Wednesday, June 24, 2015

உண்மையில் இந்தியா வளர்ந்து இருக்கிறதா?



விமான பயணத்தில்  பொருளாதாரம் பற்றிய ஒரு டாகுமெண்டரி பார்க்க நேர்ந்தது. அது உலக பொருளாதாரங்கள் எப்படி வளர்ந்து கொண்டு இருக்கிறது எப்படி இன்னும் சில வருடங்களில் வளரும் என்ற உலக வங்கியின் International Monetary Fund ப்ரோஜெச்சன். அதன் கூற்றுப்படி இந்தியா மிக மிக வேகமாக வளர்ந்து வருகிறது.  IMFடைரக்டர்  Christine Lagarde அவர்களின் கூற்றுப்படி இந்திய பொருளாதார வளர்ச்சி இந்த வருடம் சீனா பொருளாதரத்தை மிஞ்சிவிடும் என்று கூறுகிறார். இவை எல்லாம் கேட்கும் போதும் பார்க்கும் போதும் ரொம்ப சந்தோசமாக இருந்தது. 

இன்றைய சூழலில் வீட்டுக்கு ஒரு சாப்ட்வேர் மக்கள் இருக்கிறார்கள், சாப்ட்வேர் தவிர வேறு துறை எவ்வாறு வளர்ச்சி அடைந்து  இருக்கிறதா? இந்த சாப்ட்வேர் துறையில் ஏற்படும் வளர்ச்சி மட்டுமே பொருளாதரத்தை உயர்த்துமா? என்று எனக்குள் கேள்விகள். 

இப்பொழுது சீன பொருளாதரத்தை எடுத்து கொள்ளுவோம். இந்தியாவில் புழங்கும் 99% எலேக்ட்ரோனிக் பொருள்கள் சீனாவில் இருந்து வந்தவை. உலகில் எங்கு சென்றாலும் எந்த பொருள்கள் வாங்கினாலும் அதில் made in china tag இருக்கும். துணிமணியில் இருந்து பிளாஸ்டிக், வீட்டு உபயோக பொருட்கள் என்று அனைத்தும் சீனா மார்க்கெட் ஆக்கிரமித்து இருக்கிறது. இன்னும் 20 வருடத்திற்கு தேவையான infrastructure, ரோடுகள், கழிப்பறை, சுகாதாரம்  என்று நகரங்களில் மட்டும் அல்ல, கிராமங்களிலும் கூட சீனாவில்  அடிப்படை வசதிகள் பக்காவாக இருக்கின்றன.

மதுரை வந்த பிறகு சுற்றி இருக்கும் infrastructure பார்க்கும் போது,  சாலை வசதி ,சுகாதார வசதி, கழிப்பறை வசதி, வேஸ்ட்மானேஜ்மென்ட் வசதி போன்ற வற்றை பார்க்கும் போது இந்தியா உண்மையில் சீனா பொருளாதாரத்தை மிஞ்சுமா?,இது சாத்தியமா என்று பல கேள்விகள். 

உதாரணமாக, மதுரையில் காலை நேரங்களில் ஏர்போர்ட் பை பாஸ் ரோட்டில் இருந்து எங்கு சென்றாலும் ரோட்டை அடைத்து கொண்டு மனித கழிவுகளை ஏற்றிக்கொண்டு செல்லும் மாநகராட்சி வண்டிகளும் குப்பை எடுத்து செல்லும் வண்டிகளும் செல்கின்றன. மூக்கை பிடித்து கொண்டு பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. காலை நேரங்களில் பள்ளி செல்லும் குழந்தைகள், சிறுவர்கள் கல்லூரி செல்லுவோர் என்று பலரும் அவசர கதியில் கிளம்பி பறந்து கொண்டு இருக்கும் பொழுது பல நேரங்களில் குப்பை எடுக்கும் வண்டிகளில் இருந்து குப்பை முகத்தில் அடிப்பதை அல்லது கழிவு பொருட்களை எடுத்து செல்லும் வண்டிகளில் இருந்து சிதறும் கழிவை தடுக்க முடிவதில்லை.
மற்ற நாடுகளில் இருப்பது போல, ஷிப்ட் முறையில், இரவு நேரங்களில் இப்படி பட்ட கழிவு பொருட்களை எடுத்து செல்வது அல்லது ரோடு கூட்டுவது குப்பை கூட்டுவது என்று செய்தால் எப்படி இருக்கும் என்று எனக்குள் கேள்விகள்.

எங்கும் எதிலும் குப்பை, எல்லா இடங்களிலும் முத்திர வாடை, மனித கழிவுகள் அகற்ற கழிப்பறைகள் கூட இல்லை என்று ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் நிறைய வீடுகள். நான் சொல்லுவது எதோ ஒரு கிராமம் இல்லை, ஆனால் மதுரை போன்ற நகரத்தின் நிலை. 

அடுத்து மக்களுக்கு இருக்கும் இலவச மோகம். உதாரணமாக என் சொந்தகார பெண் நல்ல வசதியுடன் போன வருடம் வீடு வாங்கி செட்டில் ஆகி விட்டாள். அவளுக்கு இப்பொழுது ஒரே கவலை. அது அவள் வோட்டிங் வார்டு மதுரையின் வேறு ஏரியா வில் இருப்பது தான். அப்படி இருப்பதால் இன்னும் ஆறு மாதத்தில் நடக்க போகும் எலெக்சனில் இலவசமாக வரும், மிக்சி கிரைண்டர், அடுப்பு , டிவி...போன்ற எதுவும் கிடைக்க போவதில்லை என்று வருத்தம். காசு வாங்கி கொண்டு உரிமையை விக்கிறோம் என்று யாருக்கும் தோணுவது இல்லை.  எங்கே செல்கிறது இந்தியா?

எந்த விசயத்தில் இந்தியா முன்னேறி இருக்கிறது என்ற கேள்விக்கு,  எனக்கு கிடைத்த பதில் என்னவோ இங்கு இருக்கும் கவுன்சிலருக்கும், வார்டு மெம்பருக்கும், மேயருக்கும், MLA களுக்கும், அமைச்சர்களுக்கும், முதல் அமைச்சர்களுக்கும், MP களுக்கும் எவ்வளவு பணம் அடிப்பது என்று போட்டி நடப்பதில் இந்தியா மிக முன்னேறி இருக்கிறது. மிக மிக முன்னேறி இருக்கிறது. இதனை தவிர எனக்கு தெரிந்து முன்னேற்றமாக ப்ராஜெக்ட் செய்யபடுவதெல்லாம் வெறும் மாயை போல தோன்றுகிறது.


டிஸ்கி.

இது என்னுடைய சொந்த அனுபவத்தில் பார்த்ததை, கேட்டதை வைத்து எழுதியது மட்டுமே. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

நன்றி.

4 comments:

Anonymous said...

இந்தியா போன்ற வளர்ந்தும் வளராத ரெண்டுங்கெட்டான் நாடுகளில் சுகாதாரத்துறையை நவீனப்படுத்துவது கடினமான காரியம் முகுந்தம்மா. கம்யூனிச நாடுகளை வைத்து நம்நாட்டை ஒப்பிடுவது ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது. எங்க மதுரயிலுருந்து நாடாளுமன்றத்துக்கு போன காம்ரேட் சாதாரணமா பஸ்ல வந்து போவாரு... பெழக்க தெரியாத ஆளுன்னு அடுத்ததடவ பாதி பேரு அவருக்கு ஓட்டு போடல... அப்படிப்பட்ட ஊர்ல இருக்கிற நாம சீனாவ வச்சு ஒப்பிடலாமா?
காதாரத்தை பொருத்தமட்டில், மதுரையும் செயற்கையை நாடாமல் இயற்கையை சார்ந்து இருந்தது. மழையும் வெயிலும் மதுரையை தங்களால் இயன்றளவு சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது. இட்லியோ... சாதமோ.. வாழையிலையில் மடித்து கொடுப்பதை மறந்து கொண்டிருக்கிறனர். மக்கள் தான் இயற்கையை விட்டு செயற்கையை பிடிக்க ஆரம்பித்துவிட்டனர். அடுத்ததலைமுறைக்கு நாம் விட்டு செல்லப்போவது மக்காத அசுத்தத்தையும், நினைவுகளில் பசுமையையும் தான்.

வருண் said...

என்னங்க நீங்க, பி எம் டபுள்யு, ஆடி, பெண்ஸ் னு ஆளாளுக்கு கார் வச்சிருக்காங்க. ஏ சி எல்லாம் சாதாரணமாக எல்லா வீடுகளிலும் இருக்கு. ஆணும் பெண்ணும் சாதாரணமாகக் குடிக்கிறாங்க. டேட்டிங், ப்ரிமாரிட்டல் செக்ஸ், எக்ஸ்ட்ரா மாரிட்டல் செக்ஸ், டைவோர்ஸ் எல்லாம் மலிந்து கெடக்கு. நட்பு, கற்பெல்லாம் அர்த்தம்ற்றதுனு நம்புறாங்க. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுதான் சரியான வழினு நம்புறாங்க. இதெல்லாம் முன்னேற்றமில்லையா? இதுக்கு மேலே எதை முன்னேற்றம்னு நீங்க சொல்றீங்கனு எல்ல்லாரும் குழம்புறாங்க! :)))

Mahe said...

The author said very correct and good comments as well.

Unknown said...

ஏட்டு படித்தவர்கள் வாழ்க்கை வேலை கிடைத்தவுடன் தற்குறியாய் ஆகிறார்கள். சமுகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நினைபதில்லை. சுய நலனுக்கு யாரோ கண்டுபிடித்த கடவுள் பற்றி என்றும் நினைப்பு, எல்லாம் அவன் பார்ப்பான் என்ற எண்ணம்.
தற்குறியாய் கடவுள் பெயரை சொல்லி மனிதர்களை மறந்ததனால் இன்றுள்ள நிலை.படித்தவன் என்ன குற்றம் செய்தாலும் வெளியே சட்டத்தை உடைத்து வெளியே வருகிறான்.
கடவுள் தத்துவமே இந்நிலைக்கு காரணம். கடவுளிடம் தட்சணை போடுவது ஊழல் தானே. தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற பேராசை தானே. கேள்வி கேட்டால் கடவுள் புளுகு வெளியாகும். அதற்கு பல புளுகு புராணம் எழுதி மற்ற மனிதரின் அறிவை மழுங்க அடிப்பது. இப்படி செய்பர்கள் எல்லாம் பெரிய மனிதராக வலம்வருவது.
இந்நிலையில் படிக்காதவன் என்ன செய்வான்? அரசியலில் இறங்கி அவனும் பென்ஸ்/ஆடி/இன்னோவா பெற்று ஓட்டுகிறான்.
சக மனிதரை உயர்த்த சமுகமே முயலவேண்டும். இங்கு எல்லாம் ஆக்க பட்டது மனித உழைப்பால்.தானாக நடக்காது.
(Affirmative action) பல நாடுகளில் சிறப்பான அணுகுமுறைகள் உண்டு.
கல்வி கூடங்களில் நன்னெறி கல்வி கட்டாய பாடமாக வேண்டும்.
சிந்தனை முடியாதது. அதற்கு பதில் எதை வேண்டுமானாலும் செய்ய மக்கள் முனைவர். அவர்களின் சிந்திக்கும் திறன் வளர்ந்தால் பல விசயம் சரியாகும்.