Sunday, November 29, 2015

இந்தியர்களும், ஒற்றுமையும், சங்கங்களும்!

எப்பொழுதெல்லாம் என்னுடைய தோழிகளுடன் "இந்தியா பற்றி" நான் பேசும் போது அல்லது விவாதிக்கும் போது, ஒரு விஷயம் அவர்கள் 'பெருமையாக' சொல்வதுண்டு. அது,  இந்தியாவில் தான் இந்தியர்களிடத்தில் தான்  "unity in diversity" உண்டு வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று.

சமீப காலமாக ஒரு செய்தி முகநூலில் சுத்தி கொண்டு இருப்பதை பார்த்தேன்,
 "தெருவை தாண்டினேன், என்னுடைய சாதி கேட்டார்,
டிஸ்ட்ரிக்ட் தாண்டினேன் என்னுடைய ஊர் மற்றும் மதம் கேட்டார்,
மாநிலத்தை தாண்டினேன் என்னுடைய தாய்மொழி கேட்டார்
நாட்டை தாண்டிய பின் தான் இந்தியன் ஆனேன்"

அட, என்ன கவி நயம் என்று ஆச்சரியமாக இருந்தது.ஆனால் இவர்கள் சொன்னது போல இது உண்மையா. நாட்டை தாண்டியவுடன் நாமெல்லாம் இந்தியர் ஆகிவிட்டோமா? என்று எனக்குள் சில கேள்விகள்.

கடந்த சில வாரங்களில் பார்த்த கேட்ட சில விசயங்களும் இந்த கேள்வியை பல முறை என்னுள் கேட்க தூண்டியது.

உதாரணமாக  எங்கே இந்தியர்கள் இடம் பெயர்ந்தாலும் ஏதேனும் ஒரு சங்கம் உருவாக்கி விடுவார்கள். நான் படித்து கொண்டு இருந்தவரை, அது இந்திய மாணவர்கள் சங்கம் என்ற ஒன்றாக இருந்து இருக்கிறது. அதன் பின்னர் எனக்கு தெரிந்து ஒரு சங்கமும் "இந்திய சங்கம்" என்று பார்க்கவில்லை அல்லது எனக்கு தெரியவில்லை.  உதாரணமாக, "தெலுகு சங்கம்" ஊருக்கு ஊர் உண்டு. அதே போல "தமிழ் சங்கங்களும்" உண்டு. மராட்டி சங்கம், குஜராத்தி சங்கம், மலையாளிகள் சங்கம், கன்னடிகர் சங்கம் ....என்று பல சங்கங்கள் பார்த்ததுண்டு.

இதில் ஜோக் என்னவென்றால் அந்த சங்கத்தில் நீங்கள் உறுப்பினர் ஆக வேண்டும் என்றால் இந்தியர் ஆக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ஆனால் அந்த "மொழி" பேசுபவர் ஆக இருத்தல் அவசியம்.

இது கூட பரவாயில்லை என்று நான் நினைப்பது உண்டு, மொழிவாரி பிரிவு தானே பிரித்து இருக்கிறார்கள் போனால் போகுது என்று.. ஆனால் கடந்த வாரம் தேங்க்ஸ் கிவிங் பண்டிகையின் போது ஒரு தெலுகு குடும்பம் சாப்பிட அழைத்து இருந்தோம். அவர்கள் சொன்னது எனக்கு தலை சுற்றியது.

அதாவது இப்படி ஆரம்பிக்கப்படும் சங்கங்களுக்குள் நடக்கும் பாலிடிக்ஸ் இந்திய உலக பாலிடிக்ஸ் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடும், அதனாலேயே தெலுகு சங்கங்கள் மட்டுமே தற்போது மூன்று இருக்கின்றன என்றார். அதை விட உச்சம் என்னவென்றால் தற்போது, "சாதி சங்கம் ஒன்று" வைசிய மக்கள் சங்கம் " ஒன்று ஆரம்பிக்க பட்டு இருப்பதாக கூறினார். அடபாவிங்களா, எங்க போனாலும் உங்க நிறம், குணம் மாறாதா? என்று வருத்தப்பட வைத்தது.

எந்த மொழி சங்கமாயினும் சரி, உள்ளே பாலிடிக்ஸ் நாறுகிறது, நீ பெரியவனா, நான் பெரியவானா, எனக்கு எவ்வளோ சப்போர்ட் இருக்கு பார், உனக்கு இருக்கிறத விட..என்று ஏனப்பா இந்த பாலிடிக்ஸ். என்னிடம் எவ்வளவு பணம் இருக்குது பார், நான் எவ்வளவு பெரியவேலையில்  இருக்கிறேன் பார்...என்று போட்டி, பொறாமை,....இது தான் நடக்கிறது.

இந்த நிலை சங்கங்களில் மட்டும் என்று இல்லை ஒரு பார்ட்டி , கெட் டுகெதர் என்று சென்றாலும், இதே நிலை..பாலிடிக்ஸ்..என்று மனது தாங்க முடியவில்லை.

இப்போது மறுபடியும், முகநூலில் சுற்றி கொண்டு இருக்கும் விசயத்ரிக்கு வருவோம்.

 "தெருவை தாண்டினேன், என்னுடைய சாதி கேட்டார்,
டிஸ்ட்ரிக்ட் தாண்டினேன் என்னுடைய ஊர் மற்றும் மதம் கேட்டார்,
மாநிலத்தை தாண்டினேன் என்னுடைய தாய்மொழி கேட்டார்
நாட்டை தாண்டிய பின் தான் இந்தியன் ஆனேன், கனவில் மட்டும்"

நன்றி.டிஸ்கி
இது சங்கங்கள் குறித்து என்னுடைய எண்ணங்கள் மட்டுமே, யாரையும் குறிப்பிடவில்லை.
6 comments:

பழனி. கந்தசாமி said...

ஏன் இப்படி?

பழமைபேசி said...

இஃகிஃகி +1

S.P. Senthil Kumar said...

நமது சமூகம் மீண்டும் பழமையை நோக்கி போவதாகவே எனக்குப் படுகிறது. இரண்டு தலைமுறைகளாகவே பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் சேர்ப்பதை விட்டிருந்தோம். இப்போது 25 வயது இளைஞர்கள் சிலர் தங்கள் பெயருக்குப் பின் ஜாதி பெயரையும் சேர்த்திருக்கிறார்கள். வேதனையான இதன் நீட்சி வெளிநாட்டு இந்தியர்களையும் விட்டுவைக்கவில்லை என்பது தங்களின் பதிவு மூலம் அறிய முடிகிறது. வேதனையாக இருக்கிறது. சித்திக்க வைத்த பதிவு.

ஆரூர் பாஸ்கர் said...

அமேரிக்காவில் ஜாதி சங்கங்களா? புதுசா இருக்கே!!
அட்லாண்டா அதியங்கள் போல..

பட்டினத்துப்பிள்ளை said...

Puthusu ille. ​இதெல்லாம் ரொம்ப பழசு.
உறுப்பினரான என் நண்பர் ஒருவர் சிலாகித்தார்
"ரொம்ப நல்ல programs எல்லாம் இருக்கு. நல்ல உதவிகள்/counselling செய்றாங்க (Like, how to raise your kid in ***jathi*** traditions.) Infact, எங்க boys/girls'காகவே ஒரு dating service கூட இருக்கு".

செங்கதிரோன் said...

very good observation at the same time its necessary for the immigrants thats the way they only they can communicate each other.There are many adavantages in these kind of group activities.