Wednesday, June 3, 2015

நாம் செய்யும் முட்டாள் தனமான செய்கைகள்

நம் வாழ்கையில் பலருக்கு இது நடந்து இருக்கும். ஏதோ ஒரு செய்கை செய்து இருப்போம், பயங்கர முட்டாள் தனமான அல்லது வெறுக்கத்தக்க செய்கையாக இருக்கும். அதனை நினைத்து பார்த்தாலே, மனது கொதிக்கும்.. ஏன் இப்படி ஒரு செய்கை செய்தேன், என்ன தேவை எனக்கு வந்தது.. என்று நம் மேல் கோவம் கோவமாக வரும். ஆனால் அந்த காரியம் செய்த போது தப்பாகவே தெரிந்து இருக்காது. எல்லாமே சரியாக இருப்பது போல தோன்றி இருக்கும்.பின்னர் அதனை பற்றி நினைப்பு வரும் போது எல்லாம் கோவம் வரும். இது போன்ற முட்டாள் தனமான செய்கைகள் செய்வதை தடுப்பது என்பது இயலாது. ஆனால் திரும்ப எப்படி செய்யாமல் தவிர்ப்பது என்பது பற்றி நான் வாசித்த Dale Carnegie 's , "How to stop worrying and start living"  புத்தகத்தில் இருந்து சில வரிகள் இங்கே.

என்னிடம் எப்பொழுதும் ஒரு பிரைவேட் பைல் காபினெட் உண்டு. அதில் "FTD" என்று ஒரு folder இருக்கும். அது "Fool Things I Have Done". பல நேரங்களில் வேலை சம்பந்தமான நான் எடுத்த தப்பான முடிவுகள் அல்லது மீடிங்க்கில் நான் பேசிய/சொதப்பிய விஷயங்கள் அல்லது முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் எடுக்காமல் விட்டவை என்று பல விஷயங்கள் அதில் இருக்கும்.அ தில் நான் செய்த முட்டாள் தனமான காரியங்கள் இருக்கும். அதில் என்னை திட்டி எழுதிய என்னை பற்றிய விமர்சனங்கள் இருக்கும்.

என்னுடைய பெர்சனல் FTD  போல்டர்  ம் உண்டு , அதில் பெர்சனல் தவறுகளும், முட்டாள் தனமான காரியங்களும்  சில நேரங்களில் எழுத பட்டு இருக்கும் என்றாலும் இது பிரைவேட் போல்டர் என்பதால் யாருக்கும் பார்க்க உரிமை இல்லை.

ஒவ்வொரு நாளும் அல்லது ஒரு வாரத்தில் ஒரு மணி நேரமும் அந்த நாள் முழுதும் அல்லது அந்த வாரம் முழுதும் நான் சொதப்பிய/செய்யாமல் விட்ட/முட்டாள் தனமான விஷயங்கள் , அந்த விஷயங்கள் பற்றிய என்னுடைய கமெண்ட்ஸ் எழுதப்பட்டு இருக்கும்.

இப்படி எழுதி விடுவதால் ஒரு advantage, மனதில் இருக்கும் நம்மை பற்றிய விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் நம்மை நாமே திட்டி எழுதி வைத்து விடுவதால் மன பாரம் குறையும், அடுத்து அதனை திரும்பி பார்க்கும் போது திரும்ப அதே தவறை செய்யாமல் தடுக்கும்.

ரிலாக்ஸ் ஆன சமயத்தில் FTD இல் இருந்து மாதத்திற்கு ஒரு முறை எடுத்து படித்தால், எவ்வளவு கஷ்டமான காரியத்தை எப்படி சமாளித்து இருக்கிறோம், அல்லது எப்படி வெளி வந்து இருக்கிறோம் என்று தோன்றும். நம் மீதே ஒரு நம்பிக்கை தோன்றும்.

பெரும்பாலான நம் குணமே, நாம் செய்த தவறுகளுக்கும் பிறிதொருவர் மீது பழி போடுவது. எல்லாத்துக்கும் அவர்/அவள் தான் காரணம் என்று கை காட்டி விடுவது. இது, நம் மனதை திசை திருப்பும் / ஏமாற்றும் செயல் தானே தவிர உண்மை அல்ல. எப்பொழுது, உங்களை நீங்களே திட்ட/விமர்சிக்க முடிகிறதோ, விமர்சனங்களை ஏற்க முடிகிறதோ அப்பொழுதே நீங்கள் எந்த எதிர்ப்பையும்/விமர்சனத்தையும் ஏற்க தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம். அது வேலை பிரச்சனையாக இருந்தாலும் சரி, பர்சனல் விசயமாக இருந்தாலும் சரி. எப்பொழுது உங்களை நீங்களே சந்திக்க தயாராக இருகிரீர்களோ அப்பொழுதே அனைவரையும் சந்திக்க முடியும், நிமிர்ந்து நிற்க முடியும். உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருங்கள், உங்கள் மனசாட்சி சொல்லுவதை கேளுங்கள்.

தவறு செய்யாத மனிதன் இல்லவே இல்லை. ஒரு முறை கீழே விழுந்து அடி பட்டால் தான், அடுத்து கீழே விழுந்தால் அடி படும் என்று மூளைக்கு எட்டி, அடி எடுத்து வைக்கும் பொது கவனமாக வைக்க தூண்டும்.  புதிதாத தொழில் தொடங்குபவர்களுக்கும் இதை தான் அறிவுரையாக சொல்லுகிறார்கள். உண்மையில் நிறைய தடவை தவறு செய்தவன் கீழே விழுந்தவனால் தான் நிலையாக நிற்க முடியும்.நன்றி.3 comments:

பழனி. கந்தசாமி said...

Good Practice.

வருண் said...

I think the blunders I did stay in my mind FOR A LONG TIME! I certainly do not need to record them and put it in a folder as I am not going to forget them and it is stored up in my mind. I must say my memory is pretty good esp., when storing my failures/mistakes rather than storing my successes or achievements (if there are any such)! :-)

Anonymous said...

யார் கண்ணிலும் படாமல் வேறு இருக்க வேண்டும். பட்டு விட்டால், அதையும் FTD சேர்க்க வேண்டும். அந்த கால டைரி குறிப்பு இதை தான் செய்தது என்று நினைக்கிறேன். மற்றவர் டைரியை (கணவரோ/மனைவியோ) படிப்பது அநாகரிகம் என்று கருதிய காலம். அதனால் தைரியமாக எழுதினார்கள். இன்றைய மனநிலையில்/தகவல் அடிப்படையில் எழுதுவதை விட, எழுதியதைப் படித்து கருத்து சொல்வது தான் அதிகமாக இருக்கிறது. இது என் அனுபவத்தை வைத்து சொல்லுகிறேன். படிச்சுட்டு வேற பக்கம் போக முடியல. கருத்து சொல்லலைனா கை நடுங்குது இப்பெல்லாம்.