Wednesday, March 31, 2010

கதை கதையாம் காரணமாம்

கதைகள் கேட்ட, வாசித்த அனுபவத்தை பற்றி பகிர 'சொல்லத்தான் நினைக்கிறேன்' அம்பிகா அழைத்திருந்தார்கள், அவர்களுக்கு என் நன்றி.

எனக்கு கதை சொல்லிகள் என்றால் உடனே என் அம்மா பாட்டி தான் நினைவுக்கு வருவார்கள். அவர்கள் பெரிய சிவபக்தை. ஒவ்வொரு சிவராத்திரிக்கும் எங்கள் வீட்டுக்கு வந்து விடுவார்கள், அப்புறம் எங்களையும் அழைத்து கொண்டு மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு செல்வார்கள். அங்கு நடக்கும் ஆயிரத்தி எட்டு சங்காபிஷேகம் என்று நினைக்கிறேன், அது பார்த்து விட்டு வருவோம்.

பாட்டி எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் நிறைய சிவன் கதைகள் சொல்வார்கள். கண்ணப்ப நாயனார், நந்தனார், சிறுத்தொண்டர் கதை அப்புறம் சிவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டது இன்னும் நெறைய சொல்லுவார்கள். அப்புறம் ரொட்டி தாசன் கதை, அய்யா பிச்சை கதை இதுவும் சிவன் கதை தான் ஆனால் என் பாட்டியின் version ஆ என்று எனக்கு தெரியாது.

என் பாட்டி நன்றாக பாடுவார்கள், சங்கீதம் எல்லாம் அவர்களுக்கு தெரியாது, எல்லாம் நாட்டு புற பாடல்கள் மாதிரி இருக்கும். அதுவும் நந்தனார் தில்லை செல்ல முடியாமல் வருந்தும் கதையை மிக அழகாக பாட்டாக்கி பாடுவார்கள். இன்னும் என் பாட்டியின் அந்த பாடல்களும் நந்தனார் கதைகளும் பசுமரத்தாணி போல என்மனதில் உள்ளன.

என் அம்மா எங்களுக்கு கதை சொன்னதில்லை என்றாலும், நன்றாக பாடுவார்கள், இரவில் தூங்குவதற்கு முன் தினமும் பாடச்சொல்லி நான் கேட்பதுண்டு. என் பிரசவத்திற்கு என் அம்மா இங்கு வந்திருந்த போது இப்படி பாடச்சொல்லி record செய்து வைத்திருக்கிறோம்.

இதெல்லாம் சிறு வயதில் நான் கேட்டவை. அப்புறம் ஏழாவது எட்டாவது படிக்கும் போதெல்லாம் எங்கள் வீட்டில் ரஷ்ய நாடோடிக்கதைகள் புத்தகம் இருக்கும். அதனை படித்ததுண்டு. அப்புறம் அம்புலிமாமா, தெனாலிராமன், பீர்பால் கதைகளும் இரவல் வாங்கி படித்ததாக ஞாபகம். கொஞ்ச நாள் கழித்து ராஜேஷ்குமார், சுஜாதா இவர்களின் துப்பறியும் கதைகள் படித்ததுண்டு. அதுவும் இரவல் வாங்கி படித்ததோடு சரி. என் அப்பா இதனை எல்லாம் வாங்கி தர மாட்டார்கள்.

உண்மையாக கதை வாசிக்க ஆரம்பித்தது என்றால், அது என்னுடைய கல்லூரி காலத்தில் தான். நான் படித்த கல்லூரியின் பின்புறத்தில் ஒரு lending library இருக்கும். அதில் எங்கள் தோழியர் அனைவரும் சேர்ந்து பணம் கட்டி உறுப்பினர் ஆக சேர்ந்தோம். அதில் புத்தகம் எடுத்து ஒவ்வொரு வாரமும் எங்களுக்குள் circulate செய்து கொள்வோம். அப்படி முதன் முதலில் எனக்கு படிக்க கிடைத்தது "பொன்னியின் செல்வன்". அதுவரை வரலாற்று நாவல்கள் ஒன்று கூட நான் படித்ததில்லை என்பதால் முதலில் படிப்பது எனக்கு கடினமாக இருந்தது. ஆனாலும் அடுத்தவாரம் அனைவரும் அதனை பற்றி விவாதிப்பார்களே நாம் என்ன செய்வது என்ற பயத்திலேயே, நானும் அதனை ஒரு homework போல படிப்பேன். பிறகு கல்கியின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு அவருடைய "சிவகாமியின் சபதம்", "பார்த்திபன் கனவு", "அலை ஓசை" எல்லாம் படித்ததாக ஞாபகம்.

நான் வேலை பார்க்க ஆரம்பித்த போது, என்னுடன் பணிபுரிந்தவர்கள் எல்லாம் ஆங்கில நாவல்கள், படங்கள் பற்றி பேசுவார்கள் எனக்கு அதனை பற்றி எல்லாம் எதுவும் தெரியாது என்பதால் அவர்களுடன் விவாதிக்க முடியாது. பின்னர் என்னுடைய தோழி ஒருத்தி எனக்கு Robin Cook புத்தகம் Chromosome 6 என்று நினைக்கிறேன், அதனை எனக்கு படிக்க கொடுத்தாள். நான் ஆங்கில புத்தகங்கள் படித்ததில்லை என்பதால் அவளிடம் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி வைத்து கொண்டேனே தவிர படிக்கவில்லை.

நான் முதன் முதலில் படித்த (படித்து முடித்த) ஆங்கில புத்தகம் Sir Arthur Conan Doyle's Sherlock Holmes இன் துப்பறியும் கதை "A study in Scarlet". அதுவும் நான் இந்தியாவை விட்டு வெளியில் வந்த பின்பு. முன்பே சில தமிழ் துப்பறியும் கதைகள் படித்து இருந்ததால் எனக்கு இதனை படிக்க நன்றாக இருந்தது. பிறகு எல்லா Sherlock Holmes இன் கதைகளும் படித்தேன். அதே போல அடுத்த துப்பறியும் கதை எழுத்தாளர் "Agatha Christie" யின் கதைகளும் படித்து இருக்கிறேன்.

Thriller கதைகள் எனக்கு பிடித்து இருந்ததால் medical thriller எழுதும் Robin Cook இன் கதைகளும், Law thriller எழுதும் John Grisham இன் கதைகளும் படிக்க ஆரம்பித்தேன். பிறகு ஒருவாறு த்ரில்லர் கதைகள் போரடிக்க வேறு வகையான புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன். அதில் எனக்கு பிடித்த ஒரு சில

Animal farm and 1984 - George Orwell
The Kite Runner - Khaled Hosseini
To Kill a Mocking Bird - Harper Lee
A house for Mr.Biswas - V.S.Naipaul
The Lord of the Rings - J.R.R.Tolkien
A Passage to India - E.M.Forster
Memoirs of a Geisha - Arthur Golden
The God of Small Things - Arundhati Roy

ஒருகாலத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு புத்தகம் வாங்கும் பழக்கம் வைத்து கொண்டு இருந்தேன். தற்பொழுது நாங்கள் இருக்கும் இடத்தில் நூலக வசதி நன்றாக இருப்பதால் நூலகத்தில் இருந்து இரவல் வாங்கி படிக்க முடிகிறது. ஒவ்வொரு வாரமும் என் பையனுக்காக நூலகம் சென்று Board books எனப்படும் படக்கதைகள் புத்தகம் எடுத்து வந்து வாசித்து கொண்டு இருக்கிறேன். அதில் எனக்கு பிடித்த சில

The Very Hungry Caterpillar by Eric Carle
Goodnight Moon by Margaret Wise Brown
Brown Bear, Brown Bear, What do you see? by Bill Martin, Jr.
The Rainbow Fish by Marcus Pfister
Corduroy by Don Freeman
The Snowy Day by Ezra Jack Keats
The Runaway Bunny by Margaret Wise
Guess How Much I Love You by Sam McBratney

இவை எல்லாம் நூலகத்தில் இருக்கும் லிஸ்ட் இல் சிறந்த புத்தகங்களாக இருப்பவை.

என் கதை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உதவிய அம்பிகா அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள். கதைகள் கேட்ட, வாசித்த அனுபவத்தை பகிர நான் அழைக்க விரும்புவது

ராகவன் நைஜீரியா
தெகா
ராமலெட்சுமி

விருப்பமிருந்தால் தங்களின் அனுபவங்களை பகிருங்களேன், அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

13 comments:

padma said...

nice sharing

Chitra said...

good ones. Thank you for sharing!

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான பகிர்வு முகுந்த் அம்மா. என்னையும் அழைத்து இருக்கிறீர்கள். முயற்சிக்கிறேன்:)!

ஹுஸைனம்மா said...

நல்லா எழுதிருக்கீங்க முகுந்த் அம்மா.

அமைதி அப்பா said...

நன்றாக எழுதி உள்ளீர்கள்...
எனது கதை அனுபவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...
எனக்கும் கதைக்கும் ரொம்ப தூரம். கதை சொல்ல பாட்டி கிடையாது.எனது கிராமத்து ஆசிரியர்களுக்கு பாடமே சொல்லித்தரத் தெரியாது, பிறகு கதை...?!
கல்லுரி காலத்தில் ராஜேஷ்குமார் கதைகள் படித்தேன்,ஒரு கதையில் (பெயர் ஞாபகமில்லை) ஒரு உடலை துண்டுதுண்டாக வெட்டி ரயிலில் கழிப்பிடம் வழியாக வீசுவதாக எழுதியிருப்பார், அதைப் படித்த பின்பு சாப்பிடமுடியாமல் கஷ்டப்பட்டேன். அன்றிலிருந்து கதைப்படிக்கும் எண்ணமே எனக்கு இல்லாமல் போய்விட்டது.
இன்றுவரை எனக்கு கதைப் படிப்பதில் ஆர்வமில்லை.

அம்பிகா said...

அருமையான பகிர்வு முகுந்த் அம்மா.
நல்ல எழுதி இருக்கீங்க.
\\அமைதி அப்பா said...
ஒரு கதையில் (பெயர் ஞாபகமில்லை) ஒரு உடலை துண்டுதுண்டாக வெட்டி ரயிலில் கழிப்பிடம் வழியாக வீசுவதாக எழுதியிருப்பார்,\\
பல கதைகளில் இப்படிதான். மனித உடல்களை கூறு போட அவருக்கு ரொம்ப பிடிக்கும் போல.

என் பையனைக் கூட அவரது புத்தகம், படிக்க வேண்டாமென கூறுவேன்.

மங்குனி அமைச்சர் said...

லயன் காமிக்ஸ் , ராணி காமிக்ஸ் : காமிக்ஸ வுட்டிகளே

Thekkikattan|தெகா said...

ஓ! இன்னொரு தொடரழைப்பிற்கான பதிவா, அதிலும் எனது பெயரா :-). மொத்தத்தில இரண்டு தொடர் பதிவுகள் உங்களுக்கு என் பக்கமிருந்து பாக்கி இருக்கிது போலவே!! ம்ம்ம்... வாசிப்பனுபவம் எல்லாருக்கும் ஒரே மாதிரி அமைந்து விடுவது கிடையாதுதானே... உங்க பாணியைத் தொட்டு நானும் என்னுடைய அனுபவத்தை பிரிதொரு சமயம் பகிர்ந்துக்கிறேன். நீங்க வாசித்த சில புத்தங்களை நானும் தொட்டுப் பார்த்திருக்கேன்...

அழைப்பிற்கு நன்றிங்க!

இவ்வளவு தூரம் வந்திட்டு புத்தகமின்னு பேசி அதற்குப் பிறகும் என்னோட நூலகத்தை காமிச்சிக் கொடுக்காம போன எப்பூடீஈ... இங்க இருக்கும் பாருங்க எனது தூசி தட்டப்பட்ட நூலகம்...

முகுந்த் அம்மா said...

நன்றி பத்மா

நன்றி சித்ரா

நன்றி ராமலெட்சுமி அவர்களே. தொடர்ந்ததுக்கு நன்றி. இப்போது தான் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

நன்றி ஹுஸைனம்மா

முகுந்த் அம்மா said...

@அமைதி அப்பா அவர்களே

பின்னூட்டத்திற்கு நன்றி. தங்களின் கதை அனுபவம் போல எனக்கு சில உண்டு. முதன் முதலில் ராஜேஷ் குமார் புத்தகம் ஒன்று படிக்கும் போது பயந்து என்னுடைய அண்ணனிடம் இதே போல புலம்பி இருக்கிறேன். பிறகு போக போக பழகி விட்டது.

@நன்றி அம்பிகா அவர்களே. என்னை அழைத்ததற்கு மீண்டும் என்னுடைய நன்றிகள்.

முகுந்த் அம்மா said...

@மங்குனி அமைச்சர் அவர்களே

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. ஆமாங்க, லைன் காமிக்ஸ் ராணி காமிக்ஸ் மறந்துட்டேன் பாருங்க.

@தெகா

Sorry தெகா இன்னொரு தொடர் அழைப்புக்கு :-)).

தங்களின் நூலகம் பதிவை ஏற்கனவே படித்து இருக்கிறேன். அதில் இருக்கும் புத்தகம் பார்த்து வியந்ததாலேய தங்களையும் தொடர அழைத்தேன். உங்களால் முடியும் போது கட்டாயம் தொடருங்கள்.

ராமலக்ஷ்மி said...

கட்டிப் போட்ட கதைகள்

போட்டுட்டேன்:)!

"உழவன்" "Uzhavan" said...

ஒரே இங்கிலிபீசு புக்சுதான் :-)
அனுபவத்தை நல்லா சொல்லியிருந்தீங்க மேடம்.