Saturday, August 7, 2010

முடிஞ்சாச்சு லீவு!

இரண்டு மாத இந்தியா விடுமுறை பயணம். சில, பல சந்தோஷங்கள், துக்கங்கள், நிறைய பயணங்கள், எனக்கு, அவருக்கு, முகுந்துக்கு என மாறி மாறி உடல் நல குறைவுகள் என ஒரு வழியாக நிறைவு பெற்றது. இன்னும் யாரும் ஜெட்-லாகில் இருந்து வெளி வராத நிலையில் ஒரு சின்ன அப்டேட் இது.

சிறு குழந்தையை வைத்து கொண்டு கிட்டத்தட்ட 18-24 மணிநேரம் விமான பயணம் ஒரு அவஸ்தை என்று தான் சொல்ல வேண்டும்.

விமானம் மேலெழும்பும் போதும் சரி, அல்லது கீழிறங்கும் போதும் சரி ஏற்படும் அழுத்த வேறுபாடால் காதுவலி ஏற்பட்டு குழந்தைகள் வீறிட்டு கத்த ஆரம்பிப்பார்கள். என்ன செய்தாலும் சமாதானம் ஆகமாட்டார்கள். அதுவும் நாம் செல்லும் விமானத்தில் நிறைய சிறு குழந்தைகள் இருப்பின், ஒரு குழந்தை அழுவதை பார்த்து அடுத்த குழந்தையும் கத்த ஆரம்பிக்கிறது. அதே போல Turbulence வந்தாலும் இதே பிரச்னை தான்.

அமெரிக்காவில் பிறந்த பெரும்பாலான குழந்தைகள் இந்தியா சென்றதும் அவர்கள் சந்திக்கும் மாற்றங்கள்; தட்ப வெப்ப சூழ்நிலை மாற்றம், கொசு போன்ற பூச்சி கடி, அப்புறம் தூசி, Pollution.

தட்ப வெப்ப மாற்றத்தால் சென்ற ஒரு சில தினங்களில் முகுந்துக்கு காய்ச்சல்.
இங்கே diaper போட்டு பழகியதால் அங்கு சென்றும் diaper உபயோகிக்க ஆரம்பிக்க விளைவு diaper rash. பிறகு தூசி. எப்போது தி.நகர் சென்று விட்டு வீடு திரும்பினாலும் வீடு திரும்பியவுடன் அவனுக்கு மூக்கு ஒழுக ஆரம்பித்து விடுகிறது.

நாங்கள் சென்ற ஒரு வாரத்திலேயே முகுந்துக்கு உடம்பு முழுதும் கொப்புளம் வர ஆரம்பித்து விட்டது. உள்ளூரில் உள்ள குழந்தைகள் மருத்துவர் ஒருவரிடம் சென்று என்ன காரணம் என்று விசாரிக்க அவர் எழுதி கொடுத்த prescription இது தான்

"கொசு கடியை தவிர்க்கவும், கொசுவை அடிக்கவும்".

Goodnight, Allout என்று எத்தனை கொசுவிரட்டிகள் உபயோகித்தாலும் இந்த கொசு பிரச்சனை தீர்ந்த பாடில்லை.

ஜெட்லாகில் இருந்து முழுதும் விடுபட்டதும் மீண்டும் சந்திப்போம்.

12 comments:

அமைதி அப்பா said...

வணக்கம் மேடம், மகிழ்ச்சி. உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் சந்தித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். தாங்கள் நல்ல ஓய்வுக்கு பின்பு, பதிவுலகம் வரவும். தங்களின் தமிழக அனுபவங்கள், பல பதிவுகளாக வரும் என்று நம்புகிறேன்.

//Goodnight, Allout என்று எத்தனை கொசுவிரட்டிகள் உபயோகித்தாலும் இந்த கொசு பிரச்சனை தீர்ந்த பாடில்லை.//

இதையெல்லாம் நாங்களும் கொசும் மறந்து, ரொம்ப நாளாச்சு...!

தமிழ் உதயம் said...

அமெரிக்கா... இந்தியா... எத்தனை வித்தியாசங்கள்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////சிறு குழந்தையை வைத்து கொண்டு கிட்டத்தட்ட 18-24 மணிநேரம் விமான பயணம் ஒரு அவஸ்தை என்று தான் சொல்ல வேண்டும்.
/////

மிகவும் கஷ்ட்டம்தான் . உங்களுக்கு இந்தியா பிடிக்குமா இல்லை அமெரிக்க பிடிக்குமா ?

கடல் said...

தமிழின் முதல் மகளிர் திரட்டி.
மகளிர் கடல்
அனுமதி அனைவருக்குமுண்டு ஆதரவு தாருங்கள்.

நன்றி.

வல்லிசிம்ஹன் said...

உங்கள் அவஸ்தை புரிகிறது.
எங்களுக்குப் பழகிவிட்டது. ஊரிலிருந்து வரும் பேரன்கள் பேத்திகள் வரும் ஒரு மாதத்திற்கு முன்னிருந்து வீட்டைப் புதுசு செய்து, கொசுநெட்லான் களைச் சுத்தம் செய்து, வாசல் கதவை எப்போதும் மூடிவைத்து, புது பாத்திரங்கள் வாங்கி வைத்து, ஆக்ஃபாஃபினா....
எங்கள் பக்கம் இது;

அமைதிச்சாரல் said...

நிச்சயமா. இடமாற்றம் என்பது சிறுகுழந்தைகளுக்கு பெரிய அவஸ்தைதான்...

இராகவன் நைஜிரியா said...

Welcome back

ஒரு காசு said...

வெல்கம் பேக், முகுந்த் அம்மா.

முகுந்த் அம்மா said...

@அமைதி அப்பா

நன்றி அமைதி அப்பா அவர்களே.

//மகிழ்ச்சி. உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் சந்தித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். //

அனைவரையும் சந்திக்க இயலவில்லை இருப்பினும் பெரும்பாலனவர்களை சந்தித்தேன்.

//தங்களின் தமிழக அனுபவங்கள், பல பதிவுகளாக வரும் என்று நம்புகிறேன்.//

முயற்சிக்கிறேன்.

நன்றி

முகுந்த் அம்மா said...

@தமிழ் உதயம்
//அமெரிக்கா... இந்தியா... எத்தனை வித்தியாசங்கள்.//

உண்மை. வித்தியாசங்கள் நிறையவே உண்டு .

@ .பனித்துளி சங்கர்
//மிகவும் கஷ்ட்டம்தான் . உங்களுக்கு இந்தியா பிடிக்குமா இல்லை அமெரிக்க பிடிக்குமா ? //

இரண்டுமே பிடிக்கும். நல்லவை கேட்டவை இரண்டிலும் உண்டு.

முகுந்த் அம்மா said...

@கடல்

நன்றி

@வல்லிசிம்ஹன்

உண்மை. எங்கள் வீட்டிலயும் பெற்றோர்கள் இவ்வாறு புலம்புவார்கள். என்ன செய்வது எங்களுக்கும் சரி உங்களுக்கும் சரி இந்தியா சென்று திரும்புவது பெரிய காரியமாக தான் இருக்கிறது.

நன்றி

முகுந்த் அம்மா said...

@அமைதிச்சாரல்

ஆமாம் அம்மா. குழந்தைகள் தான் நிறைய சிரம படுகிறார்கள். பெரியவர்களுக்கு பெரிதாக வித்தியாசம் தெரிவதில்லை.

@இராகவன் நைஜிரியா, @ஒரு காசு
நன்றி