கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே எனக்கு தெரிந்து நிறைய மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இந்தியர்கள் வேலை வாய்ப்பை இழந்து இருக்கிறார்கள். இது வரும் என்று முன்கூட்டியே தெரிந்து தானோ என்னவோ தெரியவில்லை சிலர் வேறு துறைக்கு அல்லது வெளிநாட்டுக்கு குடி பெயர்ந்து இருகிறார்கள். வேலையில் இருப்பவர்களும் எப்பொழுதும் ,என்ன நடக்குமோ என்று ஒரு கிலியில் இருப்பதாக பேசிய போது சொன்னார்கள். இதனை சார்ந்த பல செய்திகள் பார்க்க படிக்க நேர்ந்தது.
எண்ணெய் வளம் என்ற ஒன்றை மற்றும் நம்பி கொண்டு எதிர்காலத்தை நடத்த முடியாது என்று நினைத்ததாலோ என்னவோ, UAE, குவைத், ஓமன் போன்ற நாடுகள் மற்ற துறைகளில் காசை முதலீடு செய்கிறார்கள். துபாய் நகரம் முழுதும் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் சார்ந்த தொழில் முனைவோருக்கு என்று நிறைய வாய்ப்புகள் வழங்குகிறார்கள்.
எண்ணெய் வளம் மட்டுமே வைத்து நம்பி கொண்டு இருந்த சவுதி தற்போது உள்ள உள்நாட்டு பற்றாக்குறையை சமாளிக்க என்று தன்னுடைய வெளிநாட்டு சேமிப்பில் இருந்து 70 பில்லியன் டாலர் வரை எடுத்து இருப்பதாக சில செய்திகளையும் படிக்க நேர்ந்தது.
சரி, என்ன நடக்கிறது, யார் மத்திய கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிக்கிறார்கள் என்பது குறித்த "Who controls Middle East Oil Prices?" என்ற Forbes கட்டுரை ஒன்று வாசிக்க நேர்ந்தது. அதில் எனக்கு புரிந்த சில விடயங்கள் இங்கே.
பல வருடங்களாக கச்சா எண்ணெய் ஒரு ஆயுதமாக பயன்படுத்த பட்டு வந்து இருக்கிறது. சவூதி அரசாங்கம் எண்ணைவளத்தை அமெரிக்காவுடன் உறவு ஏற்படுத்தி கொள்ள ஒரு பாலமாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர். உனக்கு எண்ணெய் குறைந்த விலையில் தருகிறேன், எனக்கு எந்த எதிரியும் தாக்காமல் எனக்கு உன் ஆயுத பலம், என்று மறைமுக டீல் இருந்திருக்கிறது . இதனை வைத்து அமெரிக்கா, உலக மார்கெட்டில் கச்சா எண்ணெய் விலை $100 ஐ தாண்டினாலும் அமெரிக்காவுக்கு குறைந்த விலையில் சப்ளை செய்து வந்திருகின்றனர்.
எண்ணெய் தேவையை சமாளிக்க என்று அமெரிக்கா, மின்சாரத்தில் இயங்கும் பாட்டரி கார், சூரிய ஒளியில் இயங்கும் கார் போன்றவை ஒரு பக்கம் உருவாக்கி புழக்கத்தில் விட்டது. கடந்த வருடங்களில் நிறைய நிசான் கம்பனி "லீப் Leaf" எனப்படும் பாட்டரி கார் ஒன்றை புழக்கத்தில் விட, அதனை வாங்கினால் நிறைய டாக்ஸ் பெனிபிட் என்று ஒபாமா அறிவிக்க, எங்கும் எங்கெங்கும் நிஸ்ஸான் லீப் கார்கள் பார்க்க நேர்ந்தது. அதுவும் நிறைய இந்தியர்கள் வீட்டுக்கு ஒரு நிஸ்ஸான் லீப் வைத்திருந்ததை பார்க்க நேர்ந்தது.
இது ஒரு புறம் இருக்க, "hydraulically fractured oil" எனப்படும் பாறைகளை உடைத்து சேதாரங்களை தவிர்த்து எண்ணெய் எடுக்கும் தொழில் நுட்பத்தை அமெரிக்கா வளர்க்க என்று எல்லாபுரமும் தனது என்னை தேவையை சமாளிக்க என்று நிறைய காய்களை நகர்த்த ஆரம்பித்தது. விளைவாக, எனக்கு உங்களின் எண்ணெய் வேண்டாம் என்று மறைமுகமாக சொல்ல/காய்களை நகர்த்த..தேவை இல்லாமல் நிறைய எடுத்து என்ன செய்வது என்று மறைமுகமாக நிறைய சப்பளை அதிகரித்து டிமான்ட் குறைய ஆரம்பித்தது.
NYSC இல் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிவு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. முடிவு, எதற்கு நிறைய எண்ணெய் எடுக்க வேண்டும், பேசாமல் ப்ரொடக்சன் பிளான்ட் ஐ நிறுத்தி விடுவோம் அல்லது குறைத்து விடுவோம் என்று நிறைய மத்திய கிழக்கு நாடுகள் முடிவு செய்து ஆள்குறைப்பு செய்து வருகின்றனர். அதோடு, தற்பொழுது டாக்ஸ் ம் வரப்போகிறது என்றெல்லாம் பேச்சாக இருப்பதால், நிறைய எண்ணெய் வளத்தை நம்பி அங்கு வேலைக்கு சென்ற இந்தியர்கள் தங்கள் குடும்பங்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதாக அறிய முடிகிறது.
இதனால் இந்தியர்களுக்கு மட்டும் என்று இல்லை, இந்திய பொருளாதாரத்திற்கும் நிறைய பாதிப்புகள் வரலாம் என்று போர்பஸ் இன் மற்றொரு செய்தி. தெரிவிக்கிறது. எப்படி, என்றால், உலகின் பல மூலைகளில் இருந்து பணம் அனுப்புபுபவர்களில் வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள். இந்தியா நம்பர் ஒன் நாடாக இப்படி பணம் பெறுவதில் இருக்கிறது. UAE இல் இருந்து மட்டுமே கிட்டத்தட்ட $15 பில்லியன் டாலர்கள் இந்தியாவிற்கு 2012 இல் அனுப்ப பட்டு இருப்பதாக அது தெரிவிக்கிறது. இது US இல் இருந்து அனுப்படும் பணத்தை விட 4 பில்லியன் அதிகம் ஆகும்.
Photo from Forbes
வேலை இழப்புகள், இது போன்ற பண வரவு இழப்பை ஏற்படுத்தலாம். கிட்டத்தட்ட 7 மில்லியன் இந்தியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கிறார்கள், அவர்களின் நிலை என்னவாகும். இது ஒரு தொக்கி நிற்கும் கேள்வியே..காலம் தான் இதற்க்கு பதில் சொல்ல வேண்டும்.
டிஸ்கி
இது நான் வாசித்ததை, கேட்டதை வைத்து எழுதியது, ஏதேனும் தவறுகள் இருப்பின் தெரிவிக்கவும்.
நன்றி.
எண்ணெய் வளம் என்ற ஒன்றை மற்றும் நம்பி கொண்டு எதிர்காலத்தை நடத்த முடியாது என்று நினைத்ததாலோ என்னவோ, UAE, குவைத், ஓமன் போன்ற நாடுகள் மற்ற துறைகளில் காசை முதலீடு செய்கிறார்கள். துபாய் நகரம் முழுதும் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் சார்ந்த தொழில் முனைவோருக்கு என்று நிறைய வாய்ப்புகள் வழங்குகிறார்கள்.
எண்ணெய் வளம் மட்டுமே வைத்து நம்பி கொண்டு இருந்த சவுதி தற்போது உள்ள உள்நாட்டு பற்றாக்குறையை சமாளிக்க என்று தன்னுடைய வெளிநாட்டு சேமிப்பில் இருந்து 70 பில்லியன் டாலர் வரை எடுத்து இருப்பதாக சில செய்திகளையும் படிக்க நேர்ந்தது.
சரி, என்ன நடக்கிறது, யார் மத்திய கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிக்கிறார்கள் என்பது குறித்த "Who controls Middle East Oil Prices?" என்ற Forbes கட்டுரை ஒன்று வாசிக்க நேர்ந்தது. அதில் எனக்கு புரிந்த சில விடயங்கள் இங்கே.
பல வருடங்களாக கச்சா எண்ணெய் ஒரு ஆயுதமாக பயன்படுத்த பட்டு வந்து இருக்கிறது. சவூதி அரசாங்கம் எண்ணைவளத்தை அமெரிக்காவுடன் உறவு ஏற்படுத்தி கொள்ள ஒரு பாலமாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர். உனக்கு எண்ணெய் குறைந்த விலையில் தருகிறேன், எனக்கு எந்த எதிரியும் தாக்காமல் எனக்கு உன் ஆயுத பலம், என்று மறைமுக டீல் இருந்திருக்கிறது . இதனை வைத்து அமெரிக்கா, உலக மார்கெட்டில் கச்சா எண்ணெய் விலை $100 ஐ தாண்டினாலும் அமெரிக்காவுக்கு குறைந்த விலையில் சப்ளை செய்து வந்திருகின்றனர்.
எண்ணெய் தேவையை சமாளிக்க என்று அமெரிக்கா, மின்சாரத்தில் இயங்கும் பாட்டரி கார், சூரிய ஒளியில் இயங்கும் கார் போன்றவை ஒரு பக்கம் உருவாக்கி புழக்கத்தில் விட்டது. கடந்த வருடங்களில் நிறைய நிசான் கம்பனி "லீப் Leaf" எனப்படும் பாட்டரி கார் ஒன்றை புழக்கத்தில் விட, அதனை வாங்கினால் நிறைய டாக்ஸ் பெனிபிட் என்று ஒபாமா அறிவிக்க, எங்கும் எங்கெங்கும் நிஸ்ஸான் லீப் கார்கள் பார்க்க நேர்ந்தது. அதுவும் நிறைய இந்தியர்கள் வீட்டுக்கு ஒரு நிஸ்ஸான் லீப் வைத்திருந்ததை பார்க்க நேர்ந்தது.
இது ஒரு புறம் இருக்க, "hydraulically fractured oil" எனப்படும் பாறைகளை உடைத்து சேதாரங்களை தவிர்த்து எண்ணெய் எடுக்கும் தொழில் நுட்பத்தை அமெரிக்கா வளர்க்க என்று எல்லாபுரமும் தனது என்னை தேவையை சமாளிக்க என்று நிறைய காய்களை நகர்த்த ஆரம்பித்தது. விளைவாக, எனக்கு உங்களின் எண்ணெய் வேண்டாம் என்று மறைமுகமாக சொல்ல/காய்களை நகர்த்த..தேவை இல்லாமல் நிறைய எடுத்து என்ன செய்வது என்று மறைமுகமாக நிறைய சப்பளை அதிகரித்து டிமான்ட் குறைய ஆரம்பித்தது.
Market Vector Oil Services (NYSE:OIH) | -34.40 |
Ipath S&P GSCI Crude Oil (NYSE:OIL) | -58.5% |
United States Oil Fund (NYSE:USO) | -53.06 |
Source: Finance.yahoo.com