என் கணவர் ஆபீஸ்க்கு பிங்க் சட்டை உடுத்தி செல்ல மாட்டார். ஏன் என்று கேட்டால் "ஆபீஸ்ல ஒரு மாதிரி பார்கிறாங்க" என்று சொல்லுவார். நானும் சரி என்று விட்டு விடுவேன்.
முகுந்த் பிறப்பதற்கு முன் வரை எனக்கு பிங்க் அல்லது ப்ளூ வித்தியாசம் அதிகம் தெரியாது. ஆனால் குழந்தை உண்டாகி இருப்பதாக அனைவரிடமும் சொல்ல ஆரம்பித்தவுடன் அமெரிக்க நண்பர்கள் கேட்ட முதல் கேள்வி "Have you found out the sex of the baby?" என்று கேட்டனர்.
நாங்கள் "இல்லை ஒரு surprise ஆக இருக்கட்டும் என்று விட்டு விட்டோம்" என்று சொன்னோம் (இங்கு என்ன குழந்தை என்று பெரும்பாலும் 16 -20 ஆவது வாரம் சொல்லிவிடுவார்கள்).
உடனே அவர்கள் "Then how would you purchase clothes for the baby?" என்று கேட்பார்கள். எனக்கு அதன் அர்த்தம் முதலில் தெரியவில்லை.
பிறகு தான் தெரிந்தது. பெண் குழந்தை என்றால் பிங்க், பர்பிள் போன்ற நிறங்களில் உடை உடுத்த வேண்டும். ஆண் குழந்தை என்றால் ப்ளூ, கிரே போன்று எடுக்க வேண்டும் என்று.
பெண் குழந்தைகளுக்கு வேறு நிறங்களில் உடை உடுத்தினாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் ஆனால் ஆண் குழந்தைகளுக்கு பிங்க், ரெட் அல்லது பர்பிள் உடை உடுத்தினால் ஒரு மாதிரி பார்ப்பார்கள். சிலர் வேண்டுமென்றே "Boy or Girl?" என்று கேட்ப்பார்கள்.
என் அம்மா பிரசவத்திற்கு அமெரிக்கா வரும் முன் இந்தியாவிலிருந்து நெறைய துணிமணிகள் வாங்கி வந்து விட்டார்கள். அதில் எல்லா நிறங்களும் அடங்கும். அவற்றை எல்லாம் முகுந்துக்கு உடுத்தினால் வேண்டுமென்றே இந்தியர்கள் சிலரே "என்ன பொம்பள பிள்ள மாதிரி டிரஸ் பண்ணி விட்டிருக்கீங்க " என்று கேட்கிறார்கள்.
அதே போல விளையாட்டு சாமான்கள் வாங்குவதிலும் வித்தியாசம் உண்டு. டோரா பொம்மை என்றால் பெண் குழந்தைகளுக்கு. Spongebob , தாமஸ் ட்ரெயின் இவை போன்றவை ஆண் குழந்தைகளுக்கு. நியூட்ரல் என்று சில நிறங்களும் பொம்மைகளும் உண்டு. அவை பச்சை, மஞ்சள், வெள்ளை ஆகிய நிறங்களும். winnie pooh போன்ற கரடி பொம்மைகளும் அதில் அடங்கும்.
என் அம்மா இந்தியாவில் இருந்து வாங்கி வந்த டோரா பொம்மையை பார்த்து இங்கு இருந்த ஒரு இந்திய பெண்குழந்தை "Dora for baby boy, how is it possible?" என்று கேட்டது. அந்த குழந்தையின் அம்மாவும் அதே கேள்வியை வேறு மாதிரி என்னிடம் கேட்டார்கள்.
என்ன பிங்க் கோ என்ன ப்ளூ வோ, இந்தியாவில் இருக்கும் வரை இது போன்று எந்த வித்தியாசமும் நான் பார்த்ததில்லை. என்னை பொறுத்தவரை ராமராஜன் முதல் ரஜினி காந்த் வரை பிங்க் சட்டை போட்டு டான்ஸ் ஆடி பார்த்து இருக்கிறேன். அதை விட பெரும்பாலான தெலுங்கு நடிகர்கள் வானவில் கலரில் தான் உடை உடுத்துவார்கள் அவர்களை எல்லாம் பார்த்தால் இங்கு இருப்பவர்கள் என்ன சொல்வார்களோ.
13 comments:
இதெல்லாம் டூ மச் முகுந்தம்மா.. நாம நாமா இருந்துட்டா போறும். அமெரிக்க கலாச்சாரம் நம்மை பாதிக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன். நான் சின்ன குழந்தையா இருந்தப்போ ட்ரெயின் எல்லாம் வெச்சு விளையாடி இருக்கேன். ப்ளூ கவுன் போட்டுண்டு இருக்கேனே.. இவங்க ரொம்ப ஓவரா பண்றாங்க. கண்டுக்காதீங்க.. ஐ ஆம் தேர் வித் யூ..
கல்யாணமான புதுசுல எங்கம்மா ரங்குவுக்கு ஒரு லைலக் பெர்முடா வாங்கிட்டாங்க. அதைப்போட்டுண்டு கனடா அண்ணா முன்னாடி போனா ஒரே ரகளை. இப்போ இதை மாத்தினாத்தான் ஆச்சு. தீஸ் ஆர் கர்ல் கலர்ஸ்ன்னு பயங்கர ரோதனை. இத்தனைக்கும் ரங்கு கம்ப்ளெயின் பண்ணலையாக்கும். ஹ்ம்ம்.. நேரம் என்னத்தை சொல்ல?
ஆமாங்க எனக்கும் இந்த வித்யாசம் தெரியாது. டிசம்பர் மாதம் அமெரிக்கா வாழ் உறவினர் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த போது, அவர் இதைத்தான் சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது.
என் மகன் அரவிந்த்க்கு எல்லா கலர்லேயும் டிரஸ் போட்டு அழகு பார்த்து இருக்கோம்.
//என்னை பொறுத்தவரை ராமராஜன் முதல் ரஜினி காந்த் வரை பிங்க் சட்டை போட்டு டான்ஸ் ஆடி பார்த்து இருக்கிறேன். //
ஏனுங்க, தலீவர் "ஆயிரத்தில் ஒருவன்’ படத்துலே "ஓடும் மேகங்களே.." பாட்டுலே பின்க் கலரிலே, அதுவும் பேக்-பட்டன் வைச்ச சட்டை போட்டுக்கிட்டுக் கலக்கியிருப்பாரே! கவனிக்கலியா...? :-)
நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா, வெறும் கற்பனைதானோ?
அங்கும் இந்த மாதிரி, நம்பிக்கைகள் அதிகம் உண்டா?
தகவலுக்கு நன்றி.
அட போங்க முகுந்த் அம்மா .குழந்தைகளுக்கு எது அழகோ அதைப் போட்டு ரசிப்போம் வாங்க .
உங்க பல்லை இன்னும் புடுங்கலையா? :-))
வெளிநாட்டுக் காரங்க பண்ற அலும்பு ரொம்ப ஓவர்தான்!! இதப் பாத்துட்டு இந்தப் பசங்க, பிங்க்ல வாங்க மாட்டேன்னு நிக்கிறாங்க. மிட்டாய் ரோஸ் கலர்ல பையனுக்குச் சட்டை போட்டு பாக்கணுன்னு ரொம்ப ஆசையாருக்கு, ஹூம்!!
Pink or Blue?
.... When you are in Rome, be a roman......ha,ha,ha,ha,ha....
just kidding!
ஹுஸைனம்மா said...
//உங்க பல்லை இன்னும் புடுங்கலையா? //
போன வாரமே ரெண்டு பல்ல பிடுங்கியாச்சு. இன்னும் வலி இருக்கு. இந்த இடுகை எப்பவோ எழுதினது. பல்வலி குணமாகிறவரை இருக்கட்டுமேன்னு போஸ்ட் பண்ணி வச்சேன்.
//மிட்டாய் ரோஸ் கலர்ல பையனுக்குச் சட்டை போட்டு பாக்கணுன்னு ரொம்ப ஆசையாருக்கு, ஹூம்!!///
ஹுசைன்னம்மா ... எம்மா இந்த கொலைவெறி ஆகாதும்மா.... :))
அந்நாளும் colour discriminationன்னு சொல்லிட்ட தப்பு ஆயிடுமா.. ரொம்பத்தான்..!!
இதையெல்லாம் பாத்தா நம்ம ஊருல எத்தனை சமத்துவம் பாத்துக்குங்க :))
நம்ம ராமராஜன், அமெரிக்க பிரசிடெண்ட் ஆயிட்டா எல்லாம் சரியாயிரும்!
பிறந்த நாள் அட்டை கூட பார்த்து எடுக்க வேண்டும். :)
//என்ன பிங்க் கோ என்ன ப்ளூ வோ, இந்தியாவில் இருக்கும் வரை இது போன்று எந்த வித்தியாசமும் நான் பார்த்ததில்லை//
Ditto....நானும் இதே டயலாக் இங்க வந்த புதுசுல சொல்லி இருக்கேன். என்ன கலரோ என்ன கண்றாவியோ போங்க
Post a Comment