Thursday, September 23, 2010

பிங்க் ரிப்பனும் , BRC1 & BRC2 ம்

அக்டோபர் 1st என்ன விசேஷம்?

எந்திரன் ரிலீஸ் அப்படின்னு சொல்லுறவங்களுக்கு (ஹி, ஹி, ஹி, இந்த விளையாட்டுக்கு நான் வரல, கொஞ்சம் சீரியஸ் ஆ யோசிக்கலாம்)

அக்டோபர் ஒன்னு உலக பிங்க் ரிப்பன் டே, பிங்க் ரிப்பன் மார்பக புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை குறிக்கிறது.

கான்செர் ன்னா என்னங்க?

Unconditional growth, அதாவது எல்லை இல்லா வளர்ச்சி. எதுக்கும் ஒரு எல்லாம் இருக்கணும் அப்படின்னு பெரியவங்க சொல்லுவாங்க, அது ஒவ்வொரு செல்லுக்கும் கூட பொருந்தும். நம்ம உடம்பில இருக்கிற ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு கன்ட்ரோல் ஜீன் இருக்கு. அந்த ஜீன் ஒவ்வொரு செல்லையும் தேவையானப்போ "வளருன்னு" சிக்னல் கொடுக்கும், அதே போல தேவை இல்லாதப்போ "போதும் நிறுத்து" அப்படின்னு சிக்னல் கொடுக்கும். ஆனா இந்த கன்ட்ரோல் ஜீனுக்குள் மாற்றம் (Mutation) ஏற்பட்டுடுச்சுன்னா அந்த ஜீன் தன்னோட கன்ட்ரோல் பண்ணுற திறமையை இழக்குது. பிறகு ஒவ்வொரு செல்லும் கன்ட்ரோல் இல்லாம வளரும். இதுதான் ஒவ்வொரு கான்செர்க்கும் அடிப்படை.


சரி, பிங்க் ரிப்பன் Breast cancer awareness, ஆனா BRC1 & BRC2 ன்னா என்ன?

BRC1 & BRC2 ங்குறது மனுஷ உடம்புல இருக்கிற மார்பக செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ரெண்டு ஜீன். இந்த ரெண்டு ஜீன்லையும் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுடுச்சுன்னா, உடனே மார்பக புற்று நோய் வந்துடும்ன்னு கண்டு பிடிச்சு இருக்காங்க.

சரி, எப்படி Breast கான்செர் கண்டுபிடிப்பது?

பெண்கள் வாரம் ஒரு முறை பத்து நிமிடம் எடுத்துகோங்க. ஒரு தனி அறையில் சென்று கீழ்க்கண்ட படத்தில் சொல்லுவது போல மார்பகத்தை நன்கு அமுக்கி ஏதேனும் கட்டி போன்று தென்படுகிறதா என்று பார்க்கவும். ஏதேனும் சிறிய கட்டி போன்று இருப்பதாக சந்தேகம் வந்தால், இதே டெஸ்டை திரும்ப இரண்டு நாட்கள் கழித்து செய்து பார்க்கவும். மறுபடியும் இருப்பது போல அறிந்தால், உடனே மீமொக்ராம் (Mammogram) மார்பு புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளவும்.





நினைவில் வைத்து கொள்ளுங்கள், ஆரம்ப நிலை மார்பு புற்றுநோயை முழுதும் குணப்படுத்த முடியும்.

மார்பு புற்றுநோய்யை தடுக்க என்ன செய்யலாம் ?

  1. குண்டாகாமல், ஆரோக்கியமான எடையுடன் இருப்பது.
  2. நிறைய காய்கறி, பழங்கள் உண்பது, இறைச்சி உண்பதை முடிந்த அளவுகுறைத்து கொள்வது
  3. முடிந்தவரை உடற்பயிற்சி செய்வது
  4. அதிக கொழுப்பு, மாவு பொருட்களை உண்ணாமல் இருப்பது
இவை எல்லாம் அனைவருக்கும் தெரிந்த வழிகள் தான் ஆனாலும் யாரும் பின் பற்றுவது இல்லை.

விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன செய்யலாம்?

பெண் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள், அம்மா, அக்கா, தங்கை, மகள், தோழியர் அனைவருக்கும் மார்பு புற்றுநோய் பற்றி எடுத்து சொல்லுங்கள். முடிந்தால் விழிப்புணர்வுக்காக கீழ்க்கண்ட பிங்க் ரிப்பன்ஐ உங்கள் தளத்தில் இணையுங்கள்.



மேலும் இதனை பற்றி அறிந்து கொள்ள http://www.pinkribbon.org/ என்ற தளத்தை பாருங்கள்.

7 comments:

Thekkikattan|தெகா said...

கட்டுரைக்கு நன்றி! இன்னும் கூடுதல் தகவல்கள் கொடுத்திருக்கலாமோ!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்டிப்பாக நெருங்கிய பெண்களுக்கு இதைபற்றிய அவெர்நெஸ்ஸை தொடர்ந்து
ஏற்படுத்துகிறோம்.

Chitra said...

Very useful post. Thank you.

தேவன் மாயம் said...

நல்ல விழிப்புணர்வு கட்டுரைங்க! எல்லோருக்கும் இது அவசியம்!

பத்மா said...

நன்றி முகுந்தம்மா ..
மார்பக புற்று நோயின் தாக்கம் நன்கு உணர்ந்தவள் நான்.
இது பலருக்கும் சென்று சேர வேண்டும்

ஹுஸைனம்மா said...

புற்றுநோய்க்குக் காரண்மான ஜீன்களைக் கண்டுபிடிச்சுட்டாங்களா? அப்படின்னா, அந்த ஜீன்களைப் பரிசோதித்து (மரபுசார்) புற்றுநோய் வருமா வராதான்னு கண்டுபிடிக்கிறதும் சீக்கிரம் வந்துடும் இல்லியா? எனினும் புறக் காரணங்களால் (உணவு, சுற்றுப்புறம்) வருவது கண்டுபிடிப்பது சிரமம்தான் இல்லியா?

முகுந்த்; Amma said...

நன்றி யாதவன்

நன்றி தெகா, கொடுத்திருக்கலாம் தான் ஆனா, ஆராய்ச்சி கட்டுரை ஆகுறத்துக்கு வாய்ப்பாயிடும்ன்னு நினைச்சு இதோட நிப்பாட்டிகிட்டேன்.

நன்றி முத்துலெட்சுமி.

நன்றி சித்ரா

நன்றி தேவன் மாயம்

நன்றி பத்மா

நன்றி ஹுஸைனம்மா, ஆமாங்க, இந்த ரெண்டு ஜீனை கண்டு பிடிச்சு இருக்காங்க, ஆனா இது tip of the iceberg தான், இன்னும் நிரைய காரணிகள் இருக்கலாம். ஆனாலும் personalized medicine இப்பொ வர ஆரம்பிச்சு இருக்கு.