FB, ட்விட்டர், வாட்ஸ்ஆப் காலத்தில் இப்படி ஒரு கேள்வி முட்டாள் தனமாக இருக்கலாம். ஆனால் உண்மையாக உங்களை நீங்களே கேட்டு பாருங்கள். எத்தனை உண்மை நண்பர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள், அவர்களை நம்பி எதனையும் சொல்ல முடியும், நம்மை பற்றி நன்கு அறிந்தவர்கள் அவர்கள், நமக்கு அறிவுரைகள், திட்டுகள் சொல்லும் அளவு, எத்தனை பேர் இருக்கிறார்கள் உங்களுக்கு. யோசித்து வையுங்கள்.
நட்புகள் என்பது ஒவ்வொரு வயதிலும், கால கட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். சிறு வயதில் நம்முடன் விளையாடிய நட்புகள், பள்ளி நட்புகள் எல்லாம் பள்ளி பருவம் வரை நம்முடன் இருந்து இருக்கலாம். பின்னர் வேறு வேறு திசையில் நிறைய பேர் பிரிந்து சென்று இருப்பார்கள். கல்லூரி நட்புகள் எல்லாம் மீண்டும் FB, வாட்ஸ் ஆப் மூலம் பலர் திரும்ப கிடைத்து இருக்கலாம். வேலை பார்க்கும் இடத்தில் கிடைக்கும் நட்புகள்..மீட்டிங், பார்ட்டி, கெட் டோகேதேர் என்ற அளவில் மட்டுமே பெரும்பாலும் இருக்கும். வெளி நாடுகளில் வசிக்கும் போது பல நேரங்களில் பக்கத்து வீட்டு எதிர் வீட்டு மக்களுடன் பர்த்டே பார்ட்டி, கெட் டோகேதேர் மட்டுமே என்ற அளவில் இருக்கும். இப்படி எல்லாம் இருக்கும் நட்புகள் எல்லாம் பெஸ்ட் ப்ரெண்ட் என்று சொல்ல முடியுமா. இப்படி இருக்கும் மக்களிடம் எவ்வளவு தூரம் நீங்கள் மனதை திறந்து பேச முடியும். நம்ப முடியும்.
சிறு வயது நட்புகள், பள்ளி, கல்லூரி நட்புகளுடன் நீங்கள் நெருக்கமாக இருந்து இருக்கலாம், அந்த நேரங்களில், மனம் விட்டு பேசி இருக்கலாம். ஆனால், அதே நட்புகளுடன் இப்போது அதே நெருக்கம் காட்ட முடியுமா. நம்ப முடியுமா?. வேறு வேறு திசைகள் சென்று, வேறு வேறு preference , வாழ்க்கை முறை என்று வளர்ந்து விட்ட நாம் திரும்ப நம் பழைய நண்பர்களை சந்திக்கும் பொது, பழைய நினவிகள் கிளரும், மனதுக்கு சந்தோசம் தரும். அந்த ஒரு சில மணி நேர சந்தோசம் மனதுக்கு இதம் தரும். அவ்வளவு தான். ஆனால், அதே நட்புகளுடன், உங்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சனையை பேச முடியுமா, அறிவுரை கேட்க முடியுமா?. எதனை பேர் அதனை செவி சேர்த்து கேட்பார்கள், தேவை பட்டால் உதவுவார்கள்?
இப்படி, பல கேள்விகள்.சமீபத்தில் நான் வாசித்த எத்தனை நண்பர்கள் எனக்கு தேவை என்னும் டைம் பத்திரிக்கை கட்டுரை என்னை இப்படி நிறைய கேள்விகள் கேட்க வைத்தது.
நிறைய கேள்விகளுக்கு பதில் என்னவென்றால், நிறைய மக்களுக்கு உண்மையில் நிறைய நண்பர்கள் இல்லை என்பதே?, நீங்கள் உங்கள் FB யில் ஆயிரகணக்கான நண்பர்கள் வைத்து இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இன்னும் நம்புவது தன்னுடைய குடும்ப மக்களை மட்டுமே. ஏனெனில் குடும்ப மக்கள் பெரும்பாலும் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள். உங்களை நட்டாற்றில் வீசி எறிந்து விட்டு தன் சுயநலம் மட்டுமே முக்கியம் என்று செல்ல மாட்டார்கள் என்று பலரும் நம்புவதால். இது உலகம் இருக்கும் ஒரு நிலை போல. ஆனால் நம்பிக்கையான நண்பர்கள் இருப்பவர்களின் உடல் நலமும், மன நலமும் நன்றாக இருக்கும் என்று அந்த கட்டுரை மேலும் தெரிவிக்கிறது.
என்னை பொருத்தவரை, நெருக்கமான நிறைய நண்பர்கள் உங்களுக்கு இருக்க வேண்டியதில்லை. ஒரு சிலர் இருந்தாலே போதும். அவர்களிடம் நீங்கள் தினமும் பேச வேண்டியது கூட இல்லை. ஆனாலும் எப்போது நீங்கள் பேசினாலும் அவர்கள் உங்களிடம் ஏன் என்னிடம் இதனை நாள் பேசவில்லை என்று கேட்க மாட்டார்கள், மாறாக எதோ இருக்கிறது என்று காது கொடுத்து கேட்பார்கள். உங்களை உற்சாக படுத்துவார்கள். நம்பிக்கை கொடுப்பார்கள்.
என் சொந்த அனுபவத்தில், நிறைய false பிரெண்ட்ஸ் பார்த்து இருக்கிறேன். நன்றாக உங்களிடம் நடிப்பார்கள் அவர்கள், எதோ ஒன்றை எதிர்பார்த்தே அவர்களின் நட்பு இருக்கும் உங்களிடம். இன்னும் சிலரை நம்பி இருக்கிறேன், நன்றாக என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். ஆயினும், இன்றும் எந்த கஷ்டம் என்றாலும் நான் முதலில் டயல் செய்வது இரண்டு நம்பர்கள் மட்டுமே. பல மாதங்கள் நான் அவர்களிடம் பேசி இருக்க மாட்டேன், அவர்களும் என்னிடம் பேசி இருக்க மாட்டார்கள், ஆனாலும் டயல் செய்தவுடன்..என்னமா விஷயம் என்று முதலில் கேட்பார்கள், மனதில் இருப்பதை கொட்டி விடுவேன், பின்னர் மன பாரம் இல்லாதது போல ஒரு உணர்வு இருக்கும். அதே போன்ற ஒன்றை அவர்களும் செய்வார்கள். எந்த கஷ்டம் என்றாலும் முதலில் அவர்கள் கேட்பது, "கையில் பணம் இருக்கிறதா" என்று தான். ஊர் விட்டு வெளி நாடுகளில் வந்து சொந்த பந்தங்கள்இல்லாமல் வாழும் இந்த சூழலில் இப்படி கேட்பதற்கு ஒரு சிலர் இருக்கிறார்களே என்று நினைக்கும் போதே மனது சந்தோசமாக இருக்கும். இப்படி பட்ட ஓரிரண்டு நட்புகள் போதும். நூற்றுகணக்கான false பிரெண்ட்ஸ் இருப்பதை விட ஓரிரண்டு உங்களை தெரிந்த, அறிந்த உண்மை நட்புகள் போதும். அதுவே சந்தோசம்.
டிஸ்கி
இது என் சொந்த கருத்து மட்டுமே. நிறைய நண்பர்கள் யாரும் வைத்து கொள்ள கூடாது என்று நான் இங்கு சொல்ல வரவில்லை. அப்படி நிறைய நம்பிக்கை நண்பர்கள் அமைந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
நன்றி.

3 comments:
நீங்கள் சொல்வது உண்மை. பலனை எதிர்பார்த்து நட்பு பாராட்டுபவர்களிடம் ஏமாறாமல் இருப்பதே புத்திசாலித்தனம். ஓரிரண்டு நண்பர்களே போதும்.
I believe I have already written about "friendship" in my blog. You did agree with my views on that. These days "friends" means something different. I must say the value of friendship goes down because of too much internet interactions! In real life also it is very hard to find "good friends" these days. I have been debating myself on this (Are there any good friends really exist?") seriously these days. :)
ஆம்...ஒன்றிடண்டு போர்கள் இருந்தாலே போதும் தான்...அப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக எல்லோருக்கும் இருக்க வேண்டும்...அதுவே மனபலம். நன்றி சகோ.
Post a Comment