Thursday, March 26, 2015

ABCD பெண்கள் சந்திக்கும் விமர்சனங்கள்

 அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்திய அமெரிக்கர்கள்  அதுவும் 70-80 களில் இங்கு வந்து செட்டில் ஆன இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகள் முக்கியமாக  பெண்கள் சந்திக்கும் ஒரு முக்கிய விஷயம் "டேட்டிங் மற்றும் கல்யாணம்".  ABCD ஆக இந்திய அமெரிக்க கலாச்சார கூட்டஞ்சோறு போல வளரும் இவர்கள், இந்திய கலாச்சாரத்துடன் ஓட்ட முடியாமல் அமெரிக்க கலாச்சாரத்துடனும் சேர முடியாமல் இருப்பதை காண முடியும். அதாவது இங்கு இருக்கும் கலாச்சாரம் போல பருவ வயதை அடைந்தவுடன் தன் மகளோ மகனோ "டேட்டிங்" போகவில்லை என்றால் ஏதோ பிரச்சனை அவர்களுக்கு என்று டாக்டரிடம் அழைத்து செல்லும் பெற்றோர்களை கண்டு இருக்கிறேன். நம் கலாச்சாரத்தை பின்பற்றி குழந்தைதைகளை வளர்க்கும் பல பெற்றோர் டேட்டிங் செல்ல அனுமதிப்பதில்லை. அதே போல பாலியல் பற்றிய பல விசயங்களை சொல்லி தருவதும் இல்லை. எல்லாம் தங்களின் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்கிறார்கள் இந்திய குழந்தைகள். அழகுணர்ச்சி பற்றியோ, சுத்தம் பற்றியோ இங்கிருக்கும் பெற்றோர் போல பெண் குழந்தைகளுக்கு நிறைய பெற்றோர் சொல்லி தருவதில்லை. படிப்பில் காட்டும் கவனம் மற்ற இங்கிருக்கும் சொஸைட்டியில் வாழ வேண்டும் என்றால் மற்ற விசயங்களிலும் வேண்டும் என்று பல பெற்றோர் அறிவதில்லை, சொல்லி கொடுப்பதில்லை.

கல்யாணம் என்று வரும் போது இந்திய ஆண்களை அல்லது பெண்களை தங்கள் குழந்தைகளுக்கு மனமுடிக்கவே இன்னும் பல NRI  பெற்றோர் விரும்புகின்றனர். கருப்பு, வெள்ளை, ஸ்பானிஷ் போன்ற பல இன ஆண்கள் அல்லது  பெண்களை தங்கள் குழந்தைகள் டேட்டிங் செய்தால் டென்ஷன் ஆகும் பெற்றோர் அதிகம்.

இப்படி பொத்தி பொத்தி இந்திய கலாச்சாரத்துடன் வளர்க்கப்படும் பெண் குழந்தைகள் முக்கியமாக தென் இந்திய பெண்கள் இன்னும் இந்திய பெண்கள் போல்  பல விசயத்தில் விமர்சனங்களை எதிர்கொள்கிறார்கள். இது ஒரு பக்கம் என்றால் இந்தியாவில் இருந்து இங்கு மேல் படிப்பு படிக்க வரும் பல பெண்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளும் இங்கே.

(இது நான்இங்கிருக்கும் இந்திய  பெண்களை அதுவும் தென் இந்திய பெண்களை  வைத்துஅவர்களிடம் பேசியதை வைத்து எழுதியது பொதுப்படையானது அல்ல ).  இந்திய பெண்கள் மீது வைக்கப்படும் சில விமர்சனங்கள் இங்கே.

1. இந்திய பெண்களுக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் இல்லை. இந்திய உடை தவிர எதனையும் எப்படி உடுத்த வேண்டும் என்று தெரியாது

2. இந்திய பெண்கள் ஹெல்த் கான்சியஸ் இல்லை, தங்கள் உடல் நிலையை கவனித்து கொள்வது இல்லை. வயதில் ஒல்லியாக இருக்கும் பல பெண்களும், கல்யாண ரிங் மாட்டி விட்டால் பலூன் ஆகி விடுகிறார்கள். 35 வயது கடந்த ஒல்லியான அழகான இந்திய பெண்ணை காண்பது மிக அரிது. ஆனால் 40 வயதானாலும் அழகாக சிக்என்று இருக்கும் பல வேறு இன பெண்களை காணலாம். உதாரணமாக ஐரோப்பா பெண்கள் பலருடைய வயதையும் கணிக்க முடியாது.


3. அழகுணர்ச்சி கிடையாது, உடல் சுத்தம் என்பது கிடையாது, சில பெண்கள் அருகில் செல்ல முடியாத அளவு வியர்வை நாற்றம் இருக்கிறது, அல்லது ரோமங்கள்.

4. இந்திய பெண்கள் "அர்குமேண்டடிவ்" அனைத்தையும் டிராமடைஸ் செய்வார்கள். நிறைய பேசுவார்கள் சண்டை போடுவார்கள். நிறைய தொலைக்காட்சி தொடர்கள் பார்பதாலோ என்னவோ, எல்லாவற்றியும் டிராமா செய்து விடுவார்கள்.

5. எப்போதும் தன் இன மக்களுடன் தான் சேர்வார்கள், அடுத்த மக்களுடன் கலந்து பேசவோ, அவர்களின் கலாச்சாரத்தை அறிந்து கொள்வோ பழகவோ மாட்டார்கள். பல இந்திய பெண்கள் சோம்பேறிகள். தான் ஒன்றும் வேலை செய்ய மாட்டார்கள் ஆனால் செய்பவர்களை பற்றி நிறைய புரண் பேசுவார்கள்.

6. தன் கலர் பற்றி அல்லது இனம் பற்றி எப்போதும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும்.


இதனை போன்ற விமர்சனங்களை நான் கேட்கும் போது எனக்கு பயங்கர கோவம் வந்தது. ஆனால்
Lets face it ladies. இதில் சொல்லப்பட்ட பல விசயங்களை நானே பார்த்து இருக்கிறேன் உணர்ந்து இருக்கிறேன். அதனால் இந்த விமர்சனங்கள் எல்லாம் பொய் என்று நம்மை degrade செய்கிறார்கள் என்று  என்னால் தள்ள முடியவில்லை.

உதாரணமாக பெண்களுக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் இல்லை என்பது , இந்திய உடை தவிர மற்றெதுவும் உடுத்த தெரியாது என்பது . எனக்கு தெரிந்து நான் பார்க்கும் பல பெண்கள் உடுத்தும் உடை பார்த்தால் நமக்கு ஐயோ என்று தோன்றும். ஒழுங்காக உடை உடுத்த ஒல்லியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை நல்ல பிட்டிங் இருந்தால் போதும் டீசென்ட் உடை உடுத்த..ஆனால் பல நேரங்களில் ஆபிசுக்கு கூட சரியான பிட்டிங் இல்லாத உடல் பிதுங்கும் படி உடை உடுத்துபவர்களை நானே பார்த்திருக்கிறேன்.

அதே போல உடல் சுத்தம், நான் அதிகம் கவனித்தது இது, பல பெண்கள் பக்கம் செல்ல முடியாத அளவு வேர்வை நாற்றம் அல்லது உடல் நாற்றம் இருக்கும். ஆபிசுக்கு கூட இப்படி வருபவர்களை பார்த்தால் எனக்கு கோவம் கோவமாக வரும். நீங்கள் செல்வது பொது இடத்திற்க்கு, சில Etiquette உண்டு பெண்களே. எல்லாவற்றியும் பின்பற்ற முடியவில்லை என்றாலும் ஒரு சிலவற்றை முடிந்த அளவு பின்பற்றுங்கள் என்று சொல்ல தோன்றும்.

"அர்குமேண்டடிவ்" என்பது நிறைய பார்த்து இருக்கிறேன்.  அதே போல நிறைய புரண் பேசுவது, நிறைய தொலைகாட்சி தொடர் பார்த்து அதே போல நினைத்து டிராமாடைஸ்  செய்வது பார்த்து இருக்கிறேன். ப்ளீஸ், ஸ்டாப் இட் கேர்ள்ஸ், என்று பல நேரங்களில் எனக்கே தோன்றி இருக்கிறது. 


அதே போல எப்போதும் தன இன மக்களுடன் சேருவது. இந்தியர்கள் இந்தியர்களுடன் மட்டும் பேசுவது என்பது எல்லாம் போய், தமிழ் என்றால் தமிழ் மக்கள் குரூப் ஒன்று இருக்கும். தெலுங்கு என்றால் தெலுங்கு மக்கள் குரூப் என்று ஒன்று இருக்கும்...அங்கேயும் இவர்கள் பேசுவது எல்லாம், சினிமா, மேக்கப் அல்லது மாமியார் மருமகள் பிரச்னை.ஐயோ சாமி என்றிருக்கும்.  ஆபிசில் கூட இந்த குரூப் கலாச்சாரம் அதிகம் உண்டு.


வெளி நாடுகளில் வாழ போகிறீர்கள் அல்லது உங்கள் குழந்தை வாழபோகிறது என்றால் தயவு செய்து, மற்ற மக்களிடம் பழகும் முறை, அடுத்த மக்களின் பழக்கவழக்கங்கள், எப்படி சுத்தமாக இருப்பது, எப்படி ஹெல்த் கான்சியஸ் ஆகா இருப்பது, போன்ற பலவும் சொல்லி கொடுங்கள் உங்கள் பெண்களுக்கு.

முடிவாக இங்கு எழுதப்படிருக்கும் பலவும் என் அனுபவத்தில் நான் கண்ட கேட்ட, உணர்ந்த விசயங்களை கொண்டு எழுதியது. யார் மனதையும் புண் படுத்த அல்ல.

13 comments:

ப.கந்தசாமி said...

இந்திய கலாச்சாரத்தை விடக்கூடாது. ஆனால் அமெரிக்கப் பணம் வேண்டும். ரொம்ப சிரமம்தான் அமெரிக்க வாழ்க்கை.

மற்ற நாட்டுக்காரர்கள் எப்படி அனுசரித்துக் கொள்ளுகிறார்கள்?

Unknown said...

நல்ல செய்தி

Unknown said...

என்னாச்சி மறுபடியும் comment வின்டோ

? said...

பதிவினை படித்ததும் தோன்றிய கேள்விகள் இவை.

abcd ஆண்களுக்கு இதே போன்ற பிரச்சனைகள் இல்லையா?

மேலும் இந்தியாவில் பலர் பிற்போக்கான கிராமங்களில் பள்ளி படித்து இருந்து நகர கம்பனிகளுக்கு வேலைக்கு போபவர்கள், தனது கல்லூரி வாழ்விலும், ஆரம்ப பணிகாலத்திலும் 'கற்று' வாழ்கைமுறையின் மாற்றியதை காணமுடிந்தது. அவ்வாறு பள்ளி கல்லூரி, பணியிட நட்பு மூலம் கற்று மாற ABCD பெண்களினால் ஏன் சாத்தியமாகவில்லை?

வருண் said...

We dont use deodorizer (in under arm) or regularly use perfume. Some of us even make fun of people using "perfume". Everyone get sweat but the sweat is taken care of by using deodorizer it takes a little while for "new comers" to realize that. Some are told earlier and some or not told and it takes a while for them to realize. Some get some allergic reaction for deodorizer and so they can not use that even if they realize.

The reason they interact with their own is because the foreigners will label them as "smelly" but they will not have the patience to tell them to use deodorizer. Thats what Americans politeness is all about. They will talk behind your back how smelly you are but they will be very nice in front of you. That's worse that being stinky if you ask me.

One culture to another culture, there is a "learning curve" there, after all these years, that's all. They all will learn, it is only a question of time!

தனிமரம் said...

நாடுவிட்டு நாடு வந்து பலசிக்கல்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கு. அருமையான கட்டுரை.

ஹுஸைனம்மா said...

மாற்றுக் கருத்து உண்டு எனக்கு. :-)

இது இந்தியப் பெண்களுக்கு என்றில்லை, எல்லா நாட்டு பெண்களுக்கும் பெரும்பாலும் இருக்கும் குணாதியசயங்கள்தான்!!

அதே போல, ஆண்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல!! சொல்லப்போனால், பெண்களாவது வெளிப்படையாகப் பேசி விடுவார்கள். ஆண்களோ, தாமாகவே எண்ணங்களை வளர்த்துக் கொள்வார்களே அன்றி, மனம் விட்டு பேசிக்கொள்ள மாட்டார்கள்.

பெண்களுக்கு நகை, உடை என்றால், ஆண்களுக்கு எலெக்ட்ரானிக் ஐட்டங்கள், உடைமைகள், சொத்துக்கள்.

எனது கல்லூரி தோழர்களில் யாரையாவது நீண்ட காலம் கழித்துச் சந்தித்தால், என்ன செய்கிறாய் என்ற கேள்விக்கு அவர்கள் வேலையோடு, பெற்றுள்ள பட்டங்களோடு, கட்டியுள்ள வீடுகள், கார்கள் விபரங்களும் தன்னிச்சையாக சொல்வர்!! :-))

முகுந்த்; Amma said...

"பழனி. கந்தசாமி said...
இந்திய கலாச்சாரத்தை விடக்கூடாது. ஆனால் அமெரிக்கப் பணம் வேண்டும். ரொம்ப சிரமம்தான் அமெரிக்க வாழ்க்கை.

மற்ற நாட்டுக்காரர்கள் எப்படி அனுசரித்துக் கொள்ளுகிறார்கள்?"

Actually people from different cultures are very friendly to Indians. Thanks for the comment

முகுந்த்; Amma said...

@senthil kumar

Thanks for the comment

முகுந்த்; Amma said...

நந்தவனத்தான் said...
"பதிவினை படித்ததும் தோன்றிய கேள்விகள் இவை.

abcd ஆண்களுக்கு இதே போன்ற பிரச்சனைகள் இல்லையா?

மேலும் இந்தியாவில் பலர் பிற்போக்கான கிராமங்களில் பள்ளி படித்து இருந்து நகர கம்பனிகளுக்கு வேலைக்கு போபவர்கள், தனது கல்லூரி வாழ்விலும், ஆரம்ப பணிகாலத்திலும் 'கற்று' வாழ்கைமுறையின் மாற்றியதை காணமுடிந்தது. அவ்வாறு பள்ளி கல்லூரி, பணியிட நட்பு மூலம் கற்று மாற ABCD பெண்களினால் ஏன் சாத்தியமாகவில்லை?"


ABCD men too face problems during Dating/marriage, but a little different kind. For example, most ABCD men are mommy boys , and while going for Dating/marriage many other culture ladies prefer very independent , not mommy boys ...etc

முகுந்த்; Amma said...

"வருண் said...
We dont use deodorizer (in under arm) or regularly use perfume. Some of us even make fun of people using "perfume". Everyone get sweat but the sweat is taken care of by using deodorizer it takes a little while for "new comers" to realize that. Some are told earlier and some or not told and it takes a while for them to realize. Some get some allergic reaction for deodorizer and so they can not use that even if they realize.

The reason they interact with their own is because the foreigners will label them as "smelly" but they will not have the patience to tell them to use deodorizer. Thats what Americans politeness is all about. They will talk behind your back how smelly you are but they will be very nice in front of you. That's worse that being stinky if you ask me.

One culture to another culture, there is a "learning curve" there, after all these years, that's all. They all will learn, it is only a question of time!

"

Thanks for the comment

முகுந்த்; Amma said...

"தனிமரம் said...
நாடுவிட்டு நாடு வந்து பலசிக்கல்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கு. அருமையான கட்டுரை."

Thanks for the comment

முகுந்த்; Amma said...

"மாற்றுக் கருத்து உண்டு எனக்கு. :-)

இது இந்தியப் பெண்களுக்கு என்றில்லை, எல்லா நாட்டு பெண்களுக்கும் பெரும்பாலும் இருக்கும் குணாதியசயங்கள்தான்!!

அதே போல, ஆண்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல!! சொல்லப்போனால், பெண்களாவது வெளிப்படையாகப் பேசி விடுவார்கள். ஆண்களோ, தாமாகவே எண்ணங்களை வளர்த்துக் கொள்வார்களே அன்றி, மனம் விட்டு பேசிக்கொள்ள மாட்டார்கள்.

பெண்களுக்கு நகை, உடை என்றால், ஆண்களுக்கு எலெக்ட்ரானிக் ஐட்டங்கள், உடைமைகள், சொத்துக்கள்.

எனது கல்லூரி தோழர்களில் யாரையாவது நீண்ட காலம் கழித்துச் சந்தித்தால், என்ன செய்கிறாய் என்ற கேள்விக்கு அவர்கள் வேலையோடு, பெற்றுள்ள பட்டங்களோடு, கட்டியுள்ள வீடுகள், கார்கள் விபரங்களும் தன்னிச்சையாக சொல்வர்!! :-))"

@Husssain amma,
I have many friends from middle east, south america and Africa, and the way they maintain personal hygiene is amazing. To tell you frankly my maid is from Brazil and she used to give me lots of beauty and health care tips. Actually compared to other country ladies, Indians have problems keeping the personal health and hygiene. We have to accept that.

As I mentioned before Men do have problems.