Tuesday, March 24, 2015

புதுமைகளாகும் நமது பழைய பழக்கவழக்கங்கள்!

சில நாட்களுக்கு முன் தொண்டை கமறல் எடுக்கிறது, அலர்ஜியாக இருக்கலாம் என்று என் கூட வேலை பார்க்கும் அமெரிக்கரிடம்  சொல்லி கொண்டு இருந்தேன். உடனே அவர், "Have Turmeric Milk and Honey" என்றார். அட பாவி, என் அம்மா எப்போது சளி பிடித்தாலும் "மஞ்சள் பொடி பால்" கொடுத்து படுத்துவார்கள். அப்பொழுது எல்லாம், உங்க வைத்தியத்தை என்கிட்டே கொடுக்காதீங்க என்று சண்டை போட்டு இருக்கிறேன். ஆனால் அதுவே இப்பொழுது நிறைய மக்கள் இங்கே செய்கிறார்கள்.

அதே போல, எப்போது தலை வலி தலை  பாரம் என்றாலும் எங்கள் வீட்டில் ஆவி பிடிக்க சொல்வார்கள். அது இந்த ஊரில் ஸ்டீம் பாத், சைனஸ் பிரச்னை என்று டாக்டரிடம் நீங்கள் சென்றாலும் அவரும் இதையே தான் சொல்வார், ஏனெனில் சைனஸ் குழாய் சிறியது அதில் ட்ரைனஸ் காரணமாக பாக்டீரியா தாக்குதல் இருக்கலாம் அதனால் தலை பாரம் என்று ஆரம்பிக்கும் போதே ஆவி பிடிப்பதின் மூலம் ஈரப்பதம் தக்க வைக்க படுகிறது.

எங்கள் வீட்டில் தினமும் தயிர் சாப்பிட சொல்வார்கள் அதுவும்  வீட்டில் தோய்த்த தயிர். அப்பொழுதெல்லாம் காரணம் தெரியாத எனக்கு இப்போது probiotic, probiotic என்று எங்கு பார்த்தாலும் ஒரே புலம்பலாக இருப்பதை பார்த்து சிரிக்க தோன்றுகிறது. probiotic என்பது நம் உடலுக்கு நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அவை வீட்டில் தயிர் தோய்பதால் இயற்கையாகவே நமக்கு கிடைக்கிறது. உடலுக்கு நன்மையையும் பயக்கிறது.

இன்னொன்று எனக்கு சிரிப்பை தந்தது, போன வாரம் முகுந்த் க்கு உடம்பில் ராஷ் என்று டாக்டரிடம் அழைத்து சென்ற பொது அவர் சொன்னது "Apply cocunut oil, thats best moisturizer " என்று. அட போங்கப்பா...எங்க அப்பா சின்ன வயதில் அடிக்கடிஎங்களிடம்  சொல்வது
 இது தான், "தேங்காய் எண்ணெய் தடவு தினமும்" என்று. இது இப்போதெல்லாம் புது trend இங்கே.
 தலையில் தடவுகிறார்கள். நாங்க எல்லாம் டெய்லி எண்ணெய் தடவுற ஆளுங்கப்பா 
எங்க கிட்டயேவா என்று கேட்க்க தோன்றுகிறது.

அதே போல, புது beauty secret என்று என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் வந்து ஒரு கிரீம் பற்றி சொன்னாள் . உடல் பளபளா என்று ஆகும், சுருக்கங்கள் இருக்காது என்ரெல்லாம் சொன்னதை பார்த்து ,  என்னவென்று அதன் contents பார்த்தால் எல்லாம் மஞ்சள், aloevera என்றிருந்தது. இதை தானே எங்க அம்மா சிறு வயதில் இருந்து மஞ்ச தேச்சு குளி  என்று சொல்வார்கள் என்று நினைத்து கொண்டேன்.

"History and fashion repeats itself " என்பார்கள். பல விசயத்தில் அது உண்மையாகவே  இருக்கிறது.


5 comments:

துளசி கோபால் said...

என்ன இருந்தாலும் அதை இங்கிலிபீஸுலே சொல்றதால்தான் வீரியம் அதிகம் முகுந்த் அம்மா:-)))))

காரிகன் said...

Grandma medicine என்பது உலகம் முழுதும் உள்ள வழக்கமான நடைமுறைகளில் ஒன்றுதானே. இதில் இது எங்கள் நாட்டுக்கு மட்டும்தான் சொந்தம் என்று சொல்வது விந்தையாக இருக்கிறது. இப்படியெல்லாம் பார்த்தால் தேங்காய் முதல் மல்லிகை வரை நாம் பெருமை பேசும் பல விஷயங்கள் நம் நாட்டை சேர்ந்தது கிடையாது.

ப.கந்தசாமி said...

நல்லா இருக்கு. சுவத்துக் கீரையை வழிச்சுப் போடு சொரணை கெட்டவளேன்னானாம். அப்படீல்ல இருக்கு.

சேக்காளி said...

மம்மி செஞ்சு தர்றதுக்கும் மல்டி நேஷனல் கம்பெனி செஞ்சு தர்றதுக்கும் வித்தியாகம் இருக்கே.
மல்டி நெஷனல் கம்பெனியோட pack எவ்ளோ அழகா இருக்கு இல்ல?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

துளசியக்கா! அருமையாகச் சொல்லிவிட்டார். அதே!