Monday, May 3, 2010

என்ன கொடுமை இது?

இரண்டு மூன்று வாரங்களுக்கு பதிவிலிருந்து விடுமுறை பெறலாம் என்று நினைத்தாலும் என்னை விட மாட்டேன் என்கிறது இன்று நான் கேட்ட செய்தி.

செய்தி இதுதான், இந்தியாவில் என் அம்மாவீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்த சுமார் எழுபது வயது பாட்டி எங்கேயோ சென்றுவிட்டு பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு ஆட்டோ காரர் அவரை அணுகி,

"நீங்க கண்ணனோட அம்மாதானே மா, என்ன மா இந்த பக்கம்" என்று கேட்டு இருக்கிறார். அந்த அம்மாவுக்கு விசாரித்தவர் யார் என்று தெரியாமல் இருந்தாலும் தன் பையன் பெயர் சொன்னதால் "யாரப்பா நீ" என்று கேட்டு இருக்கிறார். அந்த ஆட்டோ காரர் தான் கண்ணன் உடன் கூட படித்தவர் எனவும் வீட்டுக்கு எல்லாம் வந்திருக்கிறேன் எனவும் சொல்ல அந்த பாட்டி நம்பி இருக்கிறார்.

பிறகு அந்த பாட்டியை அழைத்து சென்று கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்து இருக்கிறார் அந்த ஆட்டோ காரர். அப்புறம் என்ன நடந்தது என்று பாட்டிக்கு தெரியவில்லை. பிறகு நினைவு வந்த போது பாட்டியின் நகை களவாடப்பட்டு, சேலை எல்லாம் தாறுமாறாக இருந்திருக்கிறது (என்ன நடந்திருக்கும் என்று யூகித்து கொள்ளுங்கள்).

இதில் என்ன கொடுமை என்றால் அந்த பாட்டியின் பையன் கண்ணன் ஒரு போலீஸ் அதிகாரி என்பதே.

18 comments:

Thekkikattan|தெகா said...

அடப் பாவிங்களா! உருப்பிட்ட மாதிரிதான்...

ப.கந்தசாமி said...

கலி முற்றுகிறது என்பதைத் தவிர என்ன சொல்லமுடியும்?

Chitra said...

இந்திய கலாச்சாரம் மாறும் போது, சொல்லிட்டு மாத்துங்கப்பா..... இல்லை, இதை எந்த கதையில் சேர்ப்பது? கஷ்ட காலமே!

பத்மா said...

என்ன சொல்வது ? தெகிட்டான் சொன்னமாதிரி அடப்பாவிகளான்னு தான் வருது கேட்டோன்ன !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\Chitra said...

இந்திய கலாச்சாரம் மாறும் போது, சொல்லிட்டு மாத்துங்கப்பா..... இல்லை, இதை எந்த கதையில் சேர்ப்பது? கஷ்ட காலமே!//

அதானே :(

அமைதி அப்பா said...

மனது வலிக்கிறது...

இந்தமாதிரி பதிவு போட்டு, உங்களுடைய
அறுவை சிகிச்சைப் பற்றியும், உங்கள் உடல்நிலை குறித்தும், விசாரிக்கும் எண்ணத்தை மறக்கடித்துவிட்டீர்கள்.

சந்தனமுல்லை said...

:-((

settaikkaran said...

இந்த மாதிரி அடிக்கடி செய்தி வருது! பெரிய கொடுமை தான் இது!

Ananya Mahadevan said...

:O
மஹாக்கேவலமாக இருக்கு!
கஷ்டம் கஷ்டம்!!!!!!!!!!!!

இராகவன் நைஜிரியா said...

உலக மகா கொடுமையா இருக்கே.. காசுக்காக இப்படியா கொடுமை பண்ணுவாங்க.

ஹுஸைனம்மா said...

//Chitra said...
இந்திய கலாச்சாரம் மாறும் போது, சொல்லிட்டு மாத்துங்கப்பா.....//

நீங்க யூ.எஸ். போனதுனாலத் தெரிய்லை போல. அதெல்லாம் மாத்தி வருசம் 16 ஆச்சு!!

Anonymous said...

அடப்பாவமே. பாட்டிக்கு ஒண்ணும் ஆகலியே

Dineshapps said...

ellathuleyum emathu... there used to be a time i was proud to say i am from TamilNadu but sadly no more. I am not saying this is happening only in TamilNadu but my point is these things are now happening in TamilNadu.

முகுந்த்; Amma said...

@Thekkikattan|தெகா

//அடப் பாவிங்களா! உருப்பிட்ட மாதிரிதான்..//
எங்கே போகிறது சமூகம் என்று தெரியவில்லை.

@Dr.P.Kandaswamy

//கலி முற்றுகிறது என்பதைத் தவிர என்ன சொல்லமுடியும்?//

அப்படி தான் நினைக்க தோன்றுகிறது.

முகுந்த்; Amma said...

@சித்ரா

//இந்திய கலாச்சாரம் மாறும் போது, சொல்லிட்டு மாத்துங்கப்பா..... இல்லை, இதை எந்த கதையில் சேர்ப்பது? கஷ்ட காலமே//

ஹுச்சைனம்மா சொன்ன மாதிரி எப்போவோ இந்திய கலாச்சாரம் மாறிடுச்சு போல. நமக்கு தான் தெரியல.

@பத்மா

//என்ன சொல்வது ? தெகிட்டான் சொன்னமாதிரி அடப்பாவிகளான்னு தான் வருது கேட்டோன்ன //

உண்மைதான் பத்மா. எங்க அம்மா இதை பத்தி சொன்னவுடனே நான் அடப்பாவிங்களா அப்படின்னு தான் சொன்னேன்

முகுந்த்; Amma said...

@சந்தன முல்லை

//:-((//

ரொம்ப வருந்த தக்க நிகழ்ச்சி தான் இது.

@சேட்டைக்காரன் said...
?/இந்த மாதிரி அடிக்கடி செய்தி வருது! பெரிய கொடுமை தான் //



அடிக்கடி வேற நடக்குதா இந்த மாதிரி. அடக்கடவுளே!



@ அநன்யா மஹாதேவன் said...
//:O
மஹாக்கேவலமாக இருக்கு!
கஷ்டம் கஷ்டம்!!!!!!!!!!//



என்ன ஆகப்போகுதோ பயம்மா இருக்கு.



@இராகவன் நைஜிரியா said...

//உலக மகா கொடுமையா இருக்கே.. காசுக்காக இப்படியா கொடுமை பண்ணுவாங்க//

என்ன என்னவோ பண்ணுறாங்க காசுக்காக இப்போ.

முகுந்த்; Amma said...

முத்துலெட்சுமி/muthuletchumisaid...
\\Chitra said...

இந்திய கலாச்சாரம் மாறும் போது, சொல்லிட்டு மாத்துங்கப்பா..... இல்லை, இதை எந்த கதையில் சேர்ப்பது? கஷ்ட காலமே!//

அதானே :(

//

எங்க போகுதுன்னே தெரியல இந்திய கலாசாரம், ரொம்ப கஷ்டமா இருக்கு.


@அமைதி அப்பா

//மனது வலிக்கிறது...//

உண்மை.

//இந்தமாதிரி பதிவு போட்டு, உங்களுடைய
அறுவை சிகிச்சைப் பற்றியும், உங்கள் உடல்நிலை குறித்தும், விசாரிக்கும் எண்ணத்தை மறக்கடித்துவிட்டீர்கள்//

உடல் நிலை பரவாயில்லை. இப்போது வலி குறைந்து உள்ளது.

nandri.

முகுந்த்; Amma said...

@சின்ன அம்மிணி said...

//அடப்பாவமே. பாட்டிக்கு ஒண்ணும் ஆகலியே//

பாட்டி இன்னும் ஷாக் ல இருக்காங்கன்னு கேள்விபட்டேன். சீக்கிரம் குணமாகனும்.

@SQL Serever DBA said...

//ellathuleyum emathu... there used to be a time i was proud to say i am from TamilNadu but sadly no more. I am not saying this is happening only in TamilNadu but my point is these things are now happening in TamilNadu.//

எல்லா இடத்திலையும் இது போல நடந்துட்டு இருக்கு. தமிழ் நாட்டுல இப்போ இதை மாதரி அடிக்கடி நடக்குதுன்னு சொல்லுறாங்க.