Monday, July 25, 2016

நானொரு முட்டாளுங்க!

முட்டாள் என்பவர் யார். விஷயம் தெரியாதவர்களே முட்டாள் என்று ஒரு விளக்கம் சொல்லுவார்கள். பள்ளியை எடுத்து கொள்ளுங்கள், ஆசிரியர் ஏதாவது எளிய கேள்வி கேட்டு, அதற்கு நமக்கு பதில் தெரியவில்லை எனில், சரியான முட்டாள் என்று திட்டுவார். அதே போல நண்பர்களுடன் இருக்கும் போதும் சரி அலுவலகத்திலும் சரி, எப்போதும் யாரும் நம்மை முட்டாள் விஷயம் தெரியாதவன் என்று எண்ணி விடக்கூடாது என்று நினைத்து நினைத்தே நாம் செயல்படுவோம்.

இந்த குணம் இந்தியர்களிடம் அதிகம் இருப்பதாய் உணர்கிறேன். அதாவது, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை எனில் எனக்கு தெரியாது என்று ஒத்து கொள்ளுவது.  அதற்கு பதில், அதனை பற்றி தெரிந்தது போல காட்டி கொள்ளுவது. உதாரணமாக, நீங்கள் ஒரு ஆபீஸ் மீட்டிங்இல் இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். அங்கு ஒரு விஷயம் குறித்து விவாதிக்க பேசுகிறார்கள் என்று வைத்து கொள்ளுவவோம், அந்த மீட்டிங்கில் நிறைய இந்தியர்கள் இருப்பின், நீங்ககவனித்து பாருங்கள், அதில் இருக்கும் எத்தனை இந்தியர்கள் தனக்கு விஷயம் தெரியாது இனிமே தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்று உண்மையை ஒத்து கொள்ளுகிறார்கள். மிக மிக சொற்பனமானவர்கள் மட்டுமே.. பலர், அதனை பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும், எனக்கும் ஏதோ தெரியும் நானும் முட்டாள் இல்லை என்று காட்டி கொள்ளுவார்கள்.

சொல்லப்போனால், நானும் கூட எங்கே நமக்கு விஷயம் தெரியாது என்று நினைத்து மட்டம் தட்டி விடுவார்களோ என்று பயந்து தெரியாத விஷயத்தையும் தெறி தெரிந்தது போல சில நேரங்களில் முன்பு நடந்ததுண்டு. ஆனால் இப்பொழுதெல்லாம் யாராவது நேரடியாகவே என்னை முட்டாள் என்று திட்டினால் கூட அப்படியா, நன்றி என்று சொல்லி விடுகிறேன் என்பது வேறு கதை.

சரி என்னுடைய கதை இருக்கட்டும். என்னுடன் வேலை பார்க்கும் சிலர் தனக்கு தெரியாமல் ஏதாவது இருந்தாலும் என்ன எது என்று கேள்வி கேட்டு பதில் தெரிந்து கொள்ளாமல், தனக்கு அதனை பற்றி தெரியும் என்று கதை விடுவதை பார்த்து இருக்கிறேன். அதுவும் நிறைய இந்தியர்கள் இதனை போல செய்வதை கண்டு இருக்கிறேன்.

எனக்கு சமீபத்தில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. புது ப்ராஜெக்ட் ஒன்றில் வேலை செய்ய நேர்ந்தது. அந்த ப்ராஜெக்ட் குறித்து தெரிந்த சிலரிடம் இருந்து தெரியாத சிலர் KT செய்ய வேண்டும். அறிவு பரிமாற்றம், என்பது தெரியாத விசயங்களை கேட்டு தெரிந்து கொள்ளுவது. ஆனால், நடந்தது காண சிரிப்பாக இருந்தது. ப்ராஜெக்ட் குறித்து தெரியாத ஒரு சிலர், எதோ தனக்கு எல்லாம் தெரியும் என்று பயங்கர சீன் போட்டு தான் பெரிய அறிவாளி என்று பாஸ் முன்பு படம் காட்டி கொண்டு இருந்தனர். பின்னர் மீட்டிங் முடிந்தவுடன், அதாவது பாஸ் யாரும் அருகில் இல்லாத போது , என்னிடம் வந்து இதனை எப்படி செயல் படுத்துவது என்று ரொம்ப ரொம்ப பேசிக் கேள்வி கேட்டு கொண்டிருந்தனர். "நீ வாங்குற அஞ்சு பத்து காசுக்கு எதுக்கு இந்த விளம்பரம்" என்ற கவுண்டமணி டயலாக் தான் நினைவுக்கு வந்தது.

சரி எதுக்கு இப்போ இதை பத்தி எழுதுறேன் அப்படின்னா, இரண்டு காரணம். முதல் காரணம் இது தான். சிறு வயதில் நிறைய கார்ட்டூன் புத்தகங்கள் படிப்பதுண்டு. இப்பொழுது கூட ஒரு சில காமிக் ஸ்ட்ரிப் படிப்பது பிடிக்கும். அதுவும் அன்றாட ஆபீஸ் விஷயங்களை நக்கல் அடிப்பதில் பெஸ்ட் ஆக
இருக்கும் "DILBERT" கார்ட்டூன் ரொம்ப இஷ்டம். அவரின் ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது. "The Dilbert Principle" என்ற புத்தகம். அதுவும் அதன் கதாசிரியர் Scott Adams பப்லிக் ஆக "நான் ஒரு முட்டாள் எனக்கு கார்ட்டூன் மட்டுமே வரைய தெரியும், ஆனால் என்னையும் நம்பி ஒருத்தர் புக் பப்லிஷ் செய்திருக்கிறார். அதனால் ஏதானும் தவறாய் இருந்தால் சாரி " என்று தன்னை பற்றி அறிமுகம் செய்கிறார். இவரே முட்டாள்னா, நானெல்லாம் அடி,அடி,அடி முட்டாளுங்கோ..


Photo from Google images

இரண்டாவது விஷயம், ஹி, ஹி,ஹி.. நிறைய அறிவு ஜீவிங்க படம் பார்த்துட்டு இது சரியான பப்படம் பா.. அப்படின்னு விமரிசனம் செய்த "கபாலி" நான்  பார்த்துட்டேங்க.. குட் பெலோஸ், காங்ஸ் ஆப் நியூயார்க் போல ஒரு காங்ஸ்டர் படம் பார்த்த திருப்தி. ரொம்ப சாதாரணமா கதைக்கு தகுந்தாற் போல பொருந்தி ரஜினி. டூயட் பாடாமல், அதிகம் பஞ்சு டயாலக் பேசாமல் நல்லா நடித்த ரஜினி பார்க்க நேர்ந்தது. முதல் நாள் முதல் ஷோ என்று சென்று 25$ செலவழிக்காமல் 4 நாட்கள் கழித்து சென்றதால் 10 $ சேமிக்க நேர்ந்தது. அதோடு, கூட்டமும் அதிகம் இல்லாமல் காண நேர்ந்தது.
அதனால், நானும் ஒரு முட்டாள் தானுங்கோ!


டிஸ்கி

இன்னைக்கு டிஸ்கிக்கி லீவு..
யாரும் வந்து படம் நல்ல இல்லைன்னு திட்டாதீங்கப்பா.. இது என்னோட வியு மட்டுமே.


Wednesday, July 6, 2016

8 ஆம் வகுப்பில் IIT -JEE கோச்சிங்ம் CBSE ம் சமச்சீர் பள்ளிகளும்!

படிப்பது என்பது என்ன?, எந்த வயதில் படிக்க வேண்டும். இந்த கேள்வி எனக்கு அடிக்கடி தோன்றும். அதுவும் தற்போது இந்தியாவில் இருக்கும் குழந்தைகளை பார்த்த பிறகு இன்னும் அதிகமாக இந்த கேள்வி மனதில் ஓடி கொண்டு இருக்கிறது.

உதாரணமாக என்னுடைய தோழியின் மகள்  இந்த வருடம் 8 ஆவது படிக்கிறார். மதுரையின் சிறந்த பள்ளி ஒன்றில் படிக்கிறார். CBSE பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளி அது. இருப்பினும், பள்ளி விட்டு வந்தவுடன் கிட்ட தட்ட எல்லா பாடத்திற்கும் வெளியிலே டியூசன் செல்கிறார். இது போக IIT -JEE க்கு என்று ட்யூசன். அதாவது 8 ஆம் வகுப்பில் இருந்தே 12 ஆம் வகுப்பு முடிந்த பிறகு எஞ்சினீரிங் படிக்க வேண்டும் அதுவும் IIT யில் மட்டுமே படிக்க வேண்டும்  என்று அவளின் பெற்றோர் முடிவு செய்து அவளை கோச்சிங் சேர்த்து இருக்கிறார்கள். 

அதாவது, கணக்கு, பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி கேள்விகளை  8 ஆவதில் இருந்து திரும்ப திரும்ப 4 வருடங்களாக படித்து படித்து...ஒரு வழியாக மனப்பாடம் செய்து..மார்க் எடுக்க வேண்டும்  என்று தயார் செய்ய படுகிறார்கள். 

எனக்கு தெரிந்து 10 ஆவது படிக்கும் போது அல்லது 12 ஆவது படிக்கும் போது ட்யூசன் படித்து பார்த்து இருக்கிறேன்..ஏன் இந்த வயதில் கோச்சிங் என்று என் தோழியிடம் கேட்க அவளோ..IIT யில் சேர பயங்கர போட்டி காம்பெடிஷன், எல்லாரும் தற்போது தங்களின் பிள்ளைகளை IIT  யில் படிக்க வைக்க நினைக்கிறாங்க..அதனால பயங்கர போட்டி. மத்த எஞ்சினீரிங் காலேஜ் எல்லாம் ஸ்டாண்டர்ட் இல்லை..IIT மட்டுமே தரம். அதனால தான் பயங்கர போட்டி. அதில வெற்றி பெறணும்னா இப்போ இருந்த கோச்சிங்  ஆரம்பிக்கணும். என்று சொன்னாள். 

அதுவும் தவிர..நான் அவளிடம் கேட்டது இது தான். CBSE சிலபஸ் நல்லா இருக்கு, நல்ல டாப் ஸ்கூல்ல பொண்ணு படிக்கிறான்னு சொல்லுறியே அப்போ எதுக்கு மத்த ட்யூசன். எல்லா சப்ஜெக்ட் க்கும் ட்யூசன். அப்போ டீச்சர் என்ன சொல்லி தர்றாங்க?. சொல்லி தர்ற அளவுக்கு அவங்களுக்கு ஸ்டப்  இருக்குன்னா எதுக்கு வெளியில ட்யூசன். 


ஏன் ஸ்டேட் போர்ட்ல சேக்கல்ல? என்ன பிரச்சனை? என்று கேட்டதற்கு, சமசீர் கல்வி ஆரம்பிச்சு பிறகு ஸ்டாண்டர்ட் ஏ இல்லை,  ..எல்லாமே மனப்பாடம் தான்.. இப்போ எல்லாம் எங்க பார்த்தாலும் 100- பேர் ஸ்டேட் பிரஸ்ட் 1000 பேர் 100 க்கு 100 அப்படின்னு போகுது. CBSE ல தான் கொஞ்சமாவது சிலபஸ் நல்லா இருக்கு, அதனால தான் அங்க சேர்த்திருக்கோம்..என்றாள். 

எனக்கு மறுபடியும் சந்தேகம்.. இவங்க என்ன சொல்ல வராங்க.. CBSE ல மனப்பாடம் இல்லைன்னு சொல்லுறாங்களா?.மத்த எஞ்சினீரிங் படிச்சா தேற மாட்டாங்க..IIT ல படிச்ச மட்டுமே தேறுவாங்க அப்படின்னு சொல்லுறாங்களா?..இல்லை நிறைய பேர் ஸ்டேட் பிரஸ்ட் வர்றது தப்புன்னு சொல்லுறாங்களா? ஒண்ணுமே புரியல உலகத்துல...

இப்பெல்லாம் புது வகை நோய் தொத்தி இருக்கு மக்கள் கிட்ட..அது CBSE பள்ளியில தன் பிள்ளை படிக்குது...சமசீர் கல்வி பள்ளியில இல்லை..என்று சொல்லுவது. அதற்காக எவ்வளவ் பணமும் கொடுக்க தயாரா இருக்கிறாங்க. அந்த பள்ளியில் என்ன சொல்லி தர்ராங்க..அதன் ஆசிரியர்கள் சொல்லி தரும் திறன் உள்ளவர்களா..என்றெல்லாம் எந்த பெற்றோரும் யோசிப்பதில்லை. இது ஒரு பிரெஸ்டிஜ் விஷயமாகி விட்டது. CBSE யில் படிக்க வைப்பது. IIT - JEE கோச்சிங் எடுப்பது..இதெல்லாம் பிரெஸ்டிஜ் விஷயங்கள். 

.ஆன ஒன்னு மட்டும் நிச்சயம்..7, 8 ஆவது படிக்கும் குழந்தைகளை ட்யூசன் மேல ட்யூசன் சேர்த்து..படிப்பின் மீது வெறுப்படைய செய்வது மட்டும் அல்லாமல்..அவர்களின் சொந்த திறமையை வளர்க்காமல் இப்படி செய்வது அந்த குழந்தைகளின் எதிர் காலத்தை வெகுவாக பாதிக்கும் என்று எப்போது இந்த பெற்றோர் உணர்வார்களா...

டிஸ்கி 
இந்த பதிவில் குறிப்பிட்டு உள்ள விஷயங்கள் என்னுடைய கருத்து மட்டுமே.. எந்த பாட திட்டத்தையும் குறித்தோ அல்லது பள்ளிகள் குறித்தோ  குறை சொல்லவில்லை 








Monday, July 4, 2016

நவீன "திருப்பதி" ஆகும் "ஷீரடி" யும் , மாறிய ரசனைகளும்!

எனக்கு மட்டும் இப்படி தோன்றுகிறதா, இல்லை உண்மையில் இப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை. எங்கெங்கு காணினும் "ஷீரடி சாய்பாபா ஆலயங்கள்". இந்தியாவில் எல்லா ஊர்களிலும் சாய்பாபா ஆலயங்கள் காண முடிகிறது. வெளி நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் நீக்கமற சாய்பாபா நிறைந்து இருக்கிறார்.  எல்லா கோயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

மதுரையில் புதிதாக ஆண்டாள்புரத்தில் சாய்பாபா கோயில் வந்திருக்கிறது. போகலாம் என்று அம்மா அழைத்த சென்றிருந்தார்கள். அப்பப்பா என்னவொரு கூட்டம். நீண்ட க்யூ வரிசை வேறு. பக்தி கானங்களும் , பிரார்த்தனைகளும் ஒரே பக்திமயம். இதே போன்ற நிறைய புதிய சாய்பாபா ஆலயங்கள் சென்னையிலும் காண நேர்ந்தது. நிறைய பேர் தற்போது " ஷீரடி" கோவிலுக்கு செல்வதை ஒரு பிரார்த்தனையாக செய்கிறார்கள். என்னிடம் கூட நிறைய பேர், " ஷீரடி
" போனோம், நீங்க போனீங்களா என்று கேட்டனர். 90 களின் இறுதியில் ஒரு சிலர் மட்டுமே சென்ற ஷீரடி தற்பொழுது , அடுத்த " திருப்பதி" போல அனைவரும் செல்லும் ஒரு இடமாகிவிட்டது.
நாங்கள் சென்று வந்தோம் என்று மக்கள் பெருமையாக சொல்லியும் கொள்ளுகிறார்கள்.

ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு சாமி கோயில் பிரபலமாகும், தற்போது "ஷீரடி" சீசன் போல என்று நினைத்து கொண்டேன்.

இந்திய பயணத்தில் என்னுடன் இளநிலை படித்த நெருங்கிய தோழிகளுடன் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பொதுவாக ஆண்கள் அவர்களுடைய நண்பர்களுடன் கெட் டுகெதர் வைத்தால் அது ஈசியாக முடியும் ஒன்று. பெண்கள்,திருமணமாகி குடும்ப பொறுப்பை ஏற்றவுடன் இது போன்ற தோழிகள் கெட் டுகெதர் என்றால் அது சுலபமாக நடப்பது யில்லை. அதுவும் நிறைய பெர்மிஸ்ஸன் வாங்க வேண்டும். குடும்பத்தார், கணவர் குழந்தைகள் என்று அனைவரும் ஒத்துழைத்த பின்னர் மட்டுமே இது சாத்தியமாகலாம். இப்படி பிரம்ம பிரயத்தன சாதனையை ஒரு வழியாக செயல் படுத்த முடிந்தது. 2 மாத திட்டமிடலும் பின்னர், ஒரு தோழியின் வீட்டில் முழு நாளும் தங்கி எங்கள் இளமை கால நினைவுகளை அசை போட முடிந்தது. இந்தியாவில் இருந்த அனைவரும் ஒரு வழியாக மதுரை யில் சந்திக்க வெளிநாட்டில் இருந்த ஒரு சிலர் ஸ்கைப்பில் வர என்று ஒரே கொண்டாட்டம்.
கிட்டத்தட்ட எல்லாரும் சந்திக்க முடிந்த இந்த நேரத்தில் ஒருவர் மட்டும் நேரிலோ அல்லது ஸ்கைப்பிலோ கூட வர முடியாத படி குடும்ப பொறுப்பு.

எல்லாரையும் திரும்ப சந்திப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தாலும் எனக்கென்னவோ ஒரு வித அலைவரிசை வித்தியாசம் இருப்பதை போல உணர வைத்தது. அனைவரும் லோக்கல் பாலிடிக்ஸ், சூப்பர் சிங்கர், டான்ஸ், விகடன், நியூஸ், சீரியல் என்று பேசி கொண்டிருக்க அவர்களுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்க நேர்ந்தது. என் ரசனை மாறிவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் காண நேர்ந்தது, இளநிலை படிக்கும் போது ஏதாவது சாதிக்க வேண்டும் என்று வெறியுடன் இருந்த பலரும், குடும்பம், டிவி,பாலிடிக்ஸ் அல்லது சீரியல் என்று ஒரு கட்டத்துக்குள் தன்னை சுருக்கி கொண்டு விட்டனர் என்பது மட்டும் திண்ணம்.

நான் கவனித்த இன்னொரு விஷயம் இப்படி இளம் குழந்தைகள் சினிமா நடிகர்கள் பைத்தியமாக
இருப்பதை கவனிக்க முடிந்தது. அதுவும் அவர்களின் பிடித்த நடிகர்கள் பற்றி என்ன சொன்னாலும் சரி கேட்டாலும் சரி உடனே சண்டைக்கு வருகிறார்கள். அவர்களின் பாட்டை போட்டு பைத்தியம் போல நடந்தது பார்க்க நேர்ந்தது.

என்னவோ..மாறி வரும் ரசனைகளுக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும் போல இருக்கிறது.

நன்றி.

டிஸ்கி
இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் எல்லாம் என்னுடைய அனுபவம் மட்டுமே, யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.