Friday, March 26, 2010

The Blind Side -எனது பார்வையில்உண்மை கதைகள் சினிமாவாக எடுக்கப்படுவது உண்டு. அதிலும் சில கதைகள் நெஞ்சை உருக்கும் வகையில் இருக்கும், எனக்கு பிடித்த சினிமாவாக்கப்பட்ட சில உண்மைக்கதைகள்

The Hurricane - Rubin Carter என்ற குத்து சண்டை வீரரின் வாழ்க்கை.

Schindler's List - இரண்டாம் உலக யுத்தத்தின் போது 1000 யூதர்களை காப்பாற்றிய Oscar Schindler என்பவரின் வாழ்க்கை.

The Pursuit of Happyness - Businness man Chris Gardner இன் வாழ்க்கை.

இந்த படங்கள் அனைத்தும் அதனை பார்த்த பிறகும் நம் மனதுக்குள் ஏதோ செய்யும். அதே போல நேற்று இரவு Michael Oher என்ற அமெரிக்கன் Football வீரர் ஒருவரின் உண்மைக்கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் The Blind Side ஐ பார்க்க நேர்ந்தது.

அமெரிக்கா என்றால் சொர்க்க பூமி, இங்கு வறுமை இல்லை என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. அதிலும் ஹிந்தி சினிமாக்களில் எல்லாம் அமெரிக்கா என்றால் இங்கு இருக்கும் beaches, bar, pub இவை தவிர வேறெதுவும் நான் பார்த்ததாக ஞாபகம் இல்லை. ஆனால் இங்கும் வறுமை , வீடின்மை, பசிக்கொடுமை எல்லாம் உண்டு.

நான் பிரசவித்து மருத்துவமனையில் இருந்த போது என்னிடம் அங்கிருந்த நர்ஸ் ஒன்று கேட்டார்கள்,

"உங்களை உங்கள் வீட்டுகாரர் நன்றாக நடத்துகிறாரா? குழந்தைக்கு பாதுகாப்பானதாக இருக்கிறதா உங்கள் வீடு" என்று

இதனை கேட்ட போது ஏன் இப்படி கேட்கிறார்கள் என்று எனக்கு அர்த்தம் புரியவில்லை. ஆமாம் என்று தலை ஆட்டி வைத்தேன்.

பிறகு எனக்கு அதற்கான காரணம் புரிந்தது. இங்கு குழந்தைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்று தெரிந்தால் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து விடுவார்கள். பிரிக்கப்பட்ட குழந்தைகள், அனாதை குழந்தைகள் போல சில நேரங்களில் Foster home, எனப்படும் பாதுகாப்பாளர்களுடன் இருப்பதுண்டு. அதுவும் சில நேரங்களில் நன்றாக அமைவதில்லை. அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆக்கப்பட்டு விடும்.

அப்படி, ஒரு போதைக்கு அடிமையான அம்மாவிடம் இருந்து பிரிக்கப்பட்ட, அப்பாவாலும் கைவிடப்பட்ட Micheal என்ற ஒரு கறுப்பின பையன், எவ்வாறு அமெரிக்கன் football இல் பெரிய விளையாட்டு வீரர் ஆக்கபடுகிறார் என்பதே கதை சுருக்கம்.

அடிப்படை தேவைகள் எதுவும் இல்லாமல், துணி என்று சொல்லி உடுத்த ஒரு பிளாஸ்டிக் பையில் இருக்கும் இரண்டு துணியும், சாப்பாட்டிற்கு ஸ்டேடியத்தில் கிடக்கும் பாப்கார்ன், hotdog போன்ற அடுத்தவர்களின் மிச்சத்தை சாப்பிட்டு, தூங்குவதற்கு School ஜிம் அல்லது எங்கெல்லாம் குளிருக்கு ஒதுங்க முடியுமோ அங்கெல்லாம் வாழும் ஒரு பதினாறு வயது பையன் Mike. அவனுக்கு பெரிய உடம்பு அதனால் அனைவரும் Big Mike என்று அழைக்கிறார்கள்.

ஒரு நாள் ஸ்கூல் ஜிம்மும் மூடிவிட எங்கு சென்று குளிருக்கு ஒதுங்குவது என்று அறியாமல் இருக்கிறான் மைக். அப்போது அதே பள்ளியில் படிக்கும் மாணவன் SJ வின் தாய் Anne அவனை பார்க்கிறாள், சரி என் வீட்டில் இன்று வந்து தங்கிக்கொள், நாளை காலை உன் தாயிடம் கொண்டு உன்னை சேர்க்கிறேன் என்று சொல்கிறாள்.

அடுத்த நாள் அவனின் தாய் அவன் சொன்ன இடத்தில் இல்லை என்பதையும், மறுபடியும் அவன் தெருவில் தங்க வேண்டி இருப்பதையும் அறிந்த Anne, Thanks giving என்னும் பண்டிகை வருவதால் அதுவரை தங்களுடன் இருக்குமாறு கூறுகிறாள். மைக் இதுவரை முழு சாப்பாடு சாப்பிட்டதில்லை, அதுவும் Dinning Table இல் உக்கார்ந்து சாப்பிட்டதில்லை. அவனுக்கு என்று ஒரு படுக்கை இருந்ததில்லை. அதனால் அவனுக்கு கிடைக்கும் அனைத்தும் புதுமையாக இருக்கிறது. வேறு வழியில்லாமல் அடுத்த சில நாட்களும் அவன் அங்கு தங்க நேர்கிறது. படிப்படியாக அவன் அந்த குடும்பத்தில் ஒருவனாகிறான். அந்த குடும்பம் பதினெட்டு வயதான அவனை தத்து எடுத்து கொள்கிறது.

எப்போதும் அடுத்தவர்களிடமிருந்து தன்னை காத்து கொள்ள பழகியதால், protective instinct எனப்படும் தற்காப்பு திறமை அவனிடம் அதிகம் இருப்பதை Anne கண்டறிகிறாள். அதனையே முதலீடாக்கி இந்த திறமை தேவைப்படும் American football கேமில் அவனை பயிற்றுவிக்கிறாள். நல்ல திறமைசாலியாகி விடுகிறான். பின் என்னானது என்பது மீதி கதை.

ஏற்கனவே இதே போல வீடில்லாமல், சாப்பிட வழியில்லமல் சிறு குழந்தையையும் வைத்து கொண்டு படித்து முன்னேறி பெரிய தொழிலதிபர் ஆன Gardner அவர்களின் வாழ்கையை போல இதுவும் மிகவும் inspiring கதை. அதில் Mike ஆக நடித்த Quinton Aaron இன் நடிப்பும், Anne ஆக நடித்து Oscar வென்ற Sandra Bullock இன் நடிப்பும் A+ ரகம்.

இதனை பார்த்து முடித்த பிறகு எனக்கு தோன்றிய எண்ணங்கள். இதனை போல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட inspiring சினிமாக்கள் தமிழ் சினிமாவில் மிகக்குறைவு. இந்தியாவிலும் எத்தனையோ Mike, Gardner போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்கையை திரைப்படமாக எடுத்தால் எப்படி இருக்கும்?. நாலு பாட்டு, அஞ்சு பைட்டு, மூணு செண்டிமெண்ட் என்று ஒரு வட்டத்தை விட்டு ஏன் வரமாட்டேன் என்கிறார்கள் தமிழ் திரை உலகினர் என்று தோன்றியது.

12 comments:

padma said...

அழகா எழுதிருக்கீங்க

Chitra said...

இதனை போல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட inspiring சினிமாக்கள் தமிழ் சினிமாவில் மிகக்குறைவு.

........என்னப்பா, தமிழில் - வேட்டைக்காரன், ஆதவன் - எல்லாம் உண்மை கதை மாதிரி எடுக்கிராங்கப்பா - நமக்குதான் பாத்துட்டு பீலிங்க்ஸ் வரல. என்னது, பீலிங்க்ஸ் ஆயிட்டீங்களா? ஏண்டா பாத்தோம்னு முட்டிக்கிட்டீங்களா? என்னடா இது, வம்பா போச்சு!!!

Dr.P.Kandaswamy said...

தமிழ் சினிமா இனி மாறும் என்று நம்புகிறீர்களா? நான் நம்பவில்லை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எப்படிங்க அதெல்லாம் முழுசா ஒரு படமா எடுக்க முடியுமா.. ஒரு பாட்டுலயே கஷ்டப்பட்டு ஜெயிச்சு பெரியாளாகிடுவோமே நாங்க..;) அப்ப மீதிக்கு என்ன செய்யறது ?

அநன்யா மஹாதேவன் said...

முகுந்தம்மா,
டவுன்லோடு பண்ணி 3 நாளாச்சு. இன்னைக்கு பார்த்துட்டு தான் உங்க ரிவ்யூ படிக்கணும்ன்னு இருந்தேன். இப்போத்தான் பார்த்து முடிச்சேன். நெகிழ்ந்தேன். சில சமயம் கண்ணில் நீர் முட்டியது. அமெரிக்க யதார்த்தத்தை மிக நுணுக்கமாக காட்டியது அந்த சிறுவனின் நடிப்பு. சாண்ட்ரா புல்லக் வழக்கம்போல கலக்கல். அதிலும் ஆஸ்கார் கிடைத்ததில் ஆச்சரியம் இல்லை என்றே தோன்றியது.

என்ன இருந்தாலும் இவ்வளவு பேராசை உங்களுக்கு ஆகாது. தமிழ்ல இந்த மாதிரி படங்களா? ஹய்யோ ஹய்யோ!

அண்ணாமலையான் said...

மிக சிறப்பா இருக்கு

அமைதி அப்பா said...

//எப்போதும் அடுத்தவர்களிடமிருந்து தன்னை காத்து கொள்ள பழகியதால், protective instinct எனப்படும் தற்காப்பு திறமை அவனிடம் அதிகம் இருப்பதை Anne கண்டறிகிறாள். அதனையே முதலீடாக்கி இந்த திறமை தேவைப்படும் American football கேமில் அவனை பயிற்றுவிக்கிறாள்.//

குழந்தைகளின் ஆர்வத்தைவிட, அவர்களின் திறமையைக் கண்டறிவதில்தான் பெற்றோருக்கு சவால் உள்ளது.

நல்ல பதிவு.
நன்றி.

padma said...

உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்து கொள்கிறேன் வந்து பெற்றுகொள்ளவும்

முகுந்த் அம்மா said...

@பத்மா

ரொம்ப நன்றிங்க ரசிப்பிற்கும்,விருதுக்கும். உங்களோட விருதையும் நான் பெற்றுக்கொண்டேன், என் தளத்திலும் அதனை இணைத்து இருக்கிறேன்.

@ சித்ரா

//வேட்டைக்காரன், ஆதவன் - எல்லாம் உண்மை கதை மாதிரி எடுக்கிராங்கப்பா//

அட ஆமாப்பா, மறந்துட்டேன் நானு.

//என்னது, பீலிங்க்ஸ் ஆயிட்டீங்களா? ஏண்டா பாத்தோம்னு முட்டிக்கிட்டீங்களா? //

படத்தை பார்த்து முட்டிகிட்டு தலையில பெரிய கட்டு போடவேண்டியதா போச்சு.

முகுந்த் அம்மா said...

@கந்தசாமி அய்யா

//தமிழ் சினிமா இனி மாறும் என்று நம்புகிறீர்களா? நான் நம்பவில்லை//

எனக்கும் அந்த நம்பிக்கை இல்லை அய்யா. பின்னூடத்திற்கு நன்றி.

@முத்துலெட்சுமி

//எப்படிங்க அதெல்லாம் முழுசா ஒரு படமா எடுக்க முடியுமா. ஒரு பாட்டுலயே கஷ்டப்பட்டு ஜெயிச்சு பெரியாளாகிடுவோமே நாங்க..;) அப்ப மீதிக்கு என்ன செய்யறது ?//

கரெக்டுங்க, இந்த பாயிண்ட் ஐ நான் மறந்துட்டேன், அதோட ஒரு S.A. ராஜ்குமார் பாட்டும் பின்னால போட்டுடுவாங்க, situation சாங் வேணும்ல.

முகுந்த் அம்மா said...

@அனன்யா

சூப்பர், பார்த்துட்டீங்களா. நல்ல படத்தை விரும்புற நம்மள மாதிரி ஆளுங்களுக்கு இந்த படம் ஒரு விருந்து.

கரெக்ட் ஆ சொன்னீங்க, ரொம்ப தான் ஆசை எனக்கு.

@அண்ணாமலையான்

முதல் வருகைக்கும், ரசிப்பிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

முகுந்த் அம்மா said...

@அமைதி அப்பா அய்யா

//குழந்தைகளின் ஆர்வத்தைவிட, அவர்களின் திறமையைக் கண்டறிவதில்தான் பெற்றோருக்கு சவால் உள்ளது//

உண்மை அய்யா!, கண்டறிவதே கடினம், அதை கண்டறிந்து விட்டால் அப்புறம் நாம் அவர்களை அதற்கேற்றார் போல பயிற்றுவிக்கலாம்.

நன்றி அய்யா