Tuesday, August 24, 2010

இரவு பயணமும் ஸ்ரீ வாஞ்சியமும்

இரண்டரை வருடங்களுக்கு பிறகு நான் சென்ற இந்த இந்தியா பயணத்தில் நான் கண்ட மிகப்பெரிய மாற்றம் இந்திய நெடுஞ்சாலைகள்.

மதுரையில் இருந்து சென்னை ஆறு முதல் ஏழு மணி நேரத்தில் செல்ல முடிகிறது. இரண்டு லேன் வசதியுடன் அற்புதமாக இருக்கிறது நெடுஞ்சாலைகள். அதற்குரிய வரி (டோல்) செலுத்தும் போதும் நமக்கு எந்த முணுமுணுப்பும் ஏற்படுவதில்லை.

பலமுறை மதுரையில் இருந்து திருச்சிக்கு பயணப்பட நேர்ந்தது, ஒன்றரை மணி நேரத்தில் கிட்டத்தட்ட எண்பது முதல் நூறு கிலோமீட்டர் வேகத்தில் கார் செல்ல முடிகிறது. இதனை முதலில் பார்த்தவுடன் ரங்கமணி க்கு ஒரு நப்பாசை, நாமும் கார் ஓட்டலாமே என்று.

ஆனால், வண்டி இந்திய நெடுஞ்சாலையில் செல்லும் போது மூன்று இடங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்று பின் அவர் புரிந்து கொண்டார்.
  1. முதலில் நெடுஞ்சாலையை கடக்கிறோமே, வேகமாக கடப்போம் என்றுகொஞ்சமும் உணராமல் ஏனோதானோ என்று செல்லும் மக்கள்
  2. பாதையின் குறுக்கே வரும் ஆடு, மாடு, நாய், பன்றி, கோழி....(அமெரிக்காவில் இது போன்று குறுக்கே வரும் பல பிராணிகள் காருக்கு பலியாவதை கண்கூடாக கண்டிருக்கிறேன், ஆனால் இந்தியாவில் இப்படி நடந்தால் அதன் உரிமையாளர் பஞ்சாயத்தை கூட்டி விடுகிறார்.)
  3. அதற்க்கு பிறகு முக்கியமான தடை எதிர் திசையில் வரும் வாகனங்களால் ஏற்படுவது. சிறிது தூர பிரயாணத்தை மிச்சபடுத்த, எதிர் திசையில் வந்து நேர் வழியில் செல்லும் நம்மையும் திக்கு முக்காட வைத்து விடுகிறார்கள்.
இவற்றில் இருந்து எல்லாம் தப்பித்து கார் ஓட்டுவதற்கு சிறப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பகல் நேரங்களில் இது போன்ற தடைகளை தூரத்தில் இருந்து அறிந்து கொள்வதால் விலகி, மெதுவாக செல்ல முடிகிறது, ஆனால் இரவு நேரங்களில் ஹெட் லைட் கூட இல்லாமல் எதிர் திசையில் வரும் வாகனங்களில் இருந்து தப்பிப்பதற்கு பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டி உள்ளது.

மேற்சொன்னவை எல்லாம் நெடுஞ்சாலைகள் பற்றியது , ஆனால் மற்ற சாலைகளின் நிலைமை அப்படியே தான் இருக்கிறது. அதுவும் மாயவரத்திலிருந்து ஸ்ரீவாஞ்சியம் சென்ற அனுபவம் எனக்கு இன்னும் நினைத்தால் மயிர்கூச்சரிய வைக்கும்.

ஸ்ரீ வாஞ்சியத்தில் இருக்கும் வாஞ்சிநாத சுவாமிகள் எமனுக்கு சாபத்தில் இருந்து விமோசனம் அளித்ததால் அங்கு செல்ல பல தடைகள் ஏற்படும் என்று சிலர் பயமுறுத்தினர். இருப்பினும் எங்கள் குடும்பம் முழுதும் ஒரு இன்னோவா காரில் அங்கு செல்ல மதியம் கிளம்பினோம். குண்டும் குழியுமாக இருந்த சாலையில் பின் சீட்டில் அமர்ந்து பயணப்படுவதர்க்குள் முதுகு வலி வந்துவிட்டது.

இரண்டு வழிச்சாலையில் எங்கள் டிரைவர் நிதானமாகவே வண்டி ஓட்டி சென்றார். இருப்பினும் ஒரு சிறிய வளைவு அங்கு சென்றதும் திடீரென்று வண்டியை நிறுத்தி விட்டார், அப்போது எதிர் திசையில் ஒரு பஸ் திரும்ப முயற்சித்து கொண்டிருக்க அதனை ஓவர் டேக் செய்து ஒரு அரசுபேருந்து எங்கள் வண்டியை ஏறக்குறைய இடித்த நிலையில் மிக வேகமாக சென்றது, எங்கள் வண்டியில் இருந்த அனைவரும் கத்தி விட்டோம். ஒருவழியாக, நாங்கள் கோவிலுக்கு சென்று தரிசித்து விட்டு திரும்பும் போது ஒரு சாலை விபத்து, எங்கள் வண்டி அடி வாங்க இருந்த அதே இடத்தில் ஒரு பஸ் டூ வீலர் மீது மோதி அந்த இடத்திலேயே டூ வீலரில் இருந்த ஒருவர் மரணம்.

ஸ்ரீ வாஞ்சியத்தில் எமனுக்கு சாப விமோசனம் அளித்தார் சிவன், விபத்து நடந்த அந்த இடத்தில் ஒருவருக்கு எமன் மோட்சம் அளித்து விட்டார். இதில் யார் மீது குற்றம் சொல்ல?, வேகமாக ஓட்டி வந்த பஸ் டிரைவர் மீதா?, கண்மண் தெரியாமல் வளைவுகளில் முந்தி செல்லும் டூ வீலர்கள், பஸ்கள் மீதா?.

சாலையில் செல்லும் போது கொஞ்சம் பொறுமையுடன் இருந்தால் பலர் வாழ்வு தப்பும். இருப்பினும் அதிக வேகத்துடன் சென்று ஏன் இப்படி தனக்கு தானே குழி தோண்டி கொள்கிறார்களோ தெரியவில்லை!

15 comments:

சேட்டைக்காரன் said...

அதுனாலேதான் எல்லாரும் சொல்றாங்க!

In US, driving is right side.

In UK, driving is left side

In India, driving is suicide

பத்மா said...

nice post but i wont agree with settai karan always

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ விவேகமில்லாத வேகம் தான் நம்ம ஊருல பயம்.. ரோடு நல்லா இல்லாதப்பயாச்சும் கொஞ்சம் மெதுவா போவாங்க.. ரோடு நல்லா இருக்கேன்னு வேகமா போவது தான் பயமே..

எங்க ஊரு பக்கத்துல வளைவும் சிறு ரோடுகளும் ஆக இருப்பதால் எனக்கும் மிகப்பயமா இருக்கும்.. ரயில் தான் நான் பயமில்லாம போற ஒன்னு அதும் இப்ப எல்லா ம் ஆக்ஸிடெண்ட் ஆகி மிரட்டுது.. இனி நான் வீட்டை விட்டு எங்கயும் போகமுடியாத படிக்கு எனக்கு எக்கச்சக்க போபியா வந்துடுச்சுப்பா..

அரசூரான் said...

முகுந்த் அம்மா மாயவரம் வந்திருந்திங்களா?, ஆஹா ஒரு பதிவர் சந்திப்பு போட்டு இருக்கலாமே!

நம்ம ஊரில் வண்டி ஓட்ட தனி திறமை வேண்டும். "பதறினால் சிதறிடுவாய்" என்று லாரிக்கு பின்னால் எழுதியிருக்கும் - எனக்கு ரொம்ப பிடிக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்

சேட்டைக்காரன், இந்தியாவில் டிரைவிங் ஈஸ் லெஃப்ட் & ரைட் Ride.

Chitra said...

I remember seeing a show about Kerala on the TRAVEL CHANNEL. The host talked about driving in India as, "One needs 3 things in India to drive safely: Good Brakes, Good Horn and Good Luck!"

ஹுஸைனம்மா said...

ஆஹா, ஸேம் பிளட்! நானும் இந்த நெ(கொ)டுஞ்சாலைகள் பற்றி ஒரு பதிவு ரெடி பண்ணிகிட்டிருக்கேன்!!

//வீட்டை விட்டு எங்கயும் போகமுடியாத படிக்கு எனக்கு எக்கச்சக்க போபியா வந்துடுச்சுப்பா..//

முத்தக்கா, இதுலயும் நான் ஸேம் பிளட்!!

SENTHIL said...

very nice

அபி அப்பா said...

\\முகுந்த் அம்மா மாயவரம் வந்திருந்திங்களா?, ஆஹா ஒரு பதிவர் சந்திப்பு போட்டு இருக்கலாமே! \\

ஆகா அரசூரான் சொன்ன அதையே தான் சொல்கிறேன். நீங்க மாயவரம் பக்கம் வருவதா ஷண்முகா கூட சொல்லலையே. ஸ்ரீவாஞ்சியம் எங்க ஊர்க்கு பக்கம் தான்.

ஆனா எங்க ஊர் ரோடு எல்லாம் எப்போதும் வீரசொர்க்கத்துக்கு பேர் வாங்கியவை தான்:-)

முகுந்த் அம்மா said...

@சேட்டைக்காரன்

//அதுனாலேதான் எல்லாரும் சொல்றாங்க!

In US, driving is right side.

In UK, driving is left side

In India, driving is suicide //

ஹி ஹி ஹி வெரி funny.

@ பத்மா

நன்றி பத்மா,

//but i wont agree with settai karan always//

இந்திய டிரைவர்கள் ஓட்டுவதை பார்த்தபிறகு எனக்கும் சேட்டைக்காரன் சொல்லுவது போல தான் தெரிந்தது.

முகுந்த் அம்மா said...

@முத்துலெட்சுமி
//ஓ விவேகமில்லாத வேகம் தான் நம்ம ஊருல பயம்.. ரோடு நல்லா இல்லாதப்பயாச்சும் கொஞ்சம் மெதுவா போவாங்க.. ரோடு நல்லா இருக்கேன்னு வேகமா போவது தான் பயமே..//

உண்மையோ உண்மைங்க

ஹை வேஸ் ல கண்ணுமண்ணு தெரியாம தான் வண்டி ஓட்டுறாங்க.

//எங்க ஊரு பக்கத்துல வளைவும் சிறு ரோடுகளும் ஆக இருப்பதால் எனக்கும் மிகப்பயமா இருக்கும்.. ரயில் தான் நான் பயமில்லாம போற ஒன்னு அதும் இப்ப எல்லா ம் ஆக்ஸிடெண்ட் ஆகி மிரட்டுது.. இனி நான் வீட்டை விட்டு எங்கயும் போகமுடியாத படிக்கு எனக்கு எக்கச்சக்க போபியா வந்துடுச்சுப்பா..//

உண்மைங்க, எனக்கும் அங்க போய் ரெண்டு தடவை காரில் போனவுடனே கார் போபியா வந்திடுஞ்சுங்க.

முகுந்த் அம்மா said...

@அரசூரான்
//முகுந்த் அம்மா மாயவரம் வந்திருந்திங்களா?//

ஆமாங்க, ரெண்டு நாள் மாயவரத்தில இருந்து பக்கத்தில இருக்கிற கோவில்களுக்கு போனோம்.


//ஆஹா ஒரு பதிவர் சந்திப்பு போட்டு இருக்கலாமே! //

நீங்க அட்லாண்டா ல இருக்கிறதா தான் நான் நினச்சுட்டு இருக்கேன். நீங்க எப்போ மாயவரம் போனீங்க.

//நம்ம ஊரில் வண்டி ஓட்ட தனி திறமை வேண்டும். "பதறினால் சிதறிடுவாய்" என்று லாரிக்கு பின்னால் எழுதியிருக்கும் - எனக்கு ரொம்ப பிடிக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்//

வாக்கியமெல்லாம் நல்லாத்தான் எழுதி வச்சு இருக்காங்க, ஆனா அதெல்லாம் அடுத்தவங்களுக்கு மட்டும் தான்.

//சேட்டைக்காரன், இந்தியாவில் டிரைவிங் ஈஸ் லெஃப்ட் & ரைட் Ride.//

ரைட்டு.

முகுந்த் அம்மா said...

@Chitra said...

//I remember seeing a show about Kerala on the TRAVEL CHANNEL. The host talked about driving in India as, "One needs 3 things in India to drive safely: Good Brakes, Good Horn and Good Luck!"//

Sure, good horn and good luck இருந்தா மட்டும் தான் உருப்படியா வீட்டுக்கு போய் சேர முடியுது இப்போ எல்லாம்.

முகுந்த் அம்மா said...

@ ஹுஸைனம்மா said...

//ஆஹா, ஸேம் பிளட்! நானும் இந்த நெ(கொ)டுஞ்சாலைகள் பற்றி ஒரு பதிவு ரெடி பண்ணிகிட்டிருக்கேன்!!
முத்தக்கா, இதுலயும் நான் ஸேம் பிளட்!!

//

அப்படியா!, எழுதுங்க எழுதுங்க உங்க அனுபவமும் கிட்ட தட்ட என்னோடது போல தான் இருக்கும்கிறது தெரியுது.

இப்படி போபியா வர்ற அளவு ஆயிடுச்சே! அது தான் வருத்தமே.

முகுந்த் அம்மா said...

@செந்தில்
நன்றிங்க

@அபி அப்பா

//ஆகா அரசூரான் சொன்ன அதையே தான் சொல்கிறேன். நீங்க மாயவரம் பக்கம் வருவதா ஷண்முகா கூட சொல்லலையே. //

ஆமாங்க, கடைசி நேரத்தில பிளான் பண்ணி போனோம். ஷண்முகா அவங்களுக்கு தெரியாது.

//ஸ்ரீவாஞ்சியம் எங்க ஊர்க்கு பக்கம் தான். //

ஒ, அப்படியாங்க, முன்னாலேயே தெரிஞ்சிருந்தாலும் பதிவர் சந்திப்பு முடியாதுங்க, ஏன்னா இருந்த ரெண்டு நாள்ல பதிவர் சந்திப்பு சாத்திய பட்டு இருக்காது.

//ஆனா எங்க ஊர் ரோடு எல்லாம் எப்போதும் வீரசொர்க்கத்துக்கு பேர் வாங்கியவை தான்:-) //

இந்திய ரோடு எல்லாமே இந்த நிலையில தான் இருக்குங்க.

அமைதி அப்பா said...

மிக அற்புதமாக, இங்கு நடக்கும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.