Monday, March 29, 2010

Love in Heathrow



"ஒரு ஊரில ஒரு அம்மா, அப்பா இருந்தாங்களாம். அவங்களுக்கு ஒரு பொண்ணு இருந்துச்சாம். அந்த பொண்ணுக்கு சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணி வைக்கனும்னு அவங்க அப்பா ஒத்த காலில நின்னாறாம், ஆனா, அந்த பொண்ணை நல்லா படிக்க வைக்கணும்னு அந்த பொண்ணோட அம்மா அப்பாகிட்ட சண்டை போட்டாங்களாம். கடைசியல அவங்க அம்மா சொன்னது போல நல்லா படிச்சதாம் அந்த பொண்ணு.

படிச்சு முடிச்சவுடனே அந்த பொண்ணுக்கு வேலை கிடைச்சதாம். அந்த வேலையில இருந்து அந்த பொண்ணை வெளிநாட்டுக்கு அனுப்புனாங்களா, அங்க அந்த பொண்ணு போனப்போ அங்க ஒரு பையன பார்த்ததாம். அந்த பையன் இந்த பொண்ணோட friend ஓட friend டாம். அந்த பையனுக்கு இந்த பொண்ணை ரொம்ப பிடிச்சு போனதாம். அந்த பையன் என்னை கல்யாணம் பண்ணிகிறயான்னு கேட்டாராம். இந்த பொண்ணும் சரின்னு சொல்லிடுச்சாம்.

அப்புறம் அந்த பொண்ணு மேல் படிப்பு படிக்க ஆரம்பிச்சுடுச்சாம், அந்த பையன் அமெரிக்கா வந்துட்டாராம். அப்புறம் அவங்க ரெண்டு பெரும் போன்லயும், இண்டர்நெட்லையுமே லவ் பண்ணினாங்களாம்.

அப்புறம் ஒரு நாள், அந்த பொண்ணோட அம்மாகிட்ட தான் லவ் பண்ணுறத சொல்லிச்சாம் அந்த பொண்ணு. அவங்க அம்மா டென்ஷன் ஆகிட்டாங்களா, அப்புறமா நான் பையன பார்க்கணும்னு சொன்னாங்களாம். கொஞ்ச நாள் கழிச்சு பையன பார்த்த பிறகு, அவங்க அம்மாவுக்கும் பிடிச்சிடுச்சாம், அப்புறம் அந்த பையன் வீட்டுலயும் இந்த பொண்ண பிடிச்சிடுச்சாம்.

அப்புறம் மெதுவா அந்த பொண்ணோட அப்பா கிட்ட, அந்த பொண்ணோட அம்மா இதை சொன்னாங்களாம். அவரு சாதி, சனம் என்ன சொல்ல போகுதோன்னு யோசிச்சாரம். அந்த பொண்ணோட அம்மா நம்ம மக செய்யிறது சரியா தாங்க இருக்கும்னு சமாதானம் செய்தாங்களாம். அப்புறம் எல்லாரும் சம்மதிச்சு கல்யாணம் சிறப்பா நடந்துச்சாம். சரியா தம்பி" என்று ஒரு வழியா என் பையனுக்கு கதை சொல்லி முடிச்சேன்.

பொண்ணுபார்த்த/பார்க்க போன கதையை சொல்ல அனன்யா , அழைச்சிருந்தாங்க. எனக்கு அந்த அனுபவமே ஏற்படாததால, எனக்கு தெரிஞ்ச ஒரு கதை இங்கே. நன்றி அனன்யா.

நானும் என் பங்குக்கு ஒரு சிலரை கூப்பிடனும்ல

சித்ரா
பத்மா

என்னைய போல பீல் பண்ணி கதை சொல்லனும்னு நெனைச்சா சொல்லுங்கப்பா.

15 comments:

இராகவன் நைஜிரியா said...

கதை நல்லா இருக்கு. நிஜக் கதையாங்க

துபாய் ராஜா said...

சொந்தக் கதை சுகமான கதை. :))

பத்மா said...

ஐயோ இத்தோட நீங்க ரெண்டாவது ஆள் .எனக்கு இப்பிடிலாம் எழுத வராது முகுந்த் அம்மா

இராகவன் நைஜிரியா said...

// padma said...
ஐயோ இத்தோட நீங்க ரெண்டாவது ஆள் .எனக்கு இப்பிடிலாம் எழுத வராது முகுந்த் அம்மா //

இப்படியெல்லாம் எழுதக் கூடாது... நீங்க வேற மாதிரித்தான் எழுதனும்.

ப.கந்தசாமி said...

நல்லா இருக்கு, சுபம் போடாதது ஒன்றுதான் குறை.

Chitra said...

நல்ல பகிர்வு....... அட, கீழே என் பெயர் மாதிரி தெரியுதே........ நான்தானா அடுத்த குயில்? அவ்வ்வ்வ்......

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சரிங்க சரிங்க :)

Ananya Mahadevan said...

ஹலோ,
முகுந்தம்மா, செல்லாது செல்லாது செல்லாது...
ரொமான்ஸே இல்லாம ரொமாண்டிக் பதிவா? நிஜம்மாவே லவ் மேரேஜ் தானா? ரொம்ப சீரீயஸ் லவ் மேரேஜோ? அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினார் ரேஞ்சுல ஒண்ணுமே காணோமே? க்ர்ர்....
ரொம்ப வித்தியாசமான நரேஷன் டெக்னிக்!

அண்ணாமலையான் said...

ஓ இதான் வெளிநாட்டு காதலா? வாழ்த்துக்கள்.

முகுந்த்; Amma said...

@ராகவன்
//கதை நல்லா இருக்கு. நிஜக் கதையாங்க//
ஆமாங்க, என்னோட சொந்த கதை.
நன்றிங்க

@துபாய் ராஜா
//சொந்தக் கதை சுகமான கதை. //

கரெக்ட் ஆ சொன்னிங்க, சுகமான கதை. நன்றிங்க

@பத்மா
//ஐயோ இத்தோட நீங்க ரெண்டாவது ஆள் .எனக்கு இப்பிடிலாம் எழுத வராது முகுந்த் அம்மா//

உங்களோட கவிதை நடையில ஒன்னு எடுத்து விடுங்கப்பா. சூப்பர் ஆ வந்துடும் பாருங்க.

நன்றிங்க

முகுந்த்; Amma said...

@கந்தசாமி அய்யா
//நல்லா இருக்கு, சுபம் போடாதது ஒன்றுதான் குறை.//

பையன் கிட்ட கதை சொல்லும் போது சுபம் போட முடியறதில்ல அய்யா.

@சித்ரா
//நல்ல பகிர்வு//
நன்றி சித்ரா

//அட, கீழே என் பெயர் மாதிரி தெரியுதே........ நான்தானா அடுத்த குயில்? அவ்வ்வ்வ்
//
சூப்பர் ஆ குயில் கூவிருச்சு போல இப்போ தான் பார்த்தேன், கடைசியில ஏப்ரல் பூல் ஆக்கிடீங்கலேப்பா

@முத்துலெட்சுமி
//சரிங்க சரிங்க :)//

இந்த மாதிரி கதை சொல்லலாமுன்னு உங்க பதிவை பார்த்த பிறகு தாங்க தோனுச்சு. உங்க வீட்டுகாரர் இப்படி தானே கதை சொல்லுவாருன்னு எழுதி இருந்தீங்க, அதோட பாதிப்பு தாங்க இது. :))

முகுந்த்; Amma said...

//செல்லாது செல்லாது செல்லாது//

அப்படியெல்லாம் சொல்லாதீங்கப்பா.

//ரொமான்ஸே இல்லாம ரொமாண்டிக் பதிவா? //

எதோ என்னால முடிஞ்சது.

//நிஜம்மாவே லவ் மேரேஜ் தானா? ரொம்ப சீரீயஸ் லவ் மேரேஜோ?அவளும் நோக்கினார் ரேஞ்சுல ஒண்ணுமே காணோமே? //

நிஜம்மாவே லவ் மேரேஜ் தாம்ப்பா. இதில்லெல்லாம் யாரவது உடன்சு விடுவாங்களா. சீரீயஸ் லவ், பின் சிரியஸ் லவ் ஆகி மேரேஜ் ல வந்து முடிஞ்சது.

//ரொம்ப வித்தியாசமான நரேஷன் டெக்னிக்//

முத்துலெட்சுமி அவங்க பதிவை படிச்சப்புறம் இப்படியும் எழுதலாமுன்னு தோணிச்சு அதான் இப்படி ஒரு நரேஷன்.

அழைத்ததற்கு நன்றி அனன்யா.

முகுந்த்; Amma said...

@அண்ணாமலையான்

//ஓ இதான் வெளிநாட்டு காதலா? வாழ்த்துக்கள்//

ஹி ஹி ஹி ..ஆமாங்க

நன்றி

Unknown said...

ஹலோ மேடம் பின்னூட்டம் போடறதுக்கே பயமாயிருக்கு. ஏன்னா இப்பத்தா சித்ரா அம்மணிகிட்டே
ஏப்ரல் பூல் பட்டம் வாங்கிட்டு இங்கே வந்து பாத்தா...
நிஜமாச் சொல்லியிருந்தா வாழ்க வளமுடன்.

அன்புடன்
சந்துரு

Vijiskitchencreations said...

என்ன முகுந்த் அம்மா. நலமா. நானும் இன்று தான் உங்க பதிவை பார்க்க வர முடிந்தது. நல்ல நிஜ கதை.எல்லாரும் கவிதையாய் எழுதி குவித்திருந்தாங்க. இது எனக்கு பிடித்த தளமாச்சு. நல்ல கதையாய் எழுதி விடறிங்க. நான் அடிக்கடி வருகிறேன்.
அப்ப்டியே ஒரு பொடி நடையாய் வந்துட்டு போங்கோ. கதை நடையில் சொல்லிடுங்கோ. நன்றி. மீண்டும் வருகிறேன்.