Monday, August 9, 2010

இரண்டு பயணங்கள் ஒரு ஒப்பீடு

சார்லோட் to நியூயார்க் - எனது பக்கத்து இருக்கையில் ஒரு வயதான ஆங்கில பெண்மணி. முகுந்த் விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் புது இடம் என அழுக ஆரம்பிக்கிறான். தொடர்ந்து விமானம் மேலேற அவன் சத்தம் விமானத்தில் உள்ளவர்கள் காதை கிழிக்கிறது. என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பாட்டியிடம் "I am so sorry" என்று சொல்ல அந்த பாட்டியோ புன்னகையுடன் "No problem, I have 4 grandkids, I know how it is" என்று சொல்கிறார். விமானம் நியூ யோர்க்கில் தரை இறங்க, நான் கேட்காமலேயே என்னுடைய கைப்பைகளை மேலிருந்து எடுத்து தருகிறார்.

சென்னை to மதுரை - எனது பக்கத்து இருக்கையில் நடுத்தர வயது தம்பதியினர். முகுந்துக்கு இப்போது விமான பயணம் கொஞ்சம் பழகிவிட்டது. இருப்பினும் விமானம் மேலெழும் பொழுது சிணுங்க ஆரம்பிக்கிறான். பக்கத்து சீட் அம்மா ஒரு மாதிரி பார்கிறார், எதோ பெரிய இடைஞ்சல் ஏற்பட்டது போல தலையை ஆட்டுகிறார், நான் "சாரி" என்று சொல்ல பதில் ஏதும் சொல்லாமல் தலையை திருப்பி கொள்கிறார். விமானம் மதுரையில் இறங்கியவுடன் பக்கத்து சீட் அய்யாவிடம் ப்ளீஸ் ஹெல்ப் என்று பெட்டியை எடுக்க உதவி கேட்கிறேன் அதற்கு அந்த அம்மா "உங்களுக்கு எதுக்கு வீண் வேலை, அவங்களுக்கு எடுக்க தெரியும் பேசாம இருங்க" என்று பதில் தருகிறார்.

இது என்னுடைய இந்திய பயணத்தின் போது நான் சந்தித்த சிலரை பற்றிய என் கருத்துக்கள் மட்டுமே, அனைவரும் இப்படி தான் இருப்பார்கள் என்று நான் கூற வரவில்லை.

11 comments:

அபி அப்பா said...

அங்க இருந்து வரும் போது ஷண்முகா தான் கூட வந்ததா சொன்னா. அவ பாட்டி மாதியா தெரியுது உங்களுக்கு:-))))

அமைதி அப்பா said...

நல்ல ஒப்பீடு!

Sri said...

இதுவே New York to Boston and சென்னை to Madurai (by train or bus)-ஆக இருந்தால் உங்கள் அனுபவம் வேறு மாதிரி இருந்து இருக்கலாம் :)

Srini

Sri said...

In my earlier comment I mean to say NY to Boston by air....

Srini

பொன்ஸ்~~Poorna said...

i think the second lady dint have any grand children.. that must be the only issue more than the location :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொன்ஸ்~~Poorna said...

i think the second lady dint have any grand children.. that must be the only issue more than the location :)///

:)

முகுந்தம்மா டிஸ்கி எல்லாம் பாத்து தான் போடறீங்க..

முகுந்த்; Amma said...

@அபி அப்பா

//அங்க இருந்து வரும் போது ஷண்முகா தான் கூட வந்ததா சொன்னா. அவ பாட்டி மாதியா தெரியுது உங்களுக்கு:-))))//

அச்சச்சோ! இது வம்பாதானே போச்சு! அவங்க எங்கோ நியூயார்க் flight ல வரல. அங்க இருந்து தான் என் கூட வந்தாங்க. சண்ட மூட்டி விட்டுடாதீங்க ப்ளீஸ்.
@அமைதி அப்பா said...

//நல்ல ஒப்பீடு!//

நன்றி அமைதி அப்பா அவர்களே

முகுந்த்; Amma said...

@Sri

//இதுவே New York to Boston and சென்னை to Madurai (by train or bus)-ஆக இருந்தால் உங்கள் அனுபவம் வேறு மாதிரி இருந்து இருக்கலாம் :)//

உண்மைதாங்க! இந்தியாவில ட்ரைன் அல்லது பஸ் ல போனா நெறைய பேசிட்டே வருவாங்க பக்கத்துக்கு சீட் ல இருக்குறவங்க. ஆனா ஏன் NY to Boston flight ல வர்றவங்க friendly ஆ இருக்க மாட்டங்கன்னு சொல்லுறீங்க?.

முகுந்த்; Amma said...

@பொன்ஸ்~~பூர்ண, @முத்துலெட்சுமி

i think the second lady dint have any grand children.. that must be the only issue more than the location :)

//முகுந்தம்மா டிஸ்கி எல்லாம் பாத்து தான் போடறீங்க..//

sure. நீங்க சொல்லுறத நான் ஒத்துகிறேன். அந்த அம்மாவுக்கு என்ன கஷ்டமோ யாருக்கு தெரியும். அதனால தான் என்னோட டிஸ்கில எல்லாரும் எப்படி இருப்பாங்கன்னு சொல்ல வரலன்னு முன்ஜக்கிரதையா எழுதிட்டேன்.

அரசூரான் said...

முகுந்த் அம்மா, ஊரிலிருந்து வந்தாச்சா? மூன்று பதிவையும் படித்தேன், சற்று வருத்தம்மாக இருந்தது.
வருத்தங்களை துடைத்தெரியுங்கள், முகுந்தின் உடம்பையும் உங்கள் மனதையும் தேற்றுங்கள்.
நான் வருடா வருடம் இது போன்றவற்றை அனுபவித்து பழகிவிட்டேன்.

Sri said...

வேற ஒன்னும் இல்லைங்க... New York வந்தப்போ கெடச்ச அனுபவம் தான் :)

Srini