Thursday, August 26, 2010

புதுப் பணக்காரர்கள்

புது பணக்காரர்களை எப்படி அடையாளம் காண்பது, கீழே உள்ள ஐந்து கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு நீங்கள் ஆமாம் என்று பதில் சொன்னால் நீங்கள் புது பணக்காரர்களை பார்த்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
  1. நீங்கள் பார்த்த அந்த நபர் கையில் கிடைக்கும் பேப்பர் நோட்டு புத்தகத்தை cஎல்லாம் எடுத்து விசிறி கொண்டு "அப்பா என்னமா வெயில் அடிக்குது, ஏசி லையே இருந்து பழகிட்டனா, வெயில்னாலே ஒரே அலர்ஜி யா இருக்கு" என்று சொல்கிறாரா.
  2. ஏதாவது ஒருவர் எதோ கார் பற்றி கூறினாலும், "அப்படிதான் பாருங்க இப்போ இருக்கிற ட்ராபிக் சுத்தமா எனக்கு ஒத்து வரலைங்க, அதான் முடியலைன்னு கார் வாங்கிட்டோம்", என்று சம்பந்தம் சம்பந்தமில்லாமல் மூக்கை நுழைக்கிறாரா.
  3. தெரிந்தவர் என்று எதோ பேச போக உடனே நமக்கு அறிவுரை கூறுவது போல "என்ன சம்பாரிச்சு எதாவது வீடு கீடு ன்னு இன்வெஸ்ட் பண்ணினியோ, இப்படி தான் பாரு என் பய்யன் அங்க போனான்னா, ரெண்டே வருஷம் தான், இப்போ நாலு வீடு வாங்கி போட்டு இருக்கான்" என்று தற்பெருமை பேசுகிறாரா.
  4. இது புது பணக்கார பெண்கள் அடிக்கடி செய்வது கோவில், விசேஷம் என்று எங்கே பார்த்தாலும் நம்மை விசாரிப்பது போலே விசாரித்து "இந்தா, இந்த வளையல் / புடவை போன வாரம் என் பொண்ணு வேண்டா வேண்டாம்னு சொல்லியும் என்னோட கிப்ட்டு ன்னு சொல்லி கொடுத்துட்டு போனா, நீயும் ஏதாவது உங்க அம்மா அப்பாவுக்கு செய்யிற இல்ல" என்று போகிற போக்கில் நம்மை வம்பில் மாட்டி விட்டு போவது.
  5. இது முக்கியமாக வெளிநாடு வந்து சென்ற புது பணக்காரர்கள் செய்வது "எங்க பய்யன் ஒரு கார் வச்சிருக்காரு பாருங்க, எவ்வளவு வேகமா போனாலும் கொஞ்ச கூட ஆடாது அலுங்காது".

இது என்னுடைய தற்போதைய இந்தியா பயணத்தில் நான் பார்த்த ஒரு சில புது பணக்காரர்களை பற்றியது மட்டுமே. அனைவரும் இப்படி என்று கூற வில்லை.

9 comments:

Thekkikattan|தெகா said...

:)) பாவங்க நீங்க! எவ்வளவுதான் தாங்கிட்டு வந்திருக்கீங்க.

# 3 செம கடுப்பேத்துமே. டேய்! வாங்கி நல்லாருங்கடா அதுக்கு ஏண்டா எங்கள போட்டு படுத்தி எடுக்கிறீங்கன்னு கத்தத் தோணியிருக்குமே. எனக்குத் தோணியிருக்கு.

வளர்ந்து வெளிய வாரதிற்கு முன்னாடி காலன் கூட்டிகிட்டு போயிருவான். விடுங்க, முகுந்தம்மா! முடியல்லயா :)

அம்பிகா said...

நிறைய பார்க்கலாம் இப்படி. சிரித்து கொண்டே கடந்து விட வேண்டும்.

settaikkaran said...

ஆஹா! இப்படியெல்லாம் ’பந்தா’ பண்ணனுமா? ஒருவேளை நான் பணக்காரனா ஆயிட்டேன்னா, எல்லாத்தையும் அப்படியே ஃபாலோ பண்றேன். நன்றி! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பாவங்க நீங்க! எவ்வளவுதான் தாங்கிட்டு வந்திருக்கீங்க.//
அதான் கொட்டிக்கிட்டிருக்காங்க :)

Chitra said...

அடுத்த வாட்டி ஊருக்கு போறப்போ, இதை யாராவது சொன்னா, நீங்க எழுதிய பதிவுதான், எனக்கு ஞாபகம் வரப்போகுது..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... இப்படி பேசியவர்களை சும்மாவா விட்டீங்க?

பத்மா said...

ரொம்ப நொந்து போய்டீங்க போல ...உண்மைதான் நீங்க சொல்றது .. அவங்க சந்தோஷப்பட்டுட்டு போட்டமே ..என்ன சொல்றீங்க

முகுந்த்; Amma said...

@தெகா

//:)) பாவங்க நீங்க! எவ்வளவுதான் தாங்கிட்டு வந்திருக்கீங்க.

# 3 செம கடுப்பேத்துமே. டேய்! வாங்கி நல்லாருங்கடா அதுக்கு ஏண்டா எங்கள போட்டு படுத்தி எடுக்கிறீங்கன்னு கத்தத் தோணியிருக்குமே. எனக்குத் தோணியிருக்கு.

வளர்ந்து வெளிய வாரதிற்கு முன்னாடி காலன் கூட்டிகிட்டு போயிருவான். விடுங்க, முகுந்தம்மா! முடியல்லயா :)

//

நானும் அப்படி நெனைச்சிட்டு தாங்க விட்டுட்டேன்.

நன்றிங்க

@அம்பிகா said...

//நிறைய பார்க்கலாம் இப்படி. சிரித்து கொண்டே கடந்து விட வேண்டும். //

உண்மைங்க, இன்னும் நெறைய இந்த மாதிரி ஆளுங்க பண்ணுறத சொல்லலாம்.

முகுந்த்; Amma said...

@சேட்டைக்காரன் said...

//ஆஹா! இப்படியெல்லாம் ’பந்தா’ பண்ணனுமா? ஒருவேளை நான் பணக்காரனா ஆயிட்டேன்னா, எல்லாத்தையும் அப்படியே ஃபாலோ பண்றேன். நன்றி! :-)//

அற்பனுக்கு வாழ்வு வந்த அர்த்த ராத்திரியில குடை பிடிப்பான் அப்படின்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. திடீர் பணக்காரர்கள் தாங்க இப்படி பண்ணுறாங்க. எல்லாரும் அல்ல.

முகுந்த்; Amma said...

@முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பாவங்க நீங்க! எவ்வளவுதான் தாங்கிட்டு வந்திருக்கீங்க.//
அதான் கொட்டிக்கிட்டிருக்காங்க :)

நன்றி முத்துலெட்சுமி

@Chitra said...

//அடுத்த வாட்டி ஊருக்கு போறப்போ, இதை யாராவது சொன்னா, நீங்க எழுதிய பதிவுதான், எனக்கு ஞாபகம் வரப்போகுது..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... இப்படி பேசியவர்களை சும்மாவா விட்டீங்க?//

என்னங்க பண்ண முடியும் எல்லாரும் தெரிஞ்சவங்கலாவோ அல்லது சொந்த காரர்கலாவோ இருக்காங்க, ஒன்னும் பண்ண முடியாது. பேசாம சிரிச்சிட்டு தான் வர முடியும்.

@பத்மா

//ரொம்ப நொந்து போய்டீங்க போல ...உண்மைதான் நீங்க சொல்றது .. அவங்க சந்தோஷப்பட்டுட்டு போட்டமே ..என்ன சொல்றீங்க//

கொஞ்சம் கஷ்டமா இருந்தது. சந்தோசமா இருந்த நமக்கும் சந்தோசம் தான் ஆனா இது அடுத்தவங்கள கிண்டல் பண்ணுறதுக்காக வேணும்னே செய்யிறது.

என்ன செய்ய எப்படியும் சிலர்.