. இருந்தாலும், சரி, வேண்டாம். நாம இப்போ ஃபிரண்ட்ஸ்தானே? :-))

ஆனாலும், சினிமாக்காரங்க, மதுரய மட்டுமா, தின்னவேலியையும்தான் டெரர்ஸ்பாட்டா ஆக்கிட்டாங்க!! என்னத்தச் சொல்ல!!

தருமி said...

//நான் படிச்ச மீனாட்சி கல்லூரியில...//

அடடே .. ரொம்ப பக்கத்தில ....

தருமி said...

66-ல வேலைக்குப் போனேன். சென்றது தஞ்சை. எந்த ஊர் என்றதும் மதுரை; எந்த காலேஜ்; அப்போது (இந்தி திணிப்பு எதிர்ப்பில் சட்டம் எரித்த கல்லூரி) தியாகராசர் கல்லூரி என்றேன்.

இருந்த 4 வருடமும் ராச மரியாதை!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இந்த பிரச்சனை எனக்கும் உண்டுங்க... கோயம்புத்தூர்னு சொன்னா... ஓ... மெட்டல் detector இல்லாம உங்கள பாக்க வரகூடாதுன்னு ஒரு கமெண்ட். குண்டு வெச்சவன் ஜெயில்ல ஜம்முனு சிக்கன் 65 சாப்பிடறான். நம்ம நேரம்

கூடவே நான் சாதாரணமா என்ன சொன்னாலும் "உங்க ஊரு குசும்பு போகாது" னு வேற ஒரு எக்ஸ்ட்ரா கமெண்ட். இப்பவெல்லாம் வேணும்னே கோவம் தீர குசும்பா சொல்லிட்டு நீங்க என்ன சொல்றதுன்னு நானே அதை பெருமையை சொல்ல ஆரம்பிச்சுட்டேன், காலக்கொடுமை