இந்த இரண்டு பாடல்களை தவிர பிற ஏதும் அதிகம் தெரிந்திராத நான் நிறைய பாடல்கள் கேட்க வேண்டும் என்று நான் குழந்தை உண்டாகி இருக்கும் போது சொன்னார்கள். அதற்காகவென்றே தேடி தேடி கேட்க ஆரம்பிதேன்.
நான் சிறு வயதாக இருக்கும் போது என் அம்மாவுடன் சேர்ந்து ஒவ்வொரு பிரதோசமும்
எங்கள் ஊரில் உள்ள "இம்மையில் நன்மை தருவார்" கோயிலுக்கு செல்வேன். அப்போது அங்கு ஒருவர் நின்று கொண்டு திருவாசகம் பாட கேட்டு இருக்கிறேன். அப்போது எல்லாம் அர்த்தம் புரியாது என்றாலும் கேட்க நன்றாக இருக்கும்.
அர்த்தம் புரிந்து நான் சிவபுராணம் கேட்க ஆரம்பிதேன். ஆகா! என்ன அருமையான வரிகள். அப்பொழுது தான் இளையராஜா அவர்கள் இசையமைத்த "திருவாசகம் சிம்போனி" கேட்க நேர்ந்தது. சிவபுராணத்தின் பல வரிகள் சிம்போனி இசைக்கு தகுந்த மாதிரி பொருத்தி இசை அமைத்து இருந்தார்.
அதே போல, இங்குள்ள கோவில்களில் திருமஞ்சனதிற்கு முன் பாட படும் "வெண்ணை அளைந்த குணுங்கும்" என தொடங்கும் பாடல் பாட கேட்டு இருக்கறேன். அது என்ன பாடல் என்று பார்த்த போது அது பிரபந்தந்தில் வரும் பெரியாழ்வார் திருமொழியின் இரண்டாம் பத்தில் வரும் பாடல் என்று அறிந்தேன். அதனை படிக்கும் போது வரும் ஆனந்தம் அளவிற்கு அரியது.
அதே போல பெரியாழ்வார் திருமொழியில் வரும் "மாணிக்கம் கட்டி வைரம் இடை கட்டி" என தொடங்கும் தாலாட்டு பாடல் அருமையானது. அதனை சிக்கில் குருசரண் அவர்களின் இசையில் கேட்க நேர்ந்தது. அருமையான பாடல்களை அருமையான சங்கீதத்தில் கேட்கும் போது வரும் ஆனந்தம் இன்பமானது. சில நேரங்களில் தாலாட்டு பாடலாக நான் "மாணிக்கம் கட்டி" பாடலை பாட முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.
குழந்தை உண்டாகி ஏற்கும் போது பீதோவன் கேட்பது முக்கியம் என்று சில நண்பர்கள் சொன்னதால் பீதோவன் கேட்க ஆரம்பிதேன். நான் முதலில் கேட்ட பீதோவன் இது தான்
Various - Beethoven - Fur Elise .mp3 | ||
Found at bee mp3 search engine |
இதனை கேட்டவுடன் அட!! என்று ஒரே ஆச்சரியம் எனக்கு. இதனை நிறைய கார் reverse எடுக்கும் போது வரும் இசையாக கேட்டு இருக்கிறேன். எப்படி இன்றைய அன்றாட வாழ்கையில் பீதோவன் இணைந்துள்ளார் என்று எண்ணி ஆச்சரியபட்டேன்.
பின் பீதோவன் நிறைய கேட்க ஆரம்பிதேன்.
பீதோவெனின் No. 5 in C Minor symphony நேரில் சென்று பார்க்க, கேட்க நேர்ந்தது. Pin drop silence என்பார்களே அது போன்ற ஒரு நிசப்தமான அரங்கில் மியூசிக் கண்டக்டர் அவர்கள் நுழைய அனைவரும் கரகோசம் எழுப்புகிறார்கள், அதன் பின் அவர் கை அசைக்க மெதுவாக ஆரம்பிக்கிறது. சிறிது நேரத்தில் எல்லா வாத்தியங்களும் இணைந்து கொள்ள ஆகா!! என்ன அருமையான இசை. என் வாழ்நாளில் மறக்க முடியாத இசை கச்சேரி அது.
மேற்கத்திய இசையாயினும் சரி இந்திய இசையாயினும் சரி அதனை கேட்கும் போது ஏற்படும் இன்பமும், உணர்வும் மறக்க இயலாதவை.
நான் ரசித்த இது போன்ற ஒரு சில பாடல்களும் இசையும் இசைகடலின் மிக மிக சிறிய துளியே. இசை பெருங்கடலின் இன்பத்தை அனுபவிக்க எத்தனை பிறவி எடுத்தாலும் போதாது.
8 comments:
திருவாசகத்தில் ஆரம்பித்து..பீதோவனில் முடித்த விதம் அருமை.
நானும் உங்க மாதிரி தான்.. பச்சைமாமலை போல், குனித்த புருவமும் தவிர எதுவும் தெரியாது.. :(
இப்போ கொஞ்சம் பிரபந்தப் பாசுரங்கள் ஓரளவு தெரியும்.. என்றென்றும் அனுபவித்துக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்..
பதிவுலகத்திற்கு புதிதாக வந்திருக்கும் முகுந்த் அம்மா அவர்களுக்கு,
நீங்கள் சீக்கிரமே பிரபல பதிவராக என் வாழ்த்துக்கள். என்னுடைய பதிவிற்கு வந்து கருத்து கூறியதற்கு மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து அந்த படத்தை உடனடியாக நீக்கிவிட்டேன். தொடர்ந்து என் பதிவிற்கு ஆதரவு தரவேண்டும்.
//திருவாசகத்தில் ஆரம்பித்து..பீதோவனில் முடித்த விதம் அருமை.//
நன்றி ராகவ் அவர்களே.
//என்றென்றும் அனுபவித்துக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்//
உண்மை. நானும் சில கற்று கொண்டு இருக்கிறேன்.
வருகைக்கு நன்றி அய்யா.
//நீங்கள் சீக்கிரமே பிரபல பதிவராக என் வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கு நன்றி அய்யா.
//உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து அந்த படத்தை உடனடியாக நீக்கிவிட்டேன்.//
என் கருத்துக்கு மதிப்பளித்து படத்தை நீக்கியதற்கு நன்றி.
இசை உலகில் எங்கெங்கெல்லாம் பயணித்து அனுபவித்துள்ளீர்கள்.
படிக்கச் சுவையாக இருந்தது.
we did that too :), we hope that gives a better taste in kid in picking out what they are going to listen to down the road...
முதல் வருகைக்கு நன்றி டாக்டர்.
//இசை உலகில் எங்கெங்கெல்லாம் பயணித்து அனுபவித்துள்ளீர்கள்.
படிக்கச் சுவையாக இருந்தது//
நான் அனுபவித்த சிறு துளியை ரசித்ததற்கு நன்றி அய்யா.
//we did that too//
ஓ அப்படியா :))
, we hope that gives a better taste in kid in picking out what they are going to listen to down the road...
எல்லாரும் அப்படிதான் தெகா சொல்றாங்க. எப்படியோ நல்லதுதான் செய்திருக்கேன்னு நினைக்கிறேன்.
Post a Comment