Monday, February 15, 2016

விவாகரத்தும், ஜாதி சார்ந்த வேலை வாய்ப்பும்- ஒரு அமெரிக்க இந்திய கதை

இரண்டு செய்திகள் இரண்டும் மன வேதனை தரும் செய்திகள் கேட்க நேர்ந்தது.

ஒன்று, எப்படி பகணவன் மனைவிக்குள் நடக்கும் பிரச்சனைகள் சுற்றங்கள் மற்றும் நண்பர்களால் ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டு விவாகரத்து வரை சென்றும் ஊர் மக்களால் தொடர்ந்து துன்பத்துக்கு உள்ளாக்கபட்டார்கள் என்ற ஒரு செய்தி. 

வட இந்தியாவில் இருந்து வந்தவர் அவர். அவருடைய எக்ஸ் மனைவி இந்தியாவில் பிறந்தாலும் இங்கே சிறு வயதில் வந்து படித்து முடித்தவர்.   நிறைய செல்வம். இரண்டு வளர்ந்த  ஆண் குழந்தைகள்.  வேலை அடிமையான அவர், மனைவியை கவனிக்க நேரம் இல்லாமல் போக, மனைவியோ இணையத்தில் நேரத்தை செலவழித்து இருக்கிறார். அதில் ஒரு நட்பு உண்டாக அதிலேயே நேரம் காலம் தெரியாமல் செலவழித்து இருக்கிறார். இதில் சந்தேகம் அடைந்த கணவன், என்னவென்று பார்க்க தன் மனைவி ஒரு வயதான ஒருவருடன் அதிக நேரம் இணையத்தில் நேரம் செலவழிப்பதை கண்டு பிடித்து இருக்கிறார். அதனால் குடும்பத்தில் சண்டை வர ஆரம்பித்து இருக்கிறது.  இதனை சாக்காக வைத்து அவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் ஊதி ஊதி பெருசாக்க. இந்த பெண்ணோ, நான் என்ன தப்பு செய்தேன் என்ற ரீதியில் பெண்ணுரிமை பேச, நீயா நானா என்ற போட்டி. நான் அப்படி தான் செய்வேன் என்று மனைவி அடம் பிடிக்க, அவரோ விவாகரத்துக்கு அப்ளை செய்து விட்டார். முடிவில் குழந்தைகள் இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் என்று அலைகழிக்க பட்டு, அவதி பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இதில் யாரை குத்தம் சொல்ல, நேரம் செலவழிக்க முடியாமல் போன கணவனையா, அல்லது, இணையத்தில் நேரம் செலவழித்த மனைவியையா, இல்லை இதனை சாக்காக கொண்டு ஊதி ஊதி பெருசாக்கி குடும்பத்தை பிரித்த மக்களையா?.. எது எப்படியோ, நல்லா இருந்த ஒரு குடும்பம் இணையத்தால் சீர் கெட்டு விட்டது. இதில் ஹய் லைட் என்னவெற்றால், விவாகரத்து முடியும் வரை இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசி திரிந்த மக்கள் இப்பொழுது அதனையோ ஒரு ஹாட் டாபிக் ஆக எந்த கெட் டுகெதர் என்றாலும் பேசி பேசி மகிழ்கிறார்கள். எங்கே சென்றாலும் இந்திய மக்களின் புரண் பேசும் எண்ணம் மாறாது போல.

அடுத்த விசயமும் இந்திய மக்களின் மாறாத குண நலன்கள் குறித்தது. நான் புதிதாக வேலைக்கு சேர்ந்த இடத்தில் நிறைய தெலுங்கு மக்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் தற்போது புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்.தனக்கு வேலை சீக்கிரம் கிடைக்கவில்லை  என்றும். ஒரு வேலைதான்  ரெட்டியாகவோ அல்லது நாயுடுவாகவோ இருந்தால் சீக்கிரம் கிடைத்து இருக்கும் என்றும் கூறினார். இது என்ன புது கதை என்று கேட்டபோது அவர் சொன்ன விஷயங்கள் தலை சுற்றின. 

இங்கு, பெரிய பெரிய கம்பனிகளில் நல்ல உயர் நிலையில் இருக்கும் இந்திய மேனேஜர் எல்லாம் வெளியே, தன்னுடைய மனைவி அல்லது சொந்தகாரர் பெயரில் ஒரு கன்சல்டின்  கம்பெனி வைத்து இருப்பார்கள். அதன் மூலம் வேலைக்கு ஆட்கள் பிடித்து கொடுத்து கொண்டு இருப்பார்கள்.இதனை வைத்து கொண்டு அந்த கம்பெனியில் எந்த ஒபெனிங் என்றாலும் இவர்களின் கம்பனி வழி மட்டுமே அப்ளை செய்ய முடியும். அவர்கள் வேலைக்கு எடுப்பவர்கள் எல்லாமே, தன்னுடைய சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே. இப்படி நிறைய தெலுங்கு ரெட்டிகளும், நாயுடுக்களும் நிறைய கம்பனிகள் வைத்து இருப்பதால் அந்த சமூகத்தை சேர்ந்த மக்களாக இருப்பின், வேலை கிடப்பது சீக்கிரம் என்று தெரிந்தது.

கண்டம் விட்டு கண்டம் வந்தாலும் மாறாத குண நலன்கள் கொண்ட மக்கள். எப்பொழுது திருந்த போகிறார்களோ!.

டிஸ்கி 
இது நான் கேட்ட செய்திகளை வைத்து எழுதியது மட்டுமே. பொதுப்படையானது அல்ல.

நன்றி.

9 comments:

பழனி.கந்தசாமி said...

நான் உங்களுடைய பதிவுகளைத் தொடர்ந்து படித்து ரசித்து வருபவன்.

அவ்வப்போது பின்னூட்டங்கள் போடுவேன். உங்கள் பதிவுகளில் சமகாலப் பிரச்சினைகளை நன்கு அலசி வருகிறீர்கள். பாராட்டுகள்.

அதே சமயம் சில எழுத்துப் பிழைகள் வந்து விடுகின்றன.
உதாரணம்: "ஒரு வேலைதான்" சரியான பதம் "ஒரு வேளை தான்"

இந்த மாதிரி தவறுகள் இல்லமால் இருந்தால் உங்கள் பதிவுகள் இன்னும் ஜொலிக்கும்.

வேகநரி said...

-நல்லா இருந்த ஒரு குடும்பம் இணையத்தால் சீர் கெட்டு விட்டது.
-எங்கே சென்றாலும் இந்திய மக்களின் புரண் பேசும் எண்ணம் மாறாது
உண்மையே தான்.
இந்தியர் மேனேஜராக உள்ள கம்பனியில் வேலைக்கு சேருவதானால் அவர்களை பிடித்து அவர்கள் வழி மட்டுமே அப்ளை செய்யலாம் என்று அமெரிக்காவிலும்அவர்கள் செய்ய முடிவது வியப்பாக உள்ளது. வேலை பெற்று கொள்ள தகுதியே தேவையில்லை,இந்தியா உள்ள ஜாதிவாரியான சலுகை முறையை அங்கேயும் கொண்டுவந்து விடுவார்கள்!

நம்பள்கி said...

[[[அவர்கள் வேலைக்கு எடுப்பவர்கள் எல்லாமே, தன்னுடைய சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே]]]

நூற்றுக்கு நூறு உண்மையையே!
இங்கு last name பார்த்து [[இங்கு, இந்தியர்களின் last name என்பதே ஜாதி தானே!]]---தமிழர்களைத் தவிர! பாசத்தை recruiting committee எளிதாக கண்டு கொள்வார்கள். I.I.T- ல் படித்தால் 97% விழுக்காடு? வேற யாரு அவா தான்!

இல்லை சட்டர்ஜி, பானர்ஜி, ஷர்மா, பாண்டே, ஐயர் மற்றும் எந்த பேரும்-"கர்-ல்" முடிந்தால் அது யார்? சாவர்க்கர், டெண்டுல்கர், இப்படி..

பின்குறிப்பு:
இதுவரை நான் ஐயங்கார் என்ற last nameபார்த்தது இல்லை? இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தா?

Deiva said...

Both are true. Also Indian women take blind side on women even if there is wrong there. Also as you indicated, they will start talking feminism and make sure all blame goes to husband. Feminism is more important than family.

நிஷா said...

இணையத்தில் நல்லதும் கெட்டதும் உண்டு,நல்லதை பயன் படுத்தி நமக்கு தேவையில்லாததை தூர நிறுத்த தெரிய வேண்டும், நட்புக்கள் கூட கொச்சைப்படுத்தப்படுவதும் உண்டு, நாம் வெளியிலிருந்து எதையும் விமர்சிக்க முடியாது,

ஜாதி பார்த்து அறிந்தவர் பார்த்தும் வேலை கொடுப்பதும் எடுப்பதும் உலகெங்கும் நடக்கும் கதை தான்!இந்தியர் மட்டும் விதி விலக்காக முடியுமா?

அழகான ராட்சசி said...

Good one

வேகநரி said...

//ஜாதி பார்த்து அறிந்தவர் பார்த்தும் வேலை கொடுப்பதும் எடுப்பதும் உலகெங்கும் நடக்கும் கதை தான்! //

இந்தியாவிலேயே இப்போதெல்லாம் ஜாதி பார்ப்பது மிகவும் குறைவு என்று சிலர் சொல்லிகொள்கிறார்கள்.
இந்தியா திருந்திவிட்டது. இனி உலகம் மற்றும் அமெரிக்கா எப்போ தான் திருந்துமோ!
ஒரு நல்லசெய்தியும்- தமிழகம் மின்மிகை மானிலம்!

பனிமலர் said...

பாவம் அந்த பிள்ளைகளை நினைத்தால் தான் மிகவும் வருத்தமாக இருக்கிறது. பிறந்தது முதல் வளர்த்து எடுத்த பெற்றோருடன் வளர்ந்த மக்களே இப்படி தவிக்கும் போது, நீதிமன்றம் சொல்வதால் இந்த வாரம் இங்கே என்று அல்லாடும் அந்த பிஞ்சுகள் மனதில் என்ன விதமான வெறுமை ஆண்டு அழிக்கும் என்று தெரியாதவர்கள் இவர்கள். பெரிதாக சாதித்துவிட்டதான நினைத்துக்கொள்ளும் அந்த நண்பர்கள் மற்றும் சுற்றத்திற்கு இழப்பு எதுவும் இருக்கப்போவது இல்லை இழந்து நிற்கப்போவது அந்த குழந்தைகள் மட்டுமே.........தேவையே இல்லாமல் ஒரு போராட்டம் அந்த பிள்ளைகளுக்கு, அவர்கள் என்ன பிழை செய்தார்கள் இந்த பாடு பட......இறைவா காப்பாற்று அந்த பிள்ளைகளை......

Angelin said...

இங்கே இங்கிலாந்திலும் இதே அசிங்கம் நடக்குது !gossip மற்றும் ஜாதி இரண்டுமே .இந்த இந்தியர்கள் வெளிநாட்டுக்கு சமோசா சப்பாத்தி பஜ்ஜி சிக்கன் டிக்காவோட சேர்த்து பாழாய்ப்போன ஜாதியையும் கொண்டு வந்துவிட்ட்டாங்க :(
அதுவும் பஞ்சாபியரும் குஜராத்தியரும் ஜாதியில் ஊறி போயிருக்குங்க ..இன்னும் இங்குள்ள தென் தமிழ்நாட்டுக்காரங்க மத்தியில் பரவலா வரல்லை இந்த சா தீ