Tuesday, June 9, 2015

ஏன் டையட் மட்டுமே வேலை செய்வதில்லை?


வெயிட் கூடி விட்டது எப்படி குறைப்பது என்று நினைத்தாலே பலர் சென்று விழுவது டையட் தான். நோ-கார்ப் டையட், லோ கலோரி டையட், Nutrisystem, Weight watchers diet, Cabbage soup diet, Watermelon diet, Juice diet,.......என்று இருக்கும் டையட் லிஸ்ட் விண்ணை தாண்டும். இந்த டையட் நல்லது, ஒரு மாதத்திற்குள் 10 பவுண்ட் குறைந்து விடும், 20 பவுண்ட் குறைந்து விடும்..என்று இவர்கள் கொடுக்கும் சேல்ஸ் பிட்ச் ஐயோ என்று இருக்கும்.

என் உடன் வேலை பார்த்த பெண் அவள், 20 பதுகளில் இருந்த அவள் நல்ல உடல் பருமன் பிரச்சனையால் எந்த பாய் ப்ரெண்ட்ம் கிடைக்க வில்லை என்று ஒரே கவலை அவளுக்கு. உலகில் இருக்கும் எல்லா டையட் ம் முயன்று பார்த்து விட்டால். முடிவாக லிப்போ சக்சன் எனப்படும் வயிற்று கொழுப்பை சர்ஜெரி மூலம் குறைத்து வயிற்று பகுதி ஸ்லிம் தோற்றம் வந்து விட்டது. இது ஒரு எக்ஸ்ட்ரீம் கேஸ் என்றாலும் எப்படி அதிக வெயிட் என்பது ஒருவரின் மன நிலையை, வாழ்கையை தன நம்பிக்கையை குறைக்கிறது என்று அவள் மூலம் நான் கண்டேன்.

 பலருக்கு பல டையட் முயற்சி செய்தும் எடை குறைவதில்லை. ஏனெனில் டையட் என்ற பெயரில் ஒரு வகை உணவுப்பொருள்களை ஒதுக்குவது, அல்லது கிராஷ் டையட் என்ற பெயரில் வெறும் பழங்களை, காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவது என்று செய்து கொண்டு இருப்பார்கள். இப்படி பட்ட டையட் எல்லாம் சிறிது காலத்திற்கு வேண்டுமானால் உதவலாம். இப்படி கிராஷ் டையட் மூலம் குறையும் எடை பெரும்பாலும் வாட்டர் வெயிட் தான். கொழுப்பு குறைவதில்லை. ஏனெனில் உணவுகளை சாப்பிடாமல் தவிர்பதால் ஒரு மாத காலத்திற்கு பிறகு அந்த உணவுகளை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று வெறி அல்லது craving வந்து விடும், பின்னர் உணவை வளைத்து கட்டி சாப்பிட்டு குறைந்த எடை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக சேர்த்து விடுவார்கள்.

இன்னும் சிலர் டையட் என்ற பெயரில் காலையில் இருந்து ஒன்றும் சாப்பிட மாட்டார்கள் அல்லது காலை உணவை தவிர்த்து இருப்பார்கள். இப்படி செய்வதால் அடுத்த வேலை சாப்பிடும் போது அதிக கலோரி உணவுகளை அதிகம் சாப்பிட தோன்றும் சாப்பிட்டு விடுவார்கள்.

இன்னும் சிலர் டையட் என்று சொல்லி சோடா குடிப்பார்கள் அதுவும் டையட் கோக், அல்லது டையட் பெப்சி என்று குடிப்பார்கள், அதில் கலோரி இல்லை என்பார்கள் ஆனால் அதில் இருக்கும் சோடியம் மற்றும் செயற்கை ச்வீட்னெர் எப்படி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று யாரும் அறிவதில்லை.

இன்னும் சிலர் packed food சாப்பிடுவார்கள், அதிக சோடியம் நிறைந்த, அதிக கொழுப்பு நிறைந்த  குறைந்த சத்துகள் உள்ள இந்த வகை உணவுகள் உடலில் அதிக வாட்டர் ரிடென்சன் செய்யும் என்று அவர்கள் அறிவதில்லை.

சிலர் தண்ணீர் சுத்தமாக குடிப்பதில்லை. அல்லது நிறைய டீ அல்லது காப்பி குடிப்பது. டீ காபியில் இருக்கும் கோபீன் போன்றவை உடலில் கால்சியம் தனிமம்  உரிஞ்சபடுவதை குறைக்கும். அதனால் எலும்பு வலுவடையாது.

இன்னும் சிலர் டையடிங் இருந்தால் போதும் என்று உடல் பயிற்சி செய்வதில்லை. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் முதலில் எவ்வளவு எடை இருக்குறீர்கள், அல்லது BMI எவ்வளவு என்று கணக்கு செய்து கொள்ளுங்கள். உங்கள் உயரத்திற்கு எவ்வளவு எடை இருக்க வேண்டும், எவ்வளவு நீங்கள் இருக்கிறீர்கள் எவ்வளவு குறைக்க விழைகிறீர்கள் என்று குறித்து கொள்ளுங்கள். பின்னர் என்ன என்ன சாப்பிடுகிறீர்கள் என்று log வைத்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஸ்மார்ட் போன் வைத்து இருப்பவர்கள் என்றால் fitness  pal என்பது போன்ற நிறைய ஆப்கள் இருக்கின்றன. அதனை டௌன்லோட் செய்து கொள்ளுங்கள்.  உங்கள் எடை goal என்ன என்று enter செய்து விட்டால் எவ்வளவு கலோரி நீங்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்லும். என்ன சாப்பிடீர்கள் என்று நீங்கள் log செய்தால் எவ்வளவு கலோரி நீங்கள் எடுத்து கொண்டீர்கள் என்று  தெரியும். ஒரு சில ஆப்கள் GPS வைத்து நீங்கள் எவ்வளவு தூரம் நடக்குரீர்கள் என்று monitor செய்யும் அல்லது எவ்வளவு உடல்பயிற்சி செய்ய வேண்டும் அது எவ்வளவு கலோரி எரிக்கும் என்றெல்லாம் சொல்லும். அதற்கேற்றார் போல நீங்கள் உங்கள் உணவு பழக்கத்தை குறைத்தோ அல்லது உடல் பயிற்சியை அதிகரித்தோ மாற்றி அமைத்து கொள்ளலாம்.

ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். எடை குறைப்பது எப்போது லைப் ஸ்டைல் மாற்றமாக இருக்கிறதோ அப்பொழுது தான் உங்களால் எடை குறைப்பை maintain செய்ய முடியும். சுய கட்டுப்பாடு மிக மிக முக்கியம். ஒரு நாள் செய்து விட்டு முடியும் காரியம் இல்லை. consistent ஆக  தொடர வேண்டும். ஒரு சில நேரங்களில் சிறு சிறு மாற்றங்கள் கூட நமக்கு நல்ல விளைவை தரும். உதாரணமாக, காரை தூரத்தில் நிறுத்தி விட்டு நடந்து வருவது. இல்லை லிப்ட்க்கு பதில் படிகளில் ஏறுவது அல்லது பப்ளிக் transport உபயோகிப்பது, தொடர்ந்து உட்கார்ந்து இருக்காமல் ஒரு சிறு நடை போடுவது  போன்ற சிறு சிறு விசயங்கள்.  இல்லத்தரசிகள் துணிகளை கையால் துவைப்பது, வீடு கூட்டுவது, துடைப்பது, தோட்ட வேலை செய்வது போன்ற விடயங்களை machine உபயோகிக்காமல் செய்வது நிறைய கலோரி எரிக்க உதவும். வசதிகள் பெருக பெருக நாம் சோம்பேறியாகி உடல் பருமன் அதிகரித்து உடல் நலம் குன்றி போகிறோம். உடல் எடை கூட கூட டியாபெடிக்ஸ், BP, இதய நோய்கள் அணிவகுத்து வந்து விடுகின்றன.

சாப்பாடு கண்ட்ரோல் உடல் பயிற்சி இரண்டும் செய்தால் கட்டாயம் எடை குறைக்கலாம் நோயில்லாமலும் வாழலாம்.

நன்றி.






2 comments:

ஆரூர் பாஸ்கர் said...

Very good post. The aspect I like in your post is the truth and the underlying
practicality.

All points are valid and true reflection of the problem. One additional point could have been specifically of South Indians. How should be equipped for our current life style and our food habits.

We will be missing your posts for a while. Have a wonderful summer in India!!

Regards,
ஆரூர் பாஸ்கர்

முகுந்த்; Amma said...

@ஆரூர் பாஸ்கர் said...
"We will be missing your posts for a while. Have a wonderful summer in India!!"

Thanks for the comment. I wish I can go for a holiday to India "whole summer", but mine is a short trip. After I am back, I might not find time to write blog posts. But will try my best to write something. Thanks for the encouragement.