எங்க கட்சி தான் ஜெயிக்கும்.உன்னை விட ஒரு ஓட்டாவது கூட வாங்கி கட்டுறேன் பாருங்க ...எங்கள் சாதி/இன பலம் தெரியுமா, பாருங்கள். என்று கட்சிகளும் மீம்ஸ் மூலமும் வீடியோ மூலமும் பிரச்சாரம் தூள் பறந்தது.நிறைய மக்கள் தங்களின் சாதி வேட்பாளர் யாரேனும் போட்டியிட்டால் தங்களின் தளங்களில் பப்ளிக் ஆக பிரச்சாரம் செய்தனர். இது எங்க சாதி..என்று பலர் பப்ளிக் ஆக அறிவித்து, சாதி பெருமை பேசினர். அதிலும் அப்படி தங்கள் சாதியை பற்றி சிலாகித்து செய்தி வெளியிட்ட பலரும் நன்கு படித்து நல்ல பதவியில் அல்லது IT கம்பனியில் வேலை பார்க்கும் பலர். யார் போட்டியிடுகிறார், அவர் செய்த நல்லது என்ன? என்று யோசிக்கும் நிலையில் கூட யாரும் இல்லை. எனக்கெனவோ,இந்த தேர்தல் சாதி வெறியை நிறைய ஊக்குவித்ததாக தோன்றியது.
இதே மக்கள் பலர், சென்னை வெள்ளம் வந்த போது வரிந்து கட்டிக்கொண்டு அரசியல் வாதிகளையும் கவர்மெண்ட்ஐயும் காய்ச்சு காய்ச்சு என்று சோசியல் மீடியாவில் காய்ச்சியவர்கள். சென்னை வெள்ளத்தில் உதவி செய்த சகாயம் IAS, மற்றும் நடிகர்கள் சித்தார்த், RJ பாலாஜி எல்லாரையும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுங்கள் என்று நிறைய செய்திகள், பெட்டி செய்திகள், மீம்கள் என்று தூள் பரத்தினார்கள். சரி, மக்கள் முன்னேறிட்டாங்க போல என்று சந்தோசமாக இருந்தது. ஆனால், நடந்தது என்னவென்றால் இப்படி சோசியல் மீடியாவில் நீதி பேசிய பலர் ஓட்டு போடவில்லை. கேட்டால் நேரம்/காலம்/விருப்பம் இல்லை/... என்று பல நொண்டி சாக்குகள்.
சாதி என்ற ஒன்று எப்படி இந்த தேர்தலில் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது..
நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம்!, என்று என்னையே கேள்வி கேட்க தூண்டியது.
இந்த நிலையில் பல நாட்களுக்கு பிறகு, பாலச்சந்தர் அவர்களின் "தண்ணீர் தண்ணீர்" படம் பார்க்க நேர்ந்தது. 1981 ஆம் ஆண்டு வந்த படம் அது. அது படம் என்பதை விட பாடம் என்பதே சரி. படம் வந்து கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆன பின்பும், இன்னும் அதில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் இன்றைய அரசியலுக்கும் சரி, தேர்தலுக்கும் சரி..சீனுக்கு சீன் அப்படியே ஒத்து போகிறது. மக்களின் சாதியை குறி வைத்து நடக்கும் தேர்தல் பிரச்சாரங்கள், அதனை சார்ந்த காட்சிகள், அரசு எந்திரம் எப்படி இருக்கிறது என்பதற்கான காட்சிகள் என்று அந்த படம் ஒரு காவியம் என்று தான் சொல்ல வேண்டும். இவை போன்ற படங்கள் இனிமேல் வருமா, ஏக்க பெருமூச்சு மட்டுமே நம்மில்.
அரசு எந்திர செயல்பாடு குறித்த அந்த படத்தின் சில காட்சிகள் இங்கே!!.
இதில் ஜோக் என்னவென்றால் இந்த சோசியல் மீடியா என்னும் மாய உலகை உண்மை என்று நம்பி தான் வெற்றி அடைந்துவிட்டோம் என்று மமதையில் ஆடிய நிறைய பேர். அவர்களின் கதி தற்போது என்ன என்று நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.
டிஸ்கி
இது இன்றைய அரசியல் குறித்தும், சோசியல் மீடியா குறித்தும் என்னுடைய எண்ணங்கள் மட்டுமே. யாரையும் குறிக்கவில்லை.
பல வருடங்களுக்கு பிறகு கோடை விடுமுறை இந்தியாவில். பார்க்கலாம், என்னென்னபுதிய விசயங்கள் கற்றுக்கொள்ள போகிறேன் என்று.
நன்றி