Friday, May 14, 2010

எனது கட்டுரை யூத்புல் விகடனில்

அனைவருக்கும் ஒரு நற்செய்தி,

HFCS பற்றிய எனது பின்வரும் கட்டுரை விகடன் முகப்பு பகுதியில் வெளிவந்து இருக்கிறது.

http://www.vikatan.com

"பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்ற பழமொழி கேள்விப்பட்டு இருக்கிறோம். "Corn இல்லாமல் எந்த உணவுமே இல்லை" என்று புதிதாக ஒரு மொழி வரும் போல இருக்கிறது.

ஆச்சரியமாக இருக்கிறதா? எப்படி என்று அறிய கீழே உள்ள கேள்விகளில் எத்தனை கேள்விகளுக்கு நீங்கள் 'ஆம்' என்று பதில் சொல்லுகிறீர்கள் பார்ப்போம்.

நீங்கள் காலையில் எழுந்தவுடன் breakfast-க்கு corn-flakes அல்லது Grits என்பதை போன்று உண்பவரா?

உங்களுக்கு கோக் அல்லது பெப்சி இல்லாமல் வாழவே முடியாதா?

ஐஸ்கிரீம் சாப்பிடுபவரா?

உணவகங்களில் டோமோடோ சூப் அல்லது ஏதேனும் ஒரு சூப் குடிப்பவரா?

எந்த உணவுக்கும் ketchup தொட்டு கொள்பவரா?

சாக்லேட், பிஸ்கட், Candy சாப்பிடுபவரா?

பீர் குடிப்பவரா?

விக்ஸ், இருமல் டானிக் எடுத்து கொள்பவரா?

சாலட் சாப்பிடும் போது சாலட் டிரெஸ்ஸிங் போட்டுகொள்பவரா?

Pizza சாப்பிடுபவரா?

பிரட் சாப்பிடுபவரா?

மேலே கேட்கப்பட்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு நீங்கள் 'ஆம்' என்று பதில் அளித்திருந்தால் நீங்கள் சோளத்திலிருந்து எடுக்கப்படும் சோள சர்க்கரை - High Fructose Corn Syrup (HFCS) என்ற சுவையூட்டியை தினமும் உண்கிறீர்கள் என்று அர்த்தம்.

இந்த சர்க்கரை அதிக ஆபத்தானது. தற்போதைய இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தால் இந்த சர்க்கரை கலந்த உணவுகளை அதிகம் உண்கிறார்கள். இதுகுறித்து இளைம் தலைமுறையினருக்கு பெற்றோருக்கும் விழிப்பு உணர்வு இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

சோளத்தில் உள்ள கார்போஹைடேரேட் பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு fructose எனப்படும் சர்க்கரையாக மாற்றபடுகிறது. இந்த fructose, corn syrup (100% glucose) உடன் மேலும் சுவையூட்ட சேர்க்கபடுகிறது.
சோளத்தின் விலை கரும்பின் விலையை விட மலிவாதலால் இந்த HFCS மேற்குறிப்பட்ட எல்லா உணவு பொருள்களிலும் சர்க்கரைக்கு பதில் அமெரிக்காவில் முதலில் சேர்க்கபட்டது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுகளிலும் அதிக அளவு இது சேர்க்கப்பட்டு வருகிறது.

சரி, இது நல்ல விஷயம் தானே என்று நினைத்தால், இல்லை!

கரும்பு சர்க்கரையில் இருக்கும் கார்போஹைடேரேட் அளவை விட இந்த சோள சர்க்கரையில் இருக்கும் கார்போஹைடேரேட் அளவு அதிகம் என்பதால், அதில் தயாரித்த உணவை செரிக்க நம்முடைய உடல் அதிக அளவில் இன்சுலின் தயாரிக்க வேண்டி வரும். முடிவு சர்க்கரை வியாதி.

இந்தியாவில் தற்போது இருக்கும் மக்கள் தொகையில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக புள்ளியியல் தெரிவிக்கிறது. இதிலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கமான இந்த சோள சர்க்கரை உணவுகள் கொண்ட பொருள்களை உண்ண ஆரம்பித்தால் இந்தியாவில் அனைவரும் வெகு விரைவில் சர்க்கரை வியாதிக்காரர்கள் ஆகி விடுவோம்.

இதனை தவிர்க்க என்ன செய்யலாம்?

முடிந்த அளவு HFCS உள்ள பொருள்களை உண்ணாமல் தவிர்க்கலாம்.

கடைகளில் பொருள்களை வாங்கும் போது லேபிள்களை படித்து, அதில் HFCS என்ற பொருள் இருக்கிறதா? என்று பரிசோதித்த பின் வாங்கலாம்.

தவிர்க்க முடியாத காரணத்தால் உண்ண நேர்ந்தால் அளவாக உண்ணலாம்.

தவறாமல் உடற்பயிற்சி செய்யலாம்.

நமது பாரம்பரிய உணவு முறையில் அதிகம் உபயோகபடுத்தபடும் கரும்பு சர்க்கரை, வெல்லம் மற்றும் பனை வெல்லம் போன்றவை இயற்கையானவை. எந்த வேதியியல் மாற்றத்துக்கும் உட்படுத்தபடாதவை ஆகையால் முடிந்த அளவு இயற்கையான இனிப்பை குறித்த அளவு உண்ணுவோம் உடல் நலம் காப்போம்.

*

15 comments:

ராமலக்ஷ்மி said...

அவசியமான தகவல்கள்.

வாழ்த்துக்கள் முகுந்த் அம்மா.

சேட்டைக்காரன் said...

நானே தமிழ்மணத்துக்கு அனுப்பியதோடு, முதல் ஓட்டும் போட்டாச்சு! :-)

வாழ்த்துக்கள்!

அநன்யா மஹாதேவன் said...

வாழ்த்துக்கள் முகுந்தம்மா.. மிகவும் உபயோகமான தகவல்கள். நமக்கெல்லாம் சர்க்கரைப் பொங்கல் தான் சரி.(வெல்லம்) மேற்கத்திய உணவு வகைகளை விரும்புவதில்லை. :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ :( என்னங்க எத சாப்பிட்டாலும் இப்படி சொன்னா .. ந்ல்லதுன்னு சொல்றதெல்லாம் நாங்க சாப்பிடறதெ இல்லையாக்கும் :))

padma said...

congrats

அஹமது இர்ஷாத் said...

வாழ்த்துக்கள் யூத்ஃபுல் விகடனில் உங்கள் கட்டுரை வந்ததற்கு....

Dr.P.Kandaswamy said...

பாராட்டுகள்.

மனோ சாமிநாதன் said...

முதலில் எனது வாழ்த்துக்கள்!

கார்ன் சிரப் பற்றிய விழிப்புணர்வைத்தூண்டுமாறு எழுதப்பட்ட அருமையான பதிவு.

அமைதி அப்பா said...

High Fructose Corn Syrup (HFCS) பற்றி தெரிந்து கொள்ள வைத்ததற்கு நன்றி.
முடிந்த அளவுக்கு தவிர்க்க முயற்சிப்போம்.

ஹுஸைனம்மா said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
ஓ :( என்னங்க எத சாப்பிட்டாலும் இப்படி சொன்னா .. //

இப்படித்தான் தோணுதுப்பா!! கார்ன் நல்லது நல்லதுன்னாங்க; ஆனா அதிலயும் எதாவது பண்ணி இப்படி கெடுதலாக்கிடுறாங்க!!

மத்ததெல்லாம் சரி, அடிக்கடி சாப்பிடற பிரட், கார்ன் ஃப்ளேக்ஸ் கூட இப்பிடியான்னு வருத்தம்தான் வருது.

உபயோகமான தகவல். நன்றி முகுந்த் அம்மா. மற்ற உணவுகளையும் தவிர்க்க உதவும்.

கபீஷ் said...

ரொம்ப உபயோகமான பதிவு. நன்றி. எல்லாமே புதிய தகவல்கள் எனக்கு

devathai said...

Hello, i am navaneethan from 'DEVATHAI' which is a tamil bi-monthly magazine. in our magazine, we have a separate page for lady bloggers. we planned to publish your blog in this issue. i want just your o.k. and a recent photograph.
my mobile no is. +91 9500019222
thanks
Navaneethan

கோமதி அரசு said...

நல்ல அவசியமான பதிவு.

வாழ்த்துக்கள் முகுந்தம்மா.

அப்பாவி தங்கமணி said...

wow... congrats for publishing in vikatan

KaRa said...

Really good information. Thanks for sharing...!