பலர் இதனை அனுபவித்து இருப்பார்கள். ஏதாவது ஒரு பாட்டு நம் காதில் கேட்கும் போது உடனே மனசு சந்தோசம் ஆகும், அல்லது உங்கள் நண்பர்கள், உறவினர்கள், காதலன்,காதலி, கணவன், மனைவி ஞாபகம் வரும். அல்லது நீங்கள் அவர்களுடன் கேட்டு இருப்பீர்கள் அந்த நினைவுகள் வரும். அதுவும் நீங்கள் இளவயதில் கேட்ட பாட்டுக்கள் எத்தனை வயதானாலும் இன்னும் மனதில் நிற்கும். மனம் குதூகலமடையும்.
அதே போல இன்னும் சில பாட்டுக்கள் நீங்கள் கேட்டீர்கள் என்றால் எங்கிருந்தோ ஒரு சோகம் வந்து ஒட்டி கொள்ளும். அது பிரிந்தவர்களை/ இறந்தவர்களை ஞாபகப்படுத்தலாம். அல்லது உங்கள் சூழ்நிலைக்கு தகுந்தபடி இருக்கலாம். உதாரணமாக, நீங்கள் வாழ்கையில் தோல்வி மேல் தோல்வி சந்திக்கும் போது, ஒரு சில மனசுக்கு உற்சாகம் கொடுக்கும், தன்னம்பிக்கை கொடுக்கும் பாட்டுக்கள் கேட்போம். அப்பொழுது மனது ஆறுதல் அடையும்.
இன்னும் சிலர் தூங்க, மனம் அமைதியடைய என்று இசை கேட்பார்கள். உதாரணமாக என் ஆபிசில் என் டீம் ரூமில் இப்பொழுதெல்லாம் Spotify மூலம் நிறைய இசை ஒலிபரப்புகிறார்கள். பெரும்பாலும் instrumental என்பதால் நிறைய concentrate செய்ய முடிகிறது. அதில் சில நாட்களாக பண்டிட் ரவி ஷங்கர் அவர்களின் சித்தார் இசை கேட்க முடிகிறது. நல்ல relaxing ஆக இருக்கிறது. அதே போல இன்னும் சில டீம் ரூம்களில் சிலர் ராக் அண்ட் ரோல் மியூசிக் ஒலிபரப்புகிறார்கள். இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு டீமும் Agile எனப்படும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலை முடிக்கும் பரபரப்பான டென்ஷன் ஆன சூழலில் வேலை பார்ப்பதால் இது போன்று relaxing மியூசிக் கேட்கிறார்கள்.
இப்படி இசை நம் வாழ்கையில் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது. இசைக்கும் உடல் நலத்திற்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா என்று தேடி பார்த்ததில் சிக்கியவை இங்கே.
சில தளங்கள் இசையால் ஏற்படும் மன மாற்றம் குறித்து விவரிக்கிறார்கள். இவர்களின் கூற்றுப்படி
positive மனநிலையில் மட்டும் அல்ல, நெகடிவ் மன நிலையான, break up, divorce, death போன்ற நேரங்களில் மக்கள் சோக பாடல்களையும். கோபம் ஆத்திரம் வரும் நேரங்களில் heavy metal, ராக் அண்ட் ரோல் போன்ற இசைகளையும். அமைதியான, ஆனந்தமான நேரங்களில் மென்மையான Jazz அல்லது கிளாசிகல் போன்ற இசைகளையும் உலகம் முழுக்க கேட்கிறார்கள்.
இப்பொழுது மியூசிக் தெரபி என்பது பிரபலமாகி கொண்டு வருகிறது. நோயாளிகளின் மன நிலை எப்படி மாற்றுவது அல்லது எப்படி அவர்களை மகிழ்ச்சி கொள்ள செய்வது அதன் மூலம் உடல் நிலையை முன்னேற்றுவது அல்லது அவர்களின் லட்சியங்களை அடைய வைப்பது என்று செய்கிறார்கள்.
நியூயார்கில் இருக்கும் Eleven-Eleven Wellness சென்டர் நடத்தும் Integrative அண்ட் Functional மருத்துவர் Dr.Frank Lipman அவர்களின் கருத்து படி "ஒவ்வொரு நாளும் நாம் மனதிற்கு மியூசிக் டைம் ஒவுட்கொடுத்தால், நம் இதயத்துடிப்பு கட்டுக்குள் வந்து, மூளை சமநிலை அடைந்து சுவாசம் சீராகும்" என்று கூறுகிறார்.
நம்மூரில் நிறைய meditation சென்ட்டர்களில் எல்லாம் "ஓம்" மந்திரம் chant செய்ய சொல்லுவார்கள். இப்படி செய்வது Vagus Nerve Stimulation(1), என்னும் நரம்பு மண்டலத்தை தூண்டி மன முறிவுக்கு அல்லது மன நலம் பிறழ்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
இவை எல்லாம் positive side of listening to music என்றால். இதன் அடுத்த பக்கமும் இருக்கிறது. அது இப்போது இருக்கும் இளைய தலைமுறை millennials மக்களிடம் நான் கண்டது. எந்த பையன் அல்லது பெண்ணிடமும் காதில் எப்பொழுதும் ஒரு ear போன் இருக்கும். அதில் ஏதாவது ஒரு மியூசிக் அலறி கொண்டு இருக்கும். எல்லா நேரங்களிலும் மியூசிக் கேட்பதால் என்ன என்ன விளைவுகள் வரும், மூளையை எப்படி பாதிக்கும் என்று ஆராய்ச்சி செய்து இருகிறார்கள் (2). இசைக்கு அடிமையான இவர்கள் emotional ஆக இருக்கிறார்கள் என்று கணித்து இருகிறார்கள். எப்பொழுதும் இசை கேட்பதால் காது கேட்காமல் போகும் அளவு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கணித்து இருக்கிறார்கள்.
என்னை பொருத்தவரை எந்த இசையாயினும் சரி, அது இந்தியன், வெஸ்டேர்ன் எதுவாயினும், அந்த சூழலுக்கு ஏற்றார்போல நம் மனதிற்கு இதம் தர வேண்டும். அது சோகமான சூழலாயினும் சந்தோசமான சூழலாயினும் சரி. அதுவே மனதிற்கு நல்ல மருந்தாகும், ஆனால் எதுவும் ஓவர்டோஸ் ஆக கூடாது. எதுவாயினும் ஒரு கட்டுபாட்டுக்குள் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமானால் அமுதும் நஞ்சு.
நன்றி.
References
(1) Neurohemodynamic correlates of ‘OM’ chanting: A pilot functional magnetic resonance imaging study: Int J Yoga. 2011 Jan-Jun; 4(1): 3–6.
(2) http://archpedi.jamanetwork.com/article.aspx?articleid=379041
டிஸ்கி
இந்தியா பயணத்திற்கு முன்பு கடைசி பதிவு. திரும்பியவுடன் நேரம் அமைந்தால் மீண்டும் பதிவெழுத முயற்சிக்கிறேன்.
3 comments:
மொஸார்டின் இசை மூளைக்கு ரொம்ப நல்லது என பல ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. இதற்கு எதிராக கவுண்டமணி 'பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டால் லிவருக்கு நல்லது' என்று சொன்னதற்கும் இதற்கும் வேறுபாடு இல்லை, ரெண்டுமே கப்ஸா என்கிறார்கள் இன்னொரு குரூப் ஆராய்ச்சியாளர்கள். சமீபத்தில் ரோம் நகரிலிருக்கும் பல்கலைகழக விஞ்ஞானிகளும் மொஸார்டை கேளுங்கள், மூளையின் செயல்பாட்டிற்கு நல்லது என்கிறார்கள். பீதோவனின் ஸிம்பனி கேட்பது அப்படி இல்லையாம். மொஸார்டையேதான் கேட்கணுமாம்! காசா பணமா, இணையத்தில் ஓசியில் கிடைக்கிறது கேட்டுத்தான் வைப்போமே!
இசை நல்லதுதான். ஆனால் சில வகை இசை மனதை வேறு நிலைக்கு இட்டுச் செல்லும் வலிமை கொண்டது. death மெடல் என்றொரு வகை உள்ளது. உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதை தொடர்ச்சியாகக் கேட்டால் எதையாவது எடுத்துகொண்டு யாரையாவது அடித்துத் துவம்சம் செய்யலாம் என்று தோன்றும். சில பாடல்களைக் கேட்டு சிலர் தற்கொலை செய்துகொண்டதும் உண்டு.
Music is nothing but ordered, harmonised Noise :)
Nice , உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது. ஆங்கில கலப்பை அதிகம் தூவி எழுதாமல் கொஞ்சம் குறைத்து இருக்கலாம் :) . லியோ டால்ஸ்டாய் க்ரெய்சர் சனாட்டா என்ற ஒரு இசையை மையமாக அதையே பெயராக வைத்து ஒரு கொலைக் கதை சொல்லியிருக்கிறார், இசையால் மனதை மாற்ற முடியும் ,உடல் இயக்கங்களை மாற்ற முடியும். இதெல்லாம் கூட பரவாயில்லை அமிர்தவர்ஷினி ராகம் பாடினால் மழை வரும், சங்கராபரணம் ராகம் பாடினால் பணம் சேரும் என்றெல்லாம் கூட சொல்கிறார்கள்., இதெல்லாம் உண்மையாகக் கூட இருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.
Post a Comment