Sunday, September 13, 2015

காதல் தோல்வியும், பெண்களும், ப்ரீ அட்வைசும்

காதல் தோல்வியால் துபாயின், புர்ஜ் கலிபாவில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணை பற்றிய செய்தியை படிக்க நேர்ந்தது. இந்த செய்தியை படித்த பிறகு எனக்கு தோன்றிய எண்ணங்கள் இங்கே. 

பொதுவாக காதலித்து ஏமாற்றுபவர்கள் என்று பெண்கள் மீது குற்றம் சட்டபடுவது உண்டு. அதுவும் இன்றைய திரை படங்கள் முக்கியமாக தமிழ் அனைத்திலும் காதல் தோல்வி பற்றிய ஒரு சீன் கூட இல்லாமல் படம் இருப்பதில்லை. அதுவும், பெண்களை கண்டபடி திட்டி ஒரு பாட்டு கட்டாயம் இருக்கும். "இந்த பொண்ணுங்களே இப்படி தான்", "போங்கடி நீங்களும் உங்க காதலும்"....blah blah.. என்று நிறைய. 

உண்மையில் காதலித்து ஏமாற்றுபவர்கள் பெண்கள் தானா?. இப்படி பெண்களை குற்றம் சொல்லுவது சரியா?. ஒரு சில ஹை ப்ரொபைல் காதல் தோல்வி செய்திகளை வைத்து இப்படி செய்வது நியாயமா? எனக்கு தெரிந்த இரண்டு பெண்களின் காதலும் ஏமாற்றமும் இங்கே. 

முதல் பெண் எனக்கு கல்லூரியில் சீனியர். எங்களது பெண்கள் கல்லூரி என்றாலும், அருகில் ஆண்கள் படிக்கும் கல்லூரியும் இருந்ததால் நிறைய காதல் விவகாரங்கள் அரசல் புரசலாக நான் கேள்வி பட்டதுண்டு. என் சீனியர் மிக அழகானவர். கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். பெற்றோர் சிறு வயதில் இறந்து விட, பாட்டி தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். ஆண்கள் கல்லூரியில் படித்த ஒரு பையன் இரண்டு வருடங்கள் சுற்று சுற்று என்று சுற்றி ஒரு வழியாக இருவரும் காதலிக்க தொடங்கி இருந்தனர். அந்த பையன் இந்து. காதலிக்கும் போது உலகம் தெரியாமல் சுற்றி திரிந்த அவர்களது காதலை பெற்றோர் எதிர்க்க ஒரு நாள் ஊரை விட்டு ஓடிபோய் விட்டார்கள். கல்லூரி முழுக்க அதே பேச்சாக இருந்தது. பின்னர் எங்கோ சென்று திருமணம் செய்து கொண்டார்கள் என்று பேசி கொண்டார்கள். பல வருடங்கள் கழித்து வேறு ஒரு ஊரில் என்னுடைய சீனியர் அக்காவை சந்திக்க நேர்ந்தது. ஒரு குழந்தை ஆனவுடன் கணவன் ஓடி விட்டான் என்றும். டிகிரி கூட முடிக்காததால் தற்போது தனியார் பள்ளியில் சொற்ப சம்பளத்திற்கு  வேலை செய்து குழந்தையை காப்பாற்றி வருவதாகவும், தாத்தா, பேத்தி ஓடிப்போன அவமானத்தில் இறந்து விட, தற்போது பாட்டியுடன் வாழ்ந்து வருவதாகவும் குறிபிட்டார். அவரிடம் காதல் என்று தற்போது பேசி பாருங்கள், உங்களை கண்டபடி திட்டுவார்.

அடுத்த பெண்னை நான் சந்தித்தது எதிர்பாராதது. நானும் என் தோழியும் எப்போதும் கல்லூரிக்கு செல்ல பஸ் நிறுத்தம் வரை நடந்து செல்லுவது வழக்கம். அப்பொழுது, அவள் தன்னுடைய வகுப்பில் படிக்கும் ஒருவரை பற்றி சொல்லி கொண்டு வந்தாள். அப்பொழுது பஸ் நிறுத்தத்தில் எங்களிடம் எங்கள் பின்னால் அதுவரை வந்த ஒரு நடுத்தர வயது அம்மா, "ஆம்பளங்கள நம்பாதீங்க மா, காரியம் முடிஞ்சவுடன் கழட்டி விட்டுடுவானுங்க, என்ன பாரு, இப்படி ஒருத்தன நம்பி ஏமாந்து போனவ மா நானு" என்று அழுது கொண்டே சொல்லி சென்றார்.

பெண்கள் ஏமாற்றுகிறார்கள் என்று வரிந்து கட்டி கொண்டு டாஸ்மாக் பாட்டு வைக்கும் இயக்குனர்கள் எத்தனை பேருக்கு பெண்களை நம்ப வைத்து கழுத்து அறுத்து செல்லும் ஆண்களை பற்றி திட்ட அவர்களை பற்றி பட்டு வைக்க தைரியம் வரும். ஆண்கள் ஏமாந்தால் அது அவனுக்கு மட்டுமே ஏமாற்றம், பெண்கள் ஏமாற்ற பட்டால் அது அவளுடைய குடும்பத்தையும் பிடித்து கொள்ளுகிறது. அதுவும் காதலித்து கல்யாணம் செய்து விட்டு வயிற்றில் பிள்ளையை கொடுத்து விட்டு கலட்டி விடும் எத்தனயோ ஆண்கள்இருக்க தானே செய்கிறார்கள். அனாதை விடுதியில் வீசப்படும் பல குழந்தைகள் இப்படி காதலால் காதலித்து ஏமாற்ற பட்டதால் உருவானவை என்ற உண்மை உலகம் அறியாததா. ஒருவனை மனதார காதலித்து தன்னையே கொடுத்து பின்னர் அவமானத்தை சந்தித்து நடுத்தெருவில் நிற்கும் எத்தனயோ பெண்களுக்கு இந்த சமுதாயம்  கொடுக்கும் பட்டங்கள் பல பல.

சரி அப்பொழுது உண்மை காதலினை ஏமாற்றும் பெண்கள் இல்லவே இல்லையா? என்று கேட்பவர்களுக்கு, ஒரு பெண் ஏமாற்றுகிறாள் என்றால் அதற்க்கு முக்கியமான காரணம்,  ப்ரீ அட்வைஸ் கொடுக்கும் தோழிகளும் சொந்தங்களும்.காதலிக்கும் போது எதனையும் பார்க்காமல் குறைகளை நோக்காமல் காதலிக்க ஆரம்பிக்கும் பலருக்கும், சொந்தங்கள் உண்மை நிலையை எடுத்து சொல்லிகிறேன் பேர்வழி என்று ஒரு வழி செய்து விடுவார்கள். உதாரணமாக எனக்கு தெரிந்தே இரண்டு காதலர்களை எங்கள் தெருவில்  பிரித்து வைத்து இருக்கிறார்கள். இரண்டும் சாதி மதங்களை காட்டி பிரிக்க பட்டவை அல்ல, மாறாக பொருளாதாரத்தை முன்னிறுத்தி பிரித்து வைக்கும் வேலையை சொந்தங்கள் சேர்ந்து ப்ரீ அட்வைஸ் கொடுக்கிறேன் என்று பிரித்தவை. அந்த பெண் காதலித்தது ஒரு கொத்தனார் வேலை செய்யும் ஒருவரை, இந்த பெண் படித்தது டிப்ளோமா படித்தது. காதலிக்கும் போது எதுவும் தெரியாமல் காதலித்த இவர்கள், அந்த பெண் வீட்டில் இவளுக்கு கல்யாணம் செய்ய முயலும் போது, இவள் முடியவே முடியாது என்று சொல்ல, மூன்று மாதங்கள் சொந்த காரர்கள் வீட்டில் அடைத்து வைத்து தினமும், "ஒரு கொத்தனார் எப்படி உன்னை காப்பாற்ற முடியும்..என்ன சந்தோசத்தை அனுபவிக்க போற, வாழ்க்கை பூராம் சாப்பாட்டுக்கு கஷ்ட பட போறியா?" என்று ப்ரீ அட்வைஸ் தந்து, தந்து அவள் மூன்று மாதங்கள் கழித்து அவனை மறந்து விட்டு அவள் வீட்டில் பார்த்த பையனை கல்யாணம் செய்து கொண்டாள். 

இன்னொரு பெண், விடலை பருவ காதல், பத்தாவது படிக்கும் இவளுக்கும் ஒரு மெக்கானிக்க்கும், ஓடிப்போக இருந்த இவர்களை பிடித்து பின் அந்த பையனை போலிஸ் ஸ்டேசனில் வைத்து செமத்தியாக கவனித்து பின்னர் இந்த பெண்ணின் படிப்பை நிறுத்தி வேறு கல்யாணம் செய்து வைத்து இருக்கிறார்கள்.அவள், தன் காதலனை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டாள். இப்போது மகளை இழந்து நிற்கிறார்கள். 

சிலர் சொல்லலாம், தொடர்ந்து ஒரு பெண் ஏமாற்றுகிறாள் என்று. அப்படி ஏமாற்றுபவர் ஆயிரத்தில் ஒருத்தி மட்டுமே. பல நேரங்களில் சூழ்நிலைகள் காதல் செய்பவர்களை பிரித்து வைக்கலாம், அதற்காக பெண்கள் மட்டுமே இப்படி செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டாதீர்கள். ஒருவருக்கு ஒருவர் மனதார காதலித்த  எந்த ஒரு ஆணும் பெண்ணும்,  அடுத்தவர்களின் நினைவு வராமல் வாழ முடியாது. இது தான் உண்மை . இதில் ஆணுக்கு ஒரு பீலிங் , பெண்ணுக்கு வேறு பீலிங் என்று எதுவும் இல்லை. பெண்கள் ஆண்களை போல தண்ணி அடித்து கொண்டு பிதற்றுவதில்லை. வெளி உலகிற்காக வேறு கல்யாணம் செய்து கொண்டு சந்தோசமாக இருந்தாலும்,ஆழ் மனதில் தன் காதலுக்கு என்று எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.  இது நான் சந்தித்த பல காதல் தோல்வி பெண்கள் சொன்னது.  அதனால் காதல் தோல்வி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி சமமானது. அதனால் தயவு செய்து இனிமேல் காதலில் தோல்வி என்றால் பெண்ணை கண்டபடிதிட்டுவதை விடுங்கள் . 

நன்றி 


10 comments:

பழனி. கந்தசாமி said...

காதல் நாசமாகப் போகட்டும்.

காரிகன் said...

நியாயமான வார்த்தைகள். காதல் ஒரு பொதுவான உணர்ச்சி.தமிழ்ப் பட இயக்குனர்கள் --குறிப்பாக ராஜேஷ் என்ற ஒரு ஆசாமி- இதை எதோ ஆணுக்கே உரியதாக படம் காட்டுகிறார்கள். பெண்களை இழிவாகப் பார்க்கும் பார்வைக்கு இந்த சமூகத்தில் ஒரு அங்கீகாரமே இருக்கிறது. சிறுவயதில் சிகப்பு ரோஜாக்கள் படம் வந்த புதிதில் நாங்கள் "நானும் கமல்ஹாசன் மாதிரி மாறப்போறேன்" என்று சொல்லிக்கொண்டிருப்போம். "இந்தப் பொம்பளங்களே இப்படித்தான் மொதலாளி" என்ற வசனம் அப்போது மிகவும் பிரசித்தம். ஆனால் அது பெண்களை எந்த அளவுக்கு நோகடித்திருக்கும் என்று இப்போதுதான் புரிகிறது.

நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

நம்பள்கி said...

முதலில்.....
காதல் வாழ்க! வாழ்கவே!

எதோ அப்பன் ஆத்தா செய்த கல்யாணம் எல்லாம் அப்படியே வாழுதாக்கும்!
எனக்கு தெரிந்தவர்கள்....(நண்பர்கள் மட்டுமல்ல)...பெண்கள் கல்யாணம் உடையும் போது...அவர்கள் அப்பன் ஆயி....அரை கோடி செய்து கல்யாணம் செய்தேன்---என் மகளுக்கு; ஆம்பளை என்றால் அப்படி இப்படி தான் இருப்பான்...என் மகளை அவனிடம் adjust செய்து போக சொல்லுங்கள் என்பார்கள்.

ஆக மொத்தம்--எல்லாமே பணம் தான்.
இந்த மடையன்களை யார் அரை கோடி செலவழித்து அவர்கள் மகளுக்கு கல்யாணம் செய்யவேண்டும்...இந்த கல்யாணம் இது வரைக்கும் நிலைத்தது பணம் தான் காராணம்---ஆனால், இப்போ இருக்கும் பெண்கள் பாரதி (அட நம்ம பாரதியாரபா!) கண்ட புதுமை பெண்கள்----எங்க அப்பன் ஆயி முட்டாள்கள்--அவர்கள் பணம் செலவு செய்ததிற்கு நான் ஏன் கஷ்டப் படவேணும்!

நல்ல கேள்வி!

மலரின் நினைவுகள் said...

நம்பள்கி சொன்னதை வழிமொழிகிறேன்...

இதுபோல் காதல் அனலிசிஸ் எழுதுவோர்க்கு ஒரு வேண்டுகோள்...,
தலைவன், தலைவி, தோழி, காமம், களவொழுக்கம், உடன்போக்கு போன்றவை மட்டுமே இருந்ததே தவிர "காதல்" என்ற ஒரு வஸ்து பின்னாளில் மரபுக் கவிஞர்களால் கையாளப்பட்டு பின் சினிமாவால் ஆகம விதிகளின்படி புனிதமாக்கப்பட்டது. பின் தினத்தந்தி, தினமலர் கழிசடைகளால் கள்ளக்காதலும் உருவாக்கப்பட்டது தனிக் கதை.

So, in my standpoint there is no such thingummy called "காதல்"

வருண் said...

In general, Dumping is always going on. Boys dumping girls and girls dumping boys, both are happening around us.

Now, let us not worry about what Tamil cinema is trying to say, let us see what is really happening.

"Break up" has happened. Now, one who dumped is expecting the other one to move on in her/his life. Is that as simple as that for her/him to take it easy and "move on"? Probably not! Here is where the complications start. Some who are dumped are weak-minded, they can not just move on. What will they do? They are going to "bitch about it" and blame the former partner especially if she/he is able to take it easy and move on. Because they are weak-minded they can not just move on.

Now, Are you going to get mad at them for their inability? Or you are going to feel sorry for them? Again it is very complicated.

I am not going to defend all the men are poor souls as I happened to be a "man". That's mere stupidity! I wish women are not going to support all the women as they are their sex. It is better to analyze every individual case separately and carefully and see where and what went wrong. It is possible that one of them may be innocent and other is guilty! If the "guilty" one is a man, I am not going to support him. If they guilty one is a girl, they I dont want "women" to support her either. It is not fair after all. I hope we understand each other wwell here. Or not? :)

முகுந்த் அம்மா said...

Ayya,

Please don't blame love for those people who kill it by the name of love...

முகுந்த் அம்மா said...

Thanks for understanding. I appreciate your comment

முகுந்த் அம்மா said...

Very true.Thanks for the comment Nambalki..

Even here I heard that people especially Indians do arranged marriages for their kids.. I happen to witness one Patel family wedding. They spent about close to 1 million for their daughter wedding which ended up in divorce.

முகுந்த் அம்மா said...

Thanks for the comment.

முகுந்த் அம்மா said...

Varun, as you said both men and women dump. But in case of indian setting, if a guy dumps a girls after
They became so intimate the society starts its rumor mill and throws stones at the girl And her family. Since jndians are socially so
Much attached to the society they belong too..most of the time the girl takes extreme decisions of suiside. I am not going to support thise women who purposely dump many men by the name of love. But most of the time innocent women are the victims of this.