Thursday, June 4, 2015

Kardashian குடும்பம் சொல்லி தரும் மார்க்கெட்டிங் தந்திரங்கள்

நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவர் என்றால் இதனை பார்த்து சந்தித்து இருப்பீர்கள். எந்த கடைக்கு, மாலுக்கு சென்று செக் அவுட் கௌண்டர் சென்று நின்றாலும் அந்து தொங்கும் magazine, புத்தகங்கள் எல்லாவற்றிலும் Kardashian குடும்பத்தில் ஏதாவது ஒருவரை பற்றி ஏதாவது ஒரு செய்தி/கிசு கிசு என்று இருக்கும்.  கம்ப்யூட்டர் திறந்து எந்த செய்தி என்று வாசித்தாலும், அல்லது யாகூ, கூகிள் போன்ற பல தளங்களில் செய்தி வாசித்தாலோ உடனே அந்த குடும்ப செய்தி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கும். இது அமெரிக்க பத்திரிக்கைகள் என்று மட்டும் இல்லை. இந்திய ஊடகங்களும் இவர்களை பற்றிய செய்திகளை வெளியிடுகிறார்கள். அமெரிக்காவிலேயே நிறைய பேருக்கு இந்த குடும்பம் பற்றி செய்திகள் எங்கும் நிறைந்து இருப்பது கடுப்படிகிறது, "Kartrashian" என்று ஒரு சொல் கூட இப்போது பிரயோகத்தில் உண்டு. தேடி பார்த்தீர்கள் என்றால் "விஷயம் ஒன்றும் இல்லாமல் famous ஆக" இருப்பவர்களை குறிப்பதற்கு என்று இந்த பதம் இப்போது உபயோகிக்க படுகிறது.

யார் இந்த கர்டஷியன் குடும்பம். அப்படி என்ன talent இருக்கிறது இவர்களிடம்.ஏன் இப்படி எங்கும் நீக்கமற இவர்கள் நிறைந்து இருகிறார்கள், உண்மை சொன்னால் இவர்கள் எல்லாரும் "Famous for being famous"..என்று யோசித்தால், இவர்களின் ஸெல்ப் மார்க்கெட்டிங் தந்திரம், குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் ப்ரொமோட் செய்ய இவர்களின் அம்மா/மேனேஜர் க்ரிஷ் எடுத்து கொண்ட தந்திரங்கள் விளங்கும்.

முதலில் இந்த குடும்பம் வெளியில் தெரிய ஆரம்பித்தது, கிம் கர்டஷியனின் ஆபாச வீடியோ மூலம் தான். பின்னர், "Keeping up with Kardashians" என்னும் ஒரு ரியாலிட்டி ஷோ மூலம்  அவரின் அக்கா, தங்கைகள் என்று ஒவ்வொருவராக அறிமுகபடுத்த பட்டு, பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு என்று ஒரு ரியாலிட்டி ஷோ வரும் அளவு வளர்ந்து இருக்கிறார்கள்.

இந்த குடும்பம் சோசியல் மீடியாவை எப்படி உபயோகிப்பது, அதன் மூலம் எப்படி followers கொண்டு வருவது, பிசினஸ் பொருள்களை ப்ரொமோட் செய்வது என்று நன்கு அறிந்தவர்கள்.

கிம், மற்றும் அவரின் அக்கா தங்கைகள் அனைவரும் 36 லட்சம் ட்விட்டர் followers வைத்து இருக்கிறார்கள். தினமும் தன்னை பற்றி ஒரு படம் போடுவது, தன் ஆடை பற்றி, சென்ட் பற்றி, diet மாத்திரை, excercise பற்றி என்று ஏதாவது இருக்கும். இப்படி அவர்கள் சொல்லும் ஒவ்வொரு product பற்றியும் ஒரு ட்வீட் எழுத இவர்களுக்கு பல லட்சம் சம்பளம்.

இன்னொரு தந்திரம், இவர்கள் டார்கெட் செய்யும் ஆடியன்ஸ் எல்லா வயது பெண்களும்.
முக்கியமாக, கிம் டார்கெட் செய்வது, ஹை எண்டு பெண்களை, நிறைய பேஷன் விரும்பும் பெண்களை. அவரின் அக்கா டார்கெட் செய்வது, குழந்தை பெற்ற பெண்களை, அல்லது "Moms with kids", குழந்தைகளோடு இவர்களின் பிரச்சனைகள், சமாளிப்பது, அதோடு எப்படி career success அடைவது என்பது போன்ற ஆடியன்ஸ். இவரின் தங்கை டார்கெட் செய்வது, 20 களில் இருக்கும் பெண்கள் முக்கியமாக இவரை போலவே எடை அதிகமான பெண்கள். இவர் எடை குறைக்க செய்யும் செயல்கள் அதன் முன், பின் விளைவுகள் என்று எல்லாமே சோசியல்/ரியாலிட்டி  மீடியாவில் கவர் செய்ய படுகிறது.
அடுத்து கடைசி தங்கைகள் இருவரும் டீன் ஏஜ் பெண்கள் என்பதால் இவர்கள் டார்கெட் எல்லாமே டீன் ஏஜ் பெண்கள். இவர்கள் போடும் உடை, நைல் பாலிஷ், மேக் அப், சூ, hand bag, லிப் ஸ்டிக், மஸ்காரா...என்று அனைத்தும் பற்றி சோசியல் மீடியாவில் தங்கள் படங்களோடு  பகிர்கிறார்கள்.  இவரின் தம்பி டார்கெட் செய்வது, 20-30 வயதில் இருக்கும் ஆண்களை. இப்போது இவர்களின் தந்தை, transgender என்று ஆணிலிருந்து பெண்ணாகி விட்டார், அதனால் திருநங்கைகளையும் இந்த குடும்பம் விட்டு வைக்க போவதில்லை.

 இவர்கள் ஒவ்வொரு productம் endorse  செய்ய சொல்லி பல கம்பனிகள் க்யூவில் இருக்கிறார்கள்.  இப்படி பகிர்வதற்கு மட்டுமே இவர்கள் சம்பாதிக்கும் பணம் தலை சுற்ற வைக்கும்.

அடுத்து, இவர்கள் தாங்களாகவே சில productகளை தயார் செய்து சோசியல் மீடியா மூலம் ப்ரொமோட் செய்கிறார்கள். அதிலும் தந்திரமாக, முதல் நாள் ட்விட்டர், இரண்டாம் நாள் FB, மூன்றாம் நாள் Instagram ....என்று ஏதாவது ஒன்றில் ஒரு நாள். அடுத்து இவர்கள் போட்டி அறிவிகிறார்கள். இந்த பொருள்களை பற்றி உங்கள் கருத்து, புகை படம்..போடுங்கள் சிறந்த படத்திற்கு பரிசு..என்று அதிலும் இவர்கள் செய்யும் மார்க்கெட்டிங் அசத்தும் டெக்னிக்.

ஒரு படத்தில் சொல்வார்கள், "பிரபலம் நாலே ப்ரோப்ளேம் தான்" என்று.. ஆனால் கர்டஷியன் குடும்பத்தை பொருத்தவரை, பிரபலம் தான் இவர்களின் பலம், அதுவே இவர்களின் வாழ்க்கை, சம்பாத்தியம் என்று கோலோச்சுகிறார்கள்.  இவர்கள் அறிவில்லாதவர்கள், திறமை இல்லாதவர்கள் என்று அனைவரும் சொல்லி விட்டு போகட்டும், ஆனால் என்னை பொருத்தவரை, மிக சிறந்த பிசினெஸ் women. எப்படி, மக்கள், சோசியல் மீடியா உபயோகித்து சம்பாதிப்பது என்று கை தேர்ந்தவர்கள்.இந்த அறிவு இல்லை என்றால் "15 min fame" மக்கள் பலர் போல இந்நேரம் காணாமல் போய் இருப்பார்கள். ஆனால் கிட்டத்தட்ட உலகம் முழுக்க இவர்களை பற்றி தெரிந்து இருக்கும் அளவு இவர்களின் மார்க்கெட்டிங் தந்திரம் இருக்கிறது.


நன்றி.

8 comments:

ப.கந்தசாமி said...

இந்த லிங்க்கைப் பார்த்திருக்கிறீர்களா?
http://drpkandaswamyphd.blogspot.in/2015/06/blog-post.html

எனக்கு இன்று மெயிலில் வந்தது.

Anonymous said...

பிழைக்க தெரிந்த குடும்பங்கள் நம் ஊரிலும் இருக்கிறது. மொழியை சார்ந்த மாநிலம் என்பதால் Business Statistics-ன் கவனத்திற்கு வராமல் இருக்கலாம்.

ஆரூர் பாஸ்கர் said...

Hope people fell in their marketing gimmicks only, nothing else.

வருண் said...

****இப்போது இவர்களின் தந்தை, transgender என்று ஆணிலிருந்து பெண்ணாகி விட்டார், அதனால் திருநங்கைகளையும் இந்த குடும்பம் விட்டு வைக்க போவதில்லை.****

நீங்க என்ன சொல்லுங்க, காசுக்காக ஒருத்தரால தன்னுடைய செக்ஸையே மாத்திக்க முடியும்னா..He/She is somewhat great, imho. It is impossible for anybody to do such even if you write them a check billions of dollars. I think there is something more than money which is driving this family to success..I don't know what it is.

முகுந்த்; Amma said...

@ varun

I read the following, this morning.

http://cnsnews.com/commentary/l-brent-bozell-iii/bowing-big-lie-bruce-jenner

Although it might be difficult for some one to change sexual orientation because of money, I am skeptical about this family, because all they care about is fame..in any form. Remember Kim's 72 days wedding just for the sake of getting fame and headlines.

But if he became she because of true intentions..I welcome his boldness. BEcause not many people can have that guts.

முகுந்த்; Amma said...

@பழனி. கந்தசாமி said...
இந்த லிங்க்கைப் பார்த்திருக்கிறீர்களா?
http://drpkandaswamyphd.blogspot.in/2015/06/blog-post.html


No Ayya, I haven't read this link thanks for sharing. Seems like most of the items mentioned in this is real.

முகுந்த்; Amma said...

@manichiral said...
பிழைக்க தெரிந்த குடும்பங்கள் நம் ஊரிலும் இருக்கிறது. மொழியை சார்ந்த மாநிலம் என்பதால் Business Statistics-ன் கவனத்திற்கு வராமல் இருக்கலாம்.


Could be true.. thanks for the comment

முகுந்த்; Amma said...

@ஆரூர் பாஸ்கர் said...
Hope people fell in their marketing gimmicks only, nothing else.

Yep...true
thanks for the comment