Saturday, December 5, 2015

சென்னை வெள்ளத்திற்கு பிறகு வரும் சுகாதார பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி?

வெள்ளம் வடிய தொடங்கி விட்டது. வெள்ளத்திற்காக வேறு வீடுகளுக்கு சென்றவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு சென்றவர்களும் மெதுவாக தங்கள் வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். தற்போது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பது பெரிய விஷயம். நிறைய நீர் கழிவு நீருடன் கலந்து வீடு வாசல் முழுதும் வந்து இருக்கும். நல்ல பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் இருக்கலாம். இதனால் நீரின் மூலம் பரவும் பல தொற்று வியாதிகள் பரவலாம். அதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக செய்ய வேண்டிய சில விஷயங்கள் CDC  ஆல் குறிப்பிடப்படும் சில இங்கே. 
  1. வெள்ள நீரில் கலந்த எந்த உணவு அல்லது நீர் அருந்தினாலும் டையரியா அல்லது வயிற்றுபோக்கு உண்டாகலாம். அதனால் அப்படிப்பட்ட உணவு மற்றும் நீர் அருந்துவதை தவிர்ப்பது நல்லது. வெள்ள நீரில் கிடந்த எந்த பொம்மை மற்றும் விளையாட்டு பொருட்களுடன் குழந்தைகளை விளையாட விட வேண்டாம்.
  2. பாதுகாப்பான குடிநீருக்கு மழை நீர் சேகரிக்க முடிந்தால் அதனை உபயோகியுங்கள். எந்த குடிநீர் எனினும் கொதிக்க வைத்து குடிக்கவும். காஸ், எலெக்ட்ரிசிட்டி இல்லாத பட்சத்தில் ஒரு சுத்தமான சேலை அல்லது வேட்டியை நான்காக மடித்து அதில் நீரை நன்கு வடிகட்டி குடிக்கலாம். இப்படி செய்வதால் குறைந்தபட்சம் 50% காலரா பரப்பும் கிருமிகளில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆராய்ச்சி மூலம் அறிய முடிகிறது(1)
  3. மருந்துக்கடைகளில் கிடைக்கும் ORS எனப்படும் Oral dehydration solution அல்லது பவுடர் வாங்கி வைத்து கொள்ளவும். இது வயிற்றுபோக்கு வந்தால் தண்ணீரில் கலந்து குடிக்கவும். இது உடலில் nutrients குறையாமல் பார்த்து கொள்ளும். குறைந்தபட்சம் குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம். அதே போல antiemetic மருந்துகளும் முடிந்தால் வாங்கி வைத்து கொள்ளவும். இது வாந்தி வருவதை கட்டு படுத்தும்.
  4. வீட்டை சுற்றி அதிக நேரம் வெள்ள நீர் தேங்கி இருப்பின் அதில் நிற்பதை தவிர்க்கவும். இது Leptospirosis வருவதை தவிர்க்கும்.
  5. சாப்பாடு கிடைக்கவில்லை எனில், குறைந்த பட்சம் தண்ணீரில் சக்கரையும் உப்பையும் கலந்து குடிக்கவும். இது உடலில் நீர்சத்து குறையாமல் வைத்திருக்க  உதவும்.
  6. வெள்ளம் வடிந்து வீடிற்கு திரும்பிய உடன் எந்த எலெக்ட்ரிக் உபகரணங்களையும் உபயோகிக்க வேண்டாம். ஈரம் இருக்கும், அதனால் நன்கு காய்ந்தவுடன் உபயோகிக்கலாம். அதே போல நிறைய வீட்டில் நாம் உபயோகிக்கும் கெமிகல் எல்லா இடங்களிலும் இருக்கலாம். உதாரணமாக டாய்லெட் கிளீனர். இவைகளை முகத்தில் துணி கட்டி கொண்டு பாதுகாப்பாக அப்புறபடுத்திய பிறகு வீட்டை சுத்தமாக சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு சுத்தமாக்கிய பிறகு உபயோகிக்கவும்.
  7. முடிந்தால்   ஒருபக்கெட் தண்ணீரில் 1 கப் ப்ளீச் போட்டு வீட்டின் சுவர் முதல் தரை வரை துடைத்து விடவும்.
  8. வீட்டுக்குள் நுழையும் பொது எந்த அரிகேன் விளக்கு உபயோக்கிகவும். மெழுகுவத்தி டார்ச் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம். ஏனெலில், ஒரு சில நேரங்களில் காஸ் லீக் ஏற்பட்டு இருப்பின் அதனை தடுக்க உதவும். இது கார் பேட்டரிக்கும் பொருந்தும்.  

References  

1. Reduction of cholera in Bangladeshi villages by simple filtration (http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC298724/)

2. http://emergency.cdc.gov/disasters/floods/cleanupwater.asp

4 comments:

Unknown said...

நன்றி! நல்ல தகவல் அம்மா!

Unknown said...

Good information I shall share this to the group with your permission
Ramesh ,Chennai

முகுந்த்; Amma said...

please do share it in FB.

வேகநரி said...

பாதிக்கபட்ட மக்களுக்கு மிகவும் பயன் உள்ள தகவல்கள்.
நானும் தெரிஞ்சவங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். நன்றி.