Thursday, March 4, 2010

Flashback...டொய்ங்..டொய்ங்

நேற்று இரவு எழுந்து எதாவது எழுதலாமே என்று நினைத்து கம்ப்யூட்டர் ஐ on பண்ணியவுடன்

"என்ன இப்போ எல்லாம் நடுராத்திரியில எழுந்திருச்சு blog எழுதுற மாதிரி பைத்தியம் ஆயிட்ட?" என்றார் என் கணவர்.

அட ஆமால்ல! இப்படி நான் படிக்கும் போது கூட எந்திருச்சு படிச்சதில்லையே. இப்படி ப்ளாக் நம்மளை addictive ஆக்குதோ என்று நினைச்சாலும்

"ஆமா பகல்ல உங்க பையன பாக்கவே நேரம் சரியாய் இருக்கு, எனக்குன்னு டைம் எப்போ தான் கிடைக்குது சொல்லுங்க". என்று நொள்ள சாக்கு சொன்னேன்.

"ஒரு நிமிஷம் கடந்த 5 வருஷ flashback ஐ ஓட்டி பாரு. உனக்கே புரியும்" என்று பதில் வந்தது.

உடனே என் மனதில் வளையம் வளையமாக flashback ஓடியது.

டொய்ங்..டொய்ங்..டொய்ங்..

ஐந்து வருடங்களுக்கு முன் ....டன் டட்ட டைன்

2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான் இங்கு வந்த போது எங்களுக்கு என்று நட்பு வட்டம் யாரும் இல்லை. இங்கு இருந்த நட்பு எல்லாம் என்னுடைய கணவரின் bachelor friends மட்டுமே.

என்னங்க உங்களுக்கு family ஆ யாரும் friends கிடையாதா என்று என் கணவரிடம் கேட்டேன்

"அட போம்மா, இங்க பாமிலி ஓட இருந்தா தான் நம்மளையும் பாமிலி மக்கள் ஒட்ட விடுவாங்க. இப்போ நீ வந்துட்ட இல்ல இனிமே பாரு என்னோட வேலை பாக்குறவங்க நிறைய பேர் friends ஆவாங்க" என்று பதில் வந்தது.

என்ன ஆச்சரியம் அதே போல எங்களுக்கு ஒரு group அமைந்தது. அதில் இருந்த அனைவரும் couples என்பதால் அது "couples group". அது மட்டும் அல்ல அவர்கள் அனைவர் வீட்டிலும் கணவர் வேலை பார்த்தார் மனைவி house wife. அப்புறம் என்ன! வாரா வாரம் get together தான், Virginia beach, Blue ridge parkway...etc நெறைய ஊர் சுற்றல் தான்.

அப்புறம் ஒரு ஆறு மாதத்தில் எனக்கு பல்கலைகழகத்தில் வேலை கிடைத்தது, அதன் பின் எங்க couples க்ரூபில் இருந்து நாங்கள் கழற்றி விட பட்டோம். என்ன காரணம் என்று கேட்ட போது,

"நீங்க வேலை பார்கிறதால weekend தானே உங்களுக்கு கிடைக்கும். அதில போய் உங்கள disturb பண்ண வேண்டாமுன்னு விட்டுட்டோம்" என்று பதில் வந்தது.

அப்புறம் கொஞ்ச நாள் கழித்து எங்களை போல இருவரும் வேலை பார்க்கும் ஒரு குரூப் அமைந்தது அது "all working group" அது கணவன் மனைவி வேலை பார்க்கும் couples group. அப்புறம் என்ன! weekend weekend, get together தான், நெறைய ஊர் சுற்றல் தான்.

யாரு கண்ணு பட்டுச்சோ! அப்புறம் ஒரு நல்ல நாளில் அந்த குரூப் இல் இருந்தும் கழற்றி விடப்பட்டோம். இப்போது காரணம் அவர்கள் எல்லாம் "expecting parents" ஆகி விட்டார்கள். நாங்கள் இன்னும் couples தானே. காரணம் கேட்ட போது.

"குழந்தை இருந்தா குழந்தைக்கும் ஒரு செட் வேணும்ல..நாம மட்டும் பேசிட்டு இருந்தா குழந்தைகள் எங்க போகும்". என்று பதில் வந்தது.

அப்புறம் ஒரு வழிய முக்கி தக்கி நாங்களும் "first time parents" ஆகி parents group ல join பண்ணிடலாம்னு நினைச்சா அதுக்குள்ள அவங்க எல்லாம் double century போட்டு "Two time parents" ஆகிட்டாங்க.

இப்போ என்ன பண்ணுறது? அவங்க நமளையும் ஆட்டைக்கு சேர்த்துக்கணும் னா நாங்களும் double century போடணும். இல்லாட்டி "first time parents" இருக்க குரூப் ஆகா பார்க்கணும், அதுவும் ஆம்பளை பையன் இருக்க first time parents குரூப் ஆ பார்க்கணும்..

"அப்ப தானே என் பையனுக்கும் அவன் செட்டுக்கு ஆள் கிடைக்கும்"

flashback முடிந்தது டொய்ங்..டொய்ங்..டொய்ங்.

12 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

;)) நல்லாத்தான் கொசுவத்தி சுத்தினீங்க..

ஒரு க்ரூப் ஃபார்ம் செய்யரது எவ்ளோ கஷ்டம் பாருங்க...

டவுசர் பாண்டி... said...

//இருக்க குரூப் ஆகா பார்க்கணும், அதுவும் ஆம்பளை பையன் இருக்க first time parents குரூப் ஆ பார்க்கணும்..//

இருக்க குரூப்பா பார்க்கணும், அதுவும் ஆம்பளை பசங்க இருக்க first time parents குரூப்பா பார்க்கணும்..

டவுசர் பாண்டி... said...

நல்ல சரளமான நடை....

பினிஷிங் கொஞ்சம் கவனிங்க!

Thekkikattan|தெகா said...

அட ஆமால்ல! இப்படி நான் படிக்கும் போது கூட எந்திருச்சு படிச்சதில்லையே. இப்படி ப்ளாக் நம்மளை addictive ஆக்குதோ என்று நினைச்சாலும் //

உங்களையும் இந்த blog bug கடிச்சி வைச்சிருச்சுப் போலங்க :))... இந்த ஊர்ல எது எதுக்கெல்லாம் கவலைப்பட வேண்டி இருக்கு பாருங்க, மனுசய்ங்க தனித் தனி தீவா வாழ ஆரம்பிச்சதுதான் காரணமோ... நல்ல கொசுவத்தி :D

முகுந்த்; Amma said...

நன்றி முத்துலெட்சுமி அவர்களே

//ஒரு க்ரூப் ஃபார்ம் செய்யரது எவ்ளோ கஷ்டம் பாருங்க//

ரொம்ப கஷ்டமுங்க.

முகுந்த்; Amma said...

வருகைக்கு நன்றி பாண்டி அவர்களே.


//பினிஷிங் கொஞ்சம் கவனிங்க//

சுட்டிகாட்டியதற்கு நன்றி. இனிமே ஒழுங்கா proof reading செய்கிறேன்.

முகுந்த்; Amma said...

//உங்களையும் இந்த blog bug கடிச்சி வைச்சிருச்சுப் போலங்க//

ஆமாங்க bug கடிச்சி வைச்சிருச்சு :))

//இந்த ஊர்ல எது எதுக்கெல்லாம் கவலைப்பட வேண்டி இருக்கு பாருங்க//

என்னங்க பண்றது கலிகாலம். :((

settaikkaran said...

பழைய நினைப்பு சூப்பர்! ரீ-ரிகார்டிங்க் சூப்பரோ சூப்பர் போங்க!! ;-)))

முகுந்த்; Amma said...

வாங்க சேட்டை. பின்னுாட்டதிற்கு நன்றி.

பத்மா said...

அப்புறம் ஒரு வழிய முக்கி தக்கி நாங்களும் "first time parents

hahaha semaiya ezhuthureenga

MyFriend said...

by the way, நல்லா எழுதுறீங்க. வாழ்த்துக்கள்..

MyFriend said...

ஒரு க்ரூப் ஃபார்ம் பண்ணுறதுல இவ்வோ விஷயம் இருக்கா? ம்ம்...