Thursday, December 31, 2015

சென்று வருக 2015, வருக வருக 2016!

2015 வருடம் ஓடி விட்டது. திரும்பி பார்க்கும் போது, நிறைய பாசிடிவ் மற்றும் சில நெகடிவ் விஷயங்கள்.
நிறைய புத்தகங்கள் படிக்க முடியவில்லை. ஆனால் நிறைய வாசித்து இருக்கிறேன்.
ஆனாலும் இப்பொழுதெல்லாம் நிறைய podcast அல்லது புக் ஐ youtube மூலம் நிறைய கேட்க நேர்ந்தது.

சமீபத்தில் கேட்ட podcast ராபின் ஷர்மா அவர்களின் "Extradinary leadership" ஒலி வடிவில் கேட்க நேர்ந்தது. அருமையான விளக்கம். சாம்பிள் இங்கே உங்களுக்காக.




என்னுடைய மற்ற பொழுது போக்குகள் எதனையும் இந்த வருடம் செய்ய இயலவில்லை. ஒரே ஒரு முறை வாட்டர் கலர் படம் வரைந்ததை தவிர. நான் வரைந்த துகான் பறவை இங்கே. மோசமாக வரவில்லை என்பது என் எண்ணம்.


நிறைய பதிவுகள் எழுத நேர்ந்தது. அதற்காகவே நிறைய வாசிக்க நேர்ந்தது.

ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியிடவும், ஒரு கருத்தரங்கில் பேசவும் வாய்ப்பு கிடைத்தது. முதுகில் குத்திய என்னுடைய மேன்டோர் ம் எனக்கு நிறைய பாடங்கள் கற்று கொடுத்து சென்று இருக்கிறார்.
புது வேலை அடுத்த வாரம் முதல் துவங்குகிறது. புது வருடம் புது நம்பிக்கை புது சவால்கள் என்று இப்பொழுதே வரிசை கட்டி நிற்கின்றன. இருப்பினும் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

இந்த வருடம் முழுதும் பதிவுகளில் என்னுடன் பயணித்த தட்டிகொடுத்த, சில சமயங்களில் குட்டிய அனைவருக்கும் நன்றிகள். உங்களின் வாசிப்புகளும் கருத்துகளும் மட்டுமே எங்களை போன்ற எழுதுபவர்களுக்கு உற்சாகம் தருபவை. என்னால் பல நேரங்களில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுத நேரம் இருப்பதில்லை என்றாலும் அனைத்து பின்னூட்டங்களையும் வெளியிடுவதற்கு முன்பு படித்து, உணர்ந்து சில சமயங்களில்  சம்பந்தமானவற்றை மட்டுமே வெளியிட்டு இருக்கிறேன்.

படித்த, உற்சாகபடுத்திய என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி. உங்களின் வாசிப்பும் உற்சாகமுமே என்னை இன்னும் பதிவெழுத வைக்கிறது. புது வருடத்தில் முடிந்தவரை வார இறுதி நாட்களில் எழுத முயற்சிக்கிறேன்.

அனைவருக்கும் புத்தாண்டு 2016 நல்வாழ்த்துக்கள். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க இந்த வருடத்தில் கடவுள்/இயற்கை அருள் புரியட்டும்.

நன்றி.


Sunday, December 27, 2015

மர்லின் மன்றோ மற்றும் திருமணதிற்கு வெளியே தொடர்புகள்!

நிறைய நாட்களாகவே இதனை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தது உண்டு. ஆனால் சென்சிடிவ்  விஷயம், சரியாக எடுத்து கொள்ள படுமா இல்லையா என்ற குழப்பத்தில் எதுக்கு வம்பு என்று விட்டு விட்டேன். ஆனால் தற்செயலாக மேடம் துச்சாத் ம்யூசியதத்தில் மர்லின் மன்றோ மெழுகு சிலை பார்க்க நேர்ந்தது. அவரின் கடைசி கால வாழ்க்கை பற்றி கொஞ்சம் வாசித்து இருந்ததால் மறுபடியும் எழுத நினைத்த்ததை செய்து விடலாம் என்ற எண்ணத்தில் உண்டானது இது. மற்றபடி யாரையும் குறிப்பிடவில்லை இங்கு.

மர்லின் மன்றோ, அழகு பதுமை, செக்ஸ் சிம்பல் என்று பல பல பெயர்கள்.. தனது 36 வயதில் இறந்து விட்டார், அது கொலை இல்லை தற்கொலை இல்லை மாத்திரை மாற்றி போட்டதால் நடந்த விபத்து... என்று எண்ணற்ற கதைகள் கிளைகதைகள்..இவர் தான் குற்றவாளி அவர் தான் குற்றவாளி என்று நிறைய தியரிகள்.இப்படி நிறைய. நான் வாசித்தவரை தொடர்ந்து ஏற்பட்ட மணமுறிவு மற்றும் காதல் தோல்வி மற்றும் வயதானதால் பட வாய்ப்பு குறைந்தது என்று பலவும் அவரின் சாவுக்கு காரணம். இதையெல்லாம் விட எங்கே மறுபடியும் தனிமை ஆகி விடுவோமோ நமகென்று யாரும் இல்லாமல் போய்விடுமோ என்ற ஒரு எண்ணமுமே தான் ஓவர்டோஸ் மருந்து எடுத்து கொண்டதற்கும் பைத்தியம் போலே நடந்து கொண்டதற்கும் காரணம்..

காதல் அதுவும் 30 வயதிற்கு மேலே வரும் காதல், அதுவும் ப்ரெசிடெண்ட் உடன் வந்த காதல் அதன் பின் விளைவுகள்.என்று அடுக்கடுக்கான பிரச்சனைகள் மர்லின் மன்றோவுக்கு.

சொல்ல போனால் நிறைய 30-40 வயதில் இருக்கும் நிறைய பெண்கள் பலருக்கும் இது போன்ற ஒன்று வர ஆரம்பிக்கும். அது பெரிய ஸ்டார் ஆக இருந்தாலும் சரி இல்லை சாதாரண பெண் ஆக இருந்தாலும் சரி.  30 வயதை கடந்த பின்பு ஒரு தனிமை, ஹார்மோன் பிரச்சனைகள் ஒரு காரணமாக இருந்தாலும் முக்கியமாக நாம் முக்கியமானவர்களாக கருதும் சிலர் நம்மை துச்சமாக மதிப்பதாக ஏற்படும் ஒரு எண்ணமும் இதற்க்கு காரணம். மர்லின் மன்றா விசயத்தில் மட்டும் அல்ல, சாதாரண குடும்ப வாழ்க்கையிலும் எப்பொழுது தன்னுடைய கணவர் அல்லது குடும்பத்தார் நம்மை கொடுமை படுத்துகிறார் அல்லது மதிக்காமல் நடக்கிறார் எனில் ஒரு தனிமை வர ஆரம்பிக்கும்.
இந்த நேரத்தில் வெளி உலக தொடர்பு என்று மெதுவாக ஆரம்பிப்பார்கள். இல்லை தன்னுடைய இளமை கால நண்பர்கள் பக்கத்து வீட்டு எதிர் ஆட்கள் என மெதுவாக ஆரம்பிக்கும் நட்பு. இதில் நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது நல்லவர்கள் போல நடிக்கும் வல்லூறுகளை பற்றியது. இது ஒரு மிடில் லைப் கிரிசிஸ்.

மெதுவாக இப்படி தனிமையில் அல்லது கஷ்டத்தில் இருக்கும் பெண்கள்டம் நட்பாக பேச ஆரம்பிப்பார்கள். அந்த பெண்ணை தனது வசம் இழுக்க என்ன என்ன வித்தைகள் உண்டோ எல்லாமும் செய்வார்கள். இவர்களின் பேச்சில் மயங்கி தனது வாழ்க்கைக்கு இவர் தான் சரியான துணை என்று முடிவு செய்து வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள் பலரை பற்றி கேள்வி பட்டதுண்டு. அதுவும் பெரிய வளர்ந்த பிள்ளைகளை எல்லாம் விட்டு வந்தவர்களும் உண்டு.

ஆரம்பிக்கும் போது அருமையாக இருக்கும் இந்த வாழ்க்கை ஒரு சில மாதங்களில் கசக்கும் எல்லாம் மோகம் தீர்ந்த பின்பு நடக்கும் ஒரு வேலை. பின்னர் எந்த நரகத்தில் இருந்து தப்பித்தோம் என்று பெண் நினைத்தாளோ அதனை விட கொடிய நரகத்தில் விழுந்து இருப்பாள்.
சொல்ல போனால் இப்பொழுது நேற்று நடப்பது அல்ல இது போன்ற ஒன்று. சுமார் 60
வருடங்களுக்கு முன்பு என் பாட்டி வீட்டில் குடியிருந்த ஒரு அழகான அம்மா இப்படி தன் கணவனை விட்டு ஒரு கூலி  வேலை செய்யும் ஒருவனுடன் ஓடி வந்து அவனோ சபலம் தீர்ந்த பிறகு "என்னோட ஓடி வந்தவ வேற எவன் கூடவாவது போவடி, என்று சொல்லி தினமும் அடிப்பான்" என்று என் அம்மா சில கதைகள் சொன்னதுண்டு.

அதே போல நிறைய கதைகள் கேள்வி பட்டதுண்டு.. எல்லாவற்றின் அடி நாதம் இது தான் தனிமை பெண்களுக்கு வேண்டிய ஒரு செக்யூரிட்டி பீலிங் இதனை பயன்படுத்தி அவளை வஞ்சித்த ஒரு ஆணின் கதை. இந்தயாவில் 99% சதவீதம் இப்படி திருமணதிற்கு வெளியே தொடர்புகள் பிரச்னையில் கொலையில் தற்கொலையில் முடிந்து இருக்கின்றன. அமெரிக்க போன்ற மேற்கத்திய நாடுகளிலாவது  தொடர்புகள் மறுமணத்தில் முடியலாம் ஆனால் இந்தியாவில் இது மிக மிக குறைந்த சதவீதம் மட்டுமே. அதுவும் பெண்ணின் பொருளாதார நிலையை பொறுத்தது. பெண்ணிடம் பணம் இருப்பின் அல்லது நல்ல வேலை இருப்பின் ஒரு வேலை இது மாறலாமே தவிர எல்லா நேரங்களிலும் இது போன்ற தொடர்புகள் ஒரு மாயை மட்டுமே.

நான் இதனை பற்றி எழுதியவுடன் சிலர் ஏமாத்துற பொம்பளைங்களே இல்லையா? என்று கேட்பதுண்டு. இருக்கலாம்.. இருக்கிறார்கள் ஆனால் இந்தியன் செட்டிங் இல் இதனை போன்று இருப்பவர்கள் அதிகம் இருபத்தில்லை

கடந்த சில மாதங்களில் மட்டும் எனக்கு தெரிந்த பெரிய வளர்ந்த குழந்தைகள் கொண்ட மூன்று பெண்கள் வீட்டை விட்டு வந்து இருகிறார்கள். அதுவும் இந்தியாவில் இருந்து வெளி நாட்டுக்கு யாரோ ஒருவரின் பேச்சை. நம்பி வந்தவர்களும் அடங்குவர். எது அவர்களை இப்படி ஆகியது, தற்போது அவர்களின் நிலை என்ன? என்றெல்லாம் யோசித்தால் பாவமாக இருக்கிறது. தேவையா இந்த நிலை, சொந்தமாக சூனியம் வைத்து கொண்ட நிலை இது.  ஒரு குழியில் இருந்து தப்பிப்பதாக நினைத்து புதை குழியுள் விழுந்த நிலை.

பெண்களே, உங்களுக்கு ஒரு சிறு அறிவுரை, திருமணதிற்கு வெளியே தொடர்புகள் எப்பொழுதும் பிரச்சனையில் மட்டுமே முடியும். அவை ஒரு மாயை மட்டுமே.. பருவ இனகவர்சிக்கு ஒப்பானவை அவை. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய ஒன்று. கொஞ்சம் முற்றி விட்டாலும் உங்கள் வாழ்க்கை குடும்பம் அனைத்தையும் இது சிதைத்து விடும். யாரையும் நம்பாத்தீர்கள் அதுவும் இணைய நட்புகள் வேண்டவே வேண்டாம். உங்களுக்கு குடும்பத்த்தில் பிரச்னை எனில் வெளி ஆள் யாரிடம் பகிர வேண்டாம் . யாரும் மகாத்மா அல்ல. உங்கள் அம்மா, அப்பா அல்லது குடும்பத்தினர் நெருங்கிய தோழிகள் இவர்களை தவிர யாரிடமும் பகிராதீர்கள். வட்டமிடும் வல்லூறுகள் அதிகம் சுற்றும் உலகம் இது.

டிஸ்கி
இது என்னுடைய் அனுபவத்தில் சந்தித்த மனிதர்களை வைத்து எழுதியது மட்டுமே.  யாரையும் குறிப்பிட்டு எழுதியதல்ல.

நன்றி









Monday, December 21, 2015

டெக்னாலஜி அடிக்ட் ஆகும் நாமும் நம் குழந்தைகளும் !

பனிகாலம் முகுந்துக்கு இரண்டு வாரம் பள்ளி விடுமுறை.  விடுமுறைக்கு ப்ளோரிடா பயணம் மேற்கொள்ளலாம், குளிரில் இருந்து ஒரு வாரம் தப்பித்தது போல இருக்கும், புது வேலை என்பதால் புது வருடம் ஆரம்பித்தவுடன் மூச்சு விட நேரம் இருக்காது, எனக்கும் ஒரு பிரேக் என்று முடிவு செய்து கிளம்பியாயிற்று.

ஒர்லாண்டோ, மியாமி என்று லிஸ்ட் நீள, பயண தேவைகள் குறித்த அத்தியாவசிய விஷயங்கள் நான் எடுத்து வைக்க முகுந்தோ  முதலில் எடுத்தது ஐ பெட் , டப்லெட் ... இப்படி கிளம்பும் போது என்ன என்ன தேவை என்ற அத்தியாவசிய விசயங்களில் முக்கியமாக இடம் பிடித்து இருப்பது டெக்னாலஜி கட்ஜெட்ஸ்..

கிளம்பிய நாட்களில் இருந்து காரில் ஏறிய நிமிடத்தில் இருந்து தொடர்ச்சியாக டிவி, டேபிலேட் , போன், ஐபேட் என்று  என்ன என்ன இருக்கிறதோ தொடர்ச்சியாக பார்கிறார்கள். அதிக நேரம் பார்த்தால் தலை வலிக்கும் கண் வலிக்கும் என்று என்ன சொன்னாலும் கேட்பதில்லை. தொடர்ந்து "வாட் கேன் ஐ டூ " பீலிங் போர்ட்" என்று தொடர்த்ந்து அங்கலாய்ப்புகள். நாங்களும் எவ்வளவோ வேறு வேறு விளையாட்டுகள், போர்டு கேம்ஸ், கலரிங், வார்த்தை விளையாட்டுகள், ஹூ ஆம் ஐ? என்று எத்தனை விதமாக விளையாட்டு விளையாடினாலும் அவர்களுக்கு இட்றேஸ்ட் ஏற்படுவதில்லை. சொல்ல போனால் நாம் எங்கே அழைத்தது சென்றாலும் சிறிது நேரம் நம்முடன் வரும் பல குழந்தைகளும் உடனே போனில் வீடியோ கேம் விளையாட கேட்கிறார்கள்.

நான் இந்த விசயத்த்தில் கொஞ்சம் கண்டிப்புடன் ஒரு மணி நேரம் மட்டுமே ஸ்க்ரீன் டைம் என்று வைத்து இருக்கிறேன். மற்ற நாட்களில் என்னதான் நாம் கண்டிப்புடன் இருந்தாலும் இப்படி சுற்றுலா போகும் போதெல்லாம் கண்டிப்புடன் இருக்க முடிவதில்லை. நமக்கும் வேறெதுவும் மாற்று முறை இல்லை என்பதால் நிறைய நேரம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இப்படி கொடுக்கப்படும் குழந்தைகளிடம் இருந்து நீங்கள் டிவியையோ அல்லது போனையோ வாங்கி பாருங்கள்.. ஒரு சந்திரமுகி படத்தில் வருவது போல பிட் பிடிவாதம்  அடிப்பார்கள்..

சொல்ல போனால் நாமே போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை இருப்பது பரிதாபமாக இருக்கிறது. முன்பெல்லாம் மேப் வைத்து கொண்டு இடத்ததை தேடி செல்ல வேண்டி இருந்தது பின்னர்  டாம் டாம் என்ற ஒன்று வைத்து மேப் பார்த்த காலம் வந்தது.. இப்பொழுதெல்லாம் எல்லாமே போன் தான்.. போனில் அட்ரஸ் போட்டுவிட்டு அது சொல்லுகிற படி தான் எல்லாமே செய்கிறோம். ஆனால் போன் வேலை செய்ய இல்லை என்றால் கதை கந்தல் தான்.  உதாரணமாக வெளியூருக்கு என்று வந்தாகிவிட்டது. முழுதும் நம்பி இருந்தது கூகுளாரை. ஆனால் வரும் வழியில் சார்ஜ் தீர்ந்து விட.. In the middle of nowhere, எங்கே செல்வதென்று தெரியாமல் நல்ல வேலையாக  எப்பொழுதோ வாங்கிய பழைய மேப் ஒன்று பார்த்து வழியை கண்டிபிடித்து வந்து சேர்ந்தோம்.

எல்லாவற்றுக்கும் டெக்னாலஜியை நம்பி இருந்தால் என்னவாகும் என்று நாங்கள் அனுபவித்து உணர்ந்தது. ஆனாலும் எப்படி இதனை தவிற்பது என்று தெரியவில்லை.. சொல்ல போனால் இது அதிகரிக்குமே தவிர குறையாது என்று தோன்றுகிறது..

Sunday, December 13, 2015

எவடே சுப்ரமணியமும் தமிழ் அறிவு ஜீவி பாடக கவிஞர்களும் !

நிறைய நேரங்களில் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள முயலும் போது நமக்கு எதுவும் புரிவதில்லை. அதே சமயம் சும்மா விளையாட்டாக ஏதாவது ஒரு காரியம் செய்யலாம் என்று செய்ய ஆரம்பிக்கும் போது முகத்தில் ஒரு சில விஷயங்கள் அறையும், அது வாழ்கையின் சில விசயங்களை நமக்கு உணர்த்தி செல்லும்.



வாரம் முழுக்க என்னுடைய IT அறிவையும், புள்ளியியல் அறிவையும் உயிரியியல் அறிவையும் புரட்டி பார்த்து கொண்டு ரெப்ரெஷ் செய்து கொண்டு இருந்த எனக்கு, ஒரு மாற்றத்திற்காக எதோ ஒன்றை பார்க்கலாம் என்று கணினியில் ஒரு பாட்டு ஆன் செய்தேன், அது ஒரு தெலுகு பாட்டு. கேட்கும் போதே, அட இது கேட்ட பாட்டு மாதிரி இருக்கே என்று ஒரே ஆர்வம் அட நம்ம அவதாரம் படத்தில் வரும் "தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ" பாட்டு.

அருமையான அந்த பாட்டின் மெட்டை அப்படியே  தெலுங்கில் கேட்க அமேசிங்..என்ன படம் இது , என்று ஒரு ஆர்வத்தில் கிளிக் செய்தேன். "எவடே சுப்ரமண்யம்"( யாரு சுப்ரமண்யம்?) என்ற தெலுங்கு படம்.  எல்லா தெலுங்கு படங்களும் பாலையா வகையறாக்கள்..கலர் கலர் உடைகள்..பொருந்தாத காட்சிகள் இருக்கும் என்று நினைத்திருந்த எனக்கு ஒரே ஆச்சிர்யம்...என்ன ஒரு படம் இது!!

எது வாழ்க்கை, இதுவே படத்தின் கதை..அதனை கண்டுபிடிக்கும் ஒரு இளைஞனின் கதை இது...IIM இல் MBA முடித்து பணம், புகழ் சம்பாதிப்பதே வாழ்கை என்று அதன் பின்னே போகும் ஒருவன், எதிர்பாராமல் ஏற்கும் ஒரு இமாலயா நோக்கிய ஒரு பயணம் தான் கதை. ஒரு சீன் கூட போர் அடிக்காமல், கண்ணை திருப்பாமல்..என்னை கட்டி போட்ட படம். நான் ஈ படத்தில் நடித்த நானி கதாநாயகன். என்ன ஒரு நடிப்பு. இரண்டாம் பாதி முழுதும் இமாலயா அழகு.  ஒவ்வொரு நிலையிலும் நானியின் மனமாற்றம் எதோ எனக்கே மனமாற்றம் அடைந்தது போல இருந்தது.அப்படி படத்தை வாழ்க்கையோடு ஒன்ற வைத்து விட்டது.

மெட்டீரியலிஸ்டிக் வாழ்க்கை எனப்படும் இன்னும் இன்னும் வேண்டும் என்று அலைந்து திருந்து, பணத்திற்காக புகழுக்காக எதையும்  செய்யும் செய்ய நினைக்கும் ஒருவனின் வளர்சிதை மாற்றம் அழகாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. நாக் அஷ்வின் எனப்படும் ஒரு இளைஞர் அழகாக எடுத்த வாழ்கையை பற்றிய அர்த்தமுள்ள படம் இது. அதில் நடித்த அனைவரும் இளைஞர்கள் அற்புதமான நடிப்பு. ஒரு துளி ஆபாசம் இல்லதா காட்சிகள்..பாடல்கள்..அழகான இசை..என்று எதோ புத்துணர்ச்சி ஏற்பட்டது போல இரு உணர்ச்சி எனக்கு..

ஆர்பாட்டத்திற்கு பேர் போன தெலுகு சினிமாவில் இளைஞர்கள் இப்படி அருமையான வாழ்கை படங்கள் கொடுத்து கொண்டு இருக்க..தமிழ் சினிமாவில் உள்ள  தன்னை தானே அறிவாளி என்று பறைசாற்றி கொண்டு இருக்கும் சில இளைஞர்கள் கீழ்த்தரமான பாடல்களை கொடுத்து அதனை ட்ரேன்டு என்பது எங்கே செல்லுகிறோம் என்று நம்மை கேட்க வைத்து விடுகிறது.

என்னவோ போங்கப்பா!!

Thursday, December 10, 2015

நம்பிக்கை துரோகிகள்!


எல்லா இடங்களிலும் இவர்கள் நிறைந்து இருப்பார்கள். இதில் பலரும் உங்களுடன் நெருங்கி பழகி உங்களை பற்றி நன்கு தெரிந்து இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில், நண்பர்கள் வட்டத்தில், வேலையில் என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பார்கள். சரியான சுயநல வாதிகள் இவர்கள். இவர்களை நம்பி இருப்போம், எல்லாவற்றையும் சொல்லி இருப்போம், இவர்கள் நம்மை கைவிட மாட்டார்கள் என்று மனதார நம்பி இருப்போம். ஆனால் இவர்கள், உங்களை நம்ப வைத்து கழுத்தறுத்து இருப்பார்கள். உங்களிடம் நல்லவர் போல நடித்து உங்களை பற்றி பின்னால் பேசி, கிண்டல் அடித்து இருப்பார்கள் அல்லது நீங்கள் பூரணமாக நம்பி இருந்தவர் உங்களை நற்றாற்றில் விட்டு விட்டு தன் சுயநலத்திற்க்காக சென்று இருப்பார். அதில் ஒரு சந்தோசம் அவர்களுக்கு.

நிறைய நம்பிக்கை துரோகிகளை நான் கண்டு இருக்கின்றேன் என்றாலும், சமீபத்தில் ஒருவரை காண நேர்ந்தது. என்னுடைய mentor என்று நான் நினைத்த ஒருவர் நன்றாக என்னை முதுகில் குத்தி விட்டு சென்றதால் வேலை மாற்றம் நேரப்போகிறது. இனிமேல் பதிவு எழுத நேரம் கிடைக்காது என்பது திண்ணம். அதனால் சிறிது காலம் பதிவிற்கு ஓய்வு கொடுத்து விட்டு, வேலையை கவனிக்க போகிறேன்.

இந்த வருடம் என்னுடைய பதிவுலக வாழ்கையை பொருத்தவரை மிக நல்ல ஒன்று, பதிவு ஆரம்பித்ததில் இருந்து நான்கு வருடங்களில் நான் எழுதிய மொத்த பதிவுகளை விடவும் இந்த வருடம் நிறைய எழுதி இருக்கிறேன். நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்.

நன்றி.


Monday, December 7, 2015

பொறமை: புல்லியிங்/ராகிங் முதல் இதிகாசங்கள் வரை

என்னுடன் வேலை பார்க்கும் வெள்ளை அமெரிக்கர் ஒருவர் தன்னுடைய 10 வயது மகன் பள்ளியில் தான் பெரியவனாக, உயரமானவனாக இருப்பதால்  ராகிங்  செய்யபடுவதாக குறிப்பிட்டார். அதனால் அந்த சிறுவன் தன்னுடைய பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை என்று தெரிவித்ததாகவும் சொன்னார், இதனை கேட்ட இன்னொரு என்னுடன் வேலை பார்க்கும் ஆசியர் ஒருவர், "தன்னுடைய பையன் உயரம் குறைந்தவானாக இருப்பதால்" எப்போதும் புல்லி செய்ய படுவதாக கூறினார். ஒரு கேசில் உயரம் அதிகம் ஆனாதால் ராகிங் இன்னொரு கேசில் குள்ளமானதால் ராகிங்.இதனை குறித்து பேசிக்கொண்டு இருந்த போது,  என்னுடன் வேலை பார்க்கும் இன்னொரு அரபு நாட்டை சேர்ந்த, இங்கு சிறு வயதில் வந்து செட்டில் ஆன ஒருவர், "ராகிங் செய்பவர்களுக்கு அடிப்படை பொறமை, உங்கள் மேல் ஏதேனும் ஒரு வகையில் தான் பெரிய ஆள் என்று காட்ட வேண்டும் அனைவரை விடவும் தான் அதிகாரம் மிகுந்தவன்/ மிகுந்தவள் என்று காட்ட வேண்டும் என்ற காரணத்தாலேயே இப்படி   செய்கிறார்கள். நீங்கள் பெர்பெக்ட் ஆகவே இருப்பவர் ஆயினும், ஏதேனும் ஒன்றை கண்டுபிடித்து உங்களை புல்லி செய்வார்கள். குழந்தைகள் இதனை எப்படியாவது சமாளிக்க கற்று கொள்ளுவார்கள், "Dont worry". என்று சொல்லி கொண்டு இருந்தார்.


இதனை கேட்டபின்னர் எனக்கு தோன்றிய சில எண்ணங்கள் இங்கே  பொறமை என்பது என்ன?, அடுத்தவர் சந்தோசமாக/அழகாக/அறிவாக/பணக்காரராக இப்படி எதோ ஒன்று அல்லது பல வைத்திருப்பது கொண்டு அவர் மேலே கோவம்/ஆத்திரம்/ இப்படி கொண்டு அவரை மறைமுகமாகவோ நேராகவோ தாக்குவது.

"பொறமை என்பது  ஒரு வகை மனநோய்",  என்று சொல்லி சிலர் சென்று விடுவார்கள்.ஆனால், இது கிட்டத்தட்ட எல்லாருக்குள்ளும் இருக்கும் ஒரு குணம். என்னிடம் பொறாமையே இல்லை என்று ஒருவன் சொல்வார் என்றால் அவர் முற்றும் துறந்தவர் அல்லது பைத்தியம். ஏனெனில் குழந்தைகள் கூட அவனிடம் அந்த பொம்மை இருக்கிறது என்னிடம் இல்லை, என்று சொல்வதுண்டு.

பொறமை என்ற ஒரு குணம் தான் பல பல தமிழ் சீரியல்களில் அன்றாடம் காட்டபடுகிறது. பொறமை என்ற ஒரு உணர்ச்சியை மைய படுத்தியே கணக்கில்லா விளம்பரங்கள். அவ வீட்டுல அது இருக்கு எனக்கும் வேணும். அவ டிரஸ் வெள்ளை எனக்கும் வேணும். நீ இங்க வீடு வாங்கி இருக்கியா நான் அங்க வீடு வாங்கி இருக்கேன் பாரு என்று பல பல தினுசாக பொறாமையை மையபடுத்தி
பாத்ரூம் கிளீனர் இல் இருந்து வாஷின்மசின் கார் அல்லது வீடு  வாங்குவது வரை விளம்பரங்கள் தினமும் டிவி யில் ஒளிபரப்ப படுகின்றன.

சிறு வயதில் இருந்தே, பொறமை என்பது நல்ல குணம் என்பது போல நமக்கு மறைமுகமாக புகட்ட படுகிறது. அடுத்த வீட்டு பொண்ணு/பைய்யன் எப்படி படிக்கிறான் பாரு நீயும் தான் படிக்கிறியே..என்று அடுத்த வீட்டு பையனை/பொண்ணை உதாரணம் காட்டி அவர் மீது பொறமை தீ கொழுந்து விட்டு எரிய செய்வதில் நிறைய பெற்றோருக்கு பங்கு உண்டு. அது ஆரோக்கியமான போட்டிக்கு உதவும், பல நேரங்களில் காரணம் சொல்லபட்டாலும், உண்மையில் தன்னிடம் இருக்கும் நல்ல விஷயத்தை அறிவை நம் பெற்றோர் பாராட்டவில்லையே என்று தன் மீதே நிறைய "காம்ப்ளெக்ஸ்" வரும் நிலையை நிறைய குழந்தைகள் அடைகிறார்கள். எப்படி படிப்படியாக காம்ப்ளெக்ஸ் அடைந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது நிறைய "காம்ப்ளெக்ஸ்" நிறைய போட்டி எதற்கெடுத்தாலும் போட்டி, யாருடனும் போட்டி. என்று போட்டி மேல் போட்டி போடும் நிலை. இதில் ஒரு கட்டத்தில் தன்னை சுற்றி எல்லாருமே போட்டியாளர்கள் என்ற ஒரு மனநிலை வந்து விடுகிறது. "Competitiveness is good" என்று பலரும் போதிக்கிறார்கள். உண்மையில் பொறமை/போட்டி தேவையா?

தமிழில் பொறமை , அழுக்காறு என்று குறிக்கபடுவது போல என்பது ஆங்கிலத்தில் இரண்டு சொற்களால் குறிக்க படுகிறது. Jealousy and Envy.

Jealousy என்பது எங்கே தன்னிடம் இருக்கும் ஒன்று தன்னை விட்டு சென்று விடுமோ என்ற பயத்தில் அடுத்தவர் மீது கொள்ளும் பொறமை. இதற்க்கு உதாரணமாக பல சந்தேகப்படும் கணவன் அல்லது மனைவிகளை சொல்லலாம்.  எங்கே தன்னுடைய கணவன் அல்லது மனைவி தன்னை அழகில்லை/காசில்லை/அறிவில்லை  என்று சொல்லிவிட்டு பிறரிடம் சென்று விடுவாரோ என்று பயந்து, கணவன்/மனைவி யாரிடம் பேசினாலும் அவர்கள் இடத்தில் பொறமை கொள்ளுவது, அவர்களை தூற்றுவது. இது ஒரு போச்செச்சிவ் நிலை.

மற்றொன்று, envy. இது தன்னிடம் இல்லாததை அடுத்தவர்கள் வைத்திருந்தால் அதற்காக அவர்கள் மீது பொறமைபடுவது. அல்லது தன்னிடம் இருக்கும் எதனையும் சந்தோசமாக அனுபவிக்காமல் இன்னும் இன்னும் என்று எதனையோ தேடி கொண்டே இருப்பது.


சொல்லபோனால், பொறமை இல்லையேல் நமக்கு பல இதிகாசங்கள் ,கதைகள்  கிடைத்து இருக்காது. கிட்டத்தட்ட எல்லா கதைகள் மற்றும் இதிகாசங்களில்  அடிநாதம் "பொறமை" தான். ராமாயணத்தில் "சூர்பனகை கொண்ட பொறமை, மகாபாரதத்தில் "துரியோதனன் கொண்ட பொறமை. ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ வில்  அடிநாதமே தன் மனைவியின் அழகு மீது பொறமை பயம் கொண்ட ஒதெல்லோ. Lolita வில் ஹம்பேர்ட் இன் பொறமை, "The Great Gatsby", "Ulysses" என்று சொல்லி கொண்டே போகலாம்.

பதிவின் முதலில் குறிப்பிட்டது போல, நிறைய பள்ளிகளில் தற்போது நடக்கும் புல்லியிங் இன் அடிப்படை என்னவென்று பார்த்தால் ஒன்று அந்த பெண் அழகானவராக இருக்க வேண்டும் அல்லது அந்த பையன் அறிவாளியாக இருக்கவேண்டும். அல்லது தான் பெஸ்ட், என்று உலகிற்கு காட்ட நிரூபிக்க என்று புல்லி செய்கிறார்கள். பொறமை உணர்வில் ஆரம்பிக்கும் சில நேரங்களில் வெறியாகி குழப்பத்தை, சில நேரங்களில் மரணத்தை கூட கொண்டு வந்து விடும். அதே trait பள்ளி, கல்லூரி, வாழ்க்கை என்று தொடர்ந்து எப்போதும் எல்லாரையும் போட்டியாக, பொறமை படுவது. எப்பொழுதும் தன்னிடம் இருப்பது பத்தாது இன்னும் இன்னும் வேணும் என்று ஏங்குவது அதற்காக எல்லாவற்றையும் செய்ய தயாராக இருப்பது. என்று முடிவில்லாமல் போய் கொண்டு இருக்கும், வாழ்கையில் சந்தோசம் என்பது துளியும் இருக்காது.

முடிவாக, உங்கள் குழந்தைகளுக்கு பொறாமையை கற்று கொடுக்காதீர்கள், அதற்க்கு பதில் அவர்களின் திறமையை வளர்க்க பாசிடிவ் ஆக கற்றுகொடுங்கள். அதே போல அடுத்தவர் தங்கள் மீது பொறமை கொண்டு தங்களை துன்புறுத்தினால்  அதனை எப்படி சமாளிப்பது என்று கற்று கொடுங்கள். அதுவே சரியான வாழ்க்கை பாடமும் ஆகும்.

நன்றி



Saturday, December 5, 2015

சென்னை வெள்ளத்திற்கு பிறகு வரும் சுகாதார பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி?

வெள்ளம் வடிய தொடங்கி விட்டது. வெள்ளத்திற்காக வேறு வீடுகளுக்கு சென்றவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு சென்றவர்களும் மெதுவாக தங்கள் வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். தற்போது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பது பெரிய விஷயம். நிறைய நீர் கழிவு நீருடன் கலந்து வீடு வாசல் முழுதும் வந்து இருக்கும். நல்ல பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் இருக்கலாம். இதனால் நீரின் மூலம் பரவும் பல தொற்று வியாதிகள் பரவலாம். அதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக செய்ய வேண்டிய சில விஷயங்கள் CDC  ஆல் குறிப்பிடப்படும் சில இங்கே. 
  1. வெள்ள நீரில் கலந்த எந்த உணவு அல்லது நீர் அருந்தினாலும் டையரியா அல்லது வயிற்றுபோக்கு உண்டாகலாம். அதனால் அப்படிப்பட்ட உணவு மற்றும் நீர் அருந்துவதை தவிர்ப்பது நல்லது. வெள்ள நீரில் கிடந்த எந்த பொம்மை மற்றும் விளையாட்டு பொருட்களுடன் குழந்தைகளை விளையாட விட வேண்டாம்.
  2. பாதுகாப்பான குடிநீருக்கு மழை நீர் சேகரிக்க முடிந்தால் அதனை உபயோகியுங்கள். எந்த குடிநீர் எனினும் கொதிக்க வைத்து குடிக்கவும். காஸ், எலெக்ட்ரிசிட்டி இல்லாத பட்சத்தில் ஒரு சுத்தமான சேலை அல்லது வேட்டியை நான்காக மடித்து அதில் நீரை நன்கு வடிகட்டி குடிக்கலாம். இப்படி செய்வதால் குறைந்தபட்சம் 50% காலரா பரப்பும் கிருமிகளில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆராய்ச்சி மூலம் அறிய முடிகிறது(1)
  3. மருந்துக்கடைகளில் கிடைக்கும் ORS எனப்படும் Oral dehydration solution அல்லது பவுடர் வாங்கி வைத்து கொள்ளவும். இது வயிற்றுபோக்கு வந்தால் தண்ணீரில் கலந்து குடிக்கவும். இது உடலில் nutrients குறையாமல் பார்த்து கொள்ளும். குறைந்தபட்சம் குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம். அதே போல antiemetic மருந்துகளும் முடிந்தால் வாங்கி வைத்து கொள்ளவும். இது வாந்தி வருவதை கட்டு படுத்தும்.
  4. வீட்டை சுற்றி அதிக நேரம் வெள்ள நீர் தேங்கி இருப்பின் அதில் நிற்பதை தவிர்க்கவும். இது Leptospirosis வருவதை தவிர்க்கும்.
  5. சாப்பாடு கிடைக்கவில்லை எனில், குறைந்த பட்சம் தண்ணீரில் சக்கரையும் உப்பையும் கலந்து குடிக்கவும். இது உடலில் நீர்சத்து குறையாமல் வைத்திருக்க  உதவும்.
  6. வெள்ளம் வடிந்து வீடிற்கு திரும்பிய உடன் எந்த எலெக்ட்ரிக் உபகரணங்களையும் உபயோகிக்க வேண்டாம். ஈரம் இருக்கும், அதனால் நன்கு காய்ந்தவுடன் உபயோகிக்கலாம். அதே போல நிறைய வீட்டில் நாம் உபயோகிக்கும் கெமிகல் எல்லா இடங்களிலும் இருக்கலாம். உதாரணமாக டாய்லெட் கிளீனர். இவைகளை முகத்தில் துணி கட்டி கொண்டு பாதுகாப்பாக அப்புறபடுத்திய பிறகு வீட்டை சுத்தமாக சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு சுத்தமாக்கிய பிறகு உபயோகிக்கவும்.
  7. முடிந்தால்   ஒருபக்கெட் தண்ணீரில் 1 கப் ப்ளீச் போட்டு வீட்டின் சுவர் முதல் தரை வரை துடைத்து விடவும்.
  8. வீட்டுக்குள் நுழையும் பொது எந்த அரிகேன் விளக்கு உபயோக்கிகவும். மெழுகுவத்தி டார்ச் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம். ஏனெலில், ஒரு சில நேரங்களில் காஸ் லீக் ஏற்பட்டு இருப்பின் அதனை தடுக்க உதவும். இது கார் பேட்டரிக்கும் பொருந்தும்.  

References  

1. Reduction of cholera in Bangladeshi villages by simple filtration (http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC298724/)

2. http://emergency.cdc.gov/disasters/floods/cleanupwater.asp

Friday, December 4, 2015

சென்னை வெள்ளம் குறித்து பரவும் செய்திகள், எது உண்மை? எது புரளி?

இது தற்போது வெளிநாட்டில் வசிக்கும், ஆனால் இந்தியாவில் சென்னையில் சொந்தங்கள் இருக்கும் ஒருவரின் மன நிலையில் இருந்து எழுதியது.

ஏன் இப்படி மக்களே? இப்படி தான் எனக்கு கேட்க தோன்றுகிறது.

 "சென்னை வெள்ள காடானது, எங்கும் எதிலும் வெள்ளம்". என்ற செய்தி FB, Whatsapp போன்றவற்றில் பரவ ஆரம்பித்ததும் , தன் குடும்பத்தை அல்லது தாய் தந்தையரை சென்னையில் விட்டு  விட்டு வெளிநாட்டில் எங்கோ இருக்கும் எங்களை போன்ற பலர் பட்ட பாடு பரிதாபமானது.
எப்படி இருக்கிறார்களோ நம் சொந்தங்கள், எங்காவது ஒதுங்கினார்களா? சாப்பாடு குடிநீர் கிடைத்ததா?, குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?, எதுவும் ஆபத்தா? என்று கேள்வி மேல் கேள்வி தொக்கி நிற்க, போன் போகாவிட்டாலும் தொடர்ந்து போன் அடித்தும், இணையம், FB, Whatsapp போன்றவற்றை நொடிகொரு தரம் செக் செய்து கொண்டு இருந்த தருணங்கள் மறக்க முடியாதவை. கடைசியில் சொந்தங்கள்  "ஸேப்" ஆக இருக்கிறார்கள் என்ற அவர்களின் குரல் கேட்கும் வரை இருந்த பதை பதைப்பு வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

இந்த நிலையில் வாட்ஸ் அப்  மற்றும் FB இல் அல்லது இணையத்தில் "சென்னை வெள்ளம்" என்ற தலைப்பில் பல பல fake படங்கள், செய்திகள் மற்றும் வீடியோக்கள். நிறைய போட்டோ ஷாப் வேலைகள் நடந்து எடுக்கப்பட்ட விஷயங்கள்.

உதாரணமாக, சென்னை ஏர்போர்ட் வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்று ஒரு போட்டோ வைரல் ஆக பரவி கொண்டு இருக்கிறது.

அது கடந்த வருடம் சிகாகோ ஏர்போர்ட்இல் நடந்த வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது. ஏனெனில் United, இந்தியாவிற்கு டைரக்ட் ஆக பறப்பதில்லை.




அதே போல ஒரு லாரி திருப்பதி அருகே குடை சாய்வது போல ஒரு வீடியோ , அது தான்சானியா நாட்டில் பிப் 2014 இல் எடுக்கப்பட்டது.


மற்றும் ஒரு வீட்டில் வெள்ளம் புகுந்து அனைவரும் மீக்கபடும் வீடியோ என்று வித விதமாக போட்டோ...பல போட்டோ மற்றும் வீடியோக்கள் அனைத்தும்  புரளி .


ஏற்கனவே உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கும் மக்கள் பயந்து கொண்டு இருக்க? ஏன் இப்படி புரளி கிளப்புகிறார்கள். இதில் என்ன கிடைக்க போகிறது. இதில் செய்தி ஊடகங்கள் வேறு, முக்கியமாக எதிர் கட்சி சேனல்ஸ், உண்மையை திரித்து பேசுவது, செய்தி வாசிப்பது, என்று இன்னும் பயத்தை அதிகரித்து கொண்டு இருந்தனர்.ஏற்கனவே பயத்தில் இருக்கும் மக்கள் இப்படிப்பட்ட புரளி வீடியோ, செய்திகள் என்று பார்க்கும் போது இன்னும் பயந்து சாக மாட்டார்களா? ஏன் இப்படி மக்களே?

என்னவோ போங்கப்பா!

டிஸ்கி 

முதலிலேயே சொன்னது போல, இது வெளிநாட்டில் வசிக்கும் சென்னையில் குடும்பம் இருக்கும் ஒரு சராசரி மனிதனின் மன நிலையில் இருந்து எழுதியது மட்டுமே. யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை சொல்லவில்லை.

Thursday, December 3, 2015

பெண்கள், வெஸ்டேர்ன் உடைகளை உடுத்தும் போது கவனிக்க வேண்டியது

தற்போது வெஸ்டேர்ன் உடைகளை உடுத்துவது என்பது சென்னை, மும்பை போன்ற மெட்ரோ நகர பெண்கள் மட்டும் இல்லாமல், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் வசிக்கும் பெண்களும் தற்போது ஜீன்ஸ், டீ ஷர்ட் போன்றவை உடுத்துகின்றனர். பெரும்பாலும் நிறைய பெண்கள் குர்தா அணிந்து கொண்டு அதற்க்கு ஜீன்ஸ் உடுத்துவதை பார்த்து இருக்கிறேன். கல்லூரி செல்லும் பெண்கள் மட்டும் என்று இல்லை பலநடுத்தர வயது பெண்களும் தற்போது வெஸ்டேர்ன் உடைகளை உடுத்துவதை பார்க்கிறேன்.

ஆனால், பெரும்பாலும் இந்திய பெண்களுக்கு அதுவும் தென்னிந்திய பெண்களுக்கு வெஸ்டேர்ன் உடைகள் உடுத்துவது எப்படி என்று தெரியவில்லையோ என்று தோன்றுகிறது. அது இந்தியாவில் இருக்கும் வெஸ்டேர்ன் உடைகளை உடுத்தும் பெண்களாயினும் அல்லது இங்கே வந்த பெண்களாயினும் சரி.

உதாரணமாக ப்ளாக் ஃப்ரைடே ஷாப்பிங் சென்ற போது, இரண்டு நடுத்தர வயது பெண்கள் வந்திருந்தனர். குளிருக்கு என்று  இருவரும் ஜீன்ஸ் போட்டு ஒரு டைட் ஸ்வெட்டர் போட்டு இருந்தனர். வயிற்று பகுதியில் பிதுங்கி அசிங்கமாக இருந்தது. இத்தனைக்கும் அவர்கள் குண்டானவர்கள் கூட இல்லை. கரெக்ட் பிட்டிங் ஜீன்ஸ் அணிந்திருந்தால் இப்படி அசிங்கமான தோற்றத்தை தவிர்க்கலாம்.

இன்னொரு உதாரணமாக என்னுடன் வேலை பார்க்கும் வெள்ளைகார பெண்மணி ஒருவர்,  ஆனால் அவர் உடுத்தும் உடைகளில் இருந்து அவரை பார்த்தால் உடல் பருமனானவர் என்று உங்களால் கணிக்கவே முடியாது. அப்படி ஒரு எலிகெண்ட் டிரெஸ்ஸிங் சென்ஸ் அவருக்கு.

 நீங்கள் கொஞ்சம் உடல் பருமனானவர் அல்லது குழந்தை பிறந்த பிறகு  தொப்பை போட்டு இருக்கிறது என்றால் எப்படி உடைகளை தெரிந்தெடுப்பது என்பது குறித்த சில டிப்ஸ் இங்கே.


  • ஸ்கின்னி ஜீன்ஸ் அறவே வாங்காதீர்கள். அதற்காக உங்கள் கணவரின் பழைய ஜீன்ஸ் பெரிதாக சரியாக இருக்கும் என்று அதனையும் போட்டு கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்கள் சைஸ்க்கு சரியாக இருக்கும் உடைகளை மட்டுமே வாங்குங்கள். ஸ்கின்னி ஜீன்ஸ் நோ நோ.
  • கிராப் பாண்ட்ஸ் எனப்படும் கனுக்காலுக்கு வரைக்கும் இருக்கும் பாண்ட்ஸ் வாங்கவே வாங்காதீர்கள், இப்படிபட்ட பாண்ட்ஸ் ஒல்லியாக இருப்பவர்களுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும், ஆனால் கொஞ்சம் உடம்பு  கொண்டவர்களுக்கும் இது பொருந்தாது, முக்கியமாக உங்கள் தொடை பகுதிகளை பெரிதாக காட்டும் என்பதால் இப்படிப்பட்ட பாண்ட்களை வாங்காதீர்கள்.

  •  குளிருக்கு puffy வைத்தது போல இருக்கும் ஜாக்கெட்களை வாங்காதீர்கள், இவை உங்களுக்கு பல்கி தோற்றத்தை தரும். ஒல்லியாக சிக் என்று இருப்பவர்களுக்காகவே இவை பொருந்தும்




  • பெரிய டிரஸ்களை வாங்காதீர்கள். ஆபீஸ்க்கு நிறைய பெண்கள் டிரஸ் எனப்படும் மிடி போன்ற ஒன் பீஸ் டிரஸ்களை அணிந்து வருவார்கள். அதனை பார்த்து சிலர், நானும் வாங்குகிறேர் என்று, சென்று வாங்குவார்கள். ஆனால் உடலில் இருக்கும் தொப்பை அல்லது சதை நிறைந்த பாகங்கள் அதிகம் வெளியே தெரிய கூடாது என்று உடலை மறைக்கும் பெரிய சைஸ் டிரஸ் வாங்குவார்கள். அது போட்டால் கிறிஸ்துவ நன் போன்ற ஒரு தோற்றம் வரும் என்பதை அவர்கள் உணருவதில்லை 

  • தவறான சைஸ் இல் உள்ளாடைகள் அணிவது. சாரி லேடீஸ், இதனை சொல்லியே ஆக வேண்டும். நன்கு உடை உடுத்துவதற்கு அதனை வாங்குவதற்கு முன்பு, சரியான சைஸ் உள்ளாடைகள் மிக மிக அவசியம். உங்கள் உள்ளாடைகள் வேறு சைஸ்இல் இருந்து அதற்க்கு மேலே நீங்கள் எந்த அழகான ஆடை அணிந்தாலும் அது அசிங்கமான தோற்றத்தை மட்டுமே தரும்.
  • நிறைய பிரிண்ட் போட்ட பாண்டுகள் வாங்குவது. நிறைய பேர் மாடல்கள் போட்டிருக்கும் பிரிட்டி பாண்டுகள் பார்த்து, நமக்கும் பொருந்தும் என்று பிரிண்டட் பாண்டுகள் வாங்குகிறார்கள். ஆனால், அது உங்களை பெரிதாக இடுப்புக்கு கீழே காட்டும் என்று உணருவதில்லை. 
  • உங்கள் மார்பு சுற்றளவு அதிகம் கொண்டவர் எனில் எப்பொழுதும் குறுக்கே கோடுகள் போட்ட, சட்டை ஸ்வெட்டர் வாங்கவே வாங்காதீர். அது உங்கள் மார்பளவை இன்னும் அதிகமாக கூட்டி காட்டும். என்னை பொருத்தவரை, ஒல்லியானவர்கள் குண்டாக காட்ட என்று மட்டுமே இந்த குறுக்கு கோடுகள் பயன்படும் அதனால் பெரிய நோ நோ.

  • முடிவாக, லேயர், லேயர் ஆக உடை உடுத்துவது நல்லது. குளிர்க்கும் சரியாக இருக்கும் ஸ்டைல் தோற்றத்தையும் தரும். உதாரணமாக, கார்டிகன் எனப்படும் மெல்லிய ஸ்வெட்டர் வங்கி கொள்ளுங்கள், எந்த சட்டை அல்லது மேலாடை போட்டாலும்  அதற்க்கு மேலே கார்டிகன் போட்டு கொள்ளுங்கள். அல்லது நல்ல பெல்ட் உடை மேலே அணிந்து கொள்ளுங்கள். அதனுடன் நல்ல ஸ்கார்ப் போட்டு கொள்ளுங்கள். நீங்கள் குண்டாகவே இருந்தாலும் கார்டிகன் உங்களின் உடல் சதைகளை மூடி மறைத்து விடும். ஸ்கார்ப் மற்றும் பெல்ட் உங்கள் மீது விழும் பார்வையை டிஸ்டரஆக்ட் செய்து நீங்கள் குண்டான தோற்றத்தை கொண்டவர் என்பதை மறைத்து விடும்.


யாராயினும், எந்த சைஸ் கொண்டவராயினும் வெஸ்டேர்ன் உடை உடுத்தலாம். முயற்சி செய்து பாருங்கள்.

நன்றி.

டிஸ்கி 
இது என்னுடைய அனுபவத்தில் நான் கண்டதை வைத்து எழுதியது மட்டுமே..பேஷன் அட்வைஸ் அல்ல.


Thanks to google images for photos