ஒரு செய்தி கேட்க நேர்ந்தது பிறகு அதனை சார்ந்த என்னுடைய இந்திய பயணத்தில் நான் கண்ட விசயமும், படித்த புத்தகமும் நினைவுக்கு வந்ததன் விளைவாக இந்த பதிவு.
எங்கள் தெருவில் வசித்த மிகவும் திடமான ஒரு அம்மா திடீரென்று இறந்து விட்டதாக என் அம்மா சொன்னார்கள். 40 களின் இறுதியில் இருந்த அவர்கள் எதோ ஒரு விழாவில் அல்லது குலதெய்வம் கோவில் திருவிழாவில் கறி சாப்பாடு சாப்பிட்டு விட்டு வந்து இருக்கிறார்கள். பின்னர் வயிற்று போக்கும் கடுமையான ஜுரமும் வந்து இருக்கிறது. அவர், சாதாரண ஜுரம் என்று பெரிய அளவில் கவலை படாமல் பாராசிடமால் எடுத்துவிட்டு படுத்து இருக்கிறார்கள். பின்னர் ரத்தத்துடன் கலந்த வயிற்று போக்கு ஆரம்பிக்க இவர்கள் ஆஸ்பத்திரி சென்று இருக்கிறார்கள், அவர்கள், ரத்தத்தில் இன்பெக்சன் பரவி விட்டதால் காப்பாற்ற முடியாது என்று கை விரித்து விட்டனர். முடிவாக ஒரு வாரத்தில் இறந்து விட்டார்கள்.
என்ன நடந்தது?, யார் காரணம் என்றெல்லாம் செல்லுவதற்கு முன்பு "Food borne illness" எனப்படும் உணவு மற்றும் குடிநீர் மூலம் பரவும் சில நோய்கள் பற்றி சிறு குறிப்பு.
மஞ்சக்காமாலை, டைபாயிட், காலரா, Listeriosis, Camylobacteriosis மற்றும் E . Coli போன்ற பலவும் கெட்டுபோன உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றை உபயோகிப்பதன் மூலம் பரவுகின்ற கவனிக்காவிட்டால் உயிரை குடிக்கும்.
எப்படி இந்த நோய்கள் பரவுகின்றன. சுத்தமில்லாத இடங்களில் கையாள படும் இறைச்சி அல்லது சுத்தமில்லாத அல்லது கழிவு நீர் புழங்கும் இடத்தில் மேயும் அல்லது உண்ணும் கால்நடைகளை மாமிசமாக எடுத்து கொள்வதன் மூலம் பரவலாம். அல்லது முழுதாக சமைக்கபடாத இறைச்சி அல்லது முட்டைகளை சாப்பிடுவதன் மூலமும் பரவலாம்.
சரி, கறி கடைகளுக்கும் நோய்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு. இந்தியாவில் உணவு பாதுகாப்பு அமைப்பு என்று ஒன்று இருப்பினும், தினசரி கறி வெட்டும் கறி கடை காரர்களும், ஹோட்டல் காரர்களும் எந்த உணவு பாதுகாப்பு முறைகளும் பின்பற்றுவதில்லை. நான் பார்த்த வரை நிறைய ஆடுகள் கறிக்காக வெட்ட படுவதற்கு முன்பு குப்பை கூளங்களில் மட்டுமே மேய்ந்து கொண்டு இருந்தன. இதே நிலை கோழி இறைச்சி விற்கும் இடத்திலும் பார்க்க நேர்ந்தது. கோழிகளை முட்டைக்காக உற்பத்தி செய்யும் இடங்களிலாவது ஏதாவது உணவு பாதுகாப்பு முறைகள் பின்பற்ற படுகின்றனவா என்று தெரியவில்லை. அல்லது அங்கும் லஞ்சம் வாங்கி கொண்டு செர்டிபிகேட் கொடுத்து விடுகிறார்களா தெரியவில்லை. ஒரு வேலை முட்டைகள் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பாக்டீரியா தாக்கி இருப்பின், பச்சை முட்டைகளையும், ஹால்ப் பாயில் முட்டைகளையும் சாப்பிடும் மக்களுக்கு அவை கட்டாயம் வரலாம்.
நோய் வயப்பட்ட கால்நடைகளும் கோழிகளும் முழுதும் கொல்லப்பட வேண்டும். அவற்றின் இறைச்சியை உபயோகிக்காமல் அப்புறபடுத்த வேண்டும் இதுவே, உணவுபாதுகாப்பு வாரியத்தின் கட்டுப்பாடாகும். ஆனால் எனக்கு தெரிந்தவரை , கோழிக்கு சீக்கு வந்துட்டா கறியாகிடும் என்பதேகண்டு இருக்கிறேன். ஏதனும் மாற்றம் இருப்பின் தெரிவிக்கவும்.
அமெரிக்காவில் FDA அனுமதி பெறாமல் எந்த உணவும் சேர்டிபிகட் பெற இயலாது, சேர்டிபிகட் இல்லை என்றால் இறைச்சி மார்க்கெட்க்கு வர இயலாது. விற்க இயலாது. அப்படி ஒரு நிலை இருப்பினும், பல பில்லியன் அளவில் நிறைய இறைச்சி பொருட்கள் recall செய்ய படிபடுகின்றன. அதுவும் E. coli மற்றும் Salmonella தொற்று மிக பிரபலம் மற்றும் அதிகம். 2003 இல் மட்டும் 405 பில்லியன் இழப்பு உருவாக்கி இருக்கின்றன. அதுவும் Escherichia coli O157 (O157 STEC) எனப்படும் ஒரு திரிபு பாக்டீரியா, Shiga எனப்படும் ஒரு நச்சு பொருளை உண்டாக்கி விடுகிறது. இதனை உண்ணும் மக்களுக்கு உயிரிழப்பு ஏற்படலாம்.
இதனை முன்னிறுத்தி ராபின் குக் அவர்களின் "Toxin" என்ற நாவல் படிக்க நேர்ந்தது. எப்படி இன்பெக்சன் ஏற்பட்ட சில நாட்களில் இந்த Escherichia coli O157 பாக்டீரியா ஷிகா என்னும் நச்ஹ்சு பொருளை வெளியிட்டு நோயாளியை கொல்லுகிறது என்று படிக்கும் போது பயமுறுத்தியது.
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இப்படி நிறைய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு ஒத்து வராது என்றாலும் உணவு மூலம் பரவும் வயிற்று போக்கும், காலரா டைபாயிட் போன்றவையும் அதிகமாக ஏற்படும் என்பதால் கறிகடைகளில் பின்பற்ற வேண்டிய அடிப்படை சுகாதாரம் பற்றியும் உணவுகளை நன்கு சமைத்து உண்ண வேண்டிய அவசியம் பற்றியும் மக்கள் விழிப்புணர்ச்சி உடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறன். இல்லையேல் நிறைய food borne நோய்களும் உயிரை குடிக்கும் கொல்லிகளாக வளரும்.
நன்றி.
10 comments:
Leptospirosis - one of the 'important' water related diseases; இதையும் செர்த்துக்கொள்ளுங்க; இது நம்ம [தமிழ்]நாட்டில் மிக அதிகம். எலி, நாய், ஆடுமாடு, மண், காய்கறிகள், உணவு தானியங்கள் storing places-ல் [F.C.I. godowns--primary source) contamination with மூஷிக வாகனம்'s infected urine! கையேந்தி பவன்கள், கீரைகள் வாளரும் இடங்கள்--எப்பா சாமி; பிளாட்பாரத்தில் விற்கும் காய்கறிகள். இப்படி பல. நல்ல வெப்ப சீதோஷ்ணம் வேற-- tamilnaadu ideal
Leptospirosis மூலம் இவைகள் வரலாம்-- ரத்த வாந்தி, சிறுநீரில் ரத்தம், மலத்தில் இரத்தம், லிவர், சிறு நீரகம் செயல் இழப்பு---இவைகள் மூலம் தான் உயிர் இழப்பு என்று தான் இந்தியாவில் டாக்டர்கள் சொல்வார்கள். வந்து இறந்தது Leptospirosis---ஆக இருந்தாலும் எவனுக்கும் தெரியாது! என்ன காரணம் என்பதை ஆராய மாட்டார்கள். தேவையில்லை என்று நினைக்கிறேன்!
இந்தியாவில் புள்ளியியல் என்பது ஒரு பெரிய full length comedy! நம்மளயே நாம் ஏமாத்திக்கர வேலை; எந்த டாக்கடரும் இதை ரிப்போர்ட் செய்வதில்லை--எங்கு செய்யணும் என்றே எவனுக்கும் தெரியாது -- அப்படி ஏதாவது இடம் தான் இருக்கா? அப்படி இடம் இருந்து நாம் ரிப்போர்ட் அனுப்பினா மட்டும் என்ன என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்.
இந்தியா இது போன்று பல பிரச்சினைகளை சமாளிக்கும். இந்தியர்கள் என்ன கொஞ்சமாகவா இருக்கிறார்கள்? 130 கோடி. அதில் சில கோடிகள் போனால் பெரிய பிரளயம் வந்து விடாது முகுந்த் அம்மா.
Nice article. Do you work for CDC?
Why only targeting the meat shops? How old are you movie is a fine example to show the problem of toxic vegetables.
உங்கள் பதிவில் நோயுற்ற மிருகம் பற்றிப் படிக்கையில், ஒரு பழைய சிவாஜி படத்தில் ஒரு வசனம், "ஏழை வீட்டில் கோழிக்கறியானால், ஒன்று ஏழைக்கு வருத்தம் அல்லது கோழிக்கு வருத்தம்".
அது ஒரு காலம் ஆனால் இன்று இந்தியா என்றல்ல எங்குமே சகல உணவு வகையிலும் 100% சுகாதாரம் கடைப்பிடிக்கப்படுவதாகக் கருதுவது அதீத பேராசை. அமெரிக்கா பற்றித் தெரியவில்லை. இங்கும் பணத்தால் எதையும் செய்யலாம். ஒரு பிரபல பிரான்சின் சிறப்பங்காடி (இப்போ சென்னையிலும் கிளையுண்டு) சனி இரவு நாள்பட்டு மேற்பக்கம் கறுத்து நிறம் மாறிய இறைச்சியைச் சீவி சிவப்பாக்கி திரும்ப நிறையிட்டு , புதிய ஒரு வார பாவனைத் திகதியை மாற்றி சுட்டி ஒட்டி விற்றது.அங்கு வேலைசெய்பவர் மூலம் இரகசிய கருவியால் படமாக்கி தொலைக்காட்சியில் காட்டி மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் பார்த்தும், இன்று வரை ஏதுமே நடக்கவில்லை.
அதனால் திருடராகத் திருந்தினால் உண்டு.
அல்லது கந்தசாமி ஐயா சொல்வது போலும், நம் அரசியல் வியாதிகள் நினைப்பது போலவும்...சிலகோடிகள் ஒழிந்து மிகுதி நிம்மதியாக வாழ இதுவும் வழி என நிம்மதியடையுங்கள்.
ஜனனம் ஒருவழி, மரணம் பல வழி- அதில் இதுவும் ஒரு வழி...என மகிழ்வோம்.
@செங்கதிரோன் said...
"Why only targeting the meat shops? How old are you movie is a fine example to show the problem of toxic vegetables."
The probability of one getting sick by meat, meat products and dairy is more than that of those who consume vegetables. Bacterias Thrive in meat and meat products and grow very fast. Vegetables have natural tendency to resist bacterial invasion. Although one might get affected by consuming vegetables, the percent is very less.
Further, in that movie, they show about "pesticides and food preservation stuff" sprayed on the vegetables to prolong the consumable period time and not about any food borne illness, which is a different topic altogether.
@Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
"உங்கள் பதிவில் நோயுற்ற மிருகம் பற்றிப் படிக்கையில், ஒரு பழைய சிவாஜி படத்தில் ஒரு வசனம், "ஏழை வீட்டில் கோழிக்கறியானால், ஒன்று ஏழைக்கு வருத்தம் அல்லது கோழிக்கு வருத்தம்".
அது ஒரு காலம் ஆனால் இன்று இந்தியா என்றல்ல எங்குமே சகல உணவு வகையிலும் 100% சுகாதாரம் கடைப்பிடிக்கப்படுவதாகக் கருதுவது அதீத பேராசை. அமெரிக்கா பற்றித் தெரியவில்லை. இங்கும் பணத்தால் எதையும் செய்யலாம். ஒரு பிரபல பிரான்சின் சிறப்பங்காடி (இப்போ சென்னையிலும் கிளையுண்டு) சனி இரவு நாள்பட்டு மேற்பக்கம் கறுத்து நிறம் மாறிய இறைச்சியைச் சீவி சிவப்பாக்கி திரும்ப நிறையிட்டு , புதிய ஒரு வார பாவனைத் திகதியை மாற்றி சுட்டி ஒட்டி விற்றது.அங்கு வேலைசெய்பவர் மூலம் இரகசிய கருவியால் படமாக்கி தொலைக்காட்சியில் காட்டி மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் பார்த்தும், இன்று வரை ஏதுமே நடக்கவில்லை."
As far as in USA, I believe major super markets who sell meat or butchers need to follow the expiration stuff, and they take very serious measures in this, if not they will be sued by the people, which in turn will become a big headache.
But I am not sure how its done in local super markets especially indian super markets.
"அதனால் திருடராகத் திருந்தினால் உண்டு."
True.
@நம்பள்கி said...
"Leptospirosis - one of the 'important' water related diseases; இதையும் செர்த்துக்கொள்ளுங்க; இது நம்ம [தமிழ்]நாட்டில் மிக அதிகம். எலி, நாய், ஆடுமாடு, மண், காய்கறிகள், உணவு தானியங்கள் storing places-ல் [F.C.I. godowns--primary source) contamination with மூஷிக வாகனம்'s infected urine! கையேந்தி பவன்கள், கீரைகள் வாளரும் இடங்கள்--எப்பா சாமி; பிளாட்பாரத்தில் விற்கும் காய்கறிகள். இப்படி பல. நல்ல வெப்ப சீதோஷ்ணம் வேற-- tamilnaadu ideal
Leptospirosis மூலம் இவைகள் வரலாம்-- ரத்த வாந்தி, சிறுநீரில் ரத்தம், மலத்தில் இரத்தம், லிவர், சிறு நீரகம் செயல் இழப்பு---இவைகள் மூலம் தான் உயிர் இழப்பு என்று தான் இந்தியாவில் டாக்டர்கள் சொல்வார்கள். வந்து இறந்தது Leptospirosis---ஆக இருந்தாலும் எவனுக்கும் தெரியாது! என்ன காரணம் என்பதை ஆராய மாட்டார்கள். தேவையில்லை என்று நினைக்கிறேன்! "
I will add Leptospirosis as well to the list.
"இந்தியாவில் புள்ளியியல் என்பது ஒரு பெரிய full length comedy! நம்மளயே நாம் ஏமாத்திக்கர வேலை; எந்த டாக்கடரும் இதை ரிப்போர்ட் செய்வதில்லை--எங்கு செய்யணும் என்றே எவனுக்கும் தெரியாது -- அப்படி ஏதாவது இடம் தான் இருக்கா? அப்படி இடம் இருந்து நாம் ரிப்போர்ட் அனுப்பினா மட்டும் என்ன என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான். "
True and well said. I have interacted with few doctors in india and almost most of them share the same traits..
thanks for the comment
வளர்த்து, பின் அடித்து சாப்பிடுவது குறைவதால் நீங்கள் குறிப்பிடும் கொல்லிகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. போகிற போக்கைப்/தங்களின் பதிவைப் பார்த்தால் காய்கறிகளை கூட அவரவர் வீட்டில் வளர்த்து சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்ற நிலை விரைவில் வந்துவிடும் போல் தோன்றுகிறது. சனிக்கிழமையன்று இப்பதிவை வேர்ட்பிரஸ் தளத்தில் பகிரவும் என்று விண்ணபத்திருக்கிறேன். எதிரொலியை விரும்பவில்லை. நன்றி.
Need some information about Reuse/Cleanse of Grey Water. How to save it along with rain water harvesting?
How it is being implemented there?
If you have time and info, please blog it. Thanks.
முகுந்த் அம்மா....
எல்லா நாடுகளிலும் நல்ல, மிக ஆரோக்கியமாக தயாரிக்கப்படும் உணவகங்கள் உண்டு. அதே சமயம் ஆரோக்கியம் இல்லாத முறையில் செயல் படும் உணவகங்களும் உண்டு. இதை அமெரிக்கா அலாஸ்கா முதல் ரஸ்சியாவின் விலாடிவாஸ்டாக் வரை பார்த்திருக்கிறேன். ஆக இது உணவகத்தின் தரத்தினை பொறுத்தது. மற்றபடி இறைச்சியில் அமெரிக்க தரக்கட்டுப்பாடு அதிகம் என்றால் "obecity" அதிகம் வரும் அளவிற்கான உணவுகள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன.?
இந்தியாவில் 120 கோடி மக்களுக்கு உணவி கிடைக்க செய்வதே பெரிய வேலை. தரம் சற்றே பார்த்து தான் நாம் தேர்வு செய்ய வேண்டும்.
சங்கர நாராயணன். தி
ஆம்ஸ்டர்டாம்.
Post a Comment