Saturday, June 6, 2015

தண்ணீர் பஞ்சமும், தண்ணீருக்காக மனைவிகளும்

சில நாட்களுக்கு முன், இந்தியாவில் நிலவும் அதீத வெப்பநிலையால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது என்று BBC செய்தி காண நேர்ந்தது. தலைநகர் டெல்லியில் தார் ரோடுகள் கூட உருகி ஓடும் நிலை என்று செய்தி காண நேர்ந்தது. பசுபிக் மகாசமுத்திரத்தில் நடக்கும் El Nino என்னும் சமுத்திர மேற்பரப்பு வெப்பமாதல்  என்னும் ஒரு நிலை ஆசிய முழுக்க  அதீத வெப்பநிலைக்கு காரணமாக சொல்ல படுகிறது. இதே, ஆப்ரிக்காவில் கனமழையும் வெள்ளபெருக்கும் தரும் என்றும் கணிக்கபடுகிறது. 




இந்தியாவின் வட மேற்கு மாநிலங்களில் மலை அளவு குறையும் என்றும் அதனால் பஞ்சம், விவசாயம் பாதிக்க படும் என்றும் நிறைய செய்திகள் வாசிக்க நேர்ந்தது. தண்ணீர் வேண்டி பூஜை, பலியிடுதல் போன்றவை நிகழ்வதாகவும் செய்திகள் வெளியாகின்றன.




ஆனால் இவை எல்லாவற்றியும் தூக்கி சாப்பிடும் ஒரு செய்தி, மகாராஷ்டிரா மாநிலத்தில் தண்ணீர் கொண்டு வருவதற்காக பல மனைவிகள் மணக்கும் ஒரு கிராம பழக்க வழக்கத்தை "Water wives", என்று பல செய்தி தளங்களும் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

நேற்றே Reuters தளத்தில் இதனை வாசிக்க நேர்ந்தது. இன்று கிட்டத்தட்ட யாஹூ நியூஸ் , Guardian, NBC news என்று சகலமும் இதனை கொண்டு இந்தியாவின் "polygamy" என்று செய்தி வெளியிட்டு இருக்கின்றன. 





Photos from Danish Siddiqui / Reuters

அனைத்து தளங்களும்  Sakharam Bhagat  என்னும் ஒருவரின் புகைப்படத்தையும் அவரின் மூன்று மனைவிகள் Tuki, Sakhri மற்றும் Bhaagi  ஆகியோரின் படத்தையும் வெளியிட்டு இருந்தார்கள். இவர் வசிக்கும் Denganmal என்னும் ஒரு ஊரில், வீட்டு தேவைக்கு தூரத்தில் இருந்து தண்ணீர்  கொண்டு வர ஆட்கள் தேவை என்பதற்காக, அந்த ஊரில் இருக்கும், விதவைகள், வயதானவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் என்று பலரையும் ஒருவர் திருமணம் செய்து ஒரே வீட்டில் வைத்து கொள்ளுவது என்பது சகஜமாம். இப்படி ஒரே வீட்டில் இருந்தாலும் ஒவ்வொருவரும் ஒரு வேலை என்று செய்து கொள்ளுகிறார்கள். அதில் முக்கியமான வேலை தண்ணீர் கொண்டு வருவது.



Photos from Danish Siddiqui / Reuters


இதை எல்லாம் படிக்கும் போது, தண்ணீருக்காக ஒரு யுத்தம் சீக்கிரம் வந்துவிடும் போல என்று எண்ண தோன்றுகிறது.  சென்னை, மதுரையில் கூட 115 டிகிரி வெப்பம் நிலவுவதாகவும் அனைவரும் சொல்ல கேட்டேன்.  இன்னும் பத்து நாளில் இந்திய பயணம், எப்படி சமாளிக்க போகிறேன்  என்று தெரியவில்லை.



நன்றி 




2 comments:

ப.கந்தசாமி said...

பயப்படவேண்டாம். நீங்கள் வருவதற்குள் மான்சூன் மழை ஆரம்பித்து வெயில் குறைந்து விடும்.

ஆரூர் பாஸ்கர் said...

//தண்ணீருக்காக ஒரு யுத்தம் சீக்கிரம் வந்துவிடும் போல என்று எண்ண தோன்றுகிறது// கவிஞர் வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் நாவல் கதை