தற்போது வெஸ்டேர்ன் உடைகளை உடுத்துவது என்பது சென்னை, மும்பை போன்ற மெட்ரோ நகர பெண்கள் மட்டும் இல்லாமல், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் வசிக்கும் பெண்களும் தற்போது ஜீன்ஸ், டீ ஷர்ட் போன்றவை உடுத்துகின்றனர். பெரும்பாலும் நிறைய பெண்கள் குர்தா அணிந்து கொண்டு அதற்க்கு ஜீன்ஸ் உடுத்துவதை பார்த்து இருக்கிறேன். கல்லூரி செல்லும் பெண்கள் மட்டும் என்று இல்லை பலநடுத்தர வயது பெண்களும் தற்போது வெஸ்டேர்ன் உடைகளை உடுத்துவதை பார்க்கிறேன்.
ஆனால், பெரும்பாலும் இந்திய பெண்களுக்கு அதுவும் தென்னிந்திய பெண்களுக்கு வெஸ்டேர்ன் உடைகள் உடுத்துவது எப்படி என்று தெரியவில்லையோ என்று தோன்றுகிறது. அது இந்தியாவில் இருக்கும் வெஸ்டேர்ன் உடைகளை உடுத்தும் பெண்களாயினும் அல்லது இங்கே வந்த பெண்களாயினும் சரி.
உதாரணமாக ப்ளாக் ஃப்ரைடே ஷாப்பிங் சென்ற போது, இரண்டு நடுத்தர வயது பெண்கள் வந்திருந்தனர். குளிருக்கு என்று இருவரும் ஜீன்ஸ் போட்டு ஒரு டைட் ஸ்வெட்டர் போட்டு இருந்தனர். வயிற்று பகுதியில் பிதுங்கி அசிங்கமாக இருந்தது. இத்தனைக்கும் அவர்கள் குண்டானவர்கள் கூட இல்லை. கரெக்ட் பிட்டிங் ஜீன்ஸ் அணிந்திருந்தால் இப்படி அசிங்கமான தோற்றத்தை தவிர்க்கலாம்.
இன்னொரு உதாரணமாக என்னுடன் வேலை பார்க்கும் வெள்ளைகார பெண்மணி ஒருவர், ஆனால் அவர் உடுத்தும் உடைகளில் இருந்து அவரை பார்த்தால் உடல் பருமனானவர் என்று உங்களால் கணிக்கவே முடியாது. அப்படி ஒரு எலிகெண்ட் டிரெஸ்ஸிங் சென்ஸ் அவருக்கு.
நீங்கள் கொஞ்சம் உடல் பருமனானவர் அல்லது குழந்தை பிறந்த பிறகு தொப்பை போட்டு இருக்கிறது என்றால் எப்படி உடைகளை தெரிந்தெடுப்பது என்பது குறித்த சில டிப்ஸ் இங்கே.

- ஸ்கின்னி ஜீன்ஸ் அறவே வாங்காதீர்கள். அதற்காக உங்கள் கணவரின் பழைய ஜீன்ஸ் பெரிதாக சரியாக இருக்கும் என்று அதனையும் போட்டு கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்கள் சைஸ்க்கு சரியாக இருக்கும் உடைகளை மட்டுமே வாங்குங்கள். ஸ்கின்னி ஜீன்ஸ் நோ நோ.
- கிராப் பாண்ட்ஸ் எனப்படும் கனுக்காலுக்கு வரைக்கும் இருக்கும் பாண்ட்ஸ் வாங்கவே வாங்காதீர்கள், இப்படிபட்ட பாண்ட்ஸ் ஒல்லியாக இருப்பவர்களுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும், ஆனால் கொஞ்சம் உடம்பு கொண்டவர்களுக்கும் இது பொருந்தாது, முக்கியமாக உங்கள் தொடை பகுதிகளை பெரிதாக காட்டும் என்பதால் இப்படிப்பட்ட பாண்ட்களை வாங்காதீர்கள்.
- குளிருக்கு puffy வைத்தது போல இருக்கும் ஜாக்கெட்களை வாங்காதீர்கள், இவை உங்களுக்கு பல்கி தோற்றத்தை தரும். ஒல்லியாக சிக் என்று இருப்பவர்களுக்காகவே இவை பொருந்தும்
- பெரிய டிரஸ்களை வாங்காதீர்கள். ஆபீஸ்க்கு நிறைய பெண்கள் டிரஸ் எனப்படும் மிடி போன்ற ஒன் பீஸ் டிரஸ்களை அணிந்து வருவார்கள். அதனை பார்த்து சிலர், நானும் வாங்குகிறேர் என்று, சென்று வாங்குவார்கள். ஆனால் உடலில் இருக்கும் தொப்பை அல்லது சதை நிறைந்த பாகங்கள் அதிகம் வெளியே தெரிய கூடாது என்று உடலை மறைக்கும் பெரிய சைஸ் டிரஸ் வாங்குவார்கள். அது போட்டால் கிறிஸ்துவ நன் போன்ற ஒரு தோற்றம் வரும் என்பதை அவர்கள் உணருவதில்லை
- தவறான சைஸ் இல் உள்ளாடைகள் அணிவது. சாரி லேடீஸ், இதனை சொல்லியே ஆக வேண்டும். நன்கு உடை உடுத்துவதற்கு அதனை வாங்குவதற்கு முன்பு, சரியான சைஸ் உள்ளாடைகள் மிக மிக அவசியம். உங்கள் உள்ளாடைகள் வேறு சைஸ்இல் இருந்து அதற்க்கு மேலே நீங்கள் எந்த அழகான ஆடை அணிந்தாலும் அது அசிங்கமான தோற்றத்தை மட்டுமே தரும்.
- நிறைய பிரிண்ட் போட்ட பாண்டுகள் வாங்குவது. நிறைய பேர் மாடல்கள் போட்டிருக்கும் பிரிட்டி பாண்டுகள் பார்த்து, நமக்கும் பொருந்தும் என்று பிரிண்டட் பாண்டுகள் வாங்குகிறார்கள். ஆனால், அது உங்களை பெரிதாக இடுப்புக்கு கீழே காட்டும் என்று உணருவதில்லை.
- உங்கள் மார்பு சுற்றளவு அதிகம் கொண்டவர் எனில் எப்பொழுதும் குறுக்கே கோடுகள் போட்ட, சட்டை ஸ்வெட்டர் வாங்கவே வாங்காதீர். அது உங்கள் மார்பளவை இன்னும் அதிகமாக கூட்டி காட்டும். என்னை பொருத்தவரை, ஒல்லியானவர்கள் குண்டாக காட்ட என்று மட்டுமே இந்த குறுக்கு கோடுகள் பயன்படும் அதனால் பெரிய நோ நோ.
- முடிவாக, லேயர், லேயர் ஆக உடை உடுத்துவது நல்லது. குளிர்க்கும் சரியாக இருக்கும் ஸ்டைல் தோற்றத்தையும் தரும். உதாரணமாக, கார்டிகன் எனப்படும் மெல்லிய ஸ்வெட்டர் வங்கி கொள்ளுங்கள், எந்த சட்டை அல்லது மேலாடை போட்டாலும் அதற்க்கு மேலே கார்டிகன் போட்டு கொள்ளுங்கள். அல்லது நல்ல பெல்ட் உடை மேலே அணிந்து கொள்ளுங்கள். அதனுடன் நல்ல ஸ்கார்ப் போட்டு கொள்ளுங்கள். நீங்கள் குண்டாகவே இருந்தாலும் கார்டிகன் உங்களின் உடல் சதைகளை மூடி மறைத்து விடும். ஸ்கார்ப் மற்றும் பெல்ட் உங்கள் மீது விழும் பார்வையை டிஸ்டரஆக்ட் செய்து நீங்கள் குண்டான தோற்றத்தை கொண்டவர் என்பதை மறைத்து விடும்.
யாராயினும், எந்த சைஸ் கொண்டவராயினும் வெஸ்டேர்ன் உடை உடுத்தலாம். முயற்சி செய்து பாருங்கள்.
நன்றி.
டிஸ்கி
இது என்னுடைய அனுபவத்தில் நான் கண்டதை வைத்து எழுதியது மட்டுமே..பேஷன் அட்வைஸ் அல்ல.
Thanks to google images for photos
1 comment:
watch your entire body with the new dresses before full mirror else giving shock to others. ....mirror not only for face..Pl add this tip also
Post a Comment